Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 128
- Thread Author
- #1
“கதிர் டேய் கதிர் நில்லு.” தூரத்தில் இருந்து கதிர் பெயரை சொல்லி அவன் மாமன் மகள் சவிதா இவனை அழைத்தாள்.
“விடுடி என்னை. இங்க என்ன நடந்து இருக்கு தெரியுமா?”
“டேய் எல்லாம் எனக்கு தெரியும். நீ முதல்ல வந்து காருல ஏறு.” என்று அவன் கையைப் பிடித்தாள்.
“ஏய் கையை விடு. என் முல்லைப்பூ எங்கனே தெரில. அவளை உன் அப்பனும் சித்தப்பனும் என்ன பண்ணி வச்சிருக்காங்கனு புரில. இன்னைக்கு அவனுங்கள நான் கொன்னா கூட என் ஆத்திரம் தீராது” என்று கோபத்தில் கத்தினான்.
“ம்... கொன்னுட்டு? சொல்லு கொன்னுட்டு என்ன பண்ண போற? நீ படிச்சவன் தானே ஆளையும் அவனையும் பாரு. டேய் முதல்ல வா” என்றாள்.
“எங்கடி அவன கூப்பிடுற? பாவம் அவனே முல்லை எங்கன்னு குழம்பிகிட்டு இருக்கான்.”
“உன் முல்லைபூவை என் அம்மாவும், சித்தியும் எங்க தோட்டத்து வீட்டுக்கு தான் இழுத்துகிட்டு போனாங்க. ஆனா அவங்க அரை மணி நேரம் கழிச்சு வெளிய வரும் போது அவங்க கூட முல்லைப்பூ இல்ல. நானும் கொஞ்ச நேரத்துல போய் அந்த வீட்ல முல்லைபூவை தேடினேன் ஆனா அவ அங்க இல்ல” என்றாள்.
“என்னடி சொல்ற அப்போ என் முல்லைப்பூ உங்க தோட்டத்து வீட்ல இருக்காளா?”
“99% அங்க தான் இருக்கணும். பட், நான் பாக்கும் போது இல்ல. எனக்கு ஒன்னும் புரில.”
“ஐயோ என் முல்லைப்பூக்கு என்னாச்சு?”
“நீ முதல்ல வந்து காருல ஏறு. நம்ம வீட்டு ஆளுங்க யாராவது பார்த்தா நம்மை கட்டி வச்சு தோளை உறிச்சிடுவாங்க. வா போலாம். டேய் மணி காருல ஏறு” என்றாள் அவனையும்.
மூவரும் சவிதாவின் தோட்டத்து வீட்டிக்கு செல்ல, அந்த வீட்டுக்குள்ளே நுழைந்து தேட, வீடு முழுதும் இருள் சூழ்ந்து இருந்தது. ஜன்னல்கள் எல்லாம் மூடப்பட்டு காற்று நுழையாதபடி தோற்றமாளித்தது.
“நான் வீடு முழுக்க தேடிட்டேன் கதிர். முல்லைப்பூ இங்க இல்ல. ஆனா என் அம்மாவும் சித்தியும் உன் அழகியை இங்க தான் அழைச்சுட்டு வந்தாங்க.”
“மணி உன்கிட்ட லைட்டர் இருக்குல்ல. அதைக் கொடு” என்று கதிர் கேட்டான்.
சிகரெட் பற்ற வைக்க பயன்படுத்தும் லைட்டர் கொண்டு வெளிச்சத்தை உண்டாக்கியவன், வீட்டின் நான்கு பக்கமும் தன்னவளை தேட. அவள் எங்கு தேடியும் கிடைத்த பாடில்லை.
“என்ன மச்சான் இது? சிஸ்டர் இங்க இல்லையே?”
“எனக்கும் ஒன்னும் புரியலடா. முல்லை முல்லை என்று கத்தினான்.
“கதிர் ஒரு வேளை பின்பக்கம் கிணத்துல...” என்று நிறுத்தினாள்.
“என்னடி சொல்ற?”
“வீட்ல இல்லைனா அங்க தானே இருக்கணும்.”
இருடி நான் போய்ப் பாக்குறேன்” என்று ஓட,
“மச்சான் மாச்சான் ஒரு நிமிடம் நில்லுடா. சவீ அங்க பாரு அது என்ன அவ்வளவு பெரிய பானை?”
“டேய் அது பட்டயம் நெல்லு எல்லாம் கொட்டி வைக்கிறது.”
“மச்சான் எனக்கு என்னமோ உன் முல்லைப்பூ அங்க இருப்பாங்கன்னு தான் தோணுது.”
“ஆமா கதிர். மணி சொல்லுறது சரி. வா போய் பாப்போம்.”
“டேய் பாத்துடா.” மணி பதற,
“பாத்து கதிர் அது ரொம்ப deep டா.”
“முல்லை, முல்ல...” என்று சத்தமாக அழைத்தான். அதில் எக்கோ அடிக்க, திரும்பவும், “முல்லை” என்றான்.
“என்ன மச்சான்? உள்ள இருக்காங்களா?”
“வெளிச்சம் இல்லடா.”
“டேய் இந்தா இந்த தீக்குச்சி புடிச்சு பாரு.”
“டேய் டேய் என் முல்ல உள்ள தான் மயக்கத்துல இருக்காடா.”
“மாமா யாரோ வரும் சத்தம் கேக்குது” என்றாள் சவீ.
“ஏய் நீங்க போய் மறைஞ்சிக்கொங்க. நான் இங்க பட்டயம் பின்னாடி ஒளிஞ்சிக்கிறேன்.”
மணி சவி இருவரும் ஒரு அறையில் ஒழிந்து கொள்ள, கதிர் பட்டயம் பின்னாடி நின்று இருக்க. இருவர், கதிர் இருப்பது தெரியாமல் முல்லை இருக்கும் பட்டயம் அருகில் வந்தவர்கள்
“டேய் இப்ப என்ன பண்ணனும்.” என ஒருவன் கேட்க,
இன்னொருவனோ, “நான் உள்ள போய் அந்த கணேசன் மவள தூக்குறேன் கண்டிப்பா இந்நேரத்துக்கு அவ போய் சேந்துருப்பா. நான் மேல வந்ததும் அவள இதே தோட்டத்துல புதைச்சிடுவோம்
“ம் சரி இறங்கு.”
ஒருவன் பட்டயத்துக்குள் இறங்கி முல்லைபூவை மேலே தூக்க, உயிருள்ள ஜடமாக இருந்த கதிரின் கண்ணனுக்குத் தன் முல்லைபூவை அந்த நிலைமையில் பார்த்ததும், கண்கள் கலங்கி கோவம் தலைக்கு ஏறிய நிலையில், சட்டென்று அந்த இருவரின் முன்பு சென்று நின்றவனை பார்த்து அவர்கள் இருவரும் செய்வதது அறியாமல் விழித்தனர்.
“முல்லை இங்க பாரு. உனக்கு என்னாச்சு?” என்று பதறினான் கதிர்.
“சின்ன ஐயா” என்றான் ஒருவன்.
“டேய் ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து ஓடிடுங்க. இல்ல” என விரல் நீட்டி மிரட்டினான்.
“மச்சான் என்னடா ஆச்சு?” மணி கேட்க,
“டேய் முல்லைடா. இவளுக்கு என்னாச்சு தெரியலைடா. முல்ல முல்ல இங்க பாரு” என்று கன்னம் தட்டினான்.
“மாமா இவங்க மயங்கிட்டாங்க போல. நீ வா நம்ம காருல இவங்கள hospital கொண்டு போலாம்.” என்றாள் சவீ.
“இல்ல நீங்க இவளை தூக்கிட்டு போங்க. நான் என் முல்லைப்பூவை இந்த நிலைக்கு கொண்டு வந்தவங்கள போய்க் கொன்னுட்டு வரேன்.”
“மச்சான் நீ என்ன மாங்கா மடையன் மாதிரி பேசுற. இப்ப நீ உன் பங்களாகுள்ள போனா வெளியே வர முடியாது. ஒழுங்கா வா நம்ம இந்த கிராமத்தை விட்டே போயிடலாம்.”
“ஆமா மாமா. மணி சொல்றது தான் சரி. நீ வா நம்ம சென்னைக்கே போயிடலாம். முதல்ல பக்கத்து ஊருக்கு போய் முல்லைக்கு first aid தரணும். வா மாமா போலாம்.”
“முல்லை! ஏய் என்னடா ஏன் இவ முடி எல்லாம் இப்படி இருக்கு?”
“கதிர் இவ உயிர் பிழைத்ததே பெருசு. நீ கூந்தல் பத்தி பேசுற. ஒழுங்கா காருல வந்து ஏறு சொல்லிட்டேன். கிராமத்துக்கு கூட்டிட்டு வந்து எமலோகம் அனுப்ப பாக்குற போல. வாடா முதல்ல.”
“மாமா நான் கார் எடுக்குறேன் வா போலாம்.”
கதிர் முல்லையை அவன் கரங்களில் ஏந்தியவன், அவளை காரில் ஏற்றி தன் மடி மீது படுக்க வைத்துக்கொள்ள, சவி காரை எடுக்க, மணி அவள் அருகில் அமர்ந்தான்.
“டேய் மச்சான் அங்க பாருடா. உங்க ஆளுங்க எல்லாம நெருப்பு பந்ததோடு நம்ம நோக்கிதான் வராங்க.”
“சவீ சீக்கிரம் காரை எடு.”
“வண்டி ஸ்டார்ட் ஆகலைடா.” என்றவளுக்கும் பயம் அதிகம்.
“அடிப்பாவி சவி. ஒரு சாவி போட தெரிதா உனக்கு. இதுல வேற உன் முகரைக்கு தங்க சாவி போட்டானா ஒருவன். போடி அப்படி.” என்று அவளை நகரச்சொல்லி மணி காரை எடுத்தான்.
தூரத்தில் கதிரின் சொந்தம் முழுதும் கையில் தீப்பந்தம், கத்தி, அருவா என்று பல ஆயுததோடு இவர்களை நெருங்க, மணி காரை பக்கத்து ஊரை நோக்கி விரட்டினான்.
“மணி சீக்கிரம் போடா. இவ பேச்சு மூச்சு இல்லாம இருக்கா. அதுவே பயத்தைக் கொடுக்குது. முல்ல இங்க பாரு. சவி அந்த தண்ணி பாட்டிலை தா” என்று வாங்கிய கதிர் முல்லை முகத்தில் தண்ணியை தெளிக்க, அவள் உடலில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருப்பதை பார்த்து கதிர் மேலும் பயந்தவன் அவளை கட்டி பிடித்து அழுதான்.
“உன் வாழ்க்கைல நான் வராமல் இருந்திருந்தா ஒருவேளை நீ நல்லா இருந்திருப்ப. இப்ப பாரு என்னால, நீ உன் அப்பாவை இழந்து, உன் நிம்மதியை இழந்து, ஐயோ எல்லாம் என்னால தான்.” என்று அழுதான்.
“மாமா அழாத மாமா. உன் முல்லைப்பூக்கு ஒன்னும் ஆகாது.”
“டேய் மச்சான் இந்த ஹாஸ்பிடல் தானேடா?” என மணி கேட்க,
“ம்... ஆமாடா. சவி நீ கதவைத் திற நான் முல்லையை தூக்கிட்டு வரேன்.”
சவி கார் கதவை திறக்க, கதிர் முல்லையை மருத்துவமனைக்குள் தூக்கி செல்ல, அவனை தொடர்ந்து மணியும் சவியும் சென்றனர்.
“டாக்டர் டாக்டர்.” என்று கதிர் கத்த,
“சார் சார் இருங்க. இவங்களுக்கு என்னாச்சு?” என்றார் செவிலி.
“ப்ளீஸ் சிஸ்டர் எமர்ஜென்சி. சீக்கிரம் பாருங்க.”
அங்கு வந்த மருத்துவர், “என்னாச்சு இவங்களுக்கு? ஏன் இவங்க இப்படி இருக்காங்க?”
“நீங்க தானே டாக்டர். நீங்க தான் பாக்கணும்.”
மருத்துவரோ, “இவங்கள பார்த்தா, இது வேற ஏதோ கலவரத்துல அடிபட்டு இருக்குற மாதிரி இருக்கே. எங்க ஹாஸ்பிடல்கு எதாவது பிரச்சனை வர போகுது” என்றார்.
“டாக்டர் நானே வக்கீல் தான். என்ன ப்ராப்ளம் வந்தாலும் நான் பாத்துக்கிறேன். ப்ளீஸ் டாக்டர். என் முல்லைபூவை காப்பாத்துங்க.”