- Thread Author
- #1
35. கர்ணாவின் மனநிலையும்... மெய்ய அழகியின் பிடிவாதமும்...
சஞ்சனாவின் குழப்பமும்...
சனாதன் மனதில் அழகி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விடை தெரியாத கேள்விகள் சில இருந்தாலும்... இனி இங்கு இருந்து அவர்கள் இருவரின் தனிமையை கெடுக்க வேண்டாம்... பிறகு சரோஜா அத்தை கிட்ட கேட்டு கொள்ளலாம் என்று நினைத்து கொண்டு வந்த வழியே சத்தம் இல்லாமல் திரும்பி சென்றான் சனாதன்.
அழகியை எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க சொல்லி தன் கரத்தால் அவளின் இதழ்களை மூடியவன்... மெல்ல அவள் அருகில் நெருங்கி அமர்ந்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் கர்ணா.
அழகி.. கர்ணாவிடம் இருந்து விலக பார்க்க....
மெய்... ப்ளீஸ் டி.... சிறிது நேரம் அமைதியாக அப்படியே இரேன் என்று ஆழ்ந்த குரலில் சொல்ல... அவளும் ஏனோ முரண்டு பிடிக்காமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள்... ஆனால் அதற்கு நேர்மாறாக மாமா நான் உங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி கொண்டே இருந்தாள் கர்ணாவின் மெய்.
சிறிது நேரம் தன்னுடைய மனதை அமைதிபடுத்துவதற்காக மெய்யை தன் நெஞ்சோடு சாய்த்தவன்.... இருவரின் இதய துடிப்பும் மற்றவர்கள் உணர்ந்தாலும்.. சிறிது நேரம் அமைதியாக இதயத்தின் ஓசை இருவருக்குமே சீராகும் வரை அமைதியாக இருந்தனர்.
பின்னர் மெதுவாக மெய்யை விலக்கியவன்... அந்த இருளிலும் அவள் கண்களில் இருந்த வலியை மீறிய உறுதியை கண்டவன்... கண்டிப்பாக இந்த நிலைமைக்கு வருவதற்கு மிகவும் பாடுபட்டிருப்பாள் என்று உணர்ந்து.. மெய் போய் தூங்கு என்று சொன்னான்.
அழகி சிறிது அதிர்ச்சியும், அதே சமயம் ஆச்சரியத்தையும் தன் முக பாவனையில் காண்பித்தாள். சத்தியமாக கர்ணாவிடம் இப்படி ஒரு பதிலையோ, அடுத்த நடவடிக்கை இவ்வளவு இயல்பாக இருக்கும் என்பதையும் அவள் நினைக்கவே இல்லை. ஏதோ ஒரு ஏமாற்றம் அவள் இதயத்தை தாக்கியது. ஆனால் அந்த ஏமாற்றம் எதனால் என்று யோசிக்கவே இல்லாமல் எழுந்து சென்றாள்.
அமைதியாக சென்றவள் தன் மனதின் பரிதவிப்பை சரியாக புரிந்து கொள்ளாமல்.. திரும்பி கர்ணாவிடம் வந்து மாமா நீங்கள் என்னை விரும்புகிறேன் என்று சொன்னீர்கள்.. தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.. நான் இந்த ஜென்மத்தில் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். பெரிய மாமா இருவரின் திருமணம் முடிந்த பிறகு, தாங்களும் திருமணம் செய்து கொள்ளுங்கள். எனக்காக காத்திருக்க வேண்டாம். தேவை இல்லாமல் பெரிய தியாகி போல் சீன் போட்டுக் கொண்டு இருக்காமல்.. உங்கள் அழகும் இளமையும் போவதற்கு முன் வீட்டில் பெரியவர்களிடம் சொல்லி திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அமைதியாக நின்றாள் மெய்.
கண்களை மூடி அமைதியாக கைகளை கட்டிக் கொண்டு நின்றவன் மெய் அமைதியாக நிற்க.. நிதானமாக கண்கள் திறந்து கண்களை பார்த்தது ஒரு நிமிடம் பயத்தில் உறைந்து போய் நின்றாள் மெய். அந்த அளவிற்கு அவனது கண்கள் கோபத்தின் உச்சத்தில் ரத்த சிவப்பில் இருந்தது.
நிதானமாக அவரின் முன்பு மெதுவாக காலடிகளை எடுத்து வைத்து வர... பயத்தில் அவள் மெதுவாக பின்னே சென்றாள் மெய்... தென்னை மரத்தில் தடுக்கி விழப் போகும் நேரம் சுதாரித்து மரத்தில் சாய்ந்தவள் அருகில் வந்தவன்... இன்னும் ஒரு வார்த்தை உன் வாயில் இருந்து வந்தாலும் இதே மாதிரி உன் அறைக்கு சென்று படுக்க மாட்டாய்... ஜாக்கிரதை.
எங்களுக்கு எங்கள் வாழ்க்கையை எப்படி தீர்மானிக்க வேண்டும் என்று தெரியும். பெரிய புடுங்கி.... மாதிரி நீ எனக்கு அட்வைஸ் பண்ணாத. இதற்கு மேல் என்னிடம் ஏதாவது எடக்கு மடக்காக பேச வாயை திறந்த... அப்புறம் இந்த உதட்டுக்கு பனிஷ்மென்ட் என்னிடம் வேறு மாதிரி இருக்கும் என்று சொல்லி அவளின் கீழ் உதடுகளை இழுத்து சுண்டி விட்டு... வரட்டுமா பொண்டாட்டி என்று சொல்லி அவளை பார்த்து கண் அடித்து விட்டு முன்னே சென்றான் கர்ணா.
கர்ணா நிமிண்டி விட்ட உதடு வலி கொடுக்க... உதட்டை தன் நாவால் ஈரப்படுத்தி இழுத்து பார்த்து கொண்டே ச்சே... இந்த மாமா ரொம்ப மோசம்.
நான் இவர் நல்லதுக்காக தானே சொன்னேன். இதற்கு போய் இப்படி என் உதட்டை வலிக்க கிள்ளி விட்டு போய்விட்டார்.. சரியான லூசு மாமா என்று சொல்லிக் கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் சென்று கொண்டு இருக்க...
அவள் வரும் வழியில் நின்று கொண்டு இருந்த அவளின் லூசு கர்ணா மாமா மீது இடித்துக் கொண்டு நின்றாள். நெற்றியை தேய்த்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்க கர்ணா நிற்பதை பார்த்து விட்டு, அச்சச்சோ அவரை நாம் லூசு என்று திட்டியதை கேட்டிருப்பாரோ என்று, மனதிற்குள் நினைத்து கொண்டு இருப்பதாக நினைத்து வாயை விட்டு கேட்க...
அடிங்க... மவளே நான் லூசா... ஆமா டி உன்னை மாதிரி ஒரு வில்லேஜ் புளியங்காவை போய் காதலிக்கிறேன் தானே.. நான் லூசு தான் என்று கர்ணா சொல்லிய அடுத்த வினாடி...
இடம்,பொருள், நேரம் காலம் அனைத்தும் மறந்து வாய் விட்டு சிரித்தவள்.. ஐயோ மாமா அது வில்லேஜ் மாங்காய் என்று தான் சொல்வாங்க. நான் கூட சன் டிவியில் பார்த்தேன். ஒரு படத்தில் சூர்யா சாரை பார்த்து அனுஷ்கா அப்படித்தான் சொல்லுவாங்க.. என்று சொல்லி சிரித்தாள் மெய்.
அவளின் சிரிப்பில் தன்னை தொலைத்தவன்.. இதற்குமே என்னால் சத்தியமாக முடியாதுடி என்று சொல்லி விட்டு அவளை அப்படியே சுவற்றோடு சுவற்றாக தள்ளி அவளின் இதழ்களை கவ்வி பிடித்து சுவைக்க ஆரம்பித்தான்.
முதலில் அதிர்ந்து... பிறகு அவனை தள்ள நினைத்து அவள் செய்த முயற்சிகள் யாவும் தோல்வி அடைய..
ஆழ் மனதில் கர்ணா மீது இருந்த காதலும் அவனிடம் அமைதியாக... அவனின் பனியனை இப்போது கசக்கி பிடித்து தன் உணர்வுகளை வெளிப்படுத்த... அவளும் தன்னிடம் நெகிழ்வதை உணர்ந்த கர்ணா..
அவளின் சேலை விலகிய இடைப்பகுதியில் கையை விட்டு தன்னுடன் இறுக்கி அணைத்தவன்... அவளின் இதழ்களில் இருந்து தன் இதழை பிரித்து... ஆனால் உதடு உதடும் உரசிக் கொள்ளும் இடைவெளியில் தன்னுடன் நெருக்கமாக நிறுத்தி...
உன்னுடைய புளியங்கா, மாங்காய் ஆராய்ச்சியை உன்னோடு வைத்துக் கொள்... இனிமேல் என்னிடம் ஏதாவது கிறுக்குத்தனமாக பேசினால் இது தான் தண்டனை என்று சொல்லி விட்டு, மீண்டும் இதழ்களை ஒரு முறை அழுத்தமாக கவ்வி சுவைத்து விட்டு... அவளின் நெற்றியில் அழகாக ஒரு முத்தம் இட்டு சென்றான்.
போகும் கர்ணாவை பார்த்துர கொண்டே நின்றவள் மாமா நீங்க என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்... நான் உங்களை தடுக்க மாட்டேன், அதே நேரம் உங்களுக்கு நல்ல ஒரு பெண்ணாக பார்த்து நானே கல்யாணம் செய்து வைப்பேன் என்று சொல்லி விட்டு தன் கண்களில் வழியும் விழி நீரை துடைக்க கூட தோன்றாமல் அழுது கொண்டே சென்று படுத்தாள் கர்ணாவின் மெய்.
அழுது கரைந்தவள் எதற்கு அழுகிறோம் என்றும் தெரியாமல் ... அதே சமயம் அழுது கொண்டு எப்போது உறங்கினோம் என்று தெரியாமல் உறங்கிப் போனாள் மெய்யழகி.
சஞ்சனா அறையில்...
உதயாவும் திருச்சிக்கு சென்று விட.. சரண் ஒரு ரூமிலும்... லீனா, லட்சுமி அம்மாவோட அறையிலும் தங்கி கொண்டார்கள்.
இன்று காலையில் இருந்து இரவு வரை நடந்த அனைத்து விஷயங்களையும் தோழிகள் ஒருவருக்கு ஒருவர்.. பரிமாறிக் கொண்டு படுத்து இருந்தனர்.
அப்போது புவனா.. ஏன் மிதுனா... இன்று ரிஷியை பார்த்து ஏதேனும் பெண்கள் வலிந்தார்களா என்று கேட்டாள்.
இவ்வாறு முதல் முறையாக புவனா கேட்கவும்...
சஞ்சனா, மிதுனா, இருவரும் புவனாவை வித்தியாசமாக பார்க்க...
மிதுனா.. ஏன் டி இப்படி கேட்கிற... நீ இப்படி எல்லாம் கேட்குற ஆளே இல்லையே... என்று சொல்லி கொண்டே புவனாவின் வயிற்றில் தலை வைத்து படுத்து இருந்த தலையை நிமிர்த்தி அவள் முகத்தை பார்த்து கேட்டாள்.
அப்போது தான் சஞ்சனா, மிதுனா இருவரின் பார்வையை உணர்ந்து... இது என்னடி கேள்வி நான் சும்மா எதார்த்தமா தான் கேட்டேன். அதற்கு ஏன் இருவரும் என்னை இப்படி குறுகுறுவென்று பார்க்கிறீர்கள். நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன் என்று பேச்சை திசை திருப்பினாள்.
மிதுனா அவளின் திசை திருப்புதலுக்கு ஏற்றவாறு.. ஐய.. ஆசைய பாரு... இவ பெரிய உலக அழகி... அடிச்சி போ நாயே என்று சொல்லி விட்டு தன்னுடைய மொபைல் போனில்... கொரியன் ஃபிலிம் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ஆனால் சஞ்சனா புவனாவையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருப்பதை பார்த்து விட்டு,.. அச்சச்சோ என்ன இவள் இப்படி பார்க்கிறாள் பேச்ச மாத்து டி.. பேச்ச மாத்து என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்ட புவனா, சஞ்சனாவை பார்த்து ஏன் டி இப்படியே உக்காந்து இருக்கிறாய்.... தூங்கவில்லையா?.. என்று கேட்டாள் புவனா.
அதற்கு சஞ்சனா எதுவோ கேட்க வர சட்டென்று ஓஹோ தனா சார் பற்றி நினைத்துக் கொண்டு இருக்கிறாயா என்று ... சஞ்சனா யாரைப் பற்றி பேசினால் கவனம் சிதறும் என்று தெரிந்து வைத்திருந்தவள் சரியாக தனாவை பற்றி பேசவும்...
சஞ்சனாவும் புவனாவிடம் ஆமாம்... டி.. அவன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி தெரிகிறான். முதல் முறை என்னை பார்க்கும் போது தவறுதலாக நடந்த ஒரு செயலுக்கு... தேவையே இல்லாமல் என்னை அடித்தான்.
பிறகு பார்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னை மட்டம் தட்டிக் கொண்டே தான் இருந்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் என்னை அவன் பார்க்கும் பார்வையில் ஏதோ ஒன்று இருக்கிறது அது என்னவென்று தான் எனக்கு தெரியவே இல்லை.
ஏனோ மனதிற்கு அவன் மீது நல்ல அபிப்ராயமும் வருகிறது... அதே சமயம் அவனை தனக்கு அருகில் நெருங்க விடக்கூடாது என்றும் தோன்றுகிறது... இவ்வளவு நாட்கள் அமைதியாக போய்க்கொண்டு இருந்த நம் வாழ்க்கை.. இனி அப்படி இருக்காதோ என்று தோன்றுகிறது.
நல்ல விதமாக அமைந்தால் சரி ஆனால் அதற்கு நேர் மாறாக யாருக்காக ஏதாவது தவறாக நடந்துவிட்டால் என்ன செய்வது. மனதில் ஒரே குழப்பமாக இருக்கிறது புவனா என்று அவள் பேசிக் கொண்டு இருந்ததை கவனித்த மிதுனாவும் இப்பொழுது எழுந்து அமர்ந்தவள்...
சஞ்சு ஏன் இப்போது இவ்வளவு கலங்கி போய் இருக்க... நாம் யாருக்கும் எப்பவும் எந்த துரோகமும் செய்தது இல்லை.. தவறும் செய்தது இல்லை. அதே சமயம் இப்போது தனா சார், அவருடைய பிரதர்ஸ் யாரைப் பார்த்தாலும் தவறாக தோன்றவில்லை. அவர்களாலும் நமக்கு எந்த தொந்தரவு வரப்போவதில்லை. நம் மூவரையும் பிரித்து விட்டார்கள் என்பதால் உனக்கு மனதில் தேவையில்லாத சஞ்சலங்கள் தோன்றுகிறது என்று நினைக்கிறேன்..
கவலைப்படாமல் தூங்கு டி என்று சொல்லும் மிதுனாவின் வாழ்க்கையில் தான், பெரும் புயல் அடிக்கப் போகிறது என்று பாவம் அவள் அறியவில்லை.
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...