• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
46
கானல் - 23

"அடிங்க!.. சிரிக்கிற குட்டிமா நீ!.. ஸேஃப் ஜோன் ல இருக்குற மெதப்பு!.." குழந்தை வித்யாவின் கைகளில் இருப்பதால் அவ்வாறு கார்த்திக் உரைத்தான்..

அதற்கும் கிளுக்கி, 'கெக்கே பிக்கே' என்று சிரித்தாள் சின்னப் பூ!.. அவள் சிரிப்பில் மனம் நெகிழ்ந்து வித்யா பார்த்திருக்க,

"இருக்கட்டும்.. இருக்கட்டும்.. காத்திப்பா னுட்டு வருவீங்க ல அப்ப பார்த்துக்கறேன்!.. உங்கள கிச்சுகிச்சு மூட்டியே ஒருவழி பண்றேனா இல்லையா பாரேன்!.." என்று சவால் விட்டான்..

பவிஷ்யா அதற்கும் விகசித்து புன்னகைக்க, "போதும்!..போதும்!.. குழந்தையை ரொம்ப ஒன்னும் பயம் காட்ட வேண்டாம்!.." என்று உதட்டில் ஒளிந்த குறுநகையுடன் வித்யா கூறினாள்..

சில நாட்களுக்கு பிறகு, அவளது வாயிலிருந்து உதிர்ந்த அவனுக்கான நேரடி சொற்கள் கேட்டதில் அவன் மனம் சற்று இலகுவானது..

"உங்க குடும்ப சண்டையை அப்றம் வைச்சுக்கோங்க!.. நீ எழுந்து வா!.. நைட் டின்னர் செய்ய வேண்டாமா?!.. வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு!.." என்று அதிகாரம் செய்தாள் தாரிணி..

"என்ன அண்ணி நீங்க!?!.. நாங்க சந்தோஷமா பேசினா உங்களுக்கு பொறுக்காதே!.. நீங்களே போய் சாப்பிட செய்யுங்க!.. பேபிஸ் ரெஸ்ட் எடுக்கட்டும்!.." தாயையும் மகளையும் பார்த்துக் கொண்டு கார்த்திக் சொல்ல..

"அதுசரி!.. ஆமாமா!.. இவங்களுக்கு ஆக்கிக் கொட்ட தான் என்னை வளத்து விட்டாங்களா?!.. சரி விடு!.. அந்த பேபிஸ் ரெஸ்ட் எடுக்கட்டும்.. நீ வா ராசா சமைக்கறதுக்கு!!.." என்று அவனை அழைத்தாள் தாரிணி..

"ஐ ஹேவ் நோ அப்ஜக்சன்!.. ஆனா சாப்பிட்ட அப்றம் யாருக்கும் எதாவது ஆச்சு னா நான் பொறுப்பு துறப்பு இல்லை!.." என்று டிஸ்க்ளைமர் போட்டான் கார்த்திக்..

"அப்படி நீ சமைக்க போறதை உன்னோட பொண்டாட்டி, புள்ளையும் தானே சாப்பிடுவாங்க மிஸ்டர்.காத்திப்பா!.."என்று தாரிணி ராகம் பாட..

"ச்சே!.. ச்சே!.. நான் அவங்களுக்கு நல்ல கடைல இருந்து வாங்கி கொடுத்துடுவேனே!.." என்றான் அவன் சமர்த்தாக..

"அடப்பாவி!!.. உனக்கு கல்யாணம் பண்ண ஐடியா கொடுத்ததுக்கு என்னை குடும்பத்தோட கொல்ல ப்ளான் போடுற!!.."

"வெளங்கிடும்!!.. நானே போய் செய்றேன் பா நல்லவனே!!.." எனக் கூறிவிட்டு அவள் சென்றாலும் பின்னோடே வித்யாவும் சென்றாள்..

இரவு உணவை பெண்கள் சமைக்க, ஆண்கள் இருவரும் குழந்தைகளை பார்த்துக் கொண்டனர்..

உணவை முடித்துவிட்டு, "சரி!.. அப்போ நான் உத்தரவு வாங்கிறேன்!.." என்றான் கார்த்திக்.. புரியாமல் முழித்த தாரிணியும், ஹரியும், " என்ன உத்தரவு!!?.." என ஒருசேர கேட்டனர்..

"அட.. என்னோட ரூமுக்கு போறேன்ங்கறத தான் அப்படி சொன்னேன்ங்க!.." விளக்கம் கூறினான் அவன்..

"இந்தா இருக்கற ரூமுக்கு போறதுக்கு ஒரு உத்தரவு வேற!!.." என்று தாரிணி, வித்யாவின் அறையை காட்டிட.. "அப்ப ஒரு முடிவோட தான் இருக்கீங்களா?!.."பீதியுடன் கார்த்திக் கேட்டான்..

"அடங்கப்பா!!.. அகராதிக்கு பொறந்தவனே!!.. என்ன னு தெளிவா தான் பேசி தொலையேன்!.." என்றான் ஹரிகிருஷ்ணா..

"ஏன் ண்ணா!.. காலைல எப்படியோ எந்த சாமி புண்ணியமோ, அடி வாங்காம தப்பிச்சுட்டேன்!.."

"இப்ப அவங்க ரூமுக்கு போக சொல்லி வாங்கி கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா னு கேட்டேன்!.." தனது கேள்விக்கான விளக்கத்தை அவன் விளக்க.. அவனை முறைத்துப் பார்த்தாள் வித்யா..

"ஆமா கேட்கனும் னு நினைச்சேன்!.. உங்க அம்மா ஏன் கல்யாணத்துக்கு வரலை!!?.." என்று ஹரி வினவிட..

அப்படியே அமைதியாகி போனான் கார்த்திக்.. அவனது திடீர் அமைதி, வித்யாவை அவனை நோக்கி திரும்பி யோசனையோடு பார்க்க வைத்தது..

சில நொடிகள் தாமதித்த கார்த்திக், "அவங்க வர முடியாத சூழ்நிலை!.." என்றான் மொட்டையாக, அதன் பொருள் உணர்ந்த தாரிணி முகத்தில் கவிழ்ந்த சோகமுடன் அமைதியாகி விட..

"அப்படி என்ன சூழ்நிலை?!.." என்று ஹரி கேட்டதும், கார்த்திக்கை மேலும் வருந்த வைக்க வேண்டாம் என்று நினைத்த தாரிணி,

"அதை தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க?.." என்று அவனிடம் வேகமாக கேட்க, அவளை யோசனையுடன் திரும்பி பார்த்தாள் வித்யா..

"அட என்னமா நீ?!.. ஒரே பையனோட கல்யாணத்துக்கு கூட வர முடியாத சூழ்நிலை னு சொன்னா அது என்னனு கேட்டது ஒரு தப்பா?!.." என்று ஹரி விழித்து கேள்வி எழுப்ப..

"அதான் வர முடியாத சூழ்நிலைனு சொல்றாருல.. அப்றம் என்ன ஏதுனு கேட்டு தெரிஞ்சு நீங்க என்ன சரி பண்ண போறீங்களா?!.." என்று தாரிணி வறுத்தெடுத்தாள்..

இவர்கள் இப்படி வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, உணவை முடித்து விட்டு விளையாடிக் கொண்டிருந்த பவிஷ்யா,

அவளது காத்திப்பாவின் சோக முகம் கண்டு உடனே அவன் அருகில் ஓடி வந்து, "என்னாச்சு காத்திப்பா?!.. அதி பத்துச்சா?!.. ஏன் அழுதீங்க?!.." என்று கேட்டாள்..

ஹரியின் கேள்வியால் அந்நினைவுகள் எழும்ப அதனால் லேசாக கலங்கிய அவனது கண்கள் கண்டே அவ்வாறு வினவினாள்..

உடனே தன்னை சரி செய்து கொண்ட கார்த்திக், "இல்லடா பட்டு!.. உங்க அம்மா, காத்திப்பா மேல இருக்கற கோபத்துல வேணும்னே காரத்தை அதிகமா போட்டுட்டாங்க போல.." என்று கூறி அவளை இயல்புக்கு கொண்டு வர முயன்றான்..

"அம்மா!.. காத்திப்பா தொம்ப காதம் சாப்பித மாத்தாங்க போல!?.. நீங்க இனிமே எக்கு செய்த மாதியே செய்ங்க!.." என்று வித்யாவிடம் அவனுக்காக கூறிவிட்டு..

"நா தொல்லித்தேன் காத்திப்பா!.. அம்மா இனிமே காதம் கம்மியா போதுவாங்க!.. சய்யா!.." என்று கார்த்திக்கிற்கும் சமாதானம் கூறினாள்..

"ஓகே டா குட்டிமா!.. நீங்க போய் சரண் அண்ணா கூட விளையாடுங்க!.. காத்திப்பா அப்றம் வர்றேன்!.."என்று

குழந்தையை விளையாட அனுப்பி விட்டு அவன் திரும்பிப் பார்க்க, மூவரும் அவனையே ஒரு விதமாக பார்த்து இருந்தனர்..

"என்னடா கார்த்தி இப்படி லுக் விடறாங்க!?..ஓவரா சென்டிமெண்ட் சீனை ஓட்டிட்டோமோ!?.." தனக்குள் பேசுவதாக நினைத்து வாய்விட்டு பேசி விட்டான்..

"ரொம்ப பண்ணாத!.. சாப்பிட்டாச்சுல ஒழுங்கா போய் படு!.." என்றாள் தாரிணி..

"அதுக்கு தானே நான் என்னோட ரூமுக்கு கிளம்பறேன் னு சொன்னேன்!.. அதுக்குள்ள பேச்சு டேக் டைவர்ஷன் போட்டு வேற பக்கம் போயிடுச்சு!.." என்றான் கார்த்திக்..

"உன்னோட ரூமுக்கு போறியா!..ஆனா ஏன்?!..நீ இங்கேயே இருக்க வேண்டியது தானே!?.." என்று தாரிணி குழப்பமாக கேட்டாள்..

'இரவு அவளோடு அறையில் அவன் தங்கி விடுவானோ?' என்று அச்சமுற்ற வித்யா பீதியில் இருக்க..

அவளது கண்களில் அதை படித்த கார்த்திக், "அது சரி வராது அண்ணி!.. ஏற்கனவே ரூபிணியோட மனசை கஷ்டப்படுத்தற மாதிரியே எல்லாம் செய்தாச்சு!.."

"அட்லீஸ்ட் இதுலேயாவது அவங்க விருப்பப்படி இருக்கட்டுமே!.. அதோட என்னோட திங்க்ஸ் எல்லாம் அங்க தானே இருக்கு!.." என்று காரண விளக்கம் தந்தான்..

அவளுக்காக அவன் யோசித்ததில் சற்று ஆசுவாசமான வித்யா, வேகமாக தாரிணியிடம்," அவரே அவரோட வீட்டுக்கு போறேன்ங்கற போது ஏன்க்கா வற்புறுத்துறீங்க?!.." எனக் கேட்டாள்..

அவளை பார்த்து இதழ் பிரியாமல் நமட்டு சிரிப்பு சிரித்த கார்த்திக், அவளை சிறிது கடுப்பேத்தி பார்க்க ஆசைப்பட்டு,

"அப்படியா அண்ணி சொல்றீங்க?!.. நான் இங்க தான் இருக்கனுமோ?!.." என்று சிந்திப்பது போல் பாவனையுடன் கூற, வித்யா ஏக கடுப்பாக.. இவன் குறும்புடன் பார்த்து இருந்தான்..

"ஒரு முடிவு எடுத்தா அதுல ஸ்ட்ராங்கா இருங்க சார்!.. யாராவது எதாவது சொன்னா உடனே மாத்திப்பீங்களா?!.." என்று கடுப்புடன் கேட்டாள் வித்யா..

அவன் சிரித்துக் கொண்டே, "அதான் மேடாம்.. அண்ணி சொன்ன முடிவையே எடுக்கலாம் னு இருக்கேன்!.." அவன் குறும்பாக கூறிட, அவனை முறைத்தாள் அவள்..

"அடேய் அப்பரசட்டிகளா!!.. உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு!.. நீங்க ரெண்டு பேரும் புருசன் பொண்டாட்டி.. இது கூட தெரியாதா உங்களுக்கு..பைத்தியங்களே!!.."

"ஏதோ இன்டர்வ்யூக்கு வந்த மாதிரி சார் மேடம் னு கதை பேசிட்டு இருக்கீங்க!.. போய் படுத்து தூங்குங்க டா!.." அவர்களது பேச்சை கேட்ட தாரிணி கடுப்புடன் கத்தினாள்..

"ஓகே அண்ணி!.. விளையாட்டு போதும்!.. நான் கிளம்பறேன்!.. ரூபிணிக்கு நான் இங்க இருக்கறது அன்ஈஸியா இருக்கும்!.." என்றான் கார்த்திக்..

அவன் ஏன் சொல்கிறான் என்று புரிந்தாலும், இப்படி அவன் ஒரு பக்கமும், இவள் ஒரு பக்கமும் இருந்தால் எப்போது இவர்கள் இணக்கம் ஆவது?.. என்று தாரிணியின் மனதில் கேள்வியெழ,

"இல்லனா நீ ஒன்னு பண்ணு!.. அவளோட ரூமுக்கு போனா தானே அவளுக்கு அன்ஈஸியா இருக்கும்.. நீ இங்க வெளியே படுத்துக்கோ!.."

"அவளையும் டிஸ்டர்ப் பண்ணாம, அதோட அவளுக்கும் துணையா இருந்த மாதிரி இருக்கும்!.." என்று நாட்டாமை தீர்ப்பாக தாரிணி உரைக்க,

"கல்யாணத்தையும் தடாலடியா பண்ணி வச்சிட்டு இப்போ பிரிச்சும் வைக்குறியே!!.. யாரு மா நீ!!?.." என்று கலாய்த்தான் ஹரிகிருஷ்ணா.

"ஏன்.. நான் யாருன்னு அதுக்குள்ள மறந்துடுச்சா உங்களுக்கு!.. இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும்!.." என்றாள் கணவனை முறைத்துக் கொண்டே,

"என்ன அண்ணா இது! இதுக்கு பேர் தான் சொந்த செலவில் சூன்யம் வைக்கிறது னு சொல்வாங்க." என்று சிரிப்புடன் கார்த்திக் கூறினான்.

அதன்பின் தாரிணி, தன் கணவன் மற்றும் மகனுடன் அவர்களுக்கான அறையில் உறங்க சென்றாள்.

தாரிணியின் கூற்றுப்படி, கார்த்திக் ஹாலில் படுத்துக் கொள்ள, வித்யா குழந்தையுடன் அறையில் படுத்துக் கொண்டு கவனமாக அறையை தாளிட்டு கொண்டாள்.

மறுநாள் காலையே ஹரியும், கார்த்திக்கும் சென்று அவனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வந்து விட, அவன் இங்கேயே தங்குமாறு செல்ல மிரட்டல் விடுத்தாள் தாரிணி.

ஹரியின் வேலை காரணமாக மறுநாள் இரவு, அவர்கள் தங்களது இருப்பிடம் திரும்புவதற்காக கிளம்பிட, கார்த்திக்குடன் தனியே தங்குவதை எண்ணி வித்யாவிற்கு சற்று அச்சம் இருக்கவே செய்தது.

இருப்பினும் அவன் அத்துமீறும் அளவிற்கு இல்லை என்ற சிறு நம்பிக்கையை பற்றுகோலாக கொண்டு, மனதை திடப்படுத்த முயன்றாள்.

அதன்பின்னர் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட, குழந்தை கார்த்திப்பாவுடன் ஒட்டிக் கொள்ள, காலைவேளை பரபரப்பில் அவள் சமையல் வேலையை முடித்தாள். அவனுக்கும் சேர்த்தே அவள் உணவை சமைத்திட,

'அவள் மனதில் அவன் மீது ஏதோ ஒரு வித அபிப்ராயம் இருக்கிறது' என்ற தாரிணியின் கூற்று தான் கார்த்திக்கிற்கு நினைவில் வந்தது.

பள்ளிக்கு இருவரும் அவரவர் வண்டியில் கிளம்பிட, குழந்தை இப்போது யாருடன் செல்வது என முழித்தாள்.

"வாடா லட்டுக்குட்டி போலாம்!.." என்று அன்னை அழைக்க, அவளோ கார்த்திக்கை திரும்பி பார்த்தாள்.

அன்னையின் வண்டியில் முன்னால் நின்று செல்வதை விட, கார்த்திக்கின் பைக்கில் உட்கார்ந்து எதிர் காற்றில் அன்று பார்க்கிற்கு சென்றது அவளது நினைவிலாடியது.

அதனால் குட்டி அவனையே பார்த்திருக்க," நான் வேணும்னா பாப்பாவை ஸ்கூல்ல ட்ராப் பண்ணவா?"என்று வித்யாவிடம் கேட்டான் அவன்.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அவ என் பொண்ணு. அவளை இத்தனை நாளும் நான் தான் கூட்டிட்டு போனேன். நீ வாடா செல்லம்." என்று

அவனுக்கு பதிலளித்து விட்டு குழந்தையை அழைப்பதற்குள், கார்த்திக் வித்யாவிடம் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அவனது பைக்கில் ஏறி இருந்தாள் பவிஷ்யா.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top