• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
128
அத்தியாயம் - 8

மாயனின் பதிலில் வர்மன் மேலும் குழம்பிப் போனான்.

"என்ன மாயா சொல்லுற காதலா!? நானா!? அதுவும் நம்ம மகதியையா!?" என்று புரியாமல் கேட்டான் வர்மன்.

"ஆமா வர்மா! நீ தான் காரணம். நீ மட்டும் இல்ல நானும் தான் காரணம்" என்று மாயன் சொல்ல,"அடேய்... என்னடா உளறுற!"என்று வர்மன் குழப்பத்துடன் கேட்டான்.

தன் மகனின் குழப்பத்தைக் கண்டு ராஜனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியாமல் போனது.

"வர்மா... மாயன் சொல்லுறத பொறுமையா கேளு, எனக்குமே இப்போ நடக்குறதை எல்லாம் பார்த்தா மகதியே இந்த வீட்டுக்கு மருமகளாக வரணும்னு ஆசையா இருக்கு" என்ற தன் தந்தையின் வார்த்தையில் உள்ள அர்த்தம் புரியாமல் மேலும் மேலும் வர்மன் குழம்பி போனான்.

"டேய் மாயா...இங்க என்ன டா நடக்குது! நீ பேசுறதே எனக்குப் புரியல! இதுல அப்பா வேற என்னடா மகதியை மருமகள் அது இதுன்னு பேசுறாரு" என்று வர்மன் சொல்லும் போதே அருணை தூங்க வைத்த மகதி சரியாக இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து வந்தாள்.

மகதியை பார்த்ததும் அப்படியே இவர்கள் பேச்சைத் திசை மாற்றினான் மாயன்.

"என்ன பாப்பா! அருண் தூங்கிட்டானா"என மாயன் கேக்க,"தூங்கிட்டான் அண்ணா. தம்பிக்கு மருந்து மாத்திரை எல்லாம் எப்போ தரணும்?"என்ற மகதியின் பார்வை வர்மன் மீது கோவமாகப் படிந்தது.

"அதெல்லாம் நான் கொடுத்துக்குறேன், உனக்கு ஏன் சிர்மம்!" என்று வர்மன் கேக்க,

"அண்ணா... குழந்தையைப் பார்த்துக்க தான் நான் மூணு மாசம் இங்க தங்கிக்கொள்ள முடிவு பண்ணி இருக்கேன், அதனால அருணை பற்றி இனி இவருக்கு எந்தக் கவலையும் வேணான்னு சொல்லுங்க"என்ற மகதி, மேசைமேல் இருந்த பையை எடுத்துக்கொண்டு மீண்டும் வர்மனின் அறைக்குள் நுழைந்தாள்.

மகதி தன்னை எதிர்த்துப் பேசுவதை கூடப் பெரிதாக எடுத்துகொள்ளாத வர்மனுக்கு அவளின் அருவருப்பான பார்வைக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் மண்டை காய்ந்து போனான்.

சிறுவன் அருணுக்காக மட்டுமே வர்மனின் இல்லத்தில் தங்க சம்மதம் தெரிவித்த மகதிக்கு வர்மன் மீது அவள் கொண்ட காதலை இனியும் தொடர விருப்பம் இல்லை என்றாலும், அவனை மறக்க முடியாமல் வர்மன் மீது வெறுப்பை காட்டியப்படி தான் இருந்தாள்.

மகதி அங்கிருந்து சென்றதும், வர்மன் கோவமாக மாயனின் சட்டை காலரை பற்றியவன்,"இங்க பாருடா! ஒழுங்கு மரியாதையா உன் தங்கச்சி என் மேல கோவப்பட என்ன காரணமுன்னு சொல்லிடு" என்று கர்ஜித்தவனை பார்த்து ராஜன் ஒரு நொடி பயந்தே போனார்.

வர்மனின் சந்தோசம், அழுகை, சிரிப்பு என்று தன் நண்பனின் பல பரிமாணங்களைப் பார்த்த மாயனுக்கு வர்மனின் செய்கையைப் பார்த்துச் சிரிப்பு தான் வந்தது.

"டேய்... நான் கேட்டுகிட்டே இருக்கேன், நீ என்னடா சிரிக்கிற" என்ற வர்மன் மாயனை அடிக்கக் கை ஓங்கியவனின் கரங்களில் தன் கையில் இருந்த சின்னத் துண்டு சீட்டைக் கொடுத்தான் மாயன்.

மகதியின் வருகைக்குப் பின்னே மாயனின் நடவடிக்கையில் எழுந்த மாற்றத்தில் வர்மனுக்கு முன்னதாகவே கோவம் இருந்த நிலையில், இப்போது வர்மன் கேக்கும் கேள்விக்குப் பதிலைச் சொல்லாமல் அவன் கையில் காகிதத்தைக் கொடுத்ததும் கோவத்துடன் வர்மன் அந்தத் தாளைப் பிரித்துப் பார்த்தான்.

வெள்ளை காகிதத்தில் 'என்றும் அன்புடன் உங்கள் அருள்மொழி வர்மன்' என்ற கையப்பத்தை பார்த்து முகம் மாறினான் வர்மன்.

"மாயா! இந்தக் கையெழுத்து!" என்ற வர்மனின் கேள்விக்கு, "உன்னோட கையெழுத்து தான்" என்ற மாயனின் இதழ்களில் புன்னகை ஒட்டி இருந்தது.

"அது எனக்குத் தெரியும் டா, ஆனா இந்த மாதிரி கையெழுத்து எல்லாம் இப்போ நான் போடுறது இல்லையே" என்ற வர்மனை பார்த்து, "பத்து வருஷத்துக்கு முன்னதாக உன் கையெழுத்து இது தானே வர்மா" என்று சொன்னார் ராஜன்.

"ஐயோ அப்பா...நீங்க ரெண்டு பேரும் என்னை ரொம்ப குழப்பி விடுறிங்க, சரி இது என் கையெழுத்து தான், ஆனா இதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்மந்தம்?" என்று வர்மன் கேக்க,

"உன் கேள்விக்கு உண்டான பதிலே இந்தக் கையெழுத்துல இருந்து தான் வர்மா ஆரம்பிச்சது" என்றான் மாயன்.

இந்த நொடிவரை மாயனின் பேச்சில் உள்ள மர்மத்தைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்த வர்மனை கைப்பிடித்துத் தன் காருக்கு அழைத்துச் சென்றான் மாயன்.

"டேய் என்னடா! என்னை எங்க அழைச்சிட்டு போற?" என்ற வர்மனின் கேள்வி முடியும் முன்னே, டேஷ் போர்டிலிருந்து மகதியின் கைக்குறிப்பு புத்தகத்தை எடுத்து வர்மனின் கையில் திணித்த மாயனை கேள்வியாகப் பார்த்த வர்மன், "என்ன டைரி இது?" என்று வினாவினான்.

"உன் கேள்விக்கு உண்டான எல்லா பதிலும் இந்த டைரில தான் இருக்கு, போ! போய்க் காருக்குள்ள உக்காந்து படிச்சு பாரு" என்ற மாயன் தன் நண்பன் கையில் டைரியை கொடுத்தபின்னே வீட்டுக்குள் நுழைந்தான்.

காரின் உள்ளே அமர்ந்த வர்மன்,"என்ன டைரி இது!?" என்று எண்ணியவாரே கைக்குறிப்பு புத்தகத்தின் முதல் பக்கத்தைத் திருப்பியவனுக்கு வர்மனின் முகம் ஓவியமாக அவன் கண்ணில் தெண்பட்டது.

காகிதத்தில் சிரித்த வண்ணமாக இடம் பெற்று இருந்த தன் முகத்தை வர்மன் வருடிப் பார்த்தவனுக்கு 'மன்னவனைத் தேடும் மகரந்தம்' என்ற தலைப்பில் விழிகள் ஆச்சிரியத்தில் மிளிர்ந்தது.

'தினமும் பார்க்க முடியாத காதல் தான் நம் காதல்,
ஆனாலும் இந்த ஓவிய சிரிப்போடு என் உயிர் பிணைந்திருக்கிறது.
எப்போ வர்மா நாம் சந்திப்போம்!?' என்ற மகதியின் எழுத்துக்கள் வர்மனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதே குழப்பத்துடன் வர்மன் அடுத்த பக்கத்தைத் திருப்பியவனுக்கு திடீரென அவன் முகத்தில் பதற்றமும், வியப்பும் தெரிந்தன.

வர்மனின் புகைப்படம் அருகே
'என் மன்னவன்' என்று மகதி எழுதி இருந்ததை வாசித்தவனுக்கு,
"மகதி ஏன் என் பெயரை எழுதணும்?" என்ற கேள்வி அவன் உள்ளத்தில் மிதந்தது.

கேள்விகளைச் சுமந்த வண்ணமாகவே மேலும் அந்தப் புத்தகத்தைப் புரட்டியவனுக்கு இதுநாள் வரை வர்மன் செய்தி தாள்களில் பேட்டி கொடுத்த புகைப்படங்கள்,
சினிமா துறையில் வர்மனுக்கு கிடைத்த அங்கீகார விருதுகள் அடங்கிய புகைப்படம், ஏன்! கடந்த பத்து வருடமாக வர்மனின் பிறந்தநாளான்று அவனுக்காக மகதி வாங்கி வைத்த இதய வடிவை சுமந்து இருக்கும் வாழ்த்து அட்டைகள் என்று பல வகையான விஷயங்களைப் பார்த்து வர்மனுக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

"வர்மா... இன்னைக்கு எங்க ஸ்கூல்ல ஒரு பையன் என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னான், ஆனா நான் என் வர்மனுக்காகக் காத்து இருக்கேன்னு சொல்லிட்டேன்" என்று மகதி அவள் கல்லூரி காலகட்டத்தில் எழுதி இருந்த எழுத்தை வாசித்தான் வர்மன்.

"வர்மா...இன்னைக்கு உங்க பிறந்தநாள்! நான் உங்களுக்காகக் கோவிலுக்குப் போய் உங்க பேர்ல அர்ச்சனை பண்ணேன், ஆனா பாருங்க என்னால ஒரு போன் கூடப் பண்ணி உங்களுக்கு வாழ்த்து சொல்ல முடியல" என்ற மகதியின் கையெழுத்தில் அவள் மனதில் உள்ள ஏக்கத்தை எழுத்தின் வடிவே புரிந்துகொண்டான் வர்மன்.

"வர்மா... இன்னைக்கு நீங்க நடன இயக்குனரா பணியாற்றிய படத்தைப் பிரஸ்ட் ஷோவே போய்ப் பார்த்தேன்,

உண்மையைச் சொல்லனும்னா இப்போ எல்லாம் சில பேரோட நடனமே ஆபாச படம் பார்க்குறது போலத் தான் இருக்கு,

குழந்தைங்க பக்கத்துல உக்காந்து ஒரு பாட்டைக் கூடப் பார்க்க முடியல,

ஆனா என் வர்மன் நீங்க நடனம் அமைக்கிற எல்லா பாடலிலும் பெண்களை ரொம்ப அழகான நடனத்தை ஆட வைக்கிறிங்க,

ரொம்ப கண்ணியமாவே இருக்கு உங்க டான்ஸ் ஸ்டெப்ஸ் எல்லாம்" என்று ஒவ்வொன்றையும் ஆழமாகக் கவனித்து ஆத்மார்த்தமாகப் பாராட்டி எழுதி இருந்தாள் மகதி.

வர்மன் தன்னை மறந்து மகதியின் கைக்குறிப்பு புத்தகத்தை வாசித்துக் கொண்டு இருந்தவனுக்கு மகதியின் மனதில் எப்படி வர்மன் மீது காதல் எழுந்தது என்ற கேள்வியை மறந்து! மகதி எப்படியெல்லாம் தன்னை நேசித்து இருக்கிறாள் என்ற ஆச்சிரியம் தான் எழுந்தது.

தைத்திருநாள், தீப திருநாள், கிறிஸ்துமஸ், ரம்ஜான், காதலர் தினம், நண்பர்கள் தினம், ஏன் அன்னையர் தினம் தந்தையர் தினத்தின்போது கூடக் கடந்த பத்து வருடமாகத் தேதியையும் வருடத்தையும் குறிப்பிட்டு எழுத்தின் வடிவிலேயே வர்மனுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தாள் மகதி.

"வர்மா! உங்களைப் பற்றி டிவில ரூமர்ஸ் வந்துகிட்டே இருக்கு, நான் எதையும் நம்பவே இல்லை, ஏன்னா என் வர்மன் எனக்கு மட்டும் தான்" என்று மகதி வலைத்தளங்களில் வந்த செய்திகளைப் பற்றியும் எழுதி இருந்தாள்.

மகதியின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் அவள் காதலை வர்மனின் கண் முன்னே க்கொண்டு வந்து நிறுத்தியது.

தன்னை மீறி வர்மன் மகதியின் எழுத்துக்களை வாசித்துப் பெருமிதமாகச் சிரித்துக்கொண்டவனின் இதழ்களில் புன்னகை வாடாத மலராகவே மலர்ந்து இருந்தது.

குறுநகையை உதட்டில் ஏந்திய வண்ணமாகவே அடுத்த பக்கத்தைத் திருப்பியவனுக்கு,"வர்மா... இன்னைக்கு மாரியம்மா கோவில்ல உங்களுக்காகத் தீ மிதித்தேன் வர்மா,
கண்டிப்பா உங்களுக்குத் தான் இந்த முறை சிறந்த நடன இயக்குனருக்காக விருது கிடைக்கும்" என்று அவள் எழுதிய எழுத்துக்களை வாசித்த வர்மனின் விழிகளில் ஒரு துளி கண்ணீரும் கசிந்தது.

 
Joined
Feb 6, 2025
Messages
128

காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள்,
ஆனால் மகதி தன் மீது கொண்ட காதலுக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தனக்குள் புலம்பிய வர்மனுக்கு அவளின் கைக்குறிப்பு புத்தகத்தில் வர்மனை நினைத்து மகதி எழுதிய கடிதங்கள், வரைந்த ஓவியங்கள், அவள் சேகரித்த செய்தி துணுக்குகள் என்று அனைத்தையும் கண்ணார கண்டவன் மனதில் இதெல்லாம் எப்படி?ஏன்!? என்ற கேள்வி எழுந்தது.

காரின் இருக்கையில் அமர்ந்து இருந்த வர்மன் முதன் முதலில் மகதியை சந்தித்த நிகழ்வை இந்த நொடி எண்ணி பார்த்தான்.

வர்மனின் தந்தை வர்மராஜன் பிரபல திரை பட நடன இயக்குனராக இருந்தவர், சில தனிப்பட்ட காரணத்தால் அவர் தன் துறையிலிருந்து விலகியதும், வர்மன் அந்தத் துறையில் கொடிக்கட்டி பறக்க வேண்டும் என்று எண்ணி உலகத்தில் உள்ள எல்லா வகை நடனங்களையும் முறைப்படி பயில ஆசை கொண்டான்.

வர்மனின் ஆசைப்படியே கிட்டத்தட்ட நிறைய நாடுகளுக்குச் சென்று நடனத்தைக் கற்றும் கொண்டான்.

இதனுடன் 19ஆம் நூற்றாண்டுவரை
தமிழர்களின் பாரம்பரியத் திருநடனமாக இருந்த சதிர் நடனத்தை முறைப்படி பயில ஆசைக்கொண்டு, அதற்காகத் தன் தந்தையின் ஆலோசனையுடன் மகதியின் தந்தை மகாலிங்கத்தின் ஊரில் தங்கி தன் நடனத்தைப் பயில முடிவும் செய்தான் வர்மன்.

முதல் முதலில் மகதியின் வீட்டிற்கு பத்து வருடத்திற்கு முன்பு சென்ற வர்மனின் முன்னே இரட்டை ஜடையில் மாயனின் சட்டையையும் குட்டை பாவாடையும் அணிந்துக்கொண்டு சுட்டி பெண்ணாக அவள் வீட்டில் வளம் வந்தவள் வர்மனை பார்த்து"யார் நீங்க!?" என்று கேட்டாள்.

"மகதி மா! இவரு தான் வர்மன் தம்பி, என்ன மறந்துட்டியா, நம்ம ராஜன் ஐயாவோட பையன்" என்ற மகதியின் அப்பா அவர் கையில் இருந்த வர்மனின் பெட்டி படுக்கையை எடுத்து வந்து அவனுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் வைத்தார்.

வர்மனை கேள்வியுடன் மகதி பார்த்துக் கொண்டிருந்த தருணம், மததியின் அம்மா வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்கும் விதமாகக் கையில் தண்ணீர் சொம்புடன் வந்தவர்,"வாங்க தம்பி எப்படி இருக்கீங்க? " என்று வர்மனை நலம் விசாரித்தார்.

"நான் நல்லா இருக்கேன் அத்தை நீங்க நல்லா இருக்கீங்களா?" என்று கேட்ட வர்மனின் தோளில் உரிமையாகத் தட்டினான் மாயன்.

சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்த வர்மனும் மாயனும் நீண்ட நேரம் சகஜமாகப் பேசிக்கொண்டு இருக்க, "அண்ணா..." என்று பொறுமை இழந்தவளாக மாயனை அழைத்தாள் மகதி.

"என்ன பாப்பா?" என்று தன் தங்கையின் அழைப்புக்கு மாயன் பதில் தர,"நீங்க என்ன அண்ணா என்கிட்ட பேசாம இவன்கிட்ட பேசுறீங்க?" என்று கோவமாகக் கேட்டாள் மகதி.

"மகதி... வர்மன் தம்பியை மரியாதை இல்லாம பேசக் கூடாது" என்று மகாலிங்கம் கோபத்துடன் சொன்னதும்,

"அப்போ நான் இவனைப் பெயர் சொல்லி மட்டும் கூப்பிடவா?" என்று கேட்டாள் மகதி.

"நீ என்னையும் அண்ணானே கூப்பிடு" என்று வர்மன் சொல்ல,

"ஒரே சூரியன், ஒரே சந்திரன் மாதிரி எனக்கு ஒரே அண்ணன் மாயன் தான்" என்றாள் மகதி.

"ஏய் வாலு, எப்போவும் போல ரொம்ப வாய் பேசாம போய்ப் படி" என்ற மகதியின் அம்மா தன் கையில் இருந்த பலகார தட்டை வர்மனிடம் கொடுத்தார்.

"தேங்க்ஸ் அத்தை!" என்ற வர்மன் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டவன்,
"பாப்பா நீயும் எடுத்துக்கோ" என்று சொன்னவனை ஏகத்துக்கும் முறைத்தபடி மகதி தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

வர்மன் எப்போது தன் வீட்டுக்கு வந்தானோ அப்போதில் இருந்தே மாயன் தன்னிடம் பேசுவதில்லை என்று நினைத்த மகதிக்கு வர்மன் மீது அர்த்தமே இல்லாமல் கோவம் எழுந்தது.

மகதியின் வீட்டில் இருந்த வர்மன், தன் நண்பன் மாயனுடம் கிட்டத்தட்ட
இரண்டு மணி நேரம் காரில் சென்று பாரம்பரிய நடனத்தைக் கற்றுக்கொண்டு வருபவனுக்கு ஓட்டுனராக மகாலிங்கம் தான் சென்று இருந்தார்.

காலை ஐந்து மணி அளவில் வர்மனும் மாயனும் மகாலிங்கத்துடன் வீட்டிலிருந்து
கிளம்பினால் இரவு நேரம் மணி ஒன்பதை கடந்து தான் வீடு வந்து சேர்ந்தார்கள்.

வாரத்தில் கிட்டத்தட்ட ஆறு நாட்களும் தன் அப்பா மற்றும் மாயனை காணாமல் பேசாமல் தவித்த மகதி ஏக்கத்தால் மெலிந்தே போனாள்.

காலை உணவில் தொடங்கி, இரவுவரை மகதி சாப்பாட்டை தவிர்த்தவளுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவளை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

மகதியின் நிலையைக் கேள்விப்பட்டு மகாலிங்கத்துடன் மாயனும், வர்மனும் மருத்துவ மனைக்குச் சென்று பார்க்க, அங்கே மகதி சோர்வாகச் சிகிச்சை அறையில் படுத்து இருந்தாள்.

"மகதி என்னமா ஆச்சு?
பட்டுக் குட்டி என்னடா ஆச்சு?" என்று மகாலிங்கமும் மாயனும் மாறி மாறி மகதியை கொஞ்சி தீர்த்தார்கள்.

"நான் உங்கனால தான் ஹாஸ்பிடல்ல வந்து படுத்து இருக்கேன், போங்க நீங்க யாரும் என்கிட்ட பேசாதீங்க" என்று கோவமாகச் சொன்னாள் மகதி.

"என்னாச்சு!? ஏன் பாப்பா நீ கோவப்படுற" என்று வர்மன் புரியாமல் கேட்டதும்,

"நீ பேசாத, நீ இவங்கள் வெளிய அழைச்சிட்டு போறதால தான் என் அண்ணனும் அப்பாவும் என்கூட பேசுறதே இல்லை" என்று தேம்பி அழுதாள் மகதி.

"இதுக்கெல்லாம் யாராவது அழுவாங்களா!சரி பேசாம நீயும் இனி எங்கக்கூட வா!அப்போ தான் உன் அண்ணனோடும் அப்பாவோடும் நேரம் செலவழிக்க முடியும் "என்ற வர்மனின் வார்த்தையைக் கேட்டு மகதியின் முகம் பிரகாசமாக மாறியது.

மறுநாளிலிருந்து முழு ஆண்டு பரீட்சை விடுமுறை என்பதால் மகதியும் மாயன், வர்மனுடன் தன் தந்தையின் காரில் வர்மன் நடனம் பயிலும் ஊரிற்கு சென்றாள்.

வழியெல்லாம் வர்மனுடன் சகஜமாகப் பேசிப் பழகிய மகதிக்கு வர்மனின் சுபாவம் வெகுவாகக் கவர்ந்தது.

விடுமுறை நாட்களில் காலை 10 மணிவரை உறங்கும் மகதிக்கு வர்மனின் அறிமுகத்தால் காலையில் எழுந்து தியானம் செய்வது, உடற்பயிற்சி செய்வது என்று மகதியும் தன்னை சிறுக சிறுக மற்றிக் கொண்டவளின் செயலைக் கண்டு மகாலிங்கத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

வர்மனின் கைபேசியில் தொடர்புகொள்ளும் அவனின் தந்தை ராஜன் உரிமையுடன் மகதியை மருமகளே என்று அழைத்துத் தான் பேசினார்.

மாயன், மகதி, வர்மன் என்று மூவரும் நட்புடனே பழகிய தருணத்தில் மகதிக்கு வர்மன் மீது நட்பைத் தாண்டி எந்த ஒரு உணர்வும் ஏற்பட வில்லை.

விடிந்தால் வர்மன் தன் நடன பயிற்சியை முடித்துக்கொண்டு மும்பை கிளம்ப தயாராக இருந்தான்.

அன்றைய தினம் மகதியின் பெற்றோர்கள் மகதியை தன்னுடன் சொந்தக்காரர்களின் திருமண விழாவிற்கு வரும்ப்படி அழைத்தார்கள்.

"நான் வரல அப்பா! நான் மாயன் அண்ணன் வர்மனோட வீட்டுலயே இருக்குறேன்" என்று மகதி சொன்னதும் அவளின் பெற்றோர்களும் மாயனின் அம்மா கீதாவும் மட்டுமே திருமண விழாவிற்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு கிளம்பினார்கள்.

காலையிலிருந்து மதியம் வரை மாயன், வர்மன், மகதி என்று மூவரும் டிவியில் சினிமா பார்ப்பது, சீட்டு, கேரம் போர்ட், செஸ் என்று அணைத்து விளையாட்டுகளும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.

மதிய உணவிற்கு பிறகு உண்ட கலைப்பில் மகதி அவள் அறைக்குச் சென்று உறங்கினாள்.

வர்மனும் மாயனும் இயல்பாகப் பேசிக்கொண்டு இருக்க,
"வர்மா... பாப்பா ரூம்ல தூங்கிகிட்டு இருக்காள்! நீ அவளைப் பார்த்துக்கோ, நான் பத்தே நிமிஷத்துல திரும்ப வந்துடறேன்"என்ற மாயன் அந்த வயதிலேயே தன் காதலி நந்தினியை பார்க்கச் சென்று இருந்தான்.

எப்படியாவது நடன கலையில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை அமைத்து விட வேண்டும் என்று எண்ணிய வர்மன் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் எனத் தன் கைபேசியின் மூலம் சில போட்டிகளின் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்துகொண்டு இருந்தான்.

பத்தே நிமிடத்தில் வீடு திரும்புவேன் என்ற மாயன் மாலை நேரம் கடந்தும் வீட்டுக்கு வராமல் இருக்க,

"வர்மா... அண்ணன் எங்கே!?" என்று கேட்டுக்கொண்டே தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் மகதி.

கருப்பு நிற மேல் சட்டையும் வெள்ளை நிற பாவாடையும் அணிந்து இருந்த மகதியை,
"மகதி... என்னாச்சு கட்டில்ல இருந்து கீழே விழுந்துட்டியா? காலில் அடிபட்டு இருக்கா?" என்று புரியாமல் கேட்டான் வர்மன்.

"இல்லையே... நான் எங்கேயும் விழலையே, ஏன் கேக்குறீங்க?" என்று மகதி எதிர் கேள்வி கேக்க,

"அப்புறம் ஏன் உன் பாவாடையில ரத்தகரை இருக்கு?" என்று கேட்டான் வர்மன்.

"என்ன ரத்தகரையா?" என்ற மகதி சற்று குனிந்து தன் ஆடையைப் பார்த்தவளுக்கு வாய் வார்த்தைகள் மறந்து பயத்தில் கண்களில் கண்ணீர் பெருகியது.

"மகதி என்னாச்சு! ஏன் அழற!?" என்ற வர்மனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அறியாத பெண்ணவளுக்கு,

வெக்கம், பயம், குழப்பம் என்று அணைத்து பரிமாணங்களும் கலந்த உணர்வு ஏற்பட்ட நிலையில் வேகமாகத் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்ட மகதியின் செயலைப் பார்த்து வர்மனும் தான் குழம்பி போனான்.
 

sam

New member
Joined
May 5, 2025
Messages
22
கதை இப்போ தான் சூடு பிடிக்குது நான் நினைக்கிறேன் மகதிக்கு வர்மன் மீது ஈர்ப்பு என்று அதை அவள் காதலாக நினைக்கிறாளோ? அருமை நல்லா இருக்கு கதை❤️‍🔥
 
New member
Joined
May 2, 2025
Messages
18
ரொம்ப அழகான கதை மகதியின் மனதில் வர்மனின் காதல் மிக அழகா இருக்கு மகதி பெரிய மனிஷி ஆகி இருப்பாளோ கதை சூப்பரா இருக்கு சீக்கிரமா அடுத்த பகுதியை போடுங்க
 
New member
Joined
Feb 8, 2025
Messages
26
Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe
 
New member
Joined
May 2, 2025
Messages
21
அழகான கதை நகர்வு சிறுவயது அனுபவம் சொன்ன விதம் அருமை.🦋🦋🦋🦋🦋
 
New member
Joined
Mar 12, 2025
Messages
20
சூப்பர் மகதி வர்ணனை. Age அட்டென்ட் பண்ணிட்டாளா 😍
 
Active member
Joined
May 9, 2025
Messages
107
She had a crush on him and that she thought as love. Kuttaya kolappi vittutengha
 
New member
Joined
Feb 8, 2025
Messages
24
👌அருணுக்கு அம்மா கிடைக்கணும் வர்மன் இப்போ தான் மகதி காதலை தெரிஞ்சிக்கிறான். அருமை அருமை 👌👌👌
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top