Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 128
- Thread Author
- #1
K காதலின்.M. முகவரி
முகவரி... 
“டேய் கதிரு. உனக்கு மானம் இல்ல. நம்ம ஜாதி அந்தஸ்து என்ன? நீ என்னடா இவகிட்ட உக்காந்து காதல் வசனம் வாசிச்சுகிட்டு இருக்க” என்று மருமகனைத் திட்டி, “அடியே நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா இரு உன்ன...” என்று அவளை நெருங்க,
“ஐயோ கதிர். கதிரை ஒன்னும் பண்ணாதீங்க. நான் வேணும்னா இந்த ஊரை விட்டே எங்காவது போயிடுறேன்” என்றாள் முல்லை.
“நீ உயிரோடே இருக்க கூடாதுடி.”
“அவ உயிரோடு இருக்குறது உனக்கு பிரச்சனைனா, நீ சாவுடா. இரு உன்னை...” என்று சொன்ன கதிர் சட்டென்று அவன் மூக்கில் ஒரு குத்து விட, தனசேகர் அதே இடத்தில் மண்டியிட்டு கீழே விழுந்தார்.
ராஜசேகர் அதே சமயம் கதிரை அடிக்க வந்ததும், அருகில் இருந்த தலையணை கொண்டு முல்லை அவன் முகத்தில் வீசியவள், “என் கதிர் மேல கை வைக்காதிங்க” என்றாள்.
“என் மேல கை வைக்கிற அளவுக்கு நீ பெரிய இவளா. இரு உன்னை...”
“யோவ் இதே இடத்துல உன் சங்கை மிதிச்சுடுவேன் சொல்லிட்டேன். டேய் மணி போலீஸ்ல போய் இவுங்க மேல கம்பிளைன்ட் தரணும். முதல்ல முல்லையை அழைச்சிகிட்டு வாடா.”
“டேய் கதிர். நம்ம குடும்ப மானத்தை வாங்கிட்டு எங்கடா போற” என்று தனசேகரன் நிற்க,
“உங்களோட ஜாதி வெறிக்காக என்னோட காதலை நான் இழக்க முடியாது. பாவிகளா முல்லையின் அப்பா உங்களுக்கு என்ன துரோகம் பண்ணாரு? அவரை அநியாயமா சாகடித்து, என் முல்லையையும், என்னையும் பிரிக்க பாத்திங்க இல்ல உல்களை சும்மா விடமாட்டேண்டா.”
“மாமா இவங்ககிட்ட என்ன பேச்சு? நீ வா நம்ம ஊருக்கு கிளம்பலாம்” என்றாள் சவீதா.
“ஏய் நீ எனக்கு பிறந்தவளா?” என்று மகளிடம் பாய,
“அத உன் பொஞ்சாதிகிட்ட கேளு.” என்றாள் இவளும்.
“என்னடி சொன்ன?”
ராஜா சவிதவை அறைய கை ஓங்க, அவன் கரங்களை தடுத்த சவிதா, “யோவ்! நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா? உன்னை எல்லாம் என் அப்பன் சொல்லிக்கவே எனக்கு கேவலமா இருக்கு. நீ ஜாதி ஜாதின்னு சொல்லுறியே, நீ உன் அப்பனுக்கு பிறந்தியான்னு உனக்கு தெரியுமா? வந்துட்டான் எவனோ கண்டுபிடித்த ஜாதி, மதம்னு பேசிகிட்டு இங்க பாரு எப்போ உன் பொஞ்சாதியும், இதோ இந்த தனசேகரன் பொஞ்சாதியும் சேர்ந்து இந்தப் பொண்ணை உயிரோடு சாகடிக்க பத்தாங்களோ, அப்பவே நான் உங்க மகள் இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன். நாங்க இப்போ சென்னைக்கு போறோம். அங்க போய் சட்டப்படி உங்களுக்கு என்ன பண்ணனமோ அதை பண்ணுவோம் உங்களை கம்பி எண்ண வைக்காம நான் ஓயமாட்டேன்” என்றாள்.
“ஏய் சவிதா உனக்கும், கதிருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க தானே, நாங்க இத எல்லாம் பண்ணோம்.”
“லூசுங்களா. எனக்கு போன வருஷமே கல்யாணம் ஆகிடுத்து என் ஹஸ்பண்ட் பெயர் பீட்டர் ஜான்” என்றாள் நக்கலாக.
“என்ன சொல்ற?”
“ஏங்க, சும்மா சொன்னதையே எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. மச்சான் வாடா நம்ம போலாம். முல்லை சிஸ்டர் போலாமா?” என்றான் மணி.
“இரு வரேன். முல்லை என் கூட வா.”
“மச்சான் முல்லையை அழைச்சிகிட்டு எங்கடா போற? இப்போ ஏன்டா ஹாச்பிடலை விட்டு வெளிய வந்திருக்க? ஐயோ என்னடா மரத்தடி அம்மன்கிட்ட வந்துட்ட? ஐயையோ ஏன்டா தாலிக்கயிறு எடுக்குற? என்று கதிர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் மணி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான்.
“டேய்! என் மாமா என்ன உன் கழுத்துல கட்டவா தாலிய எடுக்குது. முல்லை பூ கழுத்தில கட்ட போகுது பாரு” என்றாள் சவிதா.
“இப்படி திடீர் கல்யாணம் நடக்கதான், அங்க அங்க மரத்துக்கு அடியில் அம்மனை வச்சு அவங்க கழுத்துல தாலி கயிறு போடுறாங்க போல. ஹ்ம்... சரி இப்போ இருக்குற பட்ஜெட் பிரச்சனையில் இதுதான் நல்லது. நீ கட்டு மச்சான்.”
“வேணா கதிர்” என்று தடுத்தார் ராஜசேகரன்.
“கதிர் நீ ரொம்ப தப்பு பண்ணுற” என்றார் தனசேகரன்.
“இல்லிங்க. என் மச்சான் தங்கம். கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் தப்பு பண்ண மாட்டான். ஆனா உங்க பொண்ணு சவி தான் மோசம். இப்போ கூட பாருங்க இவ மூணு மாசம்...”
மணி முடிக்கக்கூட இல்லை, ஐயோ என்ன மாசமாவா?” என்று ராஜசேகரன் அலற,
“மச்சான் இந்த ஆளு நெஞ்சை பிடிச்சிக்கிட்டு விழுந்துட்டான். நீ தாலியை கட்டுடா.”
“முல்லை நான் உன்னை காதலிக்கிறேன். உனக்கு இனி எல்லாமே நான் தான். என்னை கட்டிக்கிறியா?”
“என்ன சொல்ற நீ? கல்யாணமா? உனக்கும் எனக்குமா?” கண்கள் விரிய கேட்க,
“ஆமா. என்னை உனக்கு பிடிச்சு இருக்கா?
“ம்...”
“அப்போ நான் உன் கழுத்துல தாலி கட்டவா?”
“இந்த தாலி கட்டினா நீ என்கூடவே இருப்பியா?” எனக் கேட்டாள்.
“இத கட்டலைனாலும் நான் உன்கூட தான்டி இருப்பேன். ஊருக்கு தான் இந்த தாலி எல்லாம். நான் உன்னோட தான் உன்னோடு மட்டும் தான் இருக்கேன். இது மத்தவங்களுக்கு தெரியணும் என்ற அவசியம் கூட இல்ல. ஆனா இந்த நேரம் இந்த கேடுகெட்ட ஜென்மங்கள் எதிரில், நான் உன் கழுத்துல இந்த தாலியை காட்டினா தான், இவனுங்களுக்கு எல்லாம் செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கும். அதான் கேக்குறேன். நீ என்னை கட்டிக்கிறியா?”
“ம் கட்டிக்கிறேன்.”
கதிர் புன்முறுவலுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டவன், அம்மன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து, முல்லையின் கழுத்தில் கட்ட, முல்லை எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் அவன் அருகில் நின்றவள், அந்தத் தருணம் கதிர்வேலனின் வாழ்க்கை துணைவி என்ற ஸ்தானத்தை அடைந்தாள்.
“கல்யாணம் முடிஞ்சுடுது. சூப்பர் எல்லோரும் போயிட்டு வாங்க.” என்றான் மணி.
“அவன் தாலி கட்டிட்டா எல்லாம் முடிஞ்சுடுதா?” தனா கேட்க,
“அவன் எங்க அப்படி சொன்னான். இப்ப தானே கல்யாணம் முடிஞ்சுது. இனிமே தான் எல்லாம் நடக்கும். நீங்க கதிருக்கு மாமா என்பதால எல்லாதையும் உங்க எதிரிலேயேவா செய்ய முடியும்?”
“டேய் தம்பி அவ கழுத்துல இருக்குற கயிரை அறுடா.” ராஜசேகரன் கட்டளையிட,
“கதிர்!” என்று முல்லை பயத்தில் கத்தினாள்.
“டேய் என்னவள் மேல உன் கைபட்டுச்சு, மவனே நீ உசுரோட ஊருக்கு போகமாட்ட சொல்லிட்டேன்.”
“மாமா நீ காருல ஏறு. டேய் மணி நீ ஹாஸ்பிடல் பில் கட்டிட்டு வா” என்றாள் சவீதா.
“இங்க பாருங்க. இப்ப நாங்க போறோம். ஆனா கூடிய சீக்கிரம் சட்டத்துக்கு முன்னால உங்கள நிக்க வச்சு, சட்டப்படி உங்களுக்கு தண்டனை வாங்கி தந்து, உங்களுக்கு பிடிச்சிருக்குற ஜாதிப் பேயை நான் துரத்தல, என் பெயர் கதிர் இல்ல” என்று சவால் விட்டான்.
“மச்சான் உன் பெயர் கதிர் வேலன் தானே?” தன் சந்தேகத்தை மணி கேட்டான்.
“டேய் பணம் கட்டிட்டல்ல. இப்ப மூடிக்கிட்டு போய் வண்டியை எடு.”
அவளை முறைத்த மணி, “ம் போலாம் போலாம்” என்றான்.
“இல்ல நீங்க போகக்கூடாது. போகவும் முடியாது. இந்தாடி உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா எங்க வீட்டு மாப்பிள்ளையை மயக்கிட்ட இல்ல. இரு உன் உசுரை...” என்று ராஜா சொல்லி முடிப்பதற்குள், கதிர் ராஜாவின் கழுத்தை பிடித்தவன், இன்னொரு கையில அருகில் இருந்த ஊர்கார அடியாளின் அருவாளை எடுத்து அவன் கழுத்தில் வைத்து, “இந்த கத்திக்கு ஜாதி, மதம், நல்லது, கெட்டது, கருப்பு வெள்ளைன்னு எதுவும் தெரியாது. இத நீ விசினாலும், நான் விசினாலும் பட்டுன்னு போட்டா பொட்டுன்னு போயிடுவோம். இப்ப சொல்லு உன் கழுத்துல இத இறக்கிடவா?” என்றான் ஆங்காரமாக.
“அடப்பாவி நாங்க உன் தாய் மாமாங்கடா. விடுடா என் அண்ணனை.”
“டேய் கையை எடுடா. இல்ல உன் அண்ணனோட சேர்த்து இலவச இணைப்பா உன்னையும் அனுப்பிடுவேன்.”
“வேணாம் கதிர். நீ பின்னால இதுக்கெல்லாம் ரொம்ப கஷ்ட்டபடுவ.” எச்சரித்தார் ராஜசேகரன்.
“அட ஜாதிப் பேய் பிடித்த ஜடமே. அவன் பின்னாடி படப் போறதை விடு. இப்ப உன் முன்னாடி உன் கழுத்துல இருக்குற கத்திக்கு பதில் சொல்லு?” மணி கோபத்தில் சொல்ல,
“சொல்லுடா? என்ன இறக்கிடவா?”
“கதிரு கதிரு வேணாம். விடு அவரை” என்று தடுத்தாள் முல்லை.
“நீ இரு முல்ல. உன் அப்பாவ சாகடித்து உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கின இவனுங்கள விடச்சொல்லுரியா முல்லை?”
“கதிரு நீ ஏன் இப்படி கோவமா பேசுற? எனக்கு பயமா இருக்கு. நீ வா நம்ம வேற எங்காவது போயிடலாம். வா கதிரு. அந்த கத்தியை கீழ போடு.”
“டேய் மாமா. கத்தியை கீழ போட்டுட்டு வா போலாம்” என்றாள் சவீதாவும்.
கதிர் கோவமாக அருவாளை கீழே போட்டவன், முல்லையின் கரங்களை பிடித்து, அவளை காரை நோக்கி கூட்டி வர, முல்லை சிறு பிள்ளையை போல அவன் விரல்களை பற்றி கொண்டவள், அவன் நிழல் போல், இல்லை அவன் உடலுக்குள் உயிராக கலந்து இருக்க, மணி, சவிதா, கதிர் ஆகிய மூவரும் முல்லையை தங்களுடன் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
“டேய் மணி சுலோவா போற ரேஸா நடத்துற. வேகமா போடா” என்றாள் சவீதா.
“அடியே இதுக்கு மேல வேகமானா, இறங்கி எவனோடயாவது ஓடி போடி.”
“போடா லூசு.”
“முல்லை இங்க பாரு” என்ற கதிரின் அழைப்பில், “ம்...” எனக் கேட்க,
“என்னடி குளிருதா ஏன் உடம்பெல்லாம் நடுங்குது?”
“எனக்கு பயமா இருக்கு. நம்ம இப்ப எங்க போறோம்?”
“நம்ம சென்னைக்கு போறோம்.”
“ஏன்?”
அங்க தான் நம்ம வீடு இருக்கு.”
“நம்ம அங்க போனா நம்ம கிராமத்துல இருந்து யாரும் என்னை அங்க வந்து அடிக்க மாட்டாங்க இல்ல?”
“முல்ல இனிமே நீ பயப்படாத. நான் உன்கூட தான் இருக்கேன்.”