• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 4.1

New member
Joined
Jan 15, 2026
Messages
14
💙விவாதக் காதல்💙
Part 4.1

"என்னடா. இன்னுமா நீ குளிக்க போகல போ குளிச்சிட்டு வா"
என்று சுரேஷ் சொல்ல,

"இவங்க". என்று கொடி அந்த பெண்ணை சுட்டி காட்டி கேட்டதும்,

“என் தங்கச்சிடா” என்றான்.

“நான் அவங்ககிட்ட சாரி சொல்லுறேன். ஆனா, அவங்க...”

“சரி சரி விடு. தெரியாம தானே பண்ண. போ போய் குளிச்சிட்டு வாடா.” என்று சுரேஷ் கொடியின் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக ரூமுக்குள் தள்ளியவன் தானும் கீழே இறங்கி சென்றான்.
அடுத்த சில நிமிடங்களில், கொடி வெளியே செல்ல ரெடி ஆனவன் அவனுக்கு தரப்பட்ட மாடி அறையில் இருந்து வெளியே வந்தவன் கண் எதிரில். இன்னுமும் சுரேஷின் தங்கை மல்லி பூ செடிகள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தவளின் செயலை பார்த்து கொண்டு இருந்த கொடி மீண்டும் அவள் அருகில் செல்ல. அவளோ அந்த செடியில் உள்ள மலர்களை பார்த்து தன் முகபாவனையை அழகாக மாற்றிக்கொண்டே இருக்க.

“ஏங்க உங்களுக்கு இந்த செடிங்க மேல எல்லாம் இவ்வளவு பிரியம் இருக்கும்ன்னு எனக்கு தெரியாதுங்க. Sorry ங்க.” என்று மீண்டும் இவன் அவளிடம் மன்னிப்பு கேக்க, அவளோ. இப்படி ஒருவன் தன் எதிரில் இருப்பதையே கண்டுகொள்ளாமல் அவள் வேலையை பார்த்து கொண்டு இருந்தாள்.

"டேய் மச்சான் வாடா நேரமாகுது" என்று சுரேஷ் கீழே இருந்து கத்தும் குரல் கேட்டு கொடி வேகமாக கீழே இறங்கினான்.

“வாடா மச்சான். நான் உன்னை பாட்டிகிட்ட அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்று சொன்னவன், கொடியை அழைத்து கொண்டு கீழ் தளத்தில் இருக்கும் தன் பாட்டியின் வீட்டுக்கு அழைத்து சென்றான்.

“பாட்டி இவன் தான் என் நண்பன் கொடி.” என்று சுரேஷ் சொன்னதும். படுக்கையில் இருந்து பொறுமையாக எழுந்த பாட்டி சுரேஷை முறைத்துக்கொண்டே கொடியை பார்த்து கடமைக்கென்று சிரித்தார்.

“வாப்பா தம்பி. உக்காரு.”

“வணக்கம் பாட்டி.” என்றான் மரியாதை நிமித்தமாய்.

“பாட்டி. கொடி இனிமே நம்ம வீட்டு மாடியில தான் தங்க போறாரு” என்று சுரேஷ் சொல்ல,

"யோவ் தகப்பா இது உன் வீடு இல்ல. இது என் பாட்டி வீடு" என்று திமிராக சொல்லிக்கொண்டே வேணு, பாட்டியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

“பெரியவங்கள அப்படி எல்லாம் பேசாத வேணு.” பெரிய மனிதியாய் அவர் சொல்ல,

“அப்படி சொல்லுங்க பாட்டி.” என்றான் சுரேஷ்.

“நீ வாய மூடு.” என பட்டென்று சொன்னார்.

“டேய்! உன் அத்தைகிட்ட சொல்லி இனிமே தினமும் கொடிக்கும் சேர்த்து சமைக்க சொல்லுடா.” என்ற தகப்பனிடம், “சமைக்க சொல்லுனா காசு யார் தருவாங்க?” என்று கிண்டலாகக் கேட்டான் வேணு.

“நான் மாசமானதும் வாடகைக்கும், சாப்பாடுக்கும் காசு தந்துடுவேன்பா” என்று கொடி சொன்னான்.

“நீங்க ஆம்பளை தானே?” பளிச்சென்று பையன் கேட்டிட, கொடியோ விழித்தான்.

“டேய் பாவி ஏன்டா?” என்றான் சுரேஷ்.

“அப்போ நீங்க எப்படி மாசமாகுவீங்க?” இவனும் விடாது கேட்க,

“உங்கப்பன் மவனே. அவன் மன்த் என்ட்ல பணம் தரேன்னு சொல்லுறான்.” பல்லைக் கடித்தபடி சொன்னான்.

“ஹாங் அப்படி தெளிவா சொல்லுங்க.”

“டேய் கொடி. இவன் இப்படி தான்டா. சரி நீ இரு. நான் தங்கச்சியை உனக்கு காபி போட்டு தர சொல்லுறேன்.” என்று எழ,

“இல்ல மச்சான். பரவாயில்ல நம்ம வெளிய போய் குடிச்சிக்கலாம் வா.”

“இரு இரு தம்பி. இங்கேயே குடிக்கலாம் உக்காரு. வேணு போய் உன் அத்தையை அழைச்சிட்டு வா” என்று பாட்டி சொன்னதும் வேணு மாடிக்கு சென்றவன் கையோடு அவன் அத்தையை அழைத்து வந்தான்.

"உக்காருடா" என்று சுரேஷ் சொன்னதும் அந்தப் பெண் இவர்களை யாரையும் பார்க்காமல் சமையல் அறைக்குள் சென்றவள், அடுத்த சில நொடிகளில் அனைவருக்கும் காபியை வேணுவிடம் தந்து அனுப்பினாள்.

“ம்... எடுத்துக்கோங்க.” காபியை வேணு நீட்ட,

“தேங்க்ஸ்” என்று எடுத்துக் கொண்டான் கொடி.

“ஏன்டா இப்போ வேலைக்கு போற இடத்துல மதியம் லஞ்ச்கு என்ன பண்ணுவ?

“நான் அங்க எதாவது பார்த்துப்பேன்டா. ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றதும் சுரேஷ் தலையசைத்து சம்மதிக்க, “எனக்கு நைட்டுக்கும் காலையிலைக்கும் சாப்பாடு நீங்க தந்தா போதும்.” என்றான்.

“உனக்கு எப்போ எல்லாம், என்ன எல்லாம் வேணுமோ, இதோ இந்த பொடி பையன்கிட்ட சொல்லிடு. அவன் என் தங்கச்சிகிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணுவான்.”

“ம்... சரிடா.”

“சரி. காபி குடிச்சிட்டியா? கிளம்பலாமா?”

“சரிடா. டேய் உன் சிஸ்டர் கிட்ட சொல்லிடு. காபி ரொம்ப நல்லா இருந்துச்சு. பாட்டி நான் போய்ட்டு வரேன்.” என்றான்.

“என்ன பிட்டு போடுறிங்களா? போங்க போங்க போய் வேலையை பாருங்க.” என்ற சிறுவனின் பதிலில் கோவம் வரத்தான் செய்தது கொடிக்கு.

“இவன் இப்படி தான்டா. சரி நீ வா போகலாம்.” என்று கொடியை
சுரேஷ் நாளையிலிருந்து அவன் வேலை பார்க்க போகும் ஆபீஸ்க்கு அழைத்து சென்றான்.

“இங்க தான்டா நீ நாளையில இருந்து வேலைக்கு வரணும். வழி எல்லாம் நியாபகம் வச்சிக்கோ.”

“சரிடா. உங்க வீட்டுல இருந்து கொஞ்சம் தூரம் தான் இல்ல மச்சான். பட் பஸ் வரும் இல்ல?” சந்தேகமாகக் கேட்டான்.

“டேய் இன்னைக்கு நைட் நான் ஊருக்கு போயிடுவேன்டா. நாளையில இருந்து நீ என் பைக்ல வேலைக்கு வா. எனக்கு வாரக் கடைசியில் மட்டும் தான் வண்டி தேவைப்படும். அது கூட என் சிஸ்டரை அழைச்சிட்டு மார்க்கெட் போக தான்.”

“உன் வண்டியா?”

“ஏன் வண்டி ஓட்டுவ இல்ல? இல்ல தெரியாதா?”

“அதெல்லாம் தெரியும்டா.”

“பின்ன என்ன கேள்வி?” என்றான் சுரேஷ்.

“சரிடா நான் உன் வண்டிலேயே வேலைக்கு வரேன்.” கொடி சம்மதித்திருந்தான்.

“நல்லது. வா வீட்டுக்கு போகலாம்.”

“நான் ரூமுக்கு கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வாங்கணும் மச்சான்.”

“வா வா. போகும் போதே வாங்கிட்டு போகலாம்.”

“உனக்கு ஏதும் தொந்தரவு இல்லையே.” கொஞ்சம் தயங்கியபடி கேட்டான் கொடி.

“எதுக்குடா தயங்குற. அதெல்லாம் இல்ல வா.” என்ற சுரேஷ் கொடியை கடைக்கு அழைத்து செல்ல, அங்கே தனக்கு தேவையான பொருளை எல்லாம் கொடி வாங்கிக்கொண்டு இருந்த நேரம்,

"தம்பி எப்படி இருக்கீங்க? பாட்டி, தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க?" என்று புரோக்கர் ஒருவர் சுரேஷை நலம் விசாரித்தார்.

“ஹாங் நீங்களா அண்ணா வாங்க.”

“பாப்பா எப்படி இருக்காங்க?”

“ம் இருக்கா.” என்றான் உள்ளே போன குரலில்.

“அப்படி ஒரு சம்பவம் நடந்த பின்னாடி, அவங்கள வந்து பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப கஷ்டமாகிடுது தம்பி. அதான் நான் அந்த பக்கம் வரது இல்ல.”

“விடுங்க அண்ணா. முடிஞ்ச கதையை பேசி என்ன ஆகப்போகுது?”
“பாப்பாக்கு வரன் எதாவது பாக்குறீங்களா தம்பி?”

“என்ன அண்ணா சொல்லுறீங்க. வரனா”?” என்றான் புரியாது.

“என்னப்பா நீங்க வரனான்னு கேக்குறீங்க? பாவம்பா உன் தங்கச்சி. அந்த பொண்ணு இன்னும் வாழவே ஆரம்பிக்கலையே. அவள என்ன இப்படியே விட்டுடலாம்ன்னு நினைக்கிறிங்களா? அது தப்புப்பா.” என்றார் புரோக்கர்.

“அப்படி இல்ல...”

“இரு தம்பி. இங்க பாருங்க இந்த போட்டோவை. இந்த பையன் பெயர் சங்கர். கல்யாணம் முடிந்து இவன் பொஞ்சாதி ஒரு சின்ன சண்டையில மருந்து குடிச்சு இறந்துட்டா. போலீஸ்ல இவன் பக்கம் எந்த தப்பும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. இப்போ இவன் வீட்டுல இவனுக்கு பொண்ணு பாக்குறாங்க. உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்க. நம்ம பாப்பாவை வந்து பாக்க சொல்லலாம்.”

சுரேஷோ யோசிக்க, “என்னப்பா யோசிக்கிற? நல்ல இடம். தாராளமா முடிக்கலாம்” என்றார்.

“சரி நீங்க மாப்பிள போட்டோவும். உங்க போன் நம்பரும் தாங்க. நான் பாட்டிகிட்ட பேசிட்டு உங்களுக்கு போன் பண்ணுறேன்.”

“நல்லதுபா” என்று சொன்ன புரோக்கர், மீண்டும் ஒரு புகைப்படத்தை சுரேஷிடம் தர. அதே சமயம் கொடியும் தனக்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு சுரேஷின் அருகில் வந்தான்.

“போகலாமா மச்சான்.”

“ம் வாடா.” என்று சொன்னவன் கொடியை அழைத்து கொண்டு தன் வீட்டுக்கு சென்று, “நீ மாடியில போய் வாங்கிய பொருள் எல்லாம் வச்சிட்டு வா. நம்ம டின்னர் சாப்பிடலாம்.” என்றான் சுரேஷ்.

“சரிடா” என்ற கொடி தான் வாங்கி வந்த பொருள்களை எல்லாம் தன் அறையில் வைத்தவன், மீண்டும் கீழே இறங்கி வர, இவன் வருவதற்குள் டைனிங் டேபிளில் இவங்களுக்கான உணவு காத்து இருந்தது.

“வாடா சாப்பிடலாம்” என்றதும் கொடி சம்மதித்து அமர, இருவரும் டிபன் சாப்பிட்டு கொண்டு இருந்த தருணம் பாட்டியை கைத் தாங்கலாக வேணு அழைத்து வர, பாட்டியை பார்த்ததும் கொடி எழ பார்த்தான்.

“உக்காருபா. உக்காந்து சாப்பிடு.” என்றார்.

சுரேஷும், “உட்காருடா” என்றான்.

அவன் அமர்ந்ததும், “என்ன தம்பி. வேலை பாக்க போற இடத்தை எல்லாம் பார்த்துட்டு வந்துட்டியா? ஆமா எங்க வேல? என்ன வேல?” எனக் கேட்டார் பாட்டி.

“இன்சூரன்ஸ் கம்பெனில தான் வேலை கிடைத்து இருக்கு. இங்க இருந்து அரைமணி நேர தொலைவு தான் பாட்டி.”

“ஒ நல்லதுபா. சரி சாப்பிடு” என்றார்.

சுரேஷ் “பாட்டி” என்று அழைத்ததற்கு பதில் அளிக்காமல் அவர் அமைதியாக இருந்தார்.

“என்ன விஷயம்? ஏன் அவங்கள டிஸ்டர்ப் பண்றீங்க? அவங்களுக்கு தான் நீங்க அவங்க கூட பேசுறது பிடிக்கல இல்ல. பின்ன என்ன பாட்டி பொட்டின்னு” என்று திட்டினான் அவனின் மகன்.

“டேய் சும்மா இருடா. பாட்டி கடை தெருவுல புரோக்கரை பார்த்தேன்” என்று அவருக்கு தான் பேசிவது பிடிக்காவிட்டாலும் சொல்லுவதை சொல்லிவிட நினைத்து சொல்லிவிட்டான்.

“என்ன புரோக்கரையா?”

“ஆமா பாட்டி. அவரு உங்களையும் தங்கச்சியையும் ரொம்ப கேட்டதா சொல்ல சொன்னாரு. அப்புறம்...”

“வேற என்ன?”

“நம்ம பாப்பாவுக்கு ஒரு வரன் வந்து இருக்காம். அதான் உங்களுக்கு சம்மதம்னா, அவங்கள வீட்டுக்கு வர சொல்லி பாப்பாவை பாக்க சொல்லாமான்னு கேக்குறேன்.” என்றான்.

“இப்போ தான் உனக்கு உன் தங்கச்சி மேல அக்கறை வந்து இருக்கு இல்ல.”

“அப்படி இல்ல பாட்டி.”

“ம்... அவ இப்படி ஒரு நிலைமையில இருக்கும் போது கூட, நீயும் உன் பொஞ்சாதியும் முருங்கைக்கீரை சூப்பு குடிக்க தவறுறது இல்ல. அதான் இப்போ மறுபடியும் ரெண்டு புள்ளைக்கு அப்பாவாக போற.” என்றார் கடுப்புடன்.


“பாட்டி...” என்றான் அதற்கு மேல் எதுவும் பேச முடியாது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top