• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
128
💕K.காதலின்💕M.முகவரி...

முகவரி.. 2️⃣

கதிர் இரத்த வெள்ளத்தில் தரையில் துடித்து கொண்டிருந்தவனைப் பார்த்து அலறிய படி முல்லை அவனை நோக்கி ஓடினாள்.
ஐயோ கதிர். கதிரு உனக்கு என்னாச்சு? கதிர் என்னை பாரு. கதிர் இங்க பாரு கண்ணை திற” என்றாள்.
“கட் கட் யாருங்க நீங்க? டேய் கதிர்! யாருடா இந்த பொண்ணு? டேய் உன்னை தாண்டா அவுங்க மடியில இருந்து முதல்ல எழுந்துடுடா” என்றான் மணி.
“மனுஷன கொஞ்ச நேரம் கூட நிம்மதியா விடாதீங்க. ஹாய் முல்லைப்பூ” என்று சிரித்தான்.
“க...கதிர் உனக்கு ஒண்ணும் ஆகலையா?” தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
“நீ இருக்கும் போது எனக்கு என்ன ஆகப்போகுது. ம்ம்ம்...” என்றான் கதிர்.
“அப்போ இது என்ன ரத்தம்?”
“இது இரத்தம் இல்ல சாஸ்.”
“அப்படினா?” கேள்வி கேட்டாள் அறியாப் பெண்.
“அது... அது உனக்கு சொன்னா புரியாது. சரி நீ ஏன் இப்படி அழுத?”
“உன்ன யாரோ கத்தியில குத்திட்டாங்கன்னு நினைச்சேன்.”
“ஹேய் அப்படிலாம் இல்ல. இங்க ஒரு ஆட் சூட்டிங் எடுத்துக்கிட்டு இருக்கோம்.”
“சூட்டிங்னா படம் பிடிக்கிறிங்களா?”
“ம் ஆமா. அதோ பாரு வீடியோ கேமரா. அதுல தான் சூட்டிங் எடுக்குறோம்” என்றான்.
“மச்சான் யாருடா இவங்க.? என்றான் மணி.
“என்னோட முல்லைப்பூடா.”
“ஒ... உன் அழகியா?” கேலியாகக் கேட்டான் அவன்.
“ஆமா ஆமா அழகியும் இவங்க தான். கதிர்வேலனின் வைரமும் இவுங்க தான்” என்றாள் சவீதா.
“வாடி சோத்து மூட்ட.” கதிர் கிண்டலாக சொல்ல,
“சொல்லுடா அரிசி மூட்ட” என்றாள் அவளும்.
"தென் ஹவ் ஆர் யூ?" என்று விசாரித்தான் கதிர்.
"ம்... நாட் குட்பா."
"ஏன் இன்னும் சாப்பிடலையா?"
"ச்சீ... போடா. டேய் மணி. நீ வா நம்ம தோட்டத்தை சுத்தி பாப்போம்" என்று அவனை அழைக்க,
'இன்னைக்குள்ள நான் இந்த ஆட் ஷூட் எடுக்கணும் சவி. சோ சாரி" என்றான் மணி.
"உனக்கு நான் எப்படி எடுக்குறதுனு கத்து தரேன் நீ வா."
"சரி கதிரு. நான் போறேன் நீ போய் குளி."
"எங்க போற முல்லை?"
"உங்க வீட்ல நிறைய வேல இருக்கு. நாளைக்கு உனக்கு நிச்சயமாமே. அதனால அப்பா என்னை ரொம்ப வேல வாங்குறார்" என்றாள் அலுப்பாக.
"நாளைக்கு நம்ம வீட்ல நிச்சயம் நடக்காது முல்லை."
கதிரின் முகம் கூறிய தீவிரத்தில் "ஏன்?" என்றாள்
"ம்... நாளைக்கு கல்யாணம் நடக்க போகுது. அதனாலதான் சொன்னேன்."
"அப்பா உனக்கு நிச்சயம் தானே சொல்லுச்சு. ஐயோ உனக்கு கல்யாணமா?"
"ஏன் எனக்கு கல்யாணம் நடந்தா நீ கவலைப்படுவியா? என்றதும், "ஆமா கவலை தான்."
"ஏன்... ஏன் முல்ல..? அப்போ நான் வேற பொண்ணை கட்டிக்கிட்டா நீ worry பண்ணுவ இல்ல."
"அதெல்லாம் எனக்கு பண்ண தெரியாது. லட்டு மட்டும் தான் பண்ணுவேன்."
"என்ன ல..ட்..டுவா
"ஆமா உன் நிச்சயதுக்கே நான் ஆயிரம் லட்டு பண்ணேன். அப்போ உன் கல்யாணம்னா நான் எவ்வளவு பண்ணனும்."
"அ..டிப்பாவி.அப்போ லட்டு பண்ணுறத நினைச்சு தான் நீ கவலப்பட்டியா?"
"ஆம்" என்று தலையசைக்க,
அப்போ எனக்கு கல்யாணம் ஆகுறத பத்தி நீ கவலை படலையா?"
உனக்கு கல்யாணம்னா சந்தோஷம் தானே. ஆனா என்ன எப்படியும் அப்பா என்னை 5000 லட்டு பண்ண சொல்லும்..
"அட லட்டுக்கு பிறந்தவளே. உன் கிட்ட நானும் நினைவு தெரிஞ்சதுல இருந்து என் காதலை லட்டு மாதிரி சொல்றேன். ஆனா நீ போற போக்குல அத பூந்தியா ஆக்கிட்டு போற."
“என்ன உளறுற? சரி போ போய் குளி. அங்க பாரு ஈ வருது."
“ஈ வந்து என்ன பிரேஜோனம். நீ வர மாட்டேன்றியே” என்றவனுக்குள் ஏக்கப் பெருமூச்சு.
“நான் இங்க தானே இருக்கேன். எங்க வரணும்?” புரியாது கேட்டாள் முல்லை.
“நான் எங்க கூப்பிட்டாலும் வருவியா?”
“ம்... வரேன். ஆமா. எங்க வரணும்?”
“நம்ம இந்த ஊரை விட்டு ஓடி போய்டலாமா?” என ஆர்வமாகக் கேட்க,
“ஐயோ எனக்கு கால் வலிக்குமே” என்றாள் அவள்.
‘வெளங்கும். இந்த தத்தியை வச்சிட்டு’ என மனதினுள் திட்டி, “நான் வேணும்னா உன்னை தூக்கிட்டு போறேன். சம்மதமா?” என்றான்.
“கதிர் நீ என்ன பண்ணையிலையா வேல செய்யற. என்னை மூட்டை மாதிரி தூக்க.”
“இதெல்லாம் நல்லா பேசு. மனுஷன் காதலை சொன்னா மட்டும் அப்படியே ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி இரு” என்று முனகினான்.
“ஏன் புலம்புற?”
“ஒண்ணுமில்லமா. சரி நான் போய் பம்ப் செட்ல குளிச்சிட்டு வரேன்.”
“ம்... சரி கதிர். நீ போ. நானும் கிளம்புறேன்.”
“ஏய்... எங்க போற?”
“உங்க வீட்டுக்குதான் கதிர்.”
“அங்க இருந்தால் உன்னை பாக்க முடியாதுன்னு தானே உன்னை இங்க வர வச்சேன்.”
“நீ எங்க வர வச்ச? நான் ராஜசேகர் ஐயாவோட பொண்ணு, அதான் உன்னை கட்டிக்க போறாங்களே அவங்க கூட நானே தான் வந்தேன்” என கேட்டாள் அவனின் எண்ணம் புரியாது.
“நீயா வரல. நான் தான் அவகிட்ட சொல்லி உன்னை இங்க வர வச்சேன்” என்றான்.
“அப்படியா?
“அப்படித்தான் முல்லை.”
“சரி எதுக்கு வர வச்ச?”
“உனக்கு நான் ஒண்ணு தரணும். அதுக்குதான் கூட்டிட்டு வரச் சொன்னேன்.”
“ஓ... என்ன தரணும் கதிர்?”
“குளிச்சிட்டு வந்து சொல்றேன் நீ அதோ அந்த ரூம் இருக்கு இல்ல அங்க வெயிட் பண்ணு.”
“நான் எதுக்கு வெயிட் பண்ணனும்?”
“வெயிட் பண்ணு சொன்னா கேட்டுக்கணும். போ” என்றதும் அவள் சம்மதமாய் தலையசைக்க, “முல்லை” என்றான் திரும்பவும்.
அவள் அவன் முகம் பார்க்க, “அன்னைக்கு நான் உன்கிட்ட ஒன்னு கேட்டேனே? அதுக்கு நீ ஏன் இன்னும் பதில் சொல்லவே இல்ல?”
“என்ன கேட்ட?”
“எனக்கு தேவையான பதில், உனக்கு அந்த கேள்வி புரிந்தால் மட்டுமே கிட்டும்” என்று குளிக்கச் சென்றான்.
கதிர் குளித்து முடித்தவன் அவன் அறைக்குள் வர, முல்லை அங்கே இருந்த கேமராவை எடுத்து பார்த்து கொண்டு இருந்தான். கதிர் அவள் பின் நின்று அவள் அழகை ரசித்தப்படி, அருகில் சென்றவன் அவள் காதோரத்தில் அவனுக்கு போட்டியாக தவழ்ந்து கொண்டு இருந்த கூந்தலை ஊதிவிட்டான்.
சட்டென்று முல்லை அவன்புறம் திரும்பியவள், “வந்துட்டியா?” என கேட்க, “ம்ம்ம்...” என தலையசைத்தான்.
“கதிர் இதுல தான் படம் பிடிப்பாங்களா?”
“ஆமா முல்லை.”
“என்னையும் இதில் படம் பிடிக்கிறியா?”
“நீ இல்லாமலா. உன்னோட படம் தான் இந்த கேமரா முழுக்க இருக்குது” என்று உளறினான்.
“என்னோட படமா? எப்படி?”
“ஆமா முல்லை. இங்க வா வந்து இப்படி உக்காரு” என்று தன்னருகில் உள்ள இடத்தைக் காண்பித்தான்.
“ஐயோ! இந்த மெத்தையிலையா? நான் மாட்டேன். இங்க எல்லாம் நான் வரவே கூடாதுன்னு அப்பா சொல்லுச்சு. என்னை போய் நீ உக்கார சொல்ற?”
“ப்ச்... உக்காருன்னு சொன்னேன்.”
“ஹ்ம்... அதெல்லாம் மாட்டேன் போ.”
“முல்லை!”
“ப்ச்... சொல்லு கதிர்.”
“என் கண்ணை பாருடி. நான் உன் பக்கம் வந்தா உனக்கு ஒண்ணுமே தோணலையா?”
“என்ன தோணனும்? புரியுற மாதிரி பேசு” என்றாள்.
“நீ ஏன் இப்படி இருக்குற?”
“எப்படி இருக்கேன்?”
“ம்ம்... தேவதை மாதிரி இருக்க” என்றான் ரசித்து.
“பைத்தியமா நீ. தேவதை எங்காவது பாவாடை தாவணி எல்லாம் கட்டி இருக்குமா?”
“ம்ம்... நீ ரொம்ப அறிவு முல்ல.”
“அப்படியா சொல்லுற? ஆனா என்னை என் அப்பா பைத்தியம் மாதிரி பேசுறன்னு திட்டுச்சே.”
“ஓ... அப்படி என்ன பேசுன?”
“உன்னை பெயர் சொல்லி கூப்பிட்டேன். அதுக்கு தான் திட்டுச்சு.”
“அவரு சொல்லட்டும். பட், நீ என்னை பெயர் சொல்லியே கூப்பிடு. அதுக்கான உரிமை உனக்கு இருக்கு” என்றான்.
“சரி நான் கிளம்புறேன்.”
“முல்ல” என்று திரும்பவும் ஆரம்பித்தான்.
அவளின் பார்வையில், “என்னை கட்டிக்கிறியா?” என்றான் வெளிப்படையாகவே.
“ஏன் எப்பப்பாரு அதையே கேக்குற? உனக்கு தான் கல்யாணம் ஆக போகுதுன்னு அப்பா சொல்லுச்சே. நான் எப்படி உன்னை கட்டிப்பேன்? அது தப்பில்லையா?”
“நீ என்னை கட்டிக்கிறேன்னு சொல்லு. நான் அந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன்.”
“வேண்டாம் வேண்டாம். அவங்க பாவம் இல்ல. நீ அவுங்களையே கட்டிக்கோ. நீ வக்கீலுக்கு எல்லாம் படிச்சவன். சினிமா எல்லாம் வேற நடிக்கிற. இந்த ஊர் தலைவரோட ஒரே பையன் உசந்த சாதிக்கார பிள்ள. அதனால நீ அதோ குட்ட பாவாடை போட்டுகிட்டு இருக்காங்களே அவுங்களையே கட்டிக்கோ” என்று சவீதாவை காட்டினாள்.
“ஷப்பா..” என்று அவன் சலிப்பாக சொல்ல,
“என்ன கதிர் வெக்கையா இருக்கா? ஜன்னல் திறக்கவா? என கேட்டாள்.
“முல்ல இங்க பாரு.”
“என்ன நீ நான் இங்க தானே இருக்கேன் ஏன் சும்மா சும்மா உன்ன பாக்க சொல்லுற”?
“என் கண்ணுல நீ தெரியுற பாரு.”
“ஆமா அதுக்கு என்ன. நீ பார்த்தா என் கண்ணுல நீ தெரிவ? என்னவோ புதுசா சொல்லுற மாதிரி இருக்கு.”
“நிஜம்தான். ஆனா, என் இதயத்திலும் நீதான் இருக்குற. உன் கையை காட்டு” என்றதும் அவள் நீட்ட, முல்லையின் கரங்களை தான் இதயத்தில் இணைத்தவன், “என் காதல் உனக்கு இப்பவும் புரியலையா?” என்றான்.
“காதலா யார காதலிக்கிற நீ? ஐயோ நாளைக்கு உனக்கு நிச்சயமாகப் போகுது. இப்ப போய் நீ யாரையோ காதலிக்கிறேன்னு சொன்னா உங்க அப்பா உன்னை கொன்னுடுவாரு.”
“ஏய் அறிவு இல்லாதவளே. நான் உன்னை தாண்டி காதலிக்கிறேன். நினைவு தெரிஞ்சதுல இருந்து உன்னை மட்டுமே நினைச்சு பைத்தியமா சுத்துறேன். பாக்குற இடத்துல எல்லாம் நீதான் இருக்குற. நான் சுவாசிக்கும் காற்றில் கூட உன் மணம் தான் வீசுது. இன்னும் உனக்கு நான் என்னை எப்படி தான் புரிய வைக்கிறது” என்று புரியாது தவித்தான்.
“கதிரு இப்ப ஏன் நீ இப்படி மூச்சு விடாம பேசுற? ஒ... இந்த கேமரா உன்னை படம் பிடிக்குதா. இதுவும் அது என்ன, ஆங்.... சொட்டிங்கா?”
“என்ன?”
“அதான்பா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே.”
“சூட்டிங்கா?”
“ஆங்... அது நடக்குதா
“அடியேய்! இங்க இருந்து போயிடு சொல்லிட்டேன்” என்றான் கடுப்பாக.
“ம்... சரி. இந்தா உன் கேமரா” என்று நீட்ட,
“அங்க வை.”
“நான் வரேன் கதிர்.”
கிளம்பியவளிடம், “முல்லை என்னை மன்னிச்சுடு” என்றான்.
“எதுக்கு?”
“எனக்கு வேற வழி தெரில.”
“என்ன வழி?”
“இத பண்ணா தான் நீ என் காதலை புரிஞ்சிப்பனா நான் அத பண்ணவும் தயங்கமாட்டேன்” என்றான் அவளை அழுத்தமாகப் பார்த்து.
“புரியலை. என்ன பண்ண போற கதிர்? என்றாள் முல்லை.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top