• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 24

“ஏன் எப்ப பாத்தாலும் டீயே குடிக்குற?. ஒரு சேன்ஞ்காக இன்னைக்கு ஹார்ட் சாக்லேட் குடிக்கலாமா?. நேத்து நான் குடிச்சேன் நல்லா இருந்தது “ என்றார் அக்பர். நேற்று டிக்கடை கனவு நினைவுக்கு வந்ததும் சிரித்தாள் ஜோதா. என்ன சிரிப்பு என்று அவன் கேட்க சொல்லாமல் மறுத்துவிட்டு அவனது இடது கையைக் கொக்கி போட்டுக் கொண்டு அவன் மீது சாய்ந்தாள்.

அவர்களுக்காவே ஸ்பெஷலாகத் தயாரான ஹார்ட் சாக்லேட் சுடச் சுட அவர்களது மேசையை வந்து சேர்ந்தது. ருசி பார் என்று ஒரு கோப்பையைக் கையிலெடுத்து அவள் உதட்டில் வைத்தான் அவன். நேற்று அவன் கொடுத்த முத்த வாசனை அந்த கோப்பையில் இருந்து வந்து அவளை மயக்கிக் கொண்டிருந்தது. அவள் முகத்தில் ஊறிய நாணமெல்லாம் மீண்டும் அவனை அவளுக்குள் தள்ளியது.

சுவையைப் பற்றி விசாரித்ததும் அந்தக் கோப்பையை அவளிடமே கொடுத்துவிட்டு, அவனுக்காக காத்திருந்த கோப்பையை எடுத்தான்.

ஒரு சொட்டு குடித்துவிட்டு நேற்றைப் போல இன்று இல்லையே என்று சடைத்தான். “ ஏன் நல்லாதான இருக்கு? “ என்று அவள் சொல்ல, “நல்லா இருக்கா? எங்கே உன் கையில இருக்குற கப்ப குடு” என்று வாங்கினான்.

அவள் உதடு வைத்த அதே கோப்பையின் இதமான பதத்தில் அவனும் உதடு வைத்து உரிய ஒரு இனிப்பான நாடகம் அறங்கேரியது. “ம்ம்ம் இப்போ நல்லா இருக்கு “ என்று அவன் கூற அவனுடையதை அவள் எடுத்துக் கொண்டாள். கோப்பையில் ஹார்ட் சாக்லேட்டின் அளவு குறையக் குறை, வான வெளிச்சம் மறைய மறைய, விடை பெறும் நேரம் வந்துவிட்டதோ? என்கிற சோகமான கேள்வி இருவரையும் மௌனமாக பற்றிக் கொண்டது.

இந்தப் பிரிவு தற்காலிகமானதாக இருந்தாலும், மனம் கேட்கவில்லை. தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு சந்தோஷத்தைத் திகட்டத் திகட்டக் கொடுத்துவிட்டு அதே அளவு கண்ணீரையும் கொடுத்துவிடுவான் பாவி என்று தன் காதலனின் கையை பிடித்துக் கொண்டாள் ஜோதா. கண்ணீர் தேங்கி நிற்கும் அவளது கண்களை அப்படியே எப்படி விட்டுவிட்டு வர முடியும் அவனால்?. அதனால் “இன்னும் ரெண்டு நாள் இங்கையேதான் தங்கி இருங்கப் போறேன். நீ நாளைக்கு காலையிலயே கிளம்பி வா. நம்ம எங்கையாவது வெளிய போலாம்” என்றான்.

“நிஜமாதான் சொல்றீங்களா? “

“ஆமா”

“என்ன பாத்துட்டு உடனே கிளம்பிருவீங்கனு நெனச்சேன். நீங்கதான் உங்க ஜிம்ம விட்டுட்டு இருக்க மாட்டீங்களே “
“நானும் அப்படித்தான் நெனச்சேன். இப்போ மனசு மாறிடுச்சு”

“அப்போ சரி நேரம் ஆச்சு. நான் கெளம்புறேன். நாளைக்கு பாக்கலாம் “

“சரி போ” என்று சொல்லித் தன் கையில் வைத்திருந்த பையைக் கொடுத்தான்.

அதில் அழகான பச்சை நிற சேலை இருந்தது. அதைப் பார்த்ததும், “ஏன் இவ்வளோ செலவு பண்றீங்க?. இது இப்போ அவசியமா? “ என்றாள்.

உன் காலேஜ் ஃபேரவல் பாராட்டிக்கு நீ ஒரு சேரி கட்டி ஒரு ஃபோட்டோ அனுப்ச்சியே, அது இன்னும் என் கண்ணுக்குள்ளையே இருக்கு. உயரம் கம்மியா இருப்பா, கவுன் போட்டா பொம்ம மாதிரி க்யூட்டா இருப்பானு வாங்கிட்டு பில் பே பண்ண நின்னுருந்தேன். அப்போதான் ஒரு பொம்மைக்கு இந்த சேரிய கட்டியிருந்ததப் பாத்தேன். உன் நியாபகம் வந்தது. அத வாங்காம வெளிய வர மனசு வரல அதான் என்று அக்பர் சொன்னார்.

பதில் சொல்லத் தெரியாமல் திணறிய ஜோதா, “சரி “ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள். என்றும் இல்லாத விதமாக துள்ளிக் குதித்துக் கொண்டே வீடு நுழைந்த ஜோதாவை அம்மா வினோதமாகப் பார்த்தாள். அம்மாவிற்கு நாம் யார் என்கிற அறிமுகம் தேவையா என்ன?.

“என்னடி குதிச்சுகிட்டு ஜாலியா வர்ற? “

“ஒன்னு இல்லமா. இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்குனு பாக்குற எல்லாரும் சொன்னாங்க “

“ம்ம்ம் சரி சரி. கையில என்ன?“ என்று அவள் கொண்டு சென்ற புத்தகப் பை கூடவே கூடுதலாக இருக்கும் இன்னொரு பையைப் பார்த்துக் கேட்டாள் ஜோதாவின் அம்மா.

“இது டிரஸ்மா “ என்று சொல்லி ஜோதா அந்தப் பையை பின்னே மறைக்க,

“இது என்ன டிரஸ்?. எங்க…கொடு பாக்குறேன்” என்று அம்மா அதை அவள் கையில் இருந்து வெடுக்கென்று பிடுங்கினாள். பையைத் திறந்து சேலையை வெளியே எடுத்து வைத்துக் கொண்டு அவளையும் சேலையையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“பார்க்குக்குதான் போனேன். பார்வதி துணி கடை வெளிய என் ஃபிரண்ட பாத்தேன். டிரஸ் எடுக்கப் போறேன்டி ச்சூஸ் பண்ண ஹெல்ப் பண்ணுனு சொல்லி உள்ள கூட்டிட்டு போய்ட்டா.

எல்லாமே புதுப்பது டிசைனா இருந்துச்சு. நீ வேற நேத்து எனக்கு செலவுக்கு வச்சுக்க சொல்லி கையில பணம் கொடுத்தியா, அதான் வந்துட்டமேனு ஒன்னு எடுத்தேன்” என்று எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்தாள். வார்த்தையில் தெளிவு இல்லை. பேசி முடிக்கும் வரை முழுக்க முழுக்க தடுமாற்றம்தான். அதைக் கவனித்தும் “சரி போ “ என்று அம்மா எதுவும் கேள்வி கேட்காமல் விட்டாள்.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று தன் அறைக்குள் நுழைந்த ஜோதா அம்மாவின் முக மாறுதலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவள்தான் காதல் மயக்கத்தில் இருந்தாளே!.

படுக்கையில் அங்கும் இங்குமாய் சுழன்று கொண்டு டைரி எழுதிக் கொண்டிருந்தாள் ஜோதா. மனதில் பதிந்த அந்த பொன்னான நொடிகளை வார்த்தைகளால் வடித்துக்கொண்டிருந்தாள். அப்போது அவள் முதுகுகிற்குப் பின்னால் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. பின்னால் யார் நின்றுகொண்டு இருக்கிறது என்று தலையைத் திருப்பினாள். கடுமையான கோபத்தை வெளிப்படுத்திய அம்மாவின் முகம் பார்த்து இவள் நடுநடுங்கினாள்.

“யார் அந்த பையன்? நீ எங்க போய்ட்டு வந்த? இப்போ என்கிட்ட விஷயத்த முழுசா சொல்லலைனா உன் அப்பாகிட்ட அரையும் குறையுமா எதாவது சொல்லி வச்சுருவேன். அப்புறம் அவர் என்ன செய்வார்னு உனக்கு நல்லாவே தெரியும் “ என்று ஜோதாவின் அம்மா மிரட்ட இவள் பதில் சொல்ல முடியாமல் தினறினாள். முதலில் ஏதேதோ சொல்லி மூடி மறைக்க முயற்சி செய்தாள்.

அவள் பேசியதை துளியும் ஏற்றுக் கொள்ளாமல் இறுக்கமாக இருந்த அம்மாவின் முகம் தொடர்ந்து மிரட்டாமல் மிரட்ட பொய் சொல்லி சோர்ந்து போய் கடைசியில் உண்மையைச் சொல்லிவிட்டாள்.

இதுதான் உண்மை எனத் தெரிந்த பிறகு அம்மா அடிக்காவிட்டாலும் கடுமையாக கண்டிக்கவாச்சும் செய்வாள் என்பதுதான் ஜோதாவின் நினைப்பு இருந்தது. ஆனால் அவள் எண்ணத்தை தவிடுபிடி ஆக்கும் அளவிற்குத்தான் அம்மாவின் நடவடிக்கை இருந்தது.

அதுவரை இரண்டு கைகளையும் இடுப்பில் பொருத்தி முறைத்தப்படியே கேட்டுக்கொண்டிருந்த அம்மா, அவள் உண்மையைச் சொன்ன பிறகு அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்கிற அச்சத்தில் அழுத ஜோதாவின் தலையைத் தன் கைகளால் கோதி ஆறுதல் படுத்தி என் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.

“உன்னைப் பெத்தவளே நான்தான். நீ கண்ண சிமிட்டுனா கூட எனக்கு அதுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கத் தெரியும். இந்த வயசுல இந்த மாதிரி ஆசை வர்றது எல்லாம் சகஜம். நடக்குற வரைக்கும் அப்படியா? இப்படியா? அதுவா? இதுவா? ன்னு கலர் கலரா கனவு காணுவோம். ஆனா நடந்து முடிஞ்ச பிறகு இவ்வளவுதானா? ச்சீ ச்சீனு ஆகிரும். தெரிஞ்சவனே ஈசியா ஏமத்திட்டு போயிருவான். நீ யாரோ ஊர் பேர் கூட ஒழுங்கா தெரியாதவன கைகாட்டி பிடிச்சிருக்குனு சொல்ற. நீ என்கிட்ட சொன்னத அப்படியே நான் உன் அப்பாகிட்ட சொன்னேனு வை என்னையும் கொன்னுட்டு உன்னையும் கொன்னுட்டு புள்ளையும் இல்ல பொண்டாட்டியும் இல்லனு போய்ருவாரு. இதுகப்புறம் உன்னோட முடிவு” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள் அம்மா.

கதவு வரை சென்றவள் கடந்து செல்லாமல் ஜோதாவைத் திரும்பி பார்த்து நின்று “காசு நீ கேட்டிருந்த. நான் நாளைக்கு தரேனு சொல்லியிருந்தேன். அந்த இடத்துலதான் நீ மாட்டுன “ என்று சற்று சிரித்தபடி சொல்லிவிட்டு கதவை மூடிச் சென்றாள்.

அவள் அறை இருட்டானது போல வாழ்க்கையும் இருட்டாகி விடும் என்று ஜோதா தவித்தாள். அடித்திருந்தால் கூட அந்த கனம் மட்டுமே வலி. இப்போது எந்த பதற்றமும் இல்லாமல் அம்மா பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? அதன் விளைவுகள் எப்படி இருக்கும் ? என்கிற குழம்பம் ஜோதாவைப் பாடாய் படுத்தியது.

அம்மாவிற்கு உண்மை தெரிந்த பிறகும்கூட வீட்டில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான பானியிலே வீடும் வீட்டில் இருந்தவர்களும் செயல்பட்டார்கள். நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில்தான் அம்மா இதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு அப்பாவிடம் சொல்லவில்லை. நாமும் அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். இவ்வளவு பாசமும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் அம்மா நம்மீது வைத்திருக்கும்போது அவளைக் காயப்படுத்தும்படி நடந்து கொண்டது தவறுதான் என்று குற்ற உணர்ச்சியில் நொந்து போனாள் ஜோதா. நடந்த அத்தனையையும் அக்பருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டு அவருடைய எண்ணை செல்ஃபோனில் இருந்தும் அவரை அவள் மனதில் இருந்தும் அழித்தாள்.

அவளுடைய குற்ற உணர்ச்சியை உடைக்குமாறு அம்மாவின் உள் ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது அவளுக்குத் தெரியாது. இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் கழித்து, ஜோதா தனியாக இருக்கும் போது கையில் புடவையோடு பரபரப்பாக அவள் அறைக்குள் நுழைந்தாள் அம்மா. அந்தப் புடவையை அவள் கையில் கொடுத்து இந்தா சீக்கிரம் தயாராகு, இன்னைக்கு பத்து மணிக்கு மேல மாப்பிள்ளை வீடு இங்க வர்றாங்க என்று சொல்லிவிட்டு வந்த வேகத்தில் திரும்பினாள்.

வீட்டில் இருந்த அனைவரும் அங்கும் இங்கும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். “என் பேத்தி தங்கம். நில்லுன்னா நிப்பா உக்காருன்னா உக்காருவா. அவ அப்பன் பேச்சுக்கு மறு பேச்சு பேசுனது இல்ல. பொறந்ததுல இருந்தே அப்படித்தான் “ என்று பாட்டி பக்கத்து வீட்டு பவானி அத்தையிடம் பெருமை பீத்திக் கொண்டிருந்தாள்.

இந்தக் கல்யாண ஏற்பாடு அப்பாதான் செய்திருக்கிறார். துணி எடுப்பதில் தொடங்கி படிப்பது வரை எல்லாவற்றையும் என் விருப்பப்படி விட்ட அப்பா, இவ்வளவு பெரிய காரியத்திற்கு என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அப்படியென்றால் அம்மா அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லியாருப்பாள் என்றுதான் நினைக்கிறேன்.

தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top