• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

ஆர்கலி- இறுதி பாகம் 68

Active member
Joined
Jun 3, 2025
Messages
537
பொள்ளாச்சி:

டேய் எந்திரிங்கடா எருமைங்காளாயென்கும் சிம்ஹன் தாத்தாவின் குரலில் அதுக்குள்ளே விடிஞ்சிட்டா என்றவாறு மூவரும் எழுந்தனர்.

பின்ன விடியாமல் அப்படியேவா இருக்கும்.மணி 5 ஆகுதுடா போய் குளிச்சிட்டு கிளம்புங்களென்று சொல்லியவர்,அம்மாடி வசு உங்கம்மா கிட்ட சொல்லி காபி ஒன்னு கொண்டு வர சொல்லுமா என்றார்.

காலை 7-8.30 மணிக்கு முகூர்த்தம் என்பதால் எல்லாரும் வேக வேகமாக தயாராகினர்.

பார்லரில் இருந்து வந்த பெண்கள் இருவர் ஜனனியை அலங்கரிக்க அம்மாடி ரொம்ப மேக்கப் போட்டு முகத்தை புதுசா மாற்றிடாதீங்க.

என் மருமகள் அழகுக்கு ஏற்ற போல மேக்கப் பண்ணுங்களென்று சொல்லிய வசுந்தரா, கீதா நீயும் அவங்கள்கிட்டயே புடவையை கட்டேன் மா என்க,இருக்கட்டுங்கத்தை என்றாள்.

அக்கா லட்டு குட்டிங்களை நான் பார்த்துக்குறேன்.அவங்க தூங்கிட்டு இருக்கும் போதே நீங்க போய் ரெடியாகுங்களென்று ஆதிரா சொல்ல,சரி மா.அவங்க எந்திரிச்சதும் அம்மாகிட்ட சொல்லிடு.இருவரையும் குளிக்க வைப்பாங்கள்.

உங்க மாமாகிட்ட இவங்களுக்கு டிரஸ் கொடுத்துனுப்புறேனென்று சொல்லிய ஆர்கலியும் தனது ரூமிற்குள் வந்தவள்,ஹீட்டரை ஆன் பண்ணி குளித்து வெளியே வந்தவள் தனது அண்ணன் வாங்கி தந்த பட்டுப்புடவையை கட்டி முடித்து தந்தை வாங்கி தந்த நகைகளை போட்டு தயாராகியவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு வாசல் பக்கம் பார்க்க உள்ளே வந்தவன் எழிலோவியம் நேரில் வந்தது போல பேரழகியாய் நிற்பவளை கண்டு விழிகள் விரிய அதிசயித்து போனான்.

இவ்வளவு அலங்காரம் செய்து இதுவரை தன் பொண்டாட்டியை பார்த்ததில்லை என்பதால் கல்யாணம் இன்று ஜனனிக்கா இல்லை இவளுக்காயென்று தெரியலையே ருத்ரா என்று முணவினான்.

என்ன மிஸ்டர் ருத்ரன்.என்னமோ பேயறைந்த போல அங்கையே நிற்குறீங்களென்று தனது முந்தானையை பிடித்து ஒரு சுற்று சுற்றியவாறு ஆர்கலி கேட்க இங்க பாருடி ஒழுங்கா ஓடிடுடி.

நீ வேற பார்க்க சும்மா கும்முனு செமையா இருக்க.கிட்ட வந்தேன் பிறகு நடப்பதற்கு நான் பொறுப்பில்லை என்று கண்ணடித்து சொல்ல,கணவன் சொன்னதை கேட்டவள் ஆத்தாடி என்று பதறியடித்தவாறு வெளியே சென்றாள்.

கலெக்டர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி வீட்டு கல்யாணம் என்பதால் அலங்காரங்களும் விருந்தும் வேறலெவலாக இருந்தது.

நேரமும் கடந்து சொல்ல,பொண்ணு மாப்பிள்ளை இருவரும் மணமேடைக்கு வந்தனர்.மறந்தும் இருவரும் ஒருவரையொருவர் பார்க்கவில்லை.

ரெண்டு பேரோட அம்மா அப்பா வாங்கள் பாத பூஜை பண்ணனுமென்று ஐயர் சொல்லியபடியே பாத பூஜை செய்வதற்கு தேவையானதை தயாராக எடுத்து வைக்க அப்பொழுது வெற்றி ஏதோ சத்தியமூர்த்தியிடம் சொல்ல அவரோ மகனை அதிர்ந்து பார்த்தார்.

என்ன விஷயமென்று மற்றவர்கள் கேட்க,ஜனனி கழுத்தில் தாலி கட்ட வேண்டுமென்றால் அதற்கு முதலில் என்னுடைய அத்தை வள்ளியம்மை கழுத்தில் ஜனனியின் அப்பா மாரியப்பன் தாலி கட்டணும்.

பெற்றோர்களாக அவர்கள் இருவரும் பாத பூஜை பண்ணி கன்னியாதானம் பண்ணி கொடுத்தால் தான் இந்த கல்யாணம் நடக்குமென்று உறுதியாக எல்லாருக்கும் கேட்பது போல சத்தமாக வெற்றி சொல்ல, இதை கேட்டவர்களுக்கு என்ன பண்ணுவதென்றே புரியவில்லை.

மணமேடை வரைக்கும் வந்த கல்யாணம் நின்றால் ஜனனியை தானே குறை சொல்வார்களென்னு ஆளுக்காள் வாய்க்கு வந்தது போல பேச மாரியப்பனுக்கோ தன் தலையில் இடி விழுந்த போல இருக்க, வள்ளியோ தனது அண்ணன் மகன் சொன்னதை கேட்டு அதிர்ந்து போய் ஒரு பக்கமாய் உட்கார்ந்து விட்டார்.

வெற்றி இது என்ன பிடிவாதமென்று சத்தியமூர்த்தி மகனிடம் கோவப்பட வசுக்கு மட்டும் மகனின் செயலில் ஏதோ விஷயம் இருப்பது புரிந்தது.

கண்ணா என்று மகனின் தோளில் கையை வைக்க,போதும் மா.மனசுக்குள் உள்ள காதலை சொல்ல முடியாமல் தன் வாழ்க்கையை தியாகம் பண்ணிய அத்தை இதன் பிறகாவது அது மனசுக்குள் விரும்பியவரோடு வாழட்டுமேயென்று சொல்லி கண்கள் கலங்கினான்.

மகனின் வார்த்தையை கேட்ட சத்தியமூர்த்திக்கு தங்கை மனதில் இருந்தது தனது தாய்மாமன் மகன் மாரியப்பனா என்று அதிர்வு தான்.

அம்மாடி வள்ளியென்றவாறு தங்கையின் அருகில் சென்றவர் ஒரு வார்த்தை இந்த அண்ணன் கிட்ட சொல்லியிருக்க கூடாதாடா...

நானும் கல்லு போல இருந்து உன் மனசை புரிந்துகொள்ளாமல் போய்விட்டேனேயென்று தலையில் அடித்தவாறு அழ,தனது அண்ணனின் வார்த்தையை கேட்டவர் என்னை மன்னிச்சிடுணா என்றவாறு கதறி அழுதார்.

பின்னர் கண்களை துடைத்து நிமிர்ந்தவர் வெற்றி என்ன பேசுற?இந்த வயதில் இந்த கல்யாணம் எங்களுக்கு எதற்கென்று வள்ளி கோவப்பட,தனது அத்தையின் அருகில் வந்தவன் உன் மனசில் மாமா இல்லையென்று என் மேல சத்தியம் பண்ணி சொல்லு இந்த நிமிஷமே நான் ஜனனியை கல்யாணம் பண்ணிக்குறேன் என்க வெற்றியின் வார்த்தையை கேட்டவர் அய்யோ என் புள்ளை மேல நான் எப்படி பொய் சத்தியம் பண்ணுவேனென்று அவனை கட்டிக்கொண்டு அழுதார்.

தள்ளி நின்ற ஜனனியோ தன்னவனின் தோளில் சாய்ந்து அழும் வள்ளியின் அருகில் வந்தவள் அவர் கண்ணை துடைத்துவிட்டு அம்மாயென்க அழுதவர் அதிர்வோடு நிமிர இத்தனை வருஷம் மனசுக்குள்ளே வைத்து நீங்கள் புழுங்கியது போதும் மா.

என்னோட அம்மாவா கடைசிவரை இருங்கம்மா.அன்று மலர் அம்மாகிட்ட நீங்கள் சொன்னதெயெல்லாம் நான் கேட்டென்று சொல்லி அழுதாள்.

பெரியவர்களும் யோசித்து இதற்கு சம்மதிக்க,மாரியப்பன் வள்ளி இருவருக்கும் வாங்கிய தாலியை கிரிஜா பாட்டியும் சிம்ஹன் தாத்தாவும் பூஜையறையிலிருந்து எடுத்து வந்து கொடுக்க,அத்தனை பேருடைய ஆசீர்வாதத்தோடு இருபத்தியாறு வருடங்களுக்கு பின்னர் தனது காதலன் கையால் தாலியை கட்டிக்கொண்ட வள்ளிக்கு கண்ணில் இருந்து வழிந்தோடிய கண்ணீருக்கு மட்டும் அளவேயில்லை.

சரிப்பா இனி நீங்கள் வந்து உட்காருங்கோ.முகூர்த்த நேரம் முடிய இன்னும் அரைமணி நேரம் இருக்கென்று ஐயர் சொல்ல கோபியென்று வெற்றி குரல் கொடுக்க மாலைகள் இருந்த தாம்பாளத்தை எடுத்து வந்தவன் ஆர்கலி ருத்ரனின் முன்பு போய் நின்று நீட்டினான்.

என்னடா இதுயென்க,அண்ணா உங்க கல்யாணத்தை எல்லாரும் பார்க்க ஆசைப்படுறாங்கள்ணா கொஞ்சம் நம்ப வீட்டில் இருக்கும் பெருசு மூஞ்சை பாருணாயென்று ருத்ரனுக்கு மட்டும் கேட்கும் படி கோபி சொல்ல எல்லார் முகத்திலும் ஓர் ஏக்கம் இருந்தது.

அவர்களை பார்த்தவன் பின்னர் தட்டில் இருந்த மாலையை எடுத்து ஆர்கலியின் கழுத்தில் போட அவளும் முகமலர்ச்சியோடு ருத்ரனின் கழுத்தில் மாலையை போட்டாள்.

பின்னர் முதிய தம்பதிகள் சேர்ந்து தாலி உள்ள தட்டை ருத்ரனின் முன்னர் நீட்ட சொந்த பந்தங்களின் வாழ்த்துகளோடு மூன்றாவது முறையாக தன்னவளை மனைவியாக்கியவன் கம்பீரமாக தனது மீசையை முறுக்கி விட,இருவரின் மடியில் இருந்த குழந்தைகளோ ஹை ஹை பூவு பூவுயென்று இருவரின் கழுத்திலிருக்கும் மாலையை பிடித்து இழுத்து விளையாண்டனர்.

அடேய் இப்போவாது என் தங்கச்சி கழுத்தில் தாலியை கட்டுடாயென்று விஷால் சத்தம் போட,அதை விட வேற வேலை மச்சான் என்றவாறு மணவறையில் போய் உட்கார்ந்தவன் ஐயர்வால் மூனு பேமண்ட் உங்களுக்கு கிரிடிட் ஆகிடும் கவலை வேண்டாமென்க,அவரோ டிரிபிள் ஓகேடா அம்பியென்றார்.

ஜனனியோ தனது அம்மா அப்பாவான வள்ளி மாரியப்பனுக்கு மகிழ்ச்சியாக பாத பூஜையை செய்தாள்.

அதைப்போல வசு சத்தியமூர்த்திக்கு வெற்றியும் பாத பூஜை செய்து முடிக்க,கெட்டிமேளம் முழங்க அனைவரின் ஆசீர்வாதத்தோடும் தன் காதலியின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு மனைவியாக ஏற்றுக்கொண்டவன் லவ் யூ டி மை டியர் பொண்டாட்டி என்க இவ்வளவு நேரம் கீழே குனிந்திருந்தவள் அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்க்க அந்த தருணத்தை போட்டோகிராபரும் அழகாய் தனது கேமராவில் கிளிக் பண்ணி தள்ளினார்..

மற்ற சடங்குகள் எல்லாம் முடிந்து புதுப்பெண் மாப்பிள்ளையை ஹனிமூனிற்கு அனுப்பி விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

கல்யாண வேலையால் சோர்ந்து போனவர்கள் ஹப்பாடாயென்று ஓய்ந்து போய் ஹாலிலே படுத்து விட வள்ளியும் மாரியப்பனும் வெளியே இருக்கும் திண்ணையில் உட்கார்ந்திருக்க மனைவியின் கையை பிடித்தவர் நானும் தான் உன்னை நேசித்தேன் வள்ளி கண்ணு.

சூழல் மாறிப்போக மீண்டும் நாம் இணைய வேண்டுமென்று இறைவன் எழுதியிருக்கான் என்க,கேட்ட விஷயம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் வள்ளியம்மை மாரியப்பனை அதிர்ந்து பார்க்க அவரோ தோளோடு அணைத்தவர் போதும் மா நீ இதுவரை பட்ட வேதனை என்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
537
கால் வரும் சத்தம் கேட்ட ருத்ரன் பெட்டின் மேலிருந்த போனை எடுத்து அட்டென் பண்ணியவன் சொல்லுடா இன்னும் தூங்காமல் என்னடா பண்ணுற?என்றான்.

கல்யாணம் நல்லபடியாக முடிந்ததாயென்று ஆது கேட்க எல்லாம் சிறப்பாக முடிஞ்சிட்டுடா.

ராகினி எப்படி இருக்காடா என்க,அதற்கு ஆதுவே ம்ம் இவ்வளவு நேரம் உன் தங்கச்சிகாரி என் உசுரை வாங்கிட்டு இப்போ தாண்டா தூங்குறாளென்றான்.

அப்படியா கேட்கவே காதுக்கு ரொம்ப இனிமையா இருக்குடா அப்புறம்,கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் இருவரையும் மணாலிக்கு ப்ளைட் ஏத்தி விட்டு வந்தோமென்க.

ஓஓஓ சூப்பர்டா என்ற ஆது இன்னும் நீயும் தூங்கலையா என்க இதோ பேம்பர்ஸ் போட்டுட்டு தான் தூங்கணுமென்று சொல்ல,எதேஏஏஏ!!

அடேய் என் மருமக புள்ளைங்கள் பேம்பர்ஸ் போட்டால் நியாயாம்.ஏழு கழுதை வயசுல உனக்கு பேம்பர்ஸ் கேட்குதாயென்று ஆது கேட்க,அட அறிவுகெட்ட முண்டம் சாம் ஆய் போய்ட்டான் டா.அவனுக்கு வாஸ் பண்ணி விட்டு வேற பேம்பர்ஸ் மாற்றினேன்.

வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ,
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க.
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை.
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல...
என்று பாடிய ஆதுவை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு போனை வைத்தவன் மகனின் முதுகில் தட்ட இஷானும் சிறிது நிமிடத்தில் தூங்கிவிட்டான்.

பொறுமையாக பெட்டில் படுக்க வைத்துவிட்டு ரெஸ்ட் ரூமிற்குள் சென்று நைட் டிரஸை போட்டு வெளியே வந்தவன் டிரஸிங் டேபிளின் முன்பு போய் நின்று தலையை சீவ,மெல்லிய கரமிரண்டு அவனை பின்பக்கமிருந்து இறுக்கி அணைத்து லவ் யூ மாம்ஸ் என்க,மனைவியின் அழைப்பில் கிறங்கியவன் பின்னாளிருப்பவளை இழுத்து தனது கைகளின் ஏந்தியிவன் மூன்றாவது முறையாக ஒரே ஆளை கல்யாணம் பண்ணிய முட்டாள் பயல் நானாக தான் இருப்பேன் என்க,அதைக்கேட்டவளே அவன் கன்னத்தில் பல் பதிய நன்கு கடித்து வைத்தாள்.

ஆஆஆஆ ராட்சசி சும்மாடி என்றவன்,பார்பி...ஆர்கலி என்றால் என்னவென்று தெரியுமாடி என்க,தெரியாதே என்றாள்.

நீயெல்லாம் என்னடி வாத்திச்சி?.

உனக்கு போய் எப்படி தான் கண்ணன் அங்கிள் வாத்திச்சியா வேலை கொடுத்தாங்களென்று கேட்க ஆர்கலியோ கணவன் சொன்னதை கேட்டு முறைத்தாள்.

அடேய் தடிமாடு காதல் பாடம் படிக்க வேண்டிய நேரத்தில் இப்படி பள்ளி பாடம் படிக்கும் ஒரே பண்ணாடை நீயா தான் இருப்பாய்.

இப்படியே நீ கிளாஸ் நடத்தினால் உன் பொண்டாட்டி கூட இந்த ஜென்மத்தில் நீ ரொமான்ஸ் என்னும் ஒன்றை கனவிலும் நினைக்க முடியாது.

ஒழுங்கு மரியாதையாக புரிஞ்சி நடந்துக்கடா என்று சொல்லிய மனசாட்சி அங்கிருந்து சென்றது.

உன் பேரோட அர்த்தம் தெரியாமல் இருக்கியேடி மக்கு டீச்சர்.நான் தான் உனக்கு பாடம் எடுக்கணும் போல.

சரி நானே சொல்லுறேன்.உன் புண்ணாக்கு மண்டையில் நல்லா ஸ்டோர் பண்ணிக்கோடி என்றவன்,கடல் இருக்கே அதற்கு கடல் என்ற பெயர் மட்டும் இல்லைடி.

இன்னும் சில பெயர்கள் உண்டு.அதில் ஒன்று தான் ஆர்கலி.அதைப்போல மழை இருக்கே அதற்கும் வேறு சில பெயர்கள் தமிழில் உண்டு.அதில் ஒன்று தான் ஆலி.

அப்போ கடல் போன்ற உன் காதலில் விழுந்த நான் மழை துளி போல உனக்குள்ளே தொலைந்தேன்டி.

இந்த ஆர்கலியில் விழுந்த ஆலியிவன் தான் இந்த ருத்ர வீர சிம்ஹன் என்றவாறு அங்கிருந்த கட்டிலின் மேல் மனைவியோடு சரிந்தான்.

சித்தரின் மூலமாய் சொன்னதெல்லாம் நிறைவேறியதை கண்ட இறைவனும் பூமியில் இருப்பவர்களை ஆசீர்வதித்தார்!!

ஆர்கலி-ருத்ரன் இருவரும் இன்று போல் என்றும் இதே காதலோடும் அன்போடும் வாழ நாமளும் வாழ்த்துவோம்!


-சுபம்-
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top