• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 17, 2025
Messages
75
பூங்குன்றன் சிற்றுந்தில் இருந்து இறங்கியதும் நேராக அரசு மேல்நிலைப்பள்ளியை பார்த்து சென்ற போது, வழியில் உள்ள ஒரு பெட்டிக்கடையை பார்த்தான்.

அது குழலி அப்பாவின் சுந்தரத்தின் பெட்டிக்கடை . அங்கே நிறைய தினசரி நாழிதள்களின் தலையங்கம் தாள்கள் தொங்கி கொண்டு இருந்தது.அதைப் பார்த்து விட்டு 'தங்கள் நிறுவன நாளிதழ் இருக்கிறதா என்று கேட்போம்' என்று மனதில் நினைத்து கொண்டு , சுந்தரத்திடம் " அய்யா, கருடப்பார்வை நாளிதழ் இருந்தால் கொடுங்கள்" என்றதும், முதல் முறையாக இந்த நாளிதழ் பெயர் சொல்லி கேட்பவரை ஆச்சரியமாக.!
பார்த்தார்.

பூங்குன்றன் " என்ன அய்யா, நாளிதழ் எல்லாம் விற்று விட்டதா?" என்று கேட்க, சுந்தரம் " இல்லை தம்பி, இந்த நாளிதழ் பெயர் சொல்லி கேட்ட முதல் ஆள் நீங்கள் தான், அதான் உங்களை ஆச்சரியமாக பார்த்தேன்" என்றார்.

பூங்குன்றனுக்கு இப்போது தான் அவர் ஏன் தன்னை அதிர்ச்சியாக பார்த்தார் என்பதை புரிந்து கொண்டு,
" இங்கே யாரும் அந்த நாளிதழ் வாங்க மாட்டார்களா?" என்று கேட்கும் போது, சுந்தரம், கருடப்பார்வை நாளிதழ் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

பூங்குன்றன் நாளிதழை வாங்கி கொண்டு, அதற்குரிய பணம் கொடுக்கும் போது, சுந்தரம் " வேண்டாம் தம்பி. இந்த நாளிதழ் நிறுவனம் தினமும் என் கடைக்கு ஐந்து நாளிதழ்கள் இலவசமாக தான் தருகிறார்கள். அதுவும் யாராவது எங்கள் நாளிதழின் பெயரை சொல்லி கேட்டால், அவர்களிடம் பணம் வாங்காமல் இந்த நாளிதழை கொடுங்க, என்று அந்த நிறுவனரே,
இங்கே வந்து கொடுத்து விட்டு என்னிடம் இந்த கோரிக்கையை வைத்து சென்றார் " என்றார்.

பூங்குன்றன் " அப்ப இதுவரை யாரும் இந்த நாளிதழை வாங்கியது கிடையாதா?" என்று கேட்க, அதற்கு சுந்தரம், ஆம் என்பது போல் தலையாட்டி விட்டு, "மற்ற நாளிதழ்கள் எல்லாம் விற்று விட்ட பிறகு, யாராவது ஏதோ ஒரு நாளிதழ் இருந்தால் கொடுங்கள் என்றால், இந்த நாளிதழைக் கொடுப்பேன்" என்றார்.

பூங்குன்றனும் " இந்த நாளிதழை நீங்கள் என்றாவது படித்து இருக்கிறீர்களா?" என்று கேட்க, சுந்தரம், " ம்ம், இரண்டு முறை படித்துள்ளேன்" என்றார்.

பூங்குன்றன் அவரிடம் மேலும் தங்கள் நிறுவன நாளிதழ் பற்றி தெரிந்து கொள்வதற்காக, " நீங்கள் இந்த நாளிதழைப் படித்த போது உங்களுக்கு இதன் அனுபவம் எப்படி இருந்தது?" என்று கேட்க,

சுந்தரம் " அனுபவம் என்றால்?" என்று கேள்விக்குறியாக கேட்க, பூங்குன்றன்" மற்ற நாளிதழ்கள் போல் இதில் செய்திகள் உள்ளதா? அல்லது வேறு ஏதாவது இருந்ததா?" என்று கேட்கும் போது, அங்கே ஒரு வாடிக்கையாளர் வந்து தனக்கு வேண்டிய ஒரு பொருளைக் கேட்டு வாங்கினார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாடிக்கையாளர் வர,
சுந்தரம், பூங்குன்றன் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வியாபாரத்தை பார்க்க ஆரம்பித்தார்.

அப்போது அங்கே ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கி," தான் ஒரு மெடிக்கல் ரெப்"என்று தன்னை சுந்தரத்திடம் அறிமுகம் செய்து விட்டு,
ஒரு பார்சலைக் காட்டி, " இது ஒரு முக்கியமான மருந்து, இங்கே ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அவருக்கு கொடுக்க வந்தேன். அவர் எங்கோ வெளியே போய் இருக்கிறாராம், அதனால் இந்த பார்சலை உங்கள் கடையில் கொடுக்க சொன்னார்" என்று சொல்லி கொண்டே பார்சலை சுந்தரத்திடம் பார்சலை கொடுக்க முயற்சி செய்யும் போது,

பூங்குன்றன், ' இவன் பேச்சைப் பார்த்தல் மெடிக்கல் ரெப் போல் தெரியவில்லையே ' என்று மனதில் நினைத்து கொண்டு, சுந்தரத்திடம் " அறிமுகம் இல்லாதவர்களிடம் பார்சல் வாங்காதீங்க" என்று எச்சரிப்பது போல் சொல்ல,

அதைக் கேட்டு மெடிக்கல் ரெப் கோபமாக, பூங்குன்றனை முறைக்க, சுந்தரம், பூங்குன்றனைப் பார்த்து" நீங்கள் முதலில் கிளம்புங்க, நாளிதழ் வாங்கியதும் கிளம்பாமல், எல்லா விசயத்திலும் மூக்கை நுழைத்து கொண்டு," என்று சொன்னதும், பூங்குன்றன் அங்கே இருந்து மேல் நிலைப் பள்ளியை நோக்கி சென்றான்.

சுந்தரம் அந்த மெடிக்கல் ரெப்பிடம் பார்சலை வாங்கி விட்டு" இந்த மருந்து பார்சல், யாருக்கு ?"என்று கேட்க, அந்த மெடிக்கல் ரெப் யாருக்கோ அவசரமாக போன் செய்வது போல் போனை எடுத்து, அழைப்பு விடுத்தார். எதிர் முனையில் உள்ளவர் அழைப்பை ஏற்கும் முன், மெடிக்கல் ரெப், " மருந்து, உடனே கொண்டு வருகிறேன்," என்று சொல்லிக் கொண்டே இருசக்கர வாகனத்தை இயக்க ஆரம்பித்தார்.

சுந்தரமும், அந்த பார்சலில் யார் பெயர் உள்ளது என்று பார்க்கும் போது, ஒரு வாடிக்கையாளர் வந்து தனக்கு வேண்டிய குளிர் பானம் ஒன்று கேட்க, சுந்தரம் அவருக்கு குளிர் பானம் எடுத்து கொடுத்ததும், அடுத்து அடுத்து வாடிக்கையாளர்கள் வந்ததால், தனக்கு பிரச்சினை வரக் கூடிய பார்சலில் உள்ள பெயரை பார்க்காமலேய இருந்து விட்டார்.

அரசு மேல்நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் நாகராஜன், சுந்தரம் கடைக்கு வந்து, ஒரு குளிர் பானம் கேட்க, சுந்தரம் " என்ன வாத்தியாரே இன்று லீவா?" என்று கேட்க, நாகராஜனும்"ஆம் "என்று சொல்லி விட்டு, " யாரு ஒரு புது ஆள் உன் கடையில் ரொம்ப நேரமாக பேசிக் கொண்டு இருந்த்து?" என்று கேட்க,

சுந்தரம், ஒரு நிமிடம் யோசித்து விட்டு," அதுவா, அவர் யாரோ வெளியூர்க் காரனாம். இங்கே வந்து கருடப் பார்வை நாளிதழ் கேட்டார். அப்படியே அந்த நாளிதழைப் பற்றி கேட்டார்.நானும் அதைப் பற்றி சொல்லும் போது, மேலும் மேலும் மூக்கை நுழைத்தார்..." என்று கோபமாக சொல்ல,

துணை தலைமை ஆசிரியர் நாகராஜன் " உனக்கு ஏன் அதற்கு இவ்வளவு கோபம்?" என்று கேட்க,

சுந்தரம்" பின்னே, இந்த நாளிதழ் படித்ததற்கும் மற்ற நாளிதழ் படித்ததற்கும் உள்ள அனுபவம் என்ன? என்று என்னிடம் கேட்டார், நான் வியாபாரத்தைப் பார்க்கவா? அல்லது இவனுக்கு பதில் சொல்லவா?" என்று சடவாக சொன்னார்.

துணை தலைமை ஆசிரியர் நாகராஜன் குளிர் பானம் குடித்துக் கொண்டே, " யாரோ ஒருவன் இருசக்கர வாகனத்தில் வந்து,." என்று குளிர் பானத்தை வாயில் வைத்துக் கொண்ட பேச, சுந்தரம் " ம்ம், அதிலேயும் மூக்கை நுழைத்தார் அந்த வெளியூர்க்காரர், அதான் ஒரு விரட்டு விரட்டினேன், நான் சத்தம் போட்டதில் உடனே இங்கே இருந்து
போய் விட்டார் " என்று தன்னை பெருமையாக சொன்னார் சுந்தரம்.

ஒரு மணி நேரம் கழித்து, சுந்தரம் கடைக்கு முன் ஒரு போலிஸ் ஜீப் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய தலைமைக் காவலர், சுந்தரத்திடம் " பெட்டிக் கடை மட்டும் நடத்துறியா? அல்லது போதை மருந்து விற்ககறாயா?" என்று மிரட்டி கேட்டார்.

உடனே சுந்தரம் " பார்த்து பேசுங்க சார், நான் பெட்டிக் கடை மட்டும் தான் நடத்துகிறேன்" என்று கையை நீட்டி பேசியதும், தலைமைக் காவலருக்கு கோபம் வந்தது. " என்ன என்கிட்டையே கை நீட்டி பேசுகிறாயா? நீ போதை மருந்து விற்கிற என்று தகவல் கிடைத்து தான் இங்கே வந்தோம்" என்று சொல்லிக் கொண்டே, மற்ற காவலர்களை அழைத்து, " இவன் பெட்டிக்கடையை சோதனை செய்யுங்கள் " என்று சொன்னதும்,

சுந்தரம் கோபப்பட்டு கொண்டே கடையை விட்டு வெளியே வந்து தலைமைக் காவலரிடம் சண்டை போடலாம் என்று நினைக்கும் போது,
ஒரு காவலர் " போதை மருந்து இங்கே இருக்கிறது " என்று அந்த மெடிக்கல் ரெப் கொடுத்த பார்சலை தூக்கி கொண்டு கடையை விட்டு வெளியே வந்தார்.

சுந்தரம் அந்த பார்சலை பார்த்து விட்டு, " இதுவா போதை மருந்து?" என்று நக்கல் செய்வது போல் கேட்க,
ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளர் கோபமாக கீழே இறங்கி வந்து, " பிறகு இது என்ன?" என்று கேட்க,

சுந்தரம், காவல் ஆய்வாளர் கோபத்துடன் வந்ததைப் பார்த்து பயந்து போய், " சா...ர்" என்று இழுக்க,

காவல் ஆய்வாளர் கோபம் குறையாமல்," இது என்ன?" என்று கேட்க, சுந்தரம்" அது ஒரு அவசர மருந்து, ஒரு மெடிக்கல் ரெப் கொண்டு வந்து கொடுத்தார் " என்று சொல்லி விட்டு மெடிக்கல் ரெப் வந்த விசயத்தை சொன்னார்.

காவல் ஆய்வாளர், " இது யாருக்கு என்று சொன்னானா?" என்று மிரட்ட,
சுதந்திரத்திற்கு அப்போது தான், 'அது யாருக்கு வந்த பார்சல் என்று நான் பார்ப்பதற்குள் அடுத்து அடுத்து வியாபாரம் ஆனதால் கவனிக்காமல் விட்டு விட்டோம் 'என்று மனதில் நினைத்து கொண்டு , " அது,அது..."என்று இழுத்தார்.

காவல் ஆய்வாளர் , ஒரு காவலரிடம் " அந்த பார்சலைப் பிரித்து இவரிடம் காட்டுங்கள்" என்று சொல்ல, அந்த காவலரும் அந்த பார்சலைப் பிரித்து சுந்தரத்திடம் காட்ட, அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் சுந்தரம். "இது...!" என்று பேச முடியாமல் திணற,

தலைமைக் காவலர் " இது போதை மருந்து, இதை வைத்துக் கொண்டு எங்களை எதிர்த்தா பேசுகிற" என்று மிரட்டி விட்டு, மற்ற காவலர்களிடம் " இவனை ஸ்டேசனுக்கு அழைத்து வாருங்கள், அங்கே வைத்து இவனிடம் விசாரிக்கும் விதமாக விசாரித்தால் எல்லாம் உண்மையும் வெளி வரும்" என்று கோபமாக சொல்லி விட்டு ஜீப்பிற்கு சென்றார்.

காவல் நிலையத்தில் வைத்து சுந்தரத்திடம் விசாரித்ததில் அவர் மீது தவறில்லை என்றும், இருப்பினும் போதை மருந்து பொருளை தெரியாமல் கடையில் வாங்கி வைத்து விட்டு, தலைமைக் காவலரிடம் எதிர்த்து பேசியதால் ஒரு நாள் முழுவதும் ஸ்டேசனில் இருந்து விட்டு
தான் போக வேண்டும் என்று காவல் ஆய்வாளர் கடுமையாக சொல்லி விட்டார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
385

நாலு மிதி மிதிச்சு சுந்ததரத்தை வெளியே விடுங்கடா
 
Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top