Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
அத்தியாயம் 5
வேதனையோடு பெற்றோர் நிற்க்க அதற்கு காரணம் நாம் தான் என்று எண்ணி தவித்து நின்றாள் அஞ்சலி. அந்த சூழலில் அவளால் அவளது பெற்றோர்க்கு ஆறுதல் கூறவோ அல்லது தன் நிலையை எடுத்து சொல்லவோ வழி இல்லாமல் போக, அவளும் வலியோடு அவர்களை பார்த்து சிலையாகி நின்றாள்.
ஆனால் அவள் அவனோ பேசாமல் நிற்க்கவில்லை, அவனின் அவளுக்காக வரிந்து கட்டி கொண்டு நின்றான்.
" சும்மா நிறுத்துங்க சார், ரொம்ப தான் பேசிட்டு இருக்கீங்க... "
கிருஷ்ணனும் வேனியும் அவனை நிமிர்ந்து பார்க்க,
" ஏன் சார் எப்பவுமே பெத்தவங்க பிள்ளைகளை குறை சொல்லும் போது ஒரு நிமிஷம் கூட யோசிச்சு பேச மாட்டீங்களா? ஒரே ஒரு முடிவு உங்களுக்கு பிடிக்காதது, எங்களுக்கு விருப்பப்பட்டது..
அந்த முடிவு எடுக்கவும் நாங்க மொத்தத்துக்கே வேண்டாதவங்களா ஆயிட்டோம் அப்படித்தானே?
பெத்த பிள்ளைங்க தங்களோட விருப்பத்துக்கு ஏத்த மாதிரி ஒரு முடிவு எடுக்கிறது அவ்வளவு பெரிய குத்தமா? "
அவர்கள் இருவரும் அமைதியாக நின்றனர்,
" எப்பவுமே பெத்தவங்க பெரிய மனசுள்ளவங்கன்னு சொல்லுவாங்க ஆனா உங்களுக்கு எவ்வளவு சுயநலம் நிறைந்த மனசு... "
" ஏய் யார பார்த்து டா சுயநலம் புடிச்சவன்னு சொன்ன, "
" சந்தேகமே வேண்டாம் சார் உங்கள தான் சொல்றேன்.... "
ஏய் என்று அவர் பல்லை நர நரவென்று கடிக்க,
" இப்ப எதுக்கு சார் உங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருது, உண்மையை சொல்லிட்டதனாலயா? "
" ஏய்... "
" சும்மா அலற வேண்டாம் சார், இதே பொண்ண பத்தி தான் இப்போ கல்யாணம் கட்டிக்க போற மாப்பிள்ளை வீட்ல என்ன எல்லாம் சொல்லி இருப்பீங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார்... "
கிருஷ்ணன் அமைதியானார், அவருக்கும் உண்மை புரியும் தானே இதனால் வரைக்கும் தனது மகள் தனது பேச்சை எந்த விஷயத்திலும் மீறியதில்லை, அவருக்கு பிடிக்காத ஒரு செயலை அவள் இதுவரை செய்ததும் இல்லை, அவளின் விருப்பம் எதுவாக இருந்தாலும் முதலில் சொல்வதும் அவரிடம் தானே... அவரின் விருப்பம் அறிந்து தானே அவளது ஆசையும் கூட இருந்தது.... இன்று இந்த நிமிடம் வரும் சில நிமிடங்களுக்கு முன்பு வரைக்கும் அவரது ஆசை மகள் அவரது பேச்சை மீறாத செல்ல மகள் தானே அவள், என் மகளைப் போன்ற ஒரு பெண் இந்த உலகத்தில் இருக்கிறாளா? நிச்சயமாக இல்லை என்பது தானே அவரது எண்ணம்.
அப்படி நினைத்த தனது மகளை தாமே இப்படி பேசியதை நினைக்கையில் சட்டென அவரது மனமே வெட்கித் தலை குனிந்தது...
அந்த தருணத்தில் யோசிக்கவும் செய்தது.
அவன் கூறியது போல நாம் தான் சுயநலமாக சிந்தித்து விட்டோமோ என்று....
அந்த சிந்தனை அவரது மனதில் வரவும் அவரால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை...
மௌனமாக நின்றார் கோபத்திலும், அவமானத்திலும், ஆத்திரத்திலும், வழி அரியாமல் வழிந்த கண்ணீர், இப்போது தனது பாசமகளை தாமே தவறாக பேசியதை நினைத்து வருந்தி வழிந்தது...
" என்ன சார் இப்பதான் உண்மை உங்களுக்கு விளங்குதா? உங்க சுயநலம் என்னங்கறத இப்ப புரிஞ்சுகிட்டீங்களா? "
அவர் இப்போதும் எதுவும் பேசவில்லை அப்படியே நின்றார்
அவர் தனது தவறை உணர்ந்து விட்டார் என்பதை புரிந்து கொண்ட வீரா அதற்கு மேல் பேசாமல் அமைதியாக நின்றான்,
நீடித்த மவுனத்தை கலைப்பது யார் என்று தெரியாமல் நிமிடங்கள் கரைந்திருக்க,
வீரா அஞ்சலியின் கையை பற்றி அவளது தந்தையின் முன் கொண்டு சென்று நிறுத்தினான்,
வழிந்த கண்ணீரோடு மகளை பார்த்தவர் அவளின் கையை பற்றி கொண்டு மன்னிப்பு கேட்கும் விதமாக அழ,
அவரது காலில் விழுந்து கரைந்தாள் அஞ்சலி, அவளை தூக்கி,
" மன்னிச்சுக்கோ டா, உன்ன வளர்த்து ஆளாக்கின நானே உன்ன பத்தி....... " அதற்கு மேல் சொல்ல முடியாமல் அவர் அழ, அவரது கரங்களுக்குள் தன்னை புதைத்து கொண்டாள் அஞ்சலி.
" இல்ல ப்பா நீங்க தப்பா நினைக்கல பா நான் தான் உங்க கிட்ட சொல்லாம விட்டுட்டேன், நான் சொல்லிருக்கணும் ப்பா சொல்லிருந்தா நீங்க யோசிச்சு தான் ப்பா இருந்து இருப்பீங்க, நான் தான் ப்பா சொல்லாம உங்கள இவ்வளவு கஷ்டபட வச்சுட்டேன், சாரி ப்பா "
அவளும் கரைந்து அழ, ஆதரவாக தலையை வருடி கொடுத்த கிருஷ்ணன்,
" இவனை உனக்கு எவ்ளோ நாளா தெரியும் டா? "
" பன்னிரண்டு வயசுல இருந்து ப்பா " என்று அவள் சொல்லவும் அதிர்ந்து போனார் அவர்....
மனம் கொடுத்த மன்னவன் வருவான்....