• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
128
🐝அத்தியாயம் 1

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் வெளியே குவிந்திருந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகக் குழுக்கள், ஒளிப்படக்கருவிகள் மற்றும் மைக் கம்பிகளுடன் அருள்மொழி வர்மனை சூழ்ந்தனர்.

"வர்மன் மாஸ்டர், இந்த வருட தேசிய விருது பெற்றதற்கான மகிழ்ச்சியை எப்படி பீல் பண்றிங்க? உங்கள் நடன பயணத்தில் இது ஒரு முக்கிய நிகழ்வு அல்லவா?"என்று பத்திரிகையாளர் ஒருவர் மரியாதையுடன் கேள்வி கேட்டார்.

அருள்மொழி வர்மன் மிதமான சிரிப்புடன்,
"நன்றி. இது ஒரு நன்நாள். ஆனால் இந்த விருது என் ஒருவனுக்கு மட்டும் கிடைத்த அங்கீகாரம் இல்லை.என் குருவுக்கும், என் மாணவர்களுக்கும், ரசிகர்களுக்கும் சொந்தமானது." என்று பதில் சொன்னவன் வேகமாக அவர்களைக் கடந்து தன் காருக்குச் செல்ல முயன்றான்.

"சார் சார்...இருங்க, இன்னொரு முக்கியமான கேள்வி. உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?" என்று பத்திரிக்கையாளரின் ஒருவர் கேட்டதும் வர்மனின் முகம் தீப்பிழம்பாக மாறியது.

"சுத்து வட்டாரத்துல உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு சொல்றாங்க, ஆனா உங்களுக்கு எட்டு வயசுல ஒரு பையன் இருக்கிறதாவும் சொல்றாங்களே! இதுல எது சார் உண்மை?" என்று பத்திரிக்கையாளரில் இன்னொருவர் கேள்வி கேட்க, வர்மனின் பார்வைப்பட்டு அவனைச் சூழ்ந்து இருந்த ஒளிக்கதிர்கள் நொறுங்கிய கண்ணாடிகளைப் போலச் சிதறின.

"சொல்லுங்க சார்... உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?" என்று மீண்டும் அந்தப் பத்திரிக்கையாளர் அதே கேள்வியைக் கேட்டத்தும் ஒரு கணம் அவரை அழுத்தமாகப் பார்த்த வர்மனின் வார்த்தையில் கவனம் தேவை என்று எண்ணியவன் குரலைச் செருமி தன் கைகடிகாரத்தை பார்த்துப் பதில் சொல்ல ஆரம்பித்தான்.

"நாட்டுல சமுதாய சீர்கேடுகள் எவ்வளவோ நடக்குது, பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியா இருக்கு, அதனால நீங்கள் எப்போதும் பிரபலங்களின் காதல், கல்யாண விவாகரத்துல காட்டுற இதே ஈடுபாடை நாட்டில் நடக்குற பிரச்சனைகள்மீதும் விவசாயிகளின் கஷ்டங்கள்மீதும் காட்டுங்க. பத்திரிக்கை என்பது பொறுப்பும், மனித நேயமும் கொண்ட ஒரு தொழில். அது சாமான்ய மக்களின் குரலா இருக்கணும். எனக்குத் திருமணம் ஆனாலும், குழந்தை இருந்தாலும் உங்களுக்கு அதனால ஏதாவது பாதகம் ஏற்படப்போகுதா? இல்லை தானே? போங்க... போய் வேலை செய்து பிள்ளை குட்டிய காப்பாற்ற வழியைப் பாருங்க" என்று மிகப் பொறுமையாகவும், மரியாதையாகவும் அழுத்தத் திருத்தமாகப் பதில் அளித்த அருள்மொழி வர்மன் தன் காரில் ஏறி அமர்ந்ததும், அவனின் உயிர் தோழன் மாயன் வண்டியை வர்மனின் பங்களாவை நோக்கி விரட்டினான்.

"என்ன வர்மா... எப்போவும் போல அதே கேள்வி தான் கேக்குறாங்களா?" என்று சிரித்துக்கொண்டே மாயன் கேக்க,
"புனிதமான பத்திரிக்கை தொழில் இப்போ எல்லாம் தேவையில்லாத செய்திகளைப் பரப்பத் தான் ஆவலாய் இருக்காங்க" என்ற வர்மன் தன் கைபேசி மூலம் அவன் மும்பை வந்து இறங்கிய செய்தியைக் குறுஞ்செய்தி வாயிலாகத் தன் தந்தை வர்ம ராஜனிடம் தெரியப்படுத்தினான்.

அருள்மொழி வர்மனின் குடும்பமே நாட்டியக்கலை வம்சா வழியைச் சேர்ந்தவர்கள்.
அருள்மொழிவர்மனின் தந்தை வர்மராஜன் என்கிற ராஜன் ஒரு காலத்தில் வெள்ளித்திரையில் தனக்கெனத் தனி சாம்ராஜ்யத்தை நிலை நாட்டியவர்.

அவர் திரைத்துறையில் கொடிக் கட்டி பறக்கும் காலத்தில் தன் இரட்டை பிள்ளைகளான அருள்மொழிவர்மனையும் அவன் சகோதரன் மயில் வர்மனையும் வெளிநாட்டில் தங்கி படிக்க வைத்தவருக்குத் தன் மனைவியால் ஏற்பட்ட அவப்பெயரால் பிள்ளைகளை இந்தியாவிற்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டார்.

தன் பிள்ளைகளுக்கு 15 வயது இருக்கும் நிலையில் தன் மனைவிக்கும் தனக்கும் விவாகரத்து நடந்த செய்தியைக் கூடப் பிள்ளைகளுக்கு அவர் தெரிவிக்காததற்கு காரணம் பிள்ளைகளை நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள் எனக்கு உங்களிடமிருந்து விடுதலை கிடைத்தால் போதும் என்று அவரின் மனைவி சொன்ன ஒரு வார்த்தைக்காகத் தான்.

தன் மனைவியின் பிரிவால் ஏற்பட்ட மன உளைச்சலையும் அவப்பெயரையும் தாங்கிக் கொள்ள முடியாத ராஜன் வீட்டிலேயே அடைப்பட்டு நடைபிணமாக மாறியவருக்கு தன் பிள்ளை அருள்மொழி வர்மன் தான் இன்று பிள்ளைக்குப் பிள்ளையாகவும் தாய்க்கு தாயாகவும் இருந்து பார்த்துக் கொள்கின்றான்.

தன் தந்தை உருவாக்கிய சாம்ராஜ்யத்தை அடுத்தடுத்து திரையுலகில் கால் பதித்தவர்கள் தரை மட்டமாக அழிப்பதை நேரில் கண்ட அருள்மொழிவர்மனுக்கு மீண்டும் தன் தந்தையின் பெயரைத் திரை உலகம் உச்சரிக்க வேண்டும் எனில் அவருடைய வாரிசாக நான் இந்தத் திரையுலகத்தில் வெற்றி நடை போட வேண்டும் என்ற எண்ணம் அவன் இதயத்தில் விதையாக விழ, இந்திய பாரம்பரிய நடனங்கள், இந்திய கிராமிய நடனங்கள், மேற்கத்திய நடனங்கள், இலத்தீன நடனங்கள் என்று எல்லா வகை நடனத்திலும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைத் தேடி பிடித்து அவர்களிடம் முறைப்படி நடனம் கற்று இன்று தேசிய விருதைப் பெற்றிருக்கும் அருள்மொழிவர்மனுக்கு பெண்கள்மீது அதிக மரியாதை உண்டு.

ஆனால்! அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தினால் பெண் என்ற புனிதமான சொல்லைக் கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளும் பெண்களைப் பார்த்தாலே அவர்களைக் கடுகளவும் மதிக்காமல் அவர்களைக் கடந்து செல்வது அவன் வழக்கம்.

அருள்மொழிவர்மன் என்கிற வர்மனுக்கு நட்பு வட்டாரம் என்று பெரிதாக யாரும் இல்லாத பட்சத்தில் அவனின் உயிர்த்தோழன் மாயன் ஒருவன் மட்டுமே நண்பனுக்கு நண்பனாகவும் அவன் தொழில் சார்ந்த விஷயங்களைப் பார்த்துக் கொள்ளும் உதவியாளருமாக இருக்கின்றான்.

தேசிய விருதைப் பெற்றுக் கொண்டு தன் தந்தையிடம் ஆசி பெறுவதற்காகத் தன் வீட்டிற்கு சென்ற வர்மனின் காரைப் பார்த்ததும்,"வாழ்த்துகள் வர்மா" என்று தன் நடையில் வேகத்தைக்கூட்டி கையில் ஆரத்தி தட்டுடன் வாசலை நோக்கி
வந்தார் ராஜன்.

"அப்பா..." என்று அன்பாக அழைத்த வர்மன், தன் கையில் இருந்த விருதை அவன் தந்தையிடம் கொடுத்துச் சாஷ்தாங்கமாகக் காலில் விழுந்து ஆசி வாங்கியவனின் நெற்றியில் பெருமிதத்துடன் இதழ் பதித்தார் ராஜன்.

"ரொம்ப பெருமையா இருக்கு வர்மா. இது ஆரம்பம் தான். இன்னும் நீ மென்மேலும் வளர என் வாழ்த்துகள். சரி உள்ள வா, குளிச்சிட்டு சாப்பிடலாம்" என்ற ராஜன் அவர் கையில் இருந்த விருதை மேசைமேல் வைக்க, கண் இமைக்கும் நொடியில் அந்த விருதை எடுத்து நடு வீட்டில் தூக்கி வீசினான் எட்டு வயது சிறுவன் அருண்வர்மன் என்கின்ற அருண்.

"டேய் டேய் என்ன காரியம் பண்ணுற? என் பிள்ளையின் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரத்தை இப்படியா தூக்கி போடுவ! நீ எல்லாம் பிள்ளையா!?" என்று அதிக கோபத்தில் சிறுவனை அடிக்கக் கை ஓங்கிய தன் அப்பாவிடமிருந்து அருணை தன் வசம் இழுத்துக் கொண்டான் வர்மன்.

"அப்பா விடுங்க... ஏதோ தெரியாம பண்ணிட்டான். அருண் நீ உன் ரூமுக்கு போ" என்று வர்மன் பொறுமையாகச் சொன்னவன், கீழே விழுந்தும் உடையாமல் இருந்த விருதை எடுத்துச் சரி செய்து கொண்டு இருந்தான்.

"நான் தெரியாம பண்ணல, தெரிஞ்சுதான் பண்ணேன்.எனக்கு என் அம்மா வேணும். என் அம்மா எங்க? என்கூட படிக்கிற எல்லாருக்கும் அம்மா இருக்காங்க. என் அம்மா யார்? ஏன் என் அம்மாகிட்ட என்னை அழைச்சிட்டு போக மாட்றீங்க? சொல்லுங்க அப்பா என் அம்மா எங்க?" என்று வர்மனின் சட்டையைப் பிடித்து உலுக்கும் எட்டு வயது சிறுவன் அருணின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவித்தான் நம் கதையின் நாயகன் வர்மன்.
 

Attachments

  • inbound1888754764576495281.jpg
    inbound1888754764576495281.jpg
    139.8 KB · Views: 45
Last edited:
Joined
Feb 6, 2025
Messages
128
இதே சமயம் சென்னை ரயில்வே நிலையத்தில் கையில் கருப்பு நிற டிராவல் பேக் உடன் பச்சை நிற சுடிதாரில் ஒப்பனையே இல்லாமல் பேரழகியாக நடந்து வந்துக்கொண்டு இருந்தாள் சித்ரமகதி.

"மகதி... இப்போ கூட நேரம் இருக்கு, வாச்செல்லம் வீட்டுக்குத் திரும்பிப் போகலாம். நான் அம்மாகிட்ட பேசுறேன், வா மகதி" என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சி கேட்டார் மகதியின் அப்பா மகாலிங்கம்.

"மாட்டேன் அப்பா... என் காதலை தேடி நான் போறேன். அம்மாவுக்குத் தான் என் மனசு புரியல, ஆனா நீங்கக் கூடவா என்னைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ண மாட்டீங்க?" என்று ஆதங்கமாகக் கேட்டாள் மகதி.

"என் பொண்ணு மனசு எனக்குப் புரியாமல் இல்லை செல்லம். ஆனா நீ இப்படி தனி ஆளா அந்தப் பையனைத் தேடி போறது எனக்குச் சரியா படல, அப்பா சொல்லுறத கேளு, நான் வேணும்னா அந்தப் பையன் போன் நம்பரை மாயன் கிட்ட, அவன் கிட்ட பேசி உன்னை அவனுக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணி வைக்கிறேன். இப்போ அப்பாகூட வீட்டுக்கு வா மகதி" என்று தன் தந்தை கெஞ்சி கேட்டும் மகதியின் மணம் மாறவில்லை.

"அப்பா... உங்க வார்த்தைக்கு மரியாதை கொடுத்துத் தான் நான் படித்த படிப்புக்கு ஏத்த மாதிரி ஏதோ ஒரு வேலைக்குப் போயிட்டு என் பாட்டுக்கு இருந்தேன், ஆனா அம்மா எனக்கு அவங்க தம்பியைக் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு அடம் பிடித்து என் சம்மதம் இல்லாமல் கல்யாண தேதியையும் குறிச்சிட்டாங்க, இதுக்கு மேலையும் என் காதலுக்காக உதவ வேற யாராவது வருவாங்கன்னு நான் காத்துகிட்டு இருக்க முடியாது, அதான் நானே என் அழகனை! இல்ல இல்ல என் மன்னனை தேடி மும்பை போக முடிவு பண்ணிட்டேன்" என்ற மகதி தன் நடையில் வேகத்தைக் கூட்டியவள் மும்பைக்கு செல்லும் ரயில் பெட்டியில் ஏறி ஜன்னல் அருகே அமர்ந்தவளை பார்த்து மகாலிங்கம் சிரித்துக்கொண்டார்.

"இப்போ ஏன் சிரிக்கிரிங்க, இந்நேரத்துக்கு உங்க பொஞ்சாதியை திட்டுறேன்னு உங்களுக்குக் கோவம் தானே வரணும்!"
என்ற மகதியை பார்த்து மேலும் சிரித்த மகாலிங்கம் தன் சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்து மகதியின் கையில் கொடுத்தார்.

தன் அப்பாவை அன்பாக பார்த்த மகதி,
"என்கிட்ட பணம் இருக்கு அப்பா, நீங்க வச்சிக்கோங்க" என்றவள் மீண்டும் தன் தந்தையின் சட்டை பையில் காசை வைத்து, "அம்மாவைப் பார்த்துக்கொங்க, நீங்களும் நேரநேரத்துக்கு மாத்திரை போடுங்க, நான் அங்க போனதும் உங்களுக்குப் போன் பண்ணுறேன்" என்ற மகதியின் வார்த்தைக்குச் சம்மதமாகத் தலையசைத்த மகாலிங்கம் மீண்டும் தன் பையிலிருந்து சின்னத் துண்டுச் சீட்டை எடுத்துக்கொடுத்தார்.

"உன்னைத் தனியா அனுப்ப எனக்கு மனசே இல்லை, ஆனாலும் உன் உணர்வுக்கு நான் மதிப்பு தரேன். மாயனுக்கு நான் நேத்தே போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிட்டேன். அவன் ரயில்வே ஸ்டேஷன் வந்து உன்னை அழைச்சிட்டு போவான். ஆனா அவனுக்கு நீ எதுக்காக மும்பை போறன்னு உண்மை தெரியாது. நீ பார்த்துப் பக்குவமா நடந்துக்கோ" என்ற மகாலிங்கம் மகதி பக்கத்தில் அமர்ந்து இருக்கும் எழுபது வயது மதிக்கத் தக்க மூதாட்டி அருகே சென்றார்.

"அம்மா... நீங்களும் மும்பை தான் போறிங்களா?" என்று மகாலிங்கம் கேட்டதும், "ஆமா தம்பி... என் பேரனைப் பார்க்கப் போறேன், அதோ என் பையனும் என் மருமகளும் அங்க உக்காந்து இருக்காங்க" என்று அந்த மூதாட்டி சொல்ல, "அம்மா... என் பொண்ணும் மும்பைக்கு தான் போகணும். நீங்கக் கொஞ்சம் என் மகளைப் பார்த்துக்கொங்க" என்ற மகாலிங்கத்துக்கு தன் மகளைத் தனியாக அனுப்ப மனமே இல்லை.

"அப்பா... நீங்கக் கவலைப்படாதீங்க, நான் என்னைப் பார்த்துப்பேன். நீங்க நேரத்தோடு வீட்டுக்குப் போங்க. நான் அங்க போய் மாயன் அண்ணனைப் பார்த்ததும் போன் பண்ணுறேன்" என்று மகதி நம்பிக்கையாகச் சொன்னதும் அவள் கையை இறுக பற்றிகொண்டார் மகாலிங்கம்.

"சரி தங்கம், பார்த்து இருந்துக்கோ. அங்க எதாவது பிரச்சனைனா உடனே இங்க கிளம்பி வந்துடு" என்ற மகாலிங்கத்தின் கண்கள் கலங்கிய நிலையில் ரயிலிலிருந்து கீழே இறங்க, சென்னையிலிருந்து ரயில் மும்பையை நோக்கி நகர்ந்தது.

தன் அப்பாவின் உருவம் மகதியின் கண் பார்வையிலிருந்து மறையும் வரை தைரியமாக இருந்த மகதியின் கண்களில் சட்டென்று கண்ணீர் பெருகியது.

"என்ன பாப்பா ஏன் அழற? தனியா போறன்னு பயப்படுறியா கண்ணு? கவலைப்படாத நாங்க உன் கூட இருக்கிறோம்" என்று அந்த மூதாட்டி மகதிக்கு தைரியம் சொல்ல, மகதியும் கடமைக்கென்று சிரித்தாள்.

ரெயில் தண்டவாளத்தின் மீது பயணிக்க,
தூரத்தில் ஒரு குழந்தையை அதட்டும் அன்னை, வயசு பெண்ணைக் குறுகுறுவென்று பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும் இளைஞன், குடும்ப பிரச்சனை காரணமாகக் கோபமாக அமர்ந்திருக்கும் கணவன் மனைவி என்று ஒவ்வொரு ஆட்களுக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகளைச் சுமந்தப்படி இருந்தார்கள்.

தன் எதிரே அமர்ந்திருக்கும் பெண்மணியின் கைபேசியில் ஒலித்த "மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடி கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன் "என்ற பாடலின் வரிகள் மகதியின் செவிகளுக்கு விருந்தாக அமைந்ததும் அவள் இதழ்களில் சிறு குறுநகை மலர்ந்தது.

அந்தச் சிரிப்புடனே தன் பையில் இருந்த கைக்கூறிப்பு புத்தகத்தைத் திறந்தவள் கண்ணுக்கு அருள்மொழி வர்மன் என்ற கையப்பத்துடன் கூடுதலாக இதய வடிவிலான முத்திரையும் கண்ணில் தென்பட்டது .

அருள்மொழி வர்மன் என்ற பெயரைக் கடந்த பத்து வருடத்தில் கோடி முறையாவது அழுத்தம் திருத்தமாக எழுத்துக்கூட்டி அன்புடனும், காதலுடனும் படித்துப் பார்க்கும் மகதிக்கு தற்போதைய வயது 25.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மகாலிங்கம் மாலதியின் ஒரே மகள் தான் சித்ரமகதி.
தானும் மகிழ்ந்து தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மகதிக்கு நடனக் கலைஞர் அருள்மொழி வர்மன் மீது அதித காதல் உண்டு.

திரைப்படத் துறையில் பணியாற்றுபவர்கள் மீதோ! அல்லது பிரபலங்களின் மீதோ ஈர்ப்பு ஏற்படுவது என்பது சிலருக்கு இயல்பு தான்.

ஆனால் மகதிக்கு வர்மன் மீது இருப்பது ஈர்ப்பு இல்லை அது தான் காதல் என்று உணர்ந்த பெண்ணவள்
கடந்த பத்து வருடத்தில் வர்மன் வாழ்க்கையில் எத்தனையோ அசம்பாவிதங்கள் நடந்து இருப்பதை அறிந்திட வாய்ப்பு இல்லாமல் போக,


அவன் சொன்ன ஒரு வார்த்தை அவள் இதயத்தில் காதல் விதையாக விழுந்ததை நம்பி, பத்து வருடத்திற்கு முன்னே அவன் போட்டுக்கொடுத்த கையப்பத்துடன் இன்று மும்பைக்கு பயணிக்கும் மகதியை பற்றிய நினைவே இல்லாமல் வர்மன் தன் வீட்டில் எட்டு வயது சிறுவன் அருணின் ஏக்கத்தை தீர்த்து வைக்க முடியாமல் தவித்து இருக்கின்றான்.
 
Last edited:
New member
Joined
Mar 12, 2025
Messages
20
𝕾𝖚𝖕𝖊𝖗👌👌👌👌𝕾𝖚𝖕𝖊𝖗
𝕾𝖚𝖕𝖊𝖗👌👌👌👌𝕾𝖚𝖕𝖊𝖗
𝕾𝖚𝖕𝖊𝖗👌👌👌👌𝕾𝖚𝖕𝖊𝖗
𝕾𝖚𝖕𝖊𝖗👌👌👌👌𝕾𝖚𝖕𝖊𝖗
 
New member
Joined
Feb 8, 2025
Messages
26
Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe ❤️❤️❤️❤️❤️ intersting story பாப்போம் எப்பிடி ரெண்டு பேரும் ஒன்னு சேராங்கனு 🥰🥰🥰
Super
 
New member
Joined
Feb 8, 2025
Messages
26
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கதை
 
New member
Joined
Feb 8, 2025
Messages
22
அசத்தலான ஆரம்பம். அடுத்த பாக்கத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சக்தி சிஸ்டர் happy birthday சித்து அக்கா 🫰🫰🫰🫰🫰🫰🫰
 
New member
Joined
May 2, 2025
Messages
18
நல்ல ஆரம்பம் எட்டு வயசு பையனோட அப்பாவை சித்ரா எப்படி கல்யாணம் பண்ண ஆசைப்படுவாள் முதல் மனைவி எங்க ஒன்னும் புரியல போக போகத்தான் தெரியும் சூப்பர் சிஸ்டர்
 
New member
Joined
May 2, 2025
Messages
18
New கதை சூப்பர் அக்கா மன்னவனை தேடி மங்கை போகிறாள் என்னாகுமோ தெரியல மாயன் மாறன் இருந்தா சூப்பர் தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️
 

sam

New member
Joined
May 5, 2025
Messages
22
Nice🪷🪷🪷🪷🪷
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top