Member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 75
- Thread Author
- #1
இதற்கிடையில் குழலி, சாப்பிடும் இடம் அருகே தனியாக நிற்கும் போது,
திருமண பெண்ணின் அண்ணன் வந்து, குழலியிடம்" நான் உங்களிடம் ஒரு இரண்டு நிமிடங்கள் பேசலாமா " என்று கேட்க,
குழலி, நீங்கள் யார்? என்பது போல பார்க்க.
அவர்" நான் திருமண பெண்ணின் அண்ணன் " என்றார்.
குழலி" ஓ , ம்ம், பேசுங்கள் " என்றார்.
அவர் உடனே மொபைல் கேலரியில் பழைய போட்டோ ஒன்றை தேடி எடுத்து" இது யார் என்று பாருங்களேன் " என்று குழலியிடம் காட்ட,
அவளும் அதைப் பார்த்து விட்டு" இது நா..." என்று பேச்சு வராமல் இருக்க,
அவர் " இது நீங்கள் தான் என்று எனக்கு தெரியும். மேலும் இந்த போட்டோவை எடுத்தது நான் தான்.
நான் ஒரு பத்திரிகை நிருபர். இதை என் நண்பன் பூங்குன்றனிடம் காட்டி,
இதை அந்த லாட்ஜில் நடந்த ரெய்டில் சிக்கிய ஜோடி என்று செய்தி போடலாமா?" என்று கேட்க,
என்னை கன்னத்தில் அடித்தான் பூங்குன்றன். " இது யார் தெரியுமா?
என் மனைவி. அது என் தம்பி,
இருவரும் அக்கா தம்பி போல் பழகுவார்கள்.எதுவும் தெரியாமல் நீயாக கள்ள காதல் ஜோடி என்று சொன்ன, உன்னை என் நண்பன் என்று கூட பார்க்க மாட்டேன் என்று
என்னை எச்சரிக்கை செய்தது மட்டுமல்லாமல் இன்று வரை என்னிடம் பேச வில்லை " என்று வருத்தத்துடன் சொன்னார்.
இதையெல்லாம் கேட்ட, குழலிக்கு ஒரு நிமிடம் ஈரக்கொலை நடுங்கியது.
'நான் லாட்ஜில் என் மாமா மகன் ஆறுமுகத்துடன் இருந்த போட்டோவை பார்த்து விட்டு, என் மீது கோபமும் படாமல், இதுவரை என்னிடம் இதுவரை ஒரு நாள் கூட சந்தேகப் பட்டு கேள்வி கேட்காமல், என் மீது நம்பிக்கை வைத்தவரை நான் நம்பாமல் போய் விட்டேனே?' என்று அழ ஆரம்பித்தாள்.
அங்கே வந்த சுந்தரமும், வளவனும் குழலி அழுவதைப் பார்த்து " என்ன?" என்று கேட்க,
குழலி, "திருமண பெண்ணின் அண்ணன் சொன்னதைச் சொல்லி, என் மாணிக்கத்தை நானே தொலைத்து விட்டேனே" என்று பேச முடியாமல் திணறினாள்.
சுந்தரமும் வளவனும் " நாங்களும் தான், அவரை தவறாக நினைத்து விட்டோம்" என்று பூங்குன்றன் பக்கம் உள்ள நியாயத்தை சொன்னார்கள்.
இதையெல்லாம் அங்கு திருமணத்திற்கு வந்த குழலி சித்தி கவனிக்க, " நான் தான் அன்னைக்கே சொன்னேனே, அவசரப் பட வேண்டாம்" என்று சொல்லும் போது,
குழலி அம்மா அங்கே வந்து, நடந்த அத்தனை விசயங்களையும் தெரிந்து கொண்டு வருத்தப்பட்டார்.
அப்போது குழலி சித்தி ஏதோ நினைவு வந்தவராக, " மருமகன் அன்று கடைசியாக போகும் போது, நீயாக என்னை தேடி வரும் வரை நான் உன் முன்னால் வரமாட்டேன் என்றும் நான் எப்போதும் உன் நிழலாக நான் இருப்பேன் " என்று சொன்னாரே, என்று சொல்ல,
உடனே குழலி அழுவதை நிறுத்தி விட்டு, " அப்ப இங்கேயும் என் நிழலாக இருப்பாரா.!" என்று சொல்லி விட்டு மண்டபத்தில் தேட ஆரம்பித்தாள்.
குழலி கூட சேர்ந்து, குழலி குடும்பமே தேடியது.
அப்போது குழலி சித்தி" நீ உன் மாப்பிள்ளைக்கு போன் செய் " என்றவுடன் குழலி தன் மொபைலை எடுத்து கணவனுக்கு போன் செய்யலாம் என்று முயற்சிக்கும் போது,
பூமிகா அனுப்பிய வாழ்த்துக்கள் மூக்கி மெசேஜை பார்த்து விட்டு,
ஆனந்த கண்ணீர் விட்டாள்.
அதைப் பார்த்த குழலி குடும்பம்,_
ஏன் யோசிக்கிற, போன் போடு " என்று சொல்ல,
அப்போது அந்த திருமண மண்டபத்திற்கு எண்ணற்ற பத்திரிக்கையாளர்கள் படையெடுத்து இருந்தார்கள்.
அனைவரும் குழலி அருகே வந்து,
"நீங்கள் மத்திய அமைச்சர் ஆனதற்கு
வாழ்த்துக்கள் மேடம், " என்று சொல்லி விட்டு, " உங்களிடம் ஒரு பேட்டி எடுக்கலாமா?" என்று ஒரு நிருபர் கேட்க,
குழலி" ம்ம் " என்றாள்.
நிருபர் - " நீங்கள் மத்திய அமைச்சர் ஆனதைப் பற்றி, உங்கள் அனுபவத்தை சொல்லுங்க" என்றதும்,
குழலி கணீர் குழலில் பேச ஆரம்பித்தாள்.
" நான் இந்தளவுக்கு உயர்ந்ததற்கு காரணம், என் கணவர்.
என்னைப் பெற்றவர்கள் கூட என் மீது வைக்காத நம்பிக்கையை, என் கணவர் என் மீது வைத்தார். மேலும் எனக்கு என்ன திறமை இருக்கு என்பதை கணித்து , அதற்கு தகுந்தாற்போல் என்னை உருவாக்க அரும்பாடுபட்டார்.
மேலும் எல்லா வீட்டிலும் பெண்கள் வெளியே போனால், ஆண்களால் ஆபத்து ஏற்படும் என்று தான் சொல்வார்கள். ஏன் என் வீட்டில் கூட அப்படித்தான். ஆனால் என் கணவர் எனக்கு தோழியாக ஆகி, எல்லா ஆண்களும் அப்படி அல்ல என்றும்,
தப்பா நடக்கும் ஆண்களை எப்படி மீண்டும் நம் வழியில் குறுக்கே வரமுடியாதவாறு செய்ய வைத்தார்"
என்றாள்.
நிருபர் - எப்படி இவ்வளவு புள்ளி விவரங்களுடன் நீங்கள், எதிர் வேட்பாளர்களின் குறைகளை சொல்லி பரப்புரை செய்தீர்கள்? என்று கேட்க,
குழலி அதற்கு " எல்லாம் என் கணவரின் கணிப்பு தான்" என்றாள்.
உடனே நிருபர், "அப்போ நீங்கள் எப்போ மத்திய அமைச்சராக பதவி ஏற்பீர்கள் என்று கேட்டால், அதற்கும் உங்கள் கணவரிடம் கேட்டு தான் சொல்வீர்களா? " என்று கேட்க,
குழலி" கண்டிப்பாக, அவரிடம் கேட்டுதான் நான் பதவியேற்பேன் "என்று சொல்லி விட்டு,
" இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மனைவியின் திறமை அறிந்து,
அதை வெற்றியாக்கி இரசிக்கும் கணவர்களுக்கு, என் வெற்றியை முன் உதாரணமாக சொல்லுங்க.
ஆம் என் இந்த வெற்றிக்கு காரணம் என் கணவர் தான் " என்று சொல்லி விட்டு,
நிருபரிடம்" எனக்கு பர்சனல் வேலை இருக்கு " என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள்.
அங்கே இருந்து போய், பூமிகாவுக்கு மெசேஜ் செய்தாள்.
உங்கள் மூக்கியை மன்னிக்கவும் என்று மெசேஜ் செய்து விட்டு,
நீங்கள் என் நிழலாக இருந்தால் என் முன்னால் வரவும் என்று மெசேஜ் செய்ய,
அதைப் பார்த்து விட்டு, ' நாம் தான் பூங்குன்றன் என்று எப்படி தெரியும்?' என்று யோசித்து கொண்டே, திருமண மண்டபத்தில் சமையல் அறையில் இருந்து, குழலியை நோக்கி வர,
குழலி, தன் கணவனைப் பார்த்து விட்டு, ஓடிப் போய் கட்டி பிடித்து அழுதாள். அழுதுகொண்டே " நான் ஆறுமுகம் கூட லாட்ஜில் இருந்த போட்டோ பார்த்தும், ஏன் இதுவரை என்னிடம் நீங்கள் கோபப்பட வில்லை? என்று கேட்க,
அதற்கு பூங்குன்றன்" என்னை நானே சந்தேகப்படுவேனா?, ஏனெனில் நீ தான் நான். நான் தான் நீ" என்றான்.
அதன் பிறகு இருவரும் பேசாமல், தங்கள் அன்பை வேறு விதமாக வெளிப்படுத்தினார்கள்.
பூங்குன்றன் ஏதோ நினைவு வந்தவனாக " பூமிகா என்பது நான் தான் என்று எப்படி கண்டு பிடித்த?" என்று குழலியிடம் கேட்க,
அதன் குழலி" நீங்கள் தான் உங்களுக்கு என் மீது அதிக பாசம் வந்தால் மூக்கி என்று செல்லமாக அழைப்பீர்களே.!" என்று சொல்ல,
பூங்குன்றன்" ஆமாம், ஆனால் நான் உன்னை, பூமிகாவாக எப்போது சொன்னேன் " என்று கேட்க,
குழலி பூமிகா நம்பரில் இருந்து வந்த
வாழ்த்துக்கள் மூக்கி என்பதைக் காட்ட,
பூங்குன்றன்" அட ஆமாம், நானே என்னைக் காட்டி கொடுத்து விட்டேனே "என்று சொல்லி சிரிக்க,
அப்போது சுந்தரமும் வளவனும், " எங்களையும் மன்னிக்கவும் மாப்பிள்ளை " என்று கையெழுத்து கும்பிட,
அதைப் பார்த்து பூங்குன்றன்" அய்யோ என்ன இதெல்லாம் " என்று சொல்லி விட்டு இருவரின் கையை கீழே இறக்கினான்.
அந்த திருமணத்திற்கு வந்திருந்த நக்கீரன் குடும்பமும், இதைப் பார்த்து மகிழ்ந்தார்கள்.
பூங்குன்றன் - குழலி வாழ்க்கையில் இனி சந்தோசம் தான் எப்போதும் இருக்கும்.

சுபம் 

ஆரம்பத்தில் இருந்து இந்த கதையை முழுமையாக படித்து
விமர்சனம் செய்த அனைத்து வாசக உறவுகளுக்கும் என் நன்றிகள்