• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
64
கானல் - 59

ஈஸ்வரியும் மதுமதியும், அவள் சொன்னதைக் கேட்டு புரியாமல், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்..

பின்னர், "ஏன் அப்படி சொல்ற மயூ?!.. நீ யாரையாவது லவ் பண்றியா?!.." என மது கேட்டதற்கு சிரித்த மயூரவல்லி,

"ஏன் க்கா கல்யாணம் வேணாம் னு சொன்னா அதுக்கு காரணம் காதலா தான் இருக்கனுமா?!.." என்று கேள்வி எழுப்பிட, மீண்டும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

பின்பு அவளே தொடர்ந்தவள், " சரி.. அது இருக்கட்டும்!!.. இதெல்லாம் நீங்க ஏன் கேட்டுட்டு இருக்கீங்க?!!.." என மதுவை ஆராய்ச்சி பார்வையுடன் கேட்டாள் மயூரவல்லி..

"நான் அதை அப்புறமா சொல்றேன் மயூ!.. ஆனா நீ ஏன் கல்யாணம் பிடிக்கல னு சொல்ற!!?.. ஆனா காதலா னு கேட்டா சிரிக்கிற?!.." என புரியாமல் கேட்டாள் மதுமதி..

"அது ஒரு பெரிய கதை க்கா!.. முதல்ல ஒரு தடவை இப்படி தான் பெரிய அத்தானுக்கு என்னை கட்டி வைக்க ப்ளான் பண்ணுனாங்க!.. நான் தான் அதையும் தட்டிவிட்டேன்!.." சிறு சிரிப்புடன் அவள் சொல்ல, இருவரும் திகைத்தனர்..

"என்னமா சொல்ற?!.. ஆனா அவர் ஏதோ பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டதால தான் நிச்சயம் நின்றதா பாலா சொல்லி இருக்காரே!!?.." என ஈஸ்வரி குழப்பமாக கேட்டாள்..

ஈஸ்வரி கேட்டதும் சில நொடிகள் மௌனமான மயூரவல்லி, பின்னர், "அது ஒன்னுமில்ல க்கா!.. என்னால ஒரு குழந்தை பெத்துக்க முடியாது!.." என்று அவள் சொன்னதும் இருவரும் அதிர்ந்து ஏனென்று வினவ..

"பர்த் டிஃபெக்ட்!.. ஏதோ குரோமோசோம் அப்நார்மலிட்டி அப்படினு சொன்னாங்க..அப்றம் இன்னும் என்னென்னமோ சொன்னாங்க!..என்னை பெத்தவங்க இந்த விசயம் எனக்கு தெரியாது னு நினைச்சுட்டு இருக்காங்க!.." என்றவள்,

"அதான் வெளியே யாருக்காவது கட்டிக் கொடுத்தா பிரச்சனை ஆகும்னு, முதல்ல பெரிய அத்தானுக்கு கட்டி வைக்க ப்ளான் பண்ணுனாங்க!.. எனக்கே கடைசி நேரத்தில தான் சொன்னாங்க!.." என்றாள்..

அவள் சொன்ன விசயத்தில் அதிர்ந்த இருவரும் அவளுக்காக வருத்தம் கொள்ள, அவள் அதை பற்றி ஒன்றும் பெரிதாக கவலை கொள்ளவில்லை..

அவர்கள் வருந்துவதைக் கண்டவள், "இதுல வருத்தப்பட்டு என்ன ஆக போகுது க்கா!..அப்படி தான் னு தெரிஞ்சுடுச்சு அப்றம் அதுக்கு ஃபீல் பண்ணி மட்டும் மாற்ற முடியுமா?!.."

"அதனால நிதர்சனத்தை ஏத்துக்க வேண்டியது தான்!.. இது என்னை பெத்தவங்களுக்கு புரிய மாட்டேங்குது!.. என்ன செய்ய!!?.." விரக்தி புன்னகையுடன் சொன்னவள்,

"அவங்களுக்கென்ன 'என் பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணியாச்சு'னு ஊருக்குள்ள காட்டிக்கனும்!..அதுக்காக தெரிஞ்சே ஒருத்தவங்கள, அது சொந்தகாரங்களாவே இருந்தாலும் ஏமாத்த கூடாது இல்ல க்கா!.."என்று நியாயமாக பேசினாள்..

"அதனால தான் பெரிய அத்தான் கூட நிச்சயம் வைச்சது எனக்கு தெரிஞ்சதுமே வீட்ல பொய் சொல்லிட்டு அத்தானை பார்க்க போனேன்!.. அங்க தான் அந்த அக்கா, அத்தானை ஒன் சைட் லவ் பண்றது தெரிஞ்சது!.."

"அத்தான் கிட்ட உண்மையை சொல்லி அவங்களையே கட்டிக்க சொல்லி வற்புறுத்தினேன்!..அப்றம் நடந்தது தான் சின்ன அத்தான் உங்க கிட்ட சொல்லி இருக்காரே!.." என்றாள்..

அவள் சொன்னவற்றை கேட்ட மதுவும் ஈஷுவும் அவளை விசித்திரமாக பார்த்திருக்க, "ஆனா இப்ப பாலா கூட மேரேஜ் அரேன்ஜ் பண்ணி இருக்காங்களே!!?..உனக்கு பிடிக்கலை னா நீயே உன் பேரன்ட்ஸ் கிட்ட பேச வேண்டியது தானே!?.." எனக் கேள்வி எழுப்பினாள் ஈஸ்வரி..

"அதெல்லாம் நிறைய சொல்லிட்டேன் க்கா!..அவங்க உடனே 'உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்காம எங்க கட்டை வேகாது'னு முதல்ல சென்டிமென்ட் பேசுனாங்க!..அப்றம் கொஞ்ச நாள் கழிச்சு தற்கொலை பண்ணிக்குவோம் னு மிரட்டுனாங்க!.."

"இப்ப நான் அத்தானை கட்டிக்கல னா மாமா மேல பண மோசடி கேஸ் போடுவேன் னு மிரட்டுறாரு என் அப்பாரு!!.." இதுவரை அவள் மேற்கொண்ட முயற்சிகளை பற்றி கூற,

"சரி!!.. அதனால இப்ப பாலாவை கல்யாணம் பண்ண நீ ரெடி ஆகிட்டியா மயூ?!.." என மதுமதி அவளது முடிவை அறிவதற்காக கேட்டாள்..

"நான் எப்போ அப்படி சொன்னேன்!!?.." என்ற மயூரவல்லியை அவர்கள் புரியாமல் பார்க்க,"என்ன தான் சொல்ல வர்ற மா?!.." எனக் கேட்டாள் ஈஸ்வரி..

"சின்ன அத்தானை நான் அப்படி எல்லாம் நினைக்கவே இல்லை!.. அதுவும் இல்லாம இப்போதைக்கு சின்ன அத்தானே ஏதேதோ காரணம் சொல்லி கல்யாணத்தை தள்ளி வைச்சு இருக்கார்!.."

"இவங்க கொடுக்கற டார்ச்சர் ல ஒருவேளை அவரே ஒத்துக்கிட்டாலும் அதை நிப்பாட்ட அடுத்து என்ன பண்ணனும் னுட்டு யோசிக்கனும்!!.." என சிந்தனையுடன் உரைத்தவள்,

"ஆமா நீங்க எதுக்கு இவ்ளோ டீடெய்ல்ஆ எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க!?.." என்று இருவரையும் பார்த்துக் கேட்டாள்..

"நீ அந்த லூசோட நடக்க இருக்கற கல்யாணத்தை நிறுத்த யோசிட்டு இருந்த!!.. நான் அந்த கருவாயனுக்கு என்னை கட்டிக்கிறதுல என்ன பிரச்சனை னு யோசிட்டு இருந்தேன்!!.."

"இதான் நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமையும்.. வேற்றுமையும்.." என பாலாவை நினைத்து சிறு பொருமலுடன் கூறினாள் மதுமதி..

"அப்படினா!!!!?.." என்று யோசித்த மயூரவல்லி, அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்து பாலாவை விரும்புகிறாளா!!!?? என ஆச்சர்யமாக கேட்க, மதுவும் பாவமாக ஆமோதித்தாள்..

"அப்ப ப்ராப்ளம் சால்வ்ட்!!.. இதுக்கு ஏன் இவ்ளோஓஓ சோகம்!!?.." என்று மயூரவல்லி மகிழ்ச்சியுடன் புரியாமல் கேட்க,

அதற்கு மது, "அந்த கருவாயன் தான் பெத்தவங்களை மீறி எதுவும் செய்ய மாட்டேன் னுட்டு தானே என்னோட லவ்வையே அக்ஸப்ட் பண்ணலை!!?.."

"அப்றம் எங்கத்த இருந்து மேரேஜ் பண்ணுவான்!!.. ம்ஹூம்!.." என்று ஆற்றாமையுடன் பெருமூச்சு விட மற்ற இருவரும் சிரித்து விட்டனர்..

"ஆமா எனக்கொரு சந்தேகம் மயூ!!?.. அப்படினா நீ மேரேஜ் செய்துக்கவே போறதில்லையா!!?..உனக்கு னு ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை வேணாமா டா?!.." என்று மது அவளது முடிவை பற்றி கேட்கவும்,

"கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிட்டா தான் சந்தோஷமா வாழ முடியுமா க்கா!!?..இங்க பல பேர் கல்யாணம் பண்றதோட ஒரே குறிகோள் அதை மட்டும் தான் நினைக்கிறாங்க!.."

"தனக்காக ஒரு அன்பான துணையோடு அழகான வாழ்க்கை வாழனும்னு யாரும் நினைக்கிறதே இல்ல.."

"மேரேஜ் முடிஞ்ச அடுத்த மாசமே விசேஷம் இல்லையானு கேட்டு தான் சுத்தி இருக்கறவங்க டார்ச்சர் பண்ணுவாங்க!.."என்று நிதர்சனத்தை கூறியவள்,

"என்னை மாதிரி ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு, இந்த மாதிரி சமூகத்தோட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம யாரும் வேதனைபட வேண்டாமே!.. அதனால தான் எனக்கு கல்யாணம் பிடிக்கல னு சொன்னேன்!.." என முடித்தாள்..

இத்தனை தெளிவாக பேசுபவளை, ஆச்சர்யத்துடன் பிரமிப்பாக பார்த்து இருந்தனர் இருவரும்..

"நீ சொல்றது சரி தான் மயூ!.. ஆனா யதார்த்தம் வேற!.. உன்னை புரிஞ்சுக்கிட்டு முழு மனசா விரும்பி உனக்காகவே கல்யாணம் பண்ற யாரும் அப்படி வேதனைபட மாட்டாங்க!.." என்ற ஈஸ்வரி,

"அதனால அப்படி ஒருத்தர் வர்ற வரை காத்திரு!.. எத்தனையோ பேர் குழந்தை இல்லாமலும் சந்தோஷமா தான் இருக்காங்க!..அவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி கேள்வி வராதுன்னு நினைக்கிறியா?!.."

"அதை எல்லாம் கண்டுக்காம தங்களுக்கான வாழ்க்கையை சந்தோஷமா தான் வாழ்றாங்க!.. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் னு தெரியாத வாழ்க்கைல அடுத்தவங்க பேசறதுக்கு எல்லாம் மதிப்பு கொடுக்காதே!.." என்ற

அவளது நீண்ட அறிவுரையில் சற்று மனம் தெளிந்த மயூரவல்லி ஈஸ்வரியின் கைகளை இறுகப் பற்றி தனது உணர்வினை வெளிப்படுத்தினாள்..

"சரிங்க மாதா அமுதானந்தமயி உங்க வாழ்க்கை உபதேசம் முடிஞ்சதா?!.. நாம அடுத்த பிரச்சனை பற்றி பேசலாமா?.."என மது சூழலை மாற்ற முனைய, அவளை இடித்தாள் ஈஸ்வரி..

"ஓகே!.. பாலாவோட பேரன்ட்ஸ்ஐ இப்ப எப்படி சம்மதிக்க வைக்கிறது!?.. எப்படியும் அவங்க ஓகே சொல்லாம அந்த டொமேட்டோ என்னை கல்யாணம் பண்ண மாட்டான்!!.." மது யோசனையுடன் கேட்க,

"பேசாம நான் அவங்க கிட்ட உண்மையை சொல்லிட்டா?!.." என்று மயூரவல்லி கேட்க, அவளை முறைத்தாள் மதுமதி..

"அப்றம் உங்க குடும்பத்துக்குள் சண்டை வராதா?!.. உன் அம்மா அப்பா வேற, என்னென்னமோ சொல்லி மிரட்டுறாங்க னு சொல்ற!.. இவங்க அதுக்கு பயந்துட்டா!!?.." என மது பாயிண்ட்டை எடுத்து வைக்க,

"அதுவும் சரி தான்!!..வாய்ப்புகள் இருக்கு!!.." என அவளும் ஒத்துக்கொள்ள, மதுவும் மயூவும் சிந்தனையில் ஆழ்ந்து மேலே பார்த்துக் கொண்டு இருக்க..

"ரெண்டு பேரும் பெரிய நாட்டு தலைவர்கள்!.. நாட்டை வல்லரசாக்க யோசிக்கிறாளுக!.. ச்சீ!..ஒழுங்கா கீழே பாருங்க!.." என்ற ஈஸ்வரியின் அரட்டலில்,

மயூ நார்மல் ஆகி விட, மது கீழே கவனமாக உன்னிப்பாக பார்த்தவள், "கீழே ஒன்னும் தெரியலையே அமுதா!.." என்றிட, ஈஸ்வரி அவளை கொலைவெறியுடன் முறைத்தாள்..

அதற்கு அவள் அசட்டுத்தனமாக சிரித்திட, "அதான் பிரச்சனை என்ன னு தெரிஞ்சுடுச்சு ல.. இனி என்ன பண்ணலாம் னு நாம மட்டும் யோசிக்கிறத விட எல்லாரும் சேர்ந்து பேசினா ஒரு வழி கிடைக்கும்!.." என்றாள் ஈஸ்வரி..

"அப்படீங்கற!!?.." என மதுமதி யோசனையுடன் கேட்கவும், "ஆமாங்கறேன்!!.. சரி..வீட்டுக்கு போகலாமா?!.." என்ற ஈஸ்வரி,

"மயூவும் க்ளாஸ் முடிஞ்சு வந்து ரொம்ப நேரமாச்சு!.. அவ இன்னும் வரலை னு பயப்பட போறாங்க!!.." என்றிட, மூவரும் அங்கிருந்து கிளம்பினர்..

வீட்டிற்கு வந்த பிறகு வித்யாவிடம் சென்ற ஈஸ்வரி, "அவ கல்யாணமே பிடிக்கல னு சொன்னதும் எனக்கு டக்குனு உன்னோட நினைப்பு தான் வந்தது தியா!.." என்றிட, அவளை கேள்வியாக பார்த்தாள் வித்யா..

பின்பு, "ஒருவேளை அவளுக்கும் உனக்கு நடந்த மாதிரி எதாவது நடந்து இருக்குமோ னு மனம் பதறிடுச்சு!.." என்று ஈஸ்வரி காரணத்தை சொல்லவும், வித்யா அவளையே பார்த்திருக்க,

மயூரவல்லி கூறிய காரணத்தை ஈஸ்வரி விளக்க, "சின்ன பொண்ணு தானே அதான் கல்யாணமே வேண்டாம் ங்கற அளவுக்கு யோசிச்சு இருக்கா!.."

"என்ன காரணம் ன்னே தெரியாம எத்தனையோ பேர் குழந்தை இல்லாம வாழ்றது இல்லையா!?..அவ வளர்ந்த விதம் அப்படி இருக்கலாம்!.. பேசி புரிய வைப்போம்!.." என வித்யா உரைத்தாள்..

"ஆனா என்னதான் பேசி புரிய வச்சாலும் சிலர் மாறாம தானே இருக்காங்க உன்னை மாதிரி!!.." என்ற ஈஸ்வரி அவளை கூர்மையுடன் பார்த்து சொல்ல, வித்யா அமைதியானாள்..

"இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படியே இருக்க போற தியா!!?.. கார்த்திக்கை பற்றி யோசிச்சு பார்த்தியா?!.. அவங்க அம்மாக்கு இருக்கற ஒரு மகனும் சந்தோஷமா வாழனும்ங்கற ஆசை அவங்களுக்கும் இருக்காதா?!." ஈஸ்வரியின் கேள்விக்கு,

"நானே என் மனசை மாற்ற முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன் ஈஷு!.. சீக்கிரமே எல்லாம் சரி ஆகும்!.." என்று வேதாந்தி போல அவள் பேச, ஈஸ்வரியும் அமைதியாக விட்டு விட்டாள்..

மதுமதி, மயூரவல்லியிடம் பேசிய அனைத்தையும் கார்த்திக்கிடம் கூற, அடுத்து என்ன செய்வது என ஆலோசனை நடத்தி ஒரு திட்டமும் தீட்டினர்.

மறுநாள் மீண்டும் மயூரவல்லியை அதே போல் சந்தித்து அவர்களது திட்டத்தை சொல்ல, அவள் வேறு ஒரு திட்டத்தை கூறினாள்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top