Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 128
- Thread Author
- #1
முல்லை மயங்கி விழுந்ததும் கதிர் அவளை தன் மடியில் தாங்க, “முல்லை, முல்லை... டேய்! மணி அங்க யார்கிட்டயாவது தண்ணி வாங்கிட்டு வாடா” என்றான்.
மயங்கிய முல்லையின் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் முல்லை மயக்கத்திலிருந்து எழுந்தவள், தன் தந்தையின் சடலத்தை பார்த்து பிரமை பிடித்தது போல் நின்றிருக்க, அவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை
“முல்லை இங்க பாரு. என்னை பாரு முல்லை.”
“கதிர் அப்பா, அப்பா, ஏன் அப்பா இங்க? அப்பாக்கு என்ன ஆச்சு? சொல்லு கதிர் அப்பாக்கு என்ன ஆச்சு?” என்று கதறினாள்.
“டேய் மணி முல்லையை பிடிடா. நான் என்னனு பாக்குறேன்.”
கதிர் சடலத்தின் அருகில் செல்வதற்குள், ஊர் ஜனம் மொத்தமும் அந்த மரத்தை சுற்றி வளைத்து ஆளாளுக்கு ஒரு விதமாக பேசிக்கொண்டு இருந்த சமயம், ஜீப்பில் கதிரின் தந்தை சேரன் மற்றும் கதிரின் தாய்மாமன்கள் ராஜசேகர், தனசேகர் மற்றும் தனசேகரனின் மனைவி கலைவாணி, ராஜசேகரின் மனைவி கலையரசி ஆகியோர் வந்து இறங்கினார்கள்.
“கதிர் என்ன ஆச்சு? ஐயோ கணேசன். டேய் என்ன ஆச்சுனு சொல்லுடா?
“எனக்கு ஒன்னும் புரியலப்பா. நீங்க அழைச்சிட்டு வரச் சொன்னதா தான் ரெண்டு பேரு வந்து கணேசனை அழைச்சிட்டு போனாங்கன்னு முல்லை சொன்னாள். ஆனா கடைசியில ஒரு சின்ன பையன் ஓடிவந்து கணேசன் தூக்கில் தொங்கிட்டாருன்னு சொன்னதும் தான் நாங்க இங்க வந்தோம். இங்கே வந்து பாத்தா...”
“அடிடா சக்க. இதோ வெட்ட வெளிச்சமாகிட்டது. இதோ நிரூபித்து விட்டான் இல்ல.” என்றார் தனசேகரன்.
“என்ன மாமா உளர்றீங்க?”
“உளறல மருமகனே. குற்றம் செய்தவன் மாட்டிகிட்டோம் என்ற பயத்துல, இதோ ஊர் மத்தியிலே இருக்கிற மரத்தில் தூக்கு போட்டுக்கிட்டு தொங்கிட்டான் இல்ல.”
“சரியா சொன்னடா தம்பி. மாமா இப்ப புரியுதா, கணேசன் நல்லவன் வல்லவன்னு சொன்னிங்களே. பாத்தீங்களா இவன் ஒரு திருடன். கோவில் சாமியின் நகையை திருடியவன் இவன் தான்.” என்றார் ராஜசேகர்.
“மாமா என்ன உளர்றீங்க? இவரு இறந்துட்டதால இவர திருடன்னு சொல்லிடுவிங்களா? இறந்தோர் மேல் பழி சொல்வது அசிங்கம். முதல்ல இந்த வழக்கு போற திசையே சரி இல்ல” என்றான் கதிர்.
“போதும் மாப்பிள்ள நிறுத்து. நீ என்ன உன் வக்கீல் புத்தியை காட்டுறியா? இதோ திருடன் அவனே தன்னை நிரூபிக்க வக்கில்லாமல் தூக்குல தொங்கி விட்டானே. இதுக்கு மேல என்ன சாட்சி தேவை?” கடுமையாக பேசினார் ராஜசேகரன்.
“இல்ல இல்ல இவங்க பொய் சொல்லுறாங்க. என் அப்பா திருடன் இல்ல. அவரு திருடல்லாம் மாட்டார். என் அப்பா திருடன் இல்ல. கதிர் சொல்லு கதிரு என் அப்பா திருடன் இல்ல” என்று அழ,
“ஏய்! நீ என்னடி எங்க வீட்டுப் பையனுக்கு நீ பெயர் வச்ச மாதிரி, கதிர் கதிர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்க. முதல்ல நீ எல்லாம் எங்க எதிர்க்க வந்து நின்னு பேசறதுக்கு கூட அருகதை இல்லாதவள். எங்க மாப்பிள்ள பக்கத்துல இருந்து தள்ளி போய்டு சொல்லிட்டேன்” என்றார் கலைவாணி.
“அத்த என்ன பேசுறீங்க? இவ அவளுடைய அப்பாவை இழந்து நிற்கிறாள். அவருடைய மரணத்துக்கு ஒரு நியாயம் தேவை. அத விட்டுட்டு நீங்க என்ன என்னமோ பேசுறீங்க.”
“என்ன நியாயம் தேவை. அதான் இவன் திருடன்னு ஊர்ஜிதமாகிடுதே அப்புறம் என்ன?” தனசேகரன் கேட்க,
“நீங்க சத்தமாக பேசினால் பொய் உண்மையாகாது மாமா.”
ராஜசேகரோ, “டேய்! நீ பேசுறத பாத்தா செத்தவனை நல்லவன் மாதிரி சொல்ற” எனவும் தனசேகரன் “அண்ணா அங்க பாருங்க. அந்த கணேசனுடைய கையில எதோ ஒரு காகிதம் இருக்கு” என்று காண்பித்தார்.
“டேய் மணி! அந்த பேப்பர் என்னன்னு பாருடா. உன் கையில கர்சீப் வச்சு எடுக்கப்பாரு.”
“எதுக்கு மச்சான்?”
“இல்ல நீ இரு. நான் பாக்குறேன். உங்க எல்லோருக்கும் சொல்லிக்கிறேன். இங்க இருக்கிற ஒரு துரும்பு கூட யாரும் தொடக்கூடாது. விடிஞ்சதும் நானே இந்தக் கோயில் நகைகள் பற்றி போலீசுக்கு சொல்லணும்னு தான் இருந்தேன். ஆனா இங்கே வேற ஏதோ பெரிய பிரச்சனை நடந்து இருக்கு. நல்லா இருந்த ஒரு உசுரை இப்படி அடிச்சு தொங்க விட்டிருக்கிங்க” என்றான் கதிர்.
“என்னது அடிச்சு தொங்க விட்டாங்களா? ஐயோ கதிர் என்ன பேசுற நீ? இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல” என்று சேரன் பதற்றப்பட,
“அப்பா அப்பா என்ன ஆச்சு?”
“ஐயோ மாமா. மாமா என்ன ஆச்சு?” என்று தனசேகரன் சொல்ல, அதைக்கண்டு அனைவரும் அலற, சேரன் நெஞ்சில் கையை வைத்தபடி சரிந்து கீழே விழுந்தார்.
“ஐயோ வண்டியை எடுங்க. மாமாவ மருத்துவமனைக்கு தூக்கி போகணும்.” தனசேகரன் சொல்ல,
ராஜசேகர் தம்பியிடம், “டேய் அப்போ செத்த இந்த திருடனுக்கும் அவன் பொண்ணுக்கும் என்ன தண்டனை கொடுக்கணும்?” எனக் கேட்டார்.
“ம்... இவன் பொண்ணா அடிச்சி இந்த ஊரைவிட்டு துரத்துங்க.”
“மாமா அவ மேல கைய வச்சீங்க நான் மனுசனா இருக்கமாட்டேன். நான் அப்பாவை கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இன்னும் சில மணி நேரத்தில இங்க வருவேன். அது வரைக்கும் நீங்க யாரும் என் முல்லப்பூவை எதுவும் சொல்லக்கூடாது. டேய் மணி நீ இங்கேயே இருந்து இங்க என்ன நடக்குதுன்னு பாரு. நான் பக்கத்து ஊருல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு அப்பாவை அழைச்சிட்டு போறன். அப்படியே போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் தந்துட்டு வறேன்”
என்று சொன்ன கதிர் தன் தந்தை சேரன் அவர்கள் வந்த காரிலேயே அவரை ஏற்றினான்.
“கதிர்... கதிர் அப்பா அப்பா” என்று அழ,
“முல்லை உன் அப்பா. உன் அப்பா இறந்துட்டாரு. இல்ல யாரோ அவரை சாகடிச்சிருக்காங்க. இதுக்கெல்லாம் நியாயம் கிடைக்கும். நீ தைரியமா இரு நான் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்.”
“கதிர் என்ன விட்டு போகாத. எனக்கு பயமாயிருக்கு” என்று அவனை பிடித்து விடவில்லை.
“ஏய் விடுடி” அவளை இழுத்தார் கலைவாணி.
“அத்த கையை எடுங்க. இங்க பாருங்க கடைசியா சொல்றேன் முல்லையை யாரும் ஒரு வார்த்தை பேசக்கூடாது. டேய் மணி என் முல்லைப்பூவை பார்த்துக்கோ” என்று சொன்னபடி சூழ்நிலைக் கைதியாக கதிர் தன் தந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
சில மணி நேரம் கடந்த நிலையில் மீண்டும் கதிர் தன் தந்தையுடன் ஊருக்குள் நுழைய, ஊரே வெறிச்சோடி இருக்க, ஊர் மத்தியில் அனாதையாக எரிக்கப்பட்ட நிலையில் கணேசனின் உடல் கருகி இருந்தது. கதிர் கண்கள் கலங்கி கணேஷனின் சடலத்தின் அருகே செல்ல, கதிரும் கதிரின் தந்தையும் வந்ததால் மீண்டும் பஞ்சாயத்து கூடியது.
“இங்க என்ன நடந்துச்சு? முல்லை. என் முல்லைப்பூ எங்க? டேய் மணி என்னடா என்ன ஆச்சு?” என்று கோபமாகக் கேட்க,
“மச்சான் முல்லையை அடிச்சுட்டாங்கடா.” என்றான்.
“என்னடா சொல்ற? அவளை ஏன்? யாரடா?”
“உன் முல்லைபூவை உன்னுடைய அத்த வந்து முடி எல்லாம் இழுத்துப் போட்டு, இதோ இந்த இடத்தில அடிச்சு ரொம்ப பெரிய பிரச்சனை ஆயிடுச்சுடா.”
“டேய் என்ன சொல்ற? என் முல்லைப்பூ எங்க? மாமா என் முல்லைப்பூ எங்க?” என்று கத்தினான்.
தனசேகரனோ, “என்னடா மணி நீ. மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்த மாதிரி கதை சொல்ற. இங்க பாரு கதிர், இதோ பார் கதிர் இந்த கடிதத்தில் கணேஷன் தெள்ள தெளிவா கோவில் நகையை அவன் தான் திருடினான்னு எழுதி விச்சிட்டு தூக்கில் தொங்கி இருக்கிறான். அவங்க பொண்ணுகிட்ட நாங்க நகை எங்கன்னு கேட்டோம். அவ நகையை என் வீட்டில்தான் வச்சிருக்கிறேன், நான் போய் எடுத்திட்டு வரேன்னு சொல்லிட்டு போனா. ஆனால் திரும்பி வரவேயில்லை. நாங்களும் அவள ஊர் முழுக்க தேடிட்டோம் அவள காணோம்” என்றார்.
“என்ன என் காதில் பூ சுத்துறீங்களா? என் முல்லைப்பூ எங்க? எங்கிட்ட சொல்லாம அவ இங்க இருந்து போய் இருக்கமாட்டாள். அவங்க அப்பா இங்கே சடலமாய் எரிந்து இருக்கும்போது அவ எப்படி போவா?”
“என்ன நீ பைத்தியக்காரன் மாதிரி பேசுற. அதான் அவங்க அப்பா திருடன்னு வெட்ட வெளிச்சமாகிடுது இல்ல. அவனால தன்னை நல்லவன்னு நிரூபிக்க முடியாமல் தானே அவனும் தூக்குல தொங்கிட்டான். அவன் பொண்ணு இதோ அந்த நகையோடு இந்த ஊரை விட்டு ஓடிப் போயிட்டா. அவ்வளவுதான் இந்த வழக்கு முடிந்துடுது. இப்போ நமக்கு வைர ஒட்டியாணம் நஷ்டம். ஒரு திருடனுக்கு போய் நீயும் உன் அப்பாவும் நல்லவன்னு வக்காலத்து வேற வாங்கிட்டு வந்தீங்க பாருங்க.”
“மாமா நான் மறுபடியும் சொல்றேன்.