• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
46
கானல் - 8

மகளின் செயலில் மனம் உரைந்த சீனிவாசன் அதிர்ச்சியில் சிலையென நிற்க, இதனை கண்ட அலமேலு தலையிலடித்துக் கொண்டு, "அப்பா டி அம்மு!!!.." என்று அவளிடம் கூறினார்..

அவரை கூர்ந்து பார்த்த வித்யா, தன் தந்தை என்று உணர்ந்ததும், "ஏன் ப்பா அப்பவே வராம போனேள்???.. நான் எவ்ளோ எதிர்பார்த்தேன் தெரியுமா?.."

"அவாளண்ட சிக்கி மூச்சு முட்டுறச்சே கூட நீங்க வந்து காப்பாத்துவேள் னு நினைச்சேனே!!.." என்று அழுகையினூடே அவள் கேட்க, சுத்தமாய் நொறுங்கினார் அவர்..

தனது சிறு கவனக்குறைவு எத்தகைய பாதகத்தை அளித்துள்ளது என்பதை புரிந்து மனதளவில் மரித்துப் போனார்..

பொழுது விடிந்ததும் அந்த காலையிலேயே விரைந்து வந்த பங்கஜம் மாமி,"டி அலமு!!.." என்று பரபரப்பாக வீட்டினுள் நுழைந்தார்..

மகள் உறங்கியதும் வெளியே வந்த அலமேலுவை நெருங்கி, "என்னாச்சு டி அலமு?!.. சின்ன குட்டிக்கு ஷேமம் இல்ல னு பேசிண்டா.. அதான் என்னாச்சு னு பார்க்க வந்தேன்!.." என்று தன் வருகைக்கான காரணம் உரைக்க,

"ஆமாம் மாமி!.. அந்த ஊர் சீதோஷணம் ஒத்துக்க போல ஜுரம் வந்துடுச்சு.. அதான் ஜுரத்துல இப்ப தான் தூங்கிண்டு இருக்கா!.." என அலமேலு பதிலுரைத்ததும், அவளது அறைக்கு சென்று அவளை கண்டுவிட்டு வந்தார்..

"பாவம் பொண்ணு!.. ரொம்ப அசந்துட்டா போல.. சரி டி அலமு நன்னா பார்த்துக்கோ!.. ஏதாவது தேவை னா குரல் கொடு.. என்ன!.." என்று விட்டு சென்று விட,

ஆசுவாசமான அலமேலு, தன் கணவரை காண, இடிந்து அமர்ந்து இருந்தவரை, "அவ ஏதோ புரியாம அப்படி பண்ணிட்டா ணா!.. நீங்க மனசுல ஏதும் வைச்சுண்டு மறுகாதேள்!.." என்று அவருக்கு ஆறுதலளித்தார்..

"இல்ல டி அலமு!.. என்னோட சின்ன அலட்சியம் நம்ம பொண்ணோட வாழ்க்கையே சீரழிச்சுடுச்சே!.. எல்லாம் என்னால் தான்!.. எனக்கு நரகத்துல கூட இடம் கிடையாது!.." எனக் கண்ணீருடன் தன் மனவலியை உரைக்க..

"ஏன் ணா இப்படி எல்லாம் பேசறேள்?!.. சரி நீங்க பேங்க் க்கு கிளம்புங்கோ!.. இங்க இருந்தா இப்படி தான் யோசிப்பேள்!.."

"நீங்க வேலைக்கு போகலை னாலும் சுத்தி இருக்கறவா எதாச்சும் யோசிப்பா!.." என்று உரைத்து அவர் மனதை குற்ற உணர்ச்சியில் இருந்து மாற்ற முயன்றார்..

அதன்பின் நாட்கள் ஆமையாய் நகர, ஒவ்வொரு நாளும் மகளது நிலையை எண்ணி மனம் மறுகினர் பெற்றவர்கள்..

அவளது உடல்நிலை ஓரளவு தேறி வர, சீனிவாசன் மட்டும் தன் குற்ற உணர்வில் இருந்து வெளிவர முடியாமல் தனக்குள் ஒடுங்கினார்..

அலமேலுவும் மகளது உடல்நிலை முன்னேற்றத்தில் துளியளவு நிம்மதி ஆனாலும், அவளது எதிர்காலம் எண்ணி மனதினுள் பெரும் கேள்வி விஸ்வரூபம் கொண்டது..

நாட்களும் நகர்ந்து செல்ல, தொலைக்காட்சியில் அன்றைய செய்திகளில்

'அரசூரில் தகர கூரைமேல் மரக்கிளை முறிந்து விழுந்து கட்டுமான பணிகளுக்காக தங்கி இருந்த வெளியூர் தொழிலாளர்கள் மூவர் கழுத்தறுப்பட்டு பலி' என்ற செய்தியை தொடர்ந்து பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது..

செய்தியை பார்த்த பங்கஜம் மாமி, "சின்ன குட்டிக்கு ரிசல்ட் வரப் போகுதா!!?.. அடடா!!.. அன்னிக்கு நான் ஊர்ல இருக்க மாட்டேனே!!.. சரி.. கோவில் போயிட்டு வந்து வாழ்த்தி பரிசு கொடுக்கனும் ணா!.." என்று தன் கணவரிடம் கூறினார்..

அதன்பின் வந்த நாட்களில் வித்யாவின் தேர்வு முடிவுகளும் வெளியாகிட, அதனை பெறுவதற்காக தன் தந்தையுடன் செல்ல வித்யா மறுத்திட, அலமேலுவே அழைத்து சென்றார்..

மகளது விலகல் மனதை அறுத்தாலும், அது தனக்கான தண்டனை என்று அதை ஏற்றுக் கொண்டார் சீனிவாசன்..

பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியான வித்யாவை காண ஆவலுடன் வந்த ஈஸ்வரி, அவள் முன்னதாகவே வாங்கி சென்றதை அறிந்து ஏமாற்றமடைந்தாள்..

வித்யாவுடன் பேசுவதற்காக தொலைப்பேசியில் முயன்றாலும், அவளது தாயே அதை ஏற்று, உறங்குகிறாள், கோவில் சென்றுள்ளாள் எனக் கூறி பேச இயலாது போனது..

மதிப்பெண் பட்டியல் வாங்கும் போதாவது அவளை காணலாம் என்றெண்ணிய ஈஸ்வரி, அவளது தந்தை துரிதப்படுத்தவும் ஏமாற்றத்துடன் கிளம்பி சென்று விட்டாள்..

மதிப்பெண் பட்டியல் வாங்கி விட்டு வீடு திரும்பியவுடன் வித்யா ஓடிச் சென்று வாந்தியெடுக்க, இப்போது தான் உடல்நிலை தேறி வந்த மகள் திடீரென வாந்தி எடுக்கவும்..

என்னவோ என்று பயந்து, "என்னாச்சு டி அம்மு?!.." என பதறி கேட்கவும், "தெரியல ம்மா!!.. கொமட்டிண்டு வருது.. தலை வேற சுத்துறாப்ல இருக்கு!.." என்று கூறவும்,அலமேலு அதிர்ந்தார்..

இதை எப்படி கவனிக்காமல் தவறினோம் என்று எண்ணினாலும், 'அப்படி எதுவும் இருக்கக் கூடாது பெருமாளே!' என்று வேண்டிக் கொண்டே,"நீ எப்ப தலைக்கு ஊத்தின டி??!.." என்று வினவினார்..

அந்நாளுக்கு பிறகு இல்லை என்ற மகளது பதிலில் அலமேலுவிற்கு கால்களின் கீழ் பூமி நழுவியது போலானது..

அலுவல் முடிந்து வீடு வந்த சீனிவாசன், பித்து பிடித்தது போல் அமர்ந்திருந்த மனைவியை கண்டு, என்னவென்று விசாரிக்க,

அவர் உரைத்த விசயத்தில், தனது குற்ற உணர்விலும், மகளது விலகலிலும் மனமுடைந்து இருந்ததில்,

அன்றே அந்த டாக்டர் சொன்னதை மறந்து, மீண்டும் மாபெரும் தவறிழைத்ததில் மொத்தமாய் இடிந்து போனார்..

அசதியில் உறங்கும் மகளை காண, அவளது எதிர்காலம் பற்றிய பயம் பூதாகாரமாக தெரிய, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தனர்..

அன்றைய இரவு உணவின் போது, "என்னம்மா இது!!?..இப்படி கசக்கறது குழம்பு!!?.." என்று முகத்தை அஷ்டகோணலாக்கி கேட்ட மகளிடம்..

"பாகற்காய் போட்டேன் டி!.. அதான் கசக்கறது!.. உடம்புக்கு நல்லது எதுவும் பேசாம சாப்பிடு!.." என்று பொங்கிய கண்ணீரை அடக்கிக் கொண்டு அவளை அடக்கினார் அலமேலு..

"என்னவோ போங்கோ!!?.. என் வாய்க்கு ரொம்ப கசக்கறது!.." என்று விட்டு அவள் உணவை விழுங்கி விட்டு செல்ல,

கணவனும், மனைவியும் உண்மை அறிந்ததால் மனதை கல்லாக்கிக் கொண்டு உணவை உண்டு விட்டு உறங்கச் சென்றனர்..

எதிர்பாரா நிகழ்வுகளை கொண்ட அந்த பொழுது விடியும் போது, முதல்நாள் ஊரில் இல்லாததால் இன்று வித்யாவை வாழ்த்த வந்தார் பங்கஜம் மாமி..

பொழுது விடிந்து இத்தனை நேரமாகியும், பலமுறை அழைப்பு மணியடித்தும் கதவை திறக்காததால், பயந்து அண்டை வீட்டார் துணையுடன், கதவை உடைத்து உள்ளே நுழைய..

அங்கே அறைகளில், வாயில் நுரை தள்ளி கிடந்த தம்பதியினரையும், வித்யாவையும் கண்டு அதிர்ந்து, உடனே மருத்துவமனை விரைந்தனர்..

அவர்களை பரிசோதித்த மருத்துவர், விஷமேறி, எப்போதோ தம்பதியினர் உயிர் பிரிந்ததாகவும், அவர்களை காப்பாற்ற முடியாது என்றும் கை விரித்தனர்..

வித்யாவின் உடலில் விஷத்தின் பாதிப்பு பெரிதாக இல்லை என்றும் ஆனால் அவள் கருவுற்றிருந்தாள் என்றும் கூறிட, அனைவரும் அதிர்ந்தனர்..

"பொண்ணு கெட்டுப் போயிண்டா னு உசிரையே விட்டுட்டாளே!.. அவ இத்தனை பேசறச்சேயே நினைச்சேன் இப்படி எதாவது காரியம் பண்ணுவா னுட்டு!.."

"பாவம் பெத்தவா புள்ள பண்ணின காரியத்தில் தாங்க முடியாம நாண்டுட்டா போல!..எவ்ளோ தான் அவாளும் தாங்குவா!.." என்று இரக்கமே இல்லாது நாகூசாமல் பேசிய அண்டை வீட்டினரை கண்ட,

பங்கஜம் மாமி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, தனது அலைபேசியை எடுத்து சில எண்களை அழுத்தினார்..

நாகூசாமல் பேசிய அறிவிலிகள் அவளது நிலையை கூறி 'நமக்கேன் வம்பு' என்று அங்கிருந்து விலகிட, பங்கஜம் மாமி மட்டும் அவளுடன் இருந்தார்..

சில மணிநேரம் கழித்து, பங்கஜம் மாமியின் கணவருக்கும் விசயம் தெரிந்து, மாமியையும் அழைத்து சென்றிட,

யாருமற்றவளாக மயக்கத்தில் இருந்த வித்யாவின் அறையை வேகமாக திறந்து கொண்டு, "பொம்மு குட்டி!!.." என்ற பெரும் கதறலுடன் ஒரு ஜீவன் நுழைந்தது..

✨✨✨✨✨✨✨✨✨✨✨

பயங்கரமான கனவில் அரண்டு விழித்த ரூபிணி, அருகில் அமைதியில் ஆழ்ந்து, அழகாக உறங்கிக் கொண்டு இருந்த மலர்செண்டை கண்டு, சற்று ஆசுவாசமடைந்தாள்..

என்றுமே வரும் அதே பயங்கர கனவு, எப்போதும் போலவே பதறி எழுந்த ரூபிணிக்கு, என்று தான் இது முடியுமோ என்று ஆயாசமாக இருந்தது..

குயில்களின் அழகிய கானமழையில், ரசனையுடன் விடிந்த அந்த காலையில், ஆழ்ந்த தூக்கமின்றி எழுந்த ரூபிணி, தலைவலியுடன் சற்று உடல் சூட்டை உணர்ந்தாலும்..

கண்டு கொள்ளாமல், "குட்டிமா!.. எழுந்திரு டா.. ஸ்கூலுக்கு போகனும்!.." என்று குழந்தையை எழுப்பி, அவளையும் கிளப்பி, உணவு சமைத்து விட்டு இவளும் பள்ளி சென்றாள்..

குழந்தையை மழலையர் பள்ளியில் இறக்கி விட்டு, தனது பள்ளிக்கு அவள் வந்த போது, காய்ச்சல் போல தெரிந்தாலும் கண்டு கொள்ளாமல் பணியை தொடர்ந்தாள்..

மதியம் போல அவளிடம் ஏதோ ஒன்றை கேட்க வந்த அமுதா, தலை குனிந்து படுத்து இருந்த ரூபிணியிடம் ,"என்னாச்சு ரூபிணி!?.." என்று வினவிக் கொண்டே அவளை தொட..

அவளது உடற்சூட்டை உணர்ந்து, "ஹே!!..என்ன இது உடம்பு இப்படி கொதிக்குது!?.. காய்ச்சலோட எதுக்கு ஸ்கூலுக்கு வந்த நீ!?.." என்று கடிந்து கொண்டாள்..

திடீரென நினைவு வந்தவளாக, "ஆமா!.. இந்த பி.டி வாத்தி, அப்றம் எதாவது உங்கிட்ட தொந்தரவு பண்ணினாரா!?.. மனுசனை அதுக்கு அப்றம் கண்ணுலேயே பார்க்க முடியறது இல்ல!.."

"மதிய ப்ரேக் ல கூட காணாம போயிடுறாப்ல!!!.. ஒருவேளை அந்த ஆளு எதாவது கேட்டு தான், உனக்கு இப்படி காய்ச்சல் வந்ததா!!?.." என்று சந்தேகமாக வினவினாள் அமுதா..

"அதெல்லாம் இல்ல பா!.. காலைல லைட்டா தான் இருந்தது அதான் ஒரு பாரசிட்டமால் போட்டுட்டு வந்தேன்.. சரி ஆகிடும் னு நினைச்சேன்!.." என்று அவள் உரைக்கவும்..

"நல்லா நினைச்ச போ!!. ஒழுங்கா சிக் லீவு சொல்லிட்டு கிளம்பு!.. ஆமா பாப்பாவை எப்படி கூட்டிட்டு போவ?!." என்று கேட்ட அமுதாவிற்கு,

" இப்ப போகும் போதே கூட்டிட்டு போயிடுவேன்!.." என்ற அவளது பதிலில், அவளை முறைத்தாள் அமுதா..

"நீ இருக்கற நிலைமைல நீ ஒழுங்கா வீட்டுக்கு போறதே டவுட்டு தான்.. இதுல குழந்தையையும் வேற கூட்டிட்டு போவியா?!.." என்று விட்டு,

"இரு!.. உனக்கும் லீவு சொல்லிட்டு, நானும் பர்மிஷன் கேட்டுட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன்.." எனக் கிளம்பி சென்ற அமுதா,

தலைமை ஆசிரியையிடம் சொல்லி விட்டு வந்து, தனது வண்டியில் அவளை அழைத்துக் கொண்டு, குழந்தையின் பள்ளிக்கும் சென்றாள்..

மதிய உணவு வேளையில் குழந்தையின் பள்ளிக்கு வந்த அமுதா அவளது அன்னை நிலை உரைத்து, குழந்தையை அழைத்துச் செல்ல, வெளியே கூட்டி வரும்போது..

தனது அன்னை நிற்பதை தெரிந்து "அம்மா!!.." எனத் தாவிய சின்ன குட்டி, அவளுக்கு பின்னே வந்து வண்டியை நிறுத்தியவனை கண்டு, "காத்திப்பா!!!" என்று ஆரவாரிக்க.

"யார்ரா அது!!?.." என்று ரூபிணியை தாண்டி எட்டிப் பார்த்த அமுதாவும், பிள்ளையின் குதூகளிப்பை கண்ட ரூபிணியும் ஒருசேர திரும்பிப் பார்க்க,

அங்கே நின்றவனை கண்டும், குழந்தையின் அழைப்பைக் கேட்டும் துல்லியமாக அதிர்ந்தனர்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top