• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

காதம்பரி 19 (இறுதி பாகம்)

Member
Joined
Nov 8, 2025
Messages
51
காதம்பரியின் உடலில் இருந்து வெளியேறிய ஆன்மா, தனது கணவன் மடிமீது, தன்னுடைய பிணத்தை கிடத்தி அழுவதை பார்த்து, உருகிபோய் நின்றாள்.

காதம்பரியின் ஆன்மாவை கவனித்த பிரம்மா யட்சணி, "காதம்பரி ஏன் இப்படி இளகி கலங்குகிறாயோ?" என்று கேட்க.

காதம்பரியின் ஆத்மா, திகைத்துவிட்டது. "ஆத்மஸ்வரூபத்தில் இருக்கும் நம்மை யார் அடையாளம் கண்டது?" என்று சுற்றி முற்றி பார்த்தது.

காதம்பரி எதிர்பாரா வண்ணம், அவள் எதிரில் தோன்றி நின்றாள் பிரம்ம யச்சினி.

காதம்பரி, "தாங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லையே?"

பிரம்மய யட்சனி, "நான் பிரம்ம யச்சனி, என்னை கிராமப்புறங்களில் பாதாள சண்டி என்று. அழைத்து வழிபாடு செய்வார்கள்."

காதம்பரி, "வணங்குகிறேன் தாயே!"

பிரம்ம யச்சனி, "உன்னை கொண்டவனே கொன்று விட்டான் அப்போதும் சீர்மை குறையாமல், கோபம் இல்லாமல், எனக்கு வணக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறாயே!"

"என் கணவர் நல்லவர். அவர் மனது பேதலித்து அப்படி செய்து விட்டார்".

"உன் கணவனுக்கு இந்த நிலை நீடித்தால், உன்னை கொன்றது போலவே உன் குழந்தையை கொன்று விடுவான்."

பதட்டத்தோடு காதம்பரி, "என்ன தாயே சொல்கிறீர்கள். இதை தடுப்பதற்கு வழி இல்லையா?"

"நிச்சயம் உண்டு. நீ உன்னுடைய தாய், தகப்பனிடம் நிலைமையை விளக்கிச் சொல்லி, குழந்தை பத்திரப்படுத்திக் கொள். இன்னொரு யோசனையும் உள்ளது. உன்னுடைய கணவனை கொலை செய்தால் யாருக்கும் ஆபத்து இல்லை."

காதம்பரி யோசனையோடு, சிறிது நேரம் அமைதியாக நின்றாள். "இது என்னால் எப்படி சாத்தியமாகும் தாயே!"

"நான் உனக்கு சிறிது சக்தி கொடுக்கிறேன். அந்த சக்தியினால் நீ உன்னுடைய பெற்றோரிடம் பேசுவது, அவர்களின் காதில் கேட்கும். பெற்றோர்களை சந்தித்து, உன் கணவனை கொலை செய்ய அவர்களுக்கு ஆணையிட்டு விடு." என்று சொன்ன யட்சிணி உள்ளூர மகிழ்ந்தாள்.

"மிக்க நன்றி! தாயே. எனக்கு உடனடியாக சக்தியைக் கொடுங்கள். நான் என் குழந்தையை காப்பாற்றி ஆக வேண்டும்." என்று காதம்பரி கேட்க சக்தியை அருளினாள் யட்சனி.

உடனடியாக அங்கிருந்து புறப்பட்ட காதம்பரி, காற்றில் மிதந்து சென்று. கதம்பவனத்தை அடைந்தாள்.

அங்கே... வருணனை, குழந்தையோடு சேர்த்து கட்டி அணைத்துக் கொண்டு வள்ளி அழுது கொண்டிருந்தார். கந்தவேலர் தனிமையில் கதறி துடித்துக் கொண்டிருந்தார். அரண்மனை வாசிகள் அனைவரும் அழுது வடிந்த முகத்தோடு அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். கதம்பவன தேசம் முழுவதும் மக்கள் ஆங்காங்கே காதம்பரியின் கொலையை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

முரசு அறிவிப்பவர் வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் போருக்கு வர வேண்டும் என்றும். தேசத்து படைகளை கொண்டு வகுள ஆரண்ய தேசத்தை வேரறுக்க வேண்டும் என்றும் அறிவிப்பு செய்து கொண்டு இருந்தார்கள்.

காதம்பரி, கந்தவேலர் முன்பு தோன்றி, "அப்பா" என்று அழைக்க கந்தவேலர் கண்களுக்கு காதம்பரி தெரியாததால் சுற்றிப் பார்த்தார்.

காதம்பரி, "அப்பா... என்னை பார்க்க முடியாது. ஆனால் என்னுடைய குரலை கேட்க முடியும். நீங்கள் படை திரட்டி கொண்டு சென்று, போராடி, தேசத்தின் மக்களை பலி கொடுப்பதை விட்டு விட்டு. நமது பகையை நாமே தீர்த்துக் கொள்வோம். நேரில் சென்று அவருக்கு போதை தரும் பானத்தை கொடுத்து. நிலை தடுமாறிய போது சிரசை துண்டித்து விடுங்கள்." என்று யோசனை சொன்னாள்.

கந்தவேலர், "நீ சொல்வது சரிதான் மகளே. நானே அவனது கதையை முடிக்கிறேன். இங்கே போருக்கான ஏற்பாடுகள் நடக்கட்டும். நான் அவனைக் கொலை செய்கிறேன். விட்டு. போரை நிறுத்திக் கொள்கிறேன் என்று புறப்பட்டார்.

காதம்பரி, "நானும் உங்களோடு வருகிறேன்." என்று ஆகாய மார்க்கமாக புறப்பட்டார்.

கந்தவேலர், தனது குதிரையில் பயணித்துக் கொண்டிருக்க காதம்பரி அவரது தலைக்கு மேல் பறந்து வந்து கொண்டிருந்தாள். மந்தி மகா முனிவரது ஆசிரமத்தை கடக்கும்போது முனிவரது ஆன்மா, காதம்பரியை தடுத்து நிறுத்தியது.

"வணக்கம் சுவாமி. என்னால் நீங்களும் இப்படி ஆத்ம சொரூபம் பெற்று விட்டீர்கள். அதற்கு இன்றோடு தீர்வு கிடைக்கப் போகிறது"

முனிவர், "காதம்பரி உன் கணவன் தன்னுடைய சொந்த புத்தியால் இதை செய்யவில்லை. அது உனக்கும் தெரிகிறது. தற்போது உன்னை எவர் தூண்டி விட்டாரோ' அவர் அவனையும் தூண்டி கொலை செய்ய வைத்தது."

" இதனால் அவருக்கு என்ன லாபம் சுவாமி,

"அதை தெரிந்துகொள்ள என்னோடு வா..." என்று முனிவர் கதம்பரியை அழைத்துக் கொண்டு சென்றார்.

அரண்மனையில் அழுது கொண்டிருந்த வல்லாளனை, ராஜகுரு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி. பிரசன்னம் பார்த்து விட்டு வரலாம் என்று அழைத்துக் கொண்டு சென்றார்.

ராஜகுரு உடன் வந்த கமலி காதம்பரியின் பிணத்தை சிறிது நேரம் கூட வைத்திருக்க கூடாது தனது மகன் இவளை பார்த்து மேலும் ஆத்திரம் கொள்வான் எண்ணியவர் அரண்மனை வாசிகளை அழைத்து உடனடியாக அப்புறப்படுத்தும் படி ஏற்பாடு செய்தார்.

பிரசன்னம் பார்க்க சென்ற இடத்தில் காதம்பரியும், முனிவரும் ஆத்ம ரூபமாக நின்று கொண்டிருந்தனர்.

அந்தணர் பிரசன்னம் பார்க்க அமர்ந்தார். வல்லாளன் வந்திருந்த லக்னத்தை கணித்தவர், பாடலாக சொல்ல ஆரம்பித்தார். "நீங்கள் உங்கள் மனைவியை சந்தேகித்து கொலை செய்து விட்டீர்கள். ஆனால் உண்மையில் உங்கள் மனைவி உத்தமி. அவர்கள் சொன்னபடி அவர் இப்பிறவியில் குரங்காகவே பிறந்தார். அதனால் குழந்தையும் அப்படியே பிறந்து விட்டது. அவர் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் சத்தியம்."

வல்லாளன், "இதற்கு என்ன காரணம்?"

அந்தணர், "உங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற புதையல், எச்சினிக்கு சொந்தமானது. அவளது பொன்னை அபகரித்ததால் நீங்கள் இப்படி நடந்து கொள்கிறீர்கள்."

"இதற்கு விடிவுகாலம் எப்போது?"

"தற்போது பொன்னை பத்திரப்படுத்தி வைப்பவர்கள் அழிந்தால், யட்சிணி அதோடு விட்டுவிடுவாள். பொன் இருக்கும் இடம் அவருக்கு தெரியும். அவர் மாண்டால் மட்டுமே. இதற்கு தீர்வு கிடைக்கும்."

ராஜகுரு, "அதற்காக பெற்ற தாயை கொலை செய்ய முடியுமா?"

"அது தானாகவே நிறைவேறும். நீங்கள் புறப்படுங்கள்" என்று அனுப்பி வைத்தார்.

ஆக்ரோஷமாக வந்த கந்தவேலர், காதம்பரியை கொலை செய்வதற்கான தடயத்தை எல்லாம் அழித்துக் கொண்டிருந்த கமலியை பார்த்ததும் மேலும் ஆத்திரப்பட்டார்.

அதனால் கமலி, "இவரை கைது செய்து சிறையில் அடையுங்கள்." என்று உத்தரவிட்டார்.

காவலர்கள் நெருங்குவதற்கு முன் தன் கையில் கொண்டுவந்த வாளை எடுத்து கமலியின் தலையை துண்டித்தார். காவலர்கள் கந்தவேலரை இழுத்து சிறையில் அடைத்தார்கள். கமலி இறந்ததும் யட்சிணி பொன்னை பற்றி தெரிந்தவர்கள் அழிந்து விட்டார்கள் என்ற எண்ணத்தோடு பொன்னுக்குள் சென்று ஐக்கியமானாள். அதனால் காதம்பரியின் சக்தி அவளை விட்டு போய்விட்டது

உண்மையை புரிந்து கொண்ட வல்லாளன், தான் கொலை செய்தது தன்னுடைய மனைவியை. அதற்கு பரிகாரமாக தான், தன்னை பலி கொடுத்தால் தான் சரி வரும் என்று மனதிற்கு தீர்மானித்தார்.

அரண்மனைக்கு வந்த வல்லாளன், அங்கு நடந்த சம்பவங்களை பற்றி தெரிந்து கொண்டு. கமலிக்கு இறுதி காரியங்கள் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு. சிறையில் இருக்கும் கந்தவேலரை விடுதலை செய்துவிட்டு. அவரிடம் தான் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு. தனது நாட்டை தனது வாரிசுக்கு கொடுக்க சொல்லிவிட்டு. தன்னைத்தானே மாய்த்துக்கொண்டான். வல்லாளனின் ஆன்மா காதம்பரியின் ஆத்மாவோடு ஐக்கியம் ஆனது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top