- Thread Author
- #1
4.2
“போதும் நிறுத்து. என் பேத்தி அவ வாழ்க்கையை இழந்து ஒரு வருஷமா நடை பிணமா சுத்திகிட்டு இருக்கா. அவளுக்கு ஒரு நல்லது பண்ணனும்னு எவனோ ஒரு புரோக்கர் பையன் சொல்லி தான் உன் மரமண்டைக்கு தோணுமா? உனக்கா தோணலை இல்ல” என்றார் அவர்.
“தப்பு தான் மன்னிச்சுடுங்க பாட்டி.”
“போதும் உன் நடிப்பு. சரி அந்த புரோக்கர் போன் நம்பரை தா. நானே அவன் கிட்ட பேசுகிறேன் அவன் நம்பரை நான் மிஸ் பண்ணிட்டேன்.”
“இந்தாங்க. இதுல நம்பரும் மாப்பிள்ள போட்டோவும் இருக்கு.” என்று சுரேஷ் ஒரு கவரை பாட்டியிடம் தர, பாட்டி அந்த கவரை வாங்கி வேணுவிடம் தந்தார்.
“வேணு இந்த போட்டோவை உன் அத்தைகிட்ட காட்டிட்டு வா.” என்று பாட்டி சொன்னதும் வேணு ஒரு அறைக்குள் சென்றவன் சில நொடிகள் கடந்த நிலையில் வெளியே வந்து, “பாட்டி அத்த இங்க இருக்குறது உங்களுக்கு பிடுக்கலைன்னா, அவங்க வேணா பழனி தாத்தா ஆஸ்ரமதுக்கு போயிடவான்னு கேக்குறாங்க.” என்றான்.
“அப்படியா சொன்னா??”
“ம்... ஆமா பாட்டி.”
“பாட்டி நான் வேணா போய் பாப்பாகிட்ட பேசவா?” என்றான் சுரேஷ்.
“வேணா. அவ அப்படி தான் சொல்லுவா. நான் அடுத்த வாரம் மாப்பிள்ள வீட்டுல இருந்து வர சொல்லுறேன். நீ நேர்ல வந்து உன் தங்கச்சிக்கு அண்ணனா லட்சணமா இந்த சம்மந்தத்தை பேசி முடி.” என்று பாட்டி சொல்ல. கொடிக்கோ ‘இங்கே என்ன தலைப்பின் பேச்சு வார்த்தை நடக்கிறது’ என்றே புரியாமல் இருக்க.
“சரி பாட்டி நான் கிளம்புறேன். டேய் வேணு அம்மாகிட்ட எதாவது சொல்லனுமாடா?” என்றான் மகனிடம்.
“நாங்க போன் பண்ணி பேசிப்போம். நீங்க கிளம்புங்க.”
“சரி சரி நீ ஒழுங்கா படி.”
“பெரிய வாத்தியார் இவரு. எங்களுக்கு எல்லாம் தெரியும். நீங்க கிளம்புங்க” என்று சிறுவன் வேணு சொல்ல, சுரேஷ் அனைவரிடத்திலும் இருந்து விடை பெற்று பக்கத்து ஊரில் இருக்கும் தன் வீட்டிற்கு சென்றான்.
கொடியும் மாடிக்கு சென்றவன் நல்ல உணவை சாப்பிட்ட திருப்தியோடு அவன் அம்மாவையும் அக்காவையும் செல் போனில் அழைத்து பேசிய பிறகு நிம்மதியாக தூங்கினான்.
மறுநாள் காலை மொட்டை மாடி வெளியே நின்று சோம்பல் முறித்தவன் கண்ணுக்கு பூத்து குலுங்கும் மல்லிப்பூ செடிகள் அழகாக காட்சி தர. அதே நேரம் கையில் பிளாஸ்க் உடன் மாடிக்கு வந்தான் சிறுவன்.
“இந்தாங்க டீ குடிச்சிட்டு காலையில எட்டு மணிக்குள்ள கீழே வந்தா தான் டிபன் கிடைக்கும். இல்லன்னா அவ்வளவுதான்” என்றான்.
“காலையில குட் மார்னிங் சொல்ற பழக்கம் எல்லாம் இல்லையா உனக்கு?”
“நான் சொன்னா. உங்களுக்கு வேணா இந்த மார்னிங் குட்டா இருக்கலாம் பட் எனக்கு இது பேட் மார்னிங் தான்.”
“ஏன்டா?”
“இன்னும் ஒன் வீக்ல எனக்கு மேத்ஸ் டெஸ்ட்.”
“அதுக்கு என்ன?” என்றான் கொடி.
“எனக்கு யாரையும் கணக்கு பண்ணவும் பிடிக்காது. கணக்கு போடவும் பிடிக்காது.” வேணு முகம் சுளித்து சொல்ல,
“ஒ... உனக்கு மேத்ஸ் வராதா?”
“ஆமா ஆமா” என்றான் வேகமாக.
“மேத்ஸ் ரொம்ப ஈசிடா தம்பி.”
“அது புரிஞ்சவனுக்கு அண்ணா. ஆனா, எனக்கு தான் அது புரியவே புரியாதே அண்ணா.”
“நான் வேணா உனக்கு கணக்கு பாடம் கத்து தரவா?” என்று கேட்டான்.
“உங்களுக்கு கணக்கு போட வருமா?”
“வரும் என்பதால் தான் கேட்டேன். நான் அக்கௌண்ட்ஸ் ஸ்டுடென்ட்பா.”
“எது டீ கடை அக்கௌண்ட்டா?” என்றான் சிறுவன்.
“அட. அது இல்ல” என்று விளக்கம் அளிக்கப் போக,
“ம். புரியுது” என்றான் வேணு.
“சரி சொல்லு நான் உனக்கு கணக்கு கத்து தரவா?"
“ஒ... தரலாமே. ஆனா, நான் அதுக்கு பீஸ் எல்லாம் தர மாட்டேன்.” என்றான் அவன்.
“அதெல்லாம் வேணாம்டா. நான் கேட்க மாட்டேன்.”
“அப்போ சரி. நான் நாளையில இருந்து உங்ககிட்ட கணக்கு கத்துக்க வரேன்.”
“நல்ல காரியத்தை எல்லாம் தள்ளி போட கூடாது. நான் இன்னைக்கு வேலை முடிச்சிட்டு சாய்ங்காலம் 6 மணிக்கு எல்லாம் வந்துடுவேன். சோ, நான் உனக்கு ஏழு மணிக்கு மேத்ஸ் கத்து தரேன் சரியா?”
“ம்... சரி சரி. சீக்கிரம் கீழே இறங்கி வாங்க. நான் போய் அதுக்குள்ள எங்க அத்தைகிட்ட நமக்கு டிபன் வாங்கிட்டு வரேன்.” என்றான் சிறுவன்.
“எங்க போய் வாங்குவ?”
“பக்கத்து தெருவுல தான் அத்த கேட்டரிங் வச்சிருக்காங்க. காலையில 5 மணிக்கு அங்க அவங்க போனா, அதோட சாய்ங்காலம் 5 மணிக்கு தான் வருவாங்க.”
“ஓஹோ.”
“சரி நீங்க கீழே வரும் போது flask கொண்டு வாங்க நான் கீழே போறேன். ஹாங் அப்புறம் முக்கியமான விஷயம்...” எனவும்,
“என்ன?” என்றான் கொடி.
“இனிமே இந்த செடில எல்லாம் கை வைக்காதிங்க.”
“ஏன்?”
“எங்க அத்த அப்புறம் அழ ஆரம்பிச்சிடும்.”
“இந்த பூவை டச் பண்ணா உங்க அத்தைக்கு பிடிக்காதா?”
“ஹ்ம் ஹ்ம் பிடிக்காது. இந்த செடில எவ்வளவு பூ பூத்தாலும் அதை என் அத்தை பறிக்கவும் பறிக்காது. அதுவா வாடி உதிர்ந்து போனதும் அந்த வாடிய பூவை எல்லாம் அள்ளி எடுத்து அத கொண்டு போய் வாரத்துல ஒரு முறை கடல்ல போட்டுட்டு வரும்.”
“ஏன் இப்படி?” என்றான் குழப்பத்துடன்.
“எனக்கு தெரியாது. நான் கேட்டாலும் சொல்லாது. சரி எனக்கு நேரமாகுது நான் போறேன். நீங்க சீக்கிரம் வாங்க” என்று சொன்ன சிறுவன் வேணு வேகமாக கீழே இறங்கி ஓடினான்.
கொடி எட்டு மணி அளவில் தன் வேலைகளை முடித்து கொண்டு கீழே இறங்கியவனுக்கு காலை உணவு ரெடியாக டேபிளில் காத்து இருந்தது.
“வா தம்பி. சாப்பிடலாமா?” எனக் கேட்டார் பாட்டி.
“இதோ வரேன் பாட்டி” என்றான் கொடி.
“சீக்கிரம் சாப்பிடுங்க. நான் ஸ்கூல்க்கு போகணும்.”
“நீ எப்படிப் போவ?”
“நான் நடந்து தான் போவேன்.” என்றான் வேணு.
“நான் வேணும்னா உன்னை ஸ்கூல்ல விட்டுட்டு வேலைக்கு போகட்டுமா?”
“உனக்கு ஏன்பா கஷ்டம்?” என்றார் பாட்டி.
“கஷ்டமெல்லாம் இல்லிங்க. இன்னும் கேட்டா சுரேஷ் வண்டி தானே என்கிட்ட இருக்கு. எனக்கு பிரச்சனை இல்லை” என்றான்.
“சரி சரி நீங்களே என்னை அழைச்சிட்டு போகலாம். சீக்கிரம் சாப்பிடுங்க” என்றான் சிறுவன்.
“டிபன் ரொம்ப நல்லா இருக்கு பாட்டி.” என்று உணவை பாராட்டினான்.
“என் அத்த பண்ணது நல்லா தான் இருக்கும்.” என்றான் அசராது.
மூவரும் சாப்பிட்டு முடிக்க, கொடி. வேணுவை அவன் ஸ்கூல்க்கு அழைத்து செல்லும் வழியில், ”ஏங்க கொஞ்சம் வண்டியை இங்க நிறுத்துங்க” என்றான்.
“ஏன்பா?”
“அத்த ஒரு பைல் கேட்டாங்க. நான் அத தந்துட்டு வரேன்.”
“இது என்ன இடம்டா?”
“எங்க அத்த கேட்டரிங் இது தான். சரி நீங்க இருங்க. நான் உள்ள போயிட்டு வரேன்.” என்ற வேணு அவன் அத்தையின் கேட்டரிங்க்குள் சென்றவன் சில நிமிடங்கள் கடந்த நிலையில் வெளியே வந்தான்.
அவனை வாசல் வரை வந்து கையசைத்து வழி அனுப்பியவளின் பார்வை வேறு யாரையும் காணாத நிலையில், மீண்டும் அவள் அங்கிருந்து சென்று விட. கொடி சிறுவன் வேணுவை ஸ்கூலில் இறக்கி விட்டு, “ஈவினிங் எப்படி வருவ.?” என்று சிறுவனிடம் கேட்டான்.
“என் friend கூட பேசிக்கிட்டே. என் அத்த கேட்டரிங்கு நான் போய்டுவேன்.”
“சரி நம்ம ஈவினிங் மீட் பண்ணலாம். பை” என்றான்.
வேணு அவன் ஸ்கூலுக்கு செல்ல. கொடிவீரன் முதல் நாள் தன் வேலைக்கு சென்றவன், அங்கே தன்னை வீரா என்ற பெயரில் அறிமுகம் செய்து கொண்டான்.
அவனுக்கு தரப்பட்ட வேலைகளை செய்து கொண்டு இருந்தவன், மதிய நேரம் தன் கேபின் வாசலில் ஒரு பெண் அமர்ந்து இருப்பதை பார்த்தான்.
“இவங்க. இவங்க சுரேஷ் தங்கச்சி தானே. இவங்க என்ன பண்ணுறாங்க இங்க?” என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டவன் அந்த பெண்ணின் அருகில் சென்று.
"ஏங்க. இங்க என்ன பண்ணுறீங்க? உங்கள தான்ங்க" என்று கொடி கேக்கும் கேள்விக்கு பதில் தராமல் அவள் கையில் இருந்த ஆவணங்களை பார்த்து கொண்டு இருந்தவள் அருகில் வந்த ஒரு பெண்மணி .
"Mrs. வீரவேல். உங்கள மேனேஜர் கூப்பிடுறாங்க" என்று அந்த பெண் சொல்ல, அவளோ தன் கையில் இருந்த ஆவணங்களை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தாள்.
"Mrs. வீரா உங்கள தான். மேனேஜர் வர சொல்லுறாரு பாருங்க" என்று மீண்டும் அந்த பெண்மணி சுரேஷின் தங்கை தோளில் கை வைத்தப்படி அவளை அழைக்க,
சட்டென்று அந்த பெண்மணியின் முகத்தை பார்த்தவள் தன் பையில் இருந்த யியர் மெஷின் எடுத்து தன் காதில் மாட்டிக்கொண்டு மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள்.
“வாங்க மேடம், இத்தனை மாத போராட்டத்துக்கு பிறகு இன்னைக்கு தான் உங்க கணவர் வீரவேலோட இன்சூரன்ஸ் பணம் பத்து லட்சம் உங்க பெயர்ல டிரான்ஸ்பர் ஆகியிருக்கு. நீங்க உங்க அக்கௌன்ட் நம்பர் தந்திங்கனா. பணத்தை அதுல டெபாசிட் பண்ணிடுவோம்” என்று மேனேஜர் சொன்னார்.
தன் கையில் இருந்த அக்கவுன்ட் நம்பரை மேனேஜரிடம் அவள் தந்ததும், அவர் தன் அலைபேசி மூலம் யாருக்கோ போன் செய்தார்.
“Mr. வீராவை உள்ள வர சொல்லுங்க.” என்று மேனேஜர் சொன்னதும், கொடிவீரன் உள்ளே வந்து அங்கே அமர்ந்து இருக்கும் பெண்ணை கேள்வியுடன் பார்த்தான்.
“மிஸ்டர்.வீரா. இவங்க தர அக்கௌன்ட் நம்பர்ல இந்த செக்கை பாஸ் பண்ண ஏற்பாடு பண்ணுங்க. ஹான் மிசஸ்.வீரவேல். இவர் தான் வந்த முதல் நாளே உங்க ஹஸ்பண்ட் இன்சூரன்ஸ் பேப்பர்ல இருந்த ப்ரோப்லேம் எல்லாத்தையும் சால்வ் பண்ணி, உங்களுக்கு உடனே பணம் வர ஏற்பாடு பண்ணிருக்காரு. மோர் ஓவர் இவர் பெயர் கூட வீரா தான். அண்ட் நீங்க இவர் கூடப் போய் மீதி பார்மாலிடீஸ் எல்லாம் பினிஷ் பண்ணிக்கோங்க.” என கொடியின் பெயரை வீரா என்று மேனேஜர் சொன்னார்.
முதல் முறையாக தன் எதிரில் நின்று இருந்த கொடியை நேருக்கு நேர் பார்த்தவள் தன் இருகரம் கூப்பி, "உங்களுக்கு ரொம்ப நன்றிங்க" என்று எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவள் சொன்ன நன்றிக்கு சிறு புன்னகையை மட்டும் பதிலாய் தந்தான் கொடி.
"வாங்க மீதி பார்மாலிடீஸ் எல்லாம் முடிச்சிடலாம்" என்றவன், அவளை அழைத்து கொண்டு தன் கேபின்க்கு செல்ல, “பிளீஸ் உக்காருங்க. உங்க பெயர் என்ன??" என்று கொடி கேட்டுக்கொண்டே அவளின் ஆவணங்களை கவனித்தவன் கண்ணில் பட்டது அவளின் பயோ.
“பெயர் – சித்ரமகிழினி,
W/O. வீரவேல்
Status. Widow
என்று அச்சிடபட்டதை வாசித்தவன் கண்களுக்கு முன்பு அழகு சிலையான சித்ரமகிழினி பொலிவு இழந்த நிலையில் அமர்ந்து இருந்தாள்.
தொடரும்...