• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் – 2


அவளை எப்படியாவது என் பக்கம் திருப்ப முயற்சித்து அவள் உள்ளங்கையைத் தொட்டேன். அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. என் கையை அவள்வசம் இழுத்து இறுக்கமாகப் படித்துக்கொண்டாள்.

ஆனால், அப்போதும் கூட அவள் கண்களைத் திறக்கவில்லை. அவளுக்கு நான் யாரென்று தெரியாது ஆனாலும் என்னை இறுக்கமாகப் பற்றியிருந்தாள்.


எனக்கு அவளைப் புரிந்துகொள்ள ஆர்வம் பொங்கியது. நான் யார்? என் பெயர் என்ன? என எவுமே தெரியாமல், கண்களைத் திறந்து என்னைப் பார்க்கக்கூட இல்லாமல், செவி ஒலிப்பெருக்கியைத் தன் காதில் மாட்டிக்கொண்டு பாடலோ அல்லது வேறு எதையோ கேட்டுக்கொண்டு கண்ணீரை வடித்துக் கொண்டு, என் கையை இருக்கமாக அழுத்திப் பிடித்துக்கொண்டு இருக்கும் அவளை ஒரு அந்நியராய் நினைத்துக் கடந்து போக என்னால் எப்படி முடியும்?

நான் என்ன செய்தாலும் அவள் அவளுடைய நிலையிலிருந்து வெளிவரப் போவதில்லை. அவள் என்ன நிலையில் இருக்கிறாள் என்று அவளுக்கேத் தெரியவில்லையென நான் அவளைக் கண்டு வறுந்தினேன். அவளுக்குத் தேவை ஒரு இதமான ஆறுதல்தானென என் இதயம் என்னைத் தட்டி எழுப்பிச் சொல்லியதும், அவள் கையை நானும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன்.

என் கைகள் அவளுடைய சுமையைப் பகிர்ந்து கொண்டதும் முன்பைவிட அதிகமாகவும் வேகமாகவும் கண்ணீர் இறங்கியது. என் இன்னொரு கையால் அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டேன்.

சில வினாடிகள் விம்மிக்கொண்டிருந்தாள். பின் கண்களைத் திறந்து என் பக்கம் தலை திருப்பினாள்.

அவளுடைய கண்கள் குளமாகியிருந்தது. அதில் என் சோகமான மற்றும் குழப்பமான முகத்தை நான் பார்த்தேன். அதை அவளும் தன் கண் வழியே பார்த்ததாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். கண்ணீரால் நினைந்து வற்றிக் காய்ந்த பின் இறுகியிருந்த அவளுடைய வெளிர் செந்நிறக் கண்ணங்கள் விரிந்தது. அதில் அவளுடைய வலிகள் வரிகளாக மாறி முகத்தில் ஆங்காங்கே சுருக்கக் கோடுகளை உருவாக்கியது.

பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாள். அழுகைக்குப் பின் யாராக இருந்தாலும் அழகாகத்தானே இருப்பார்கள்?

அவள் என்னைப் பார்த்துப் புன்னகித்த நேரம் அவளுடைய அழுகையும் நின்றது ரயிலும் நின்றது.

எந்த ஊருக்குப் போகிறேன் என்றுகூடத் தெரியாமல் பயணித்த நான், அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவதாக முடிவு செய்திருந்ததால், அவளுடை கைகளை விட்டு என் கையை விலக்க முனைந்தேன்.

எனக்கு மிகவும் வலித்தது. அவளுடைய கைகள் என்னை விடுவித்தாலும் அவளுடை கண்கள் இரண்டும் என்னை இறுக்கிப் பிடித்துப் “போகாதே... போகாதே…” என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

இருந்தபோதும் நான் அவளைக் கடந்து செல்லும் நெருக்கடி எனக்கு இருந்தது. அவளுக்கு என்னால் முடிந்த ஆறுதலைக் கொடுத்ததாக நான் நம்பினேன். அதனால், அங்கிருந்து புறப்பட்டேன்.

ரயிலிலிருந்து இறங்கியதும் நான் எங்கிருந்து பயணத்தைத் தொடங்கினேனோ அதே நிறுத்தத்திற்கு திரும்புவதற்கான ரயில் எப்போது வரும் என்று விசாரித்துவிட்டு, அந்த ரயில் நிலையத்தில் போடப்பட்டிருந்த இரும்பு நீள நாற்காலியில் அமர்ந்தேன்.

என் மனதோடு சேர்ந்து என் வயிறும் வெறுமையாக இருப்பதை உணர்ந்தேன். முதலில் வயிறை சரிகட்டாலாம் பின் மனதை சரிகட்டுவதைப் பற்றி யோசிக்கலாம் என்று என் பையிலிருந்து உணவை எடுத்தேன்.

என்னுடைய டிஃபன் பாக்ஸைத் திறந்து அருகில் வைத்துவிட்டு வசதியாக உட்கார முற்படும்போது நான் ரயிலில் சந்தித்த அதே பெண் என்னை நோக்கி நடந்து வருவதைப் பார்த்தேன். அவள் என் அருகில் அமர்ந்திருக்கும்போது அவளுடைய அழுகையால் அவளை எனக்கு அறிமுகப்படுத்தியதால் அவள் தோற்றத்தையும் கவனிக்கவில்லை, அவளுடைய பெயரையும் கேட்க முடியவில்லை. இப்போது அவளே வருகிறாள் அவளைத் தெரிந்துகொள்ளலாமென ஆர்வம் பசியைப் பின் தள்ளி முன்னே வந்து நின்று எட்டிப் பார்த்தது.

அவள் தொலைவில் நடந்துவரும்போதே அவளுடைய தோற்றத்தைக் கவனித்தேன். முன் சொன்னது போல் கல்லூரி மாணவியைப் போலத் தெரிந்தாலும் அவள் அணிந்திருந்த அத்தனையும் அவள் பாவனையும் அவளுடைய அப்பாவித்தனத்தை எனக்குத் தெரியப்படுத்தியது. அவளுக்கு ஏதோ குழப்பமோ, வலியோ தீர்க்கமுடியாத நிலையில் இருப்பதை அவளுடை கலக்கம் நிறைந்த முகமும் பேச்சும் எனக்குச் சொல்லியது.

என் அருகில் வந்து நின்று கொண்டு, “நீங்க இறங்கும்போதே நானும் இறங்கிட்டேன். நீங்கதான் என்னைய கவனிக்கல” என்று சொன்னாள். அவளுடைய குரலும் பேச்சும் குழந்தைத்தனமாக இருந்தது. அவள் இயல்பாக, எளிமையாக, தெளிந்த அன்போடு இருந்தாள்.

“இல்லமா நான் எனக்கே தெரியாம ஏதோ ஒரு மனநிலையிலதான் இந்த ட்ரைன்ல ஏறுனேன். கட்டாயம் இறங்க வேண்டிய சூழல் அதுனாலதான்” என்று என் ரயில் பயண கதையை அவளிடம் சொன்னேன்.


அவள் என் ஒவ்வொரு கண்ணையும் அடுத்தடுத்த நொடிகளில் தன் கருவிழியைச் சுழலவிட்டுப் பார்த்து எனக்கு நன்றி சொன்னாள். “எனக்கு எதுக்கு நான்றி?“ என என் நியாயமான கேள்வியைக் கேட்டேன்.

அவளும் என்னைப்போலவே ஏன்? எதற்கு? எனத் தெரியாமலேயேதான் ரயிலில் ஏறி வந்ததாகச் சொன்னாள். நான் அவளிடம் சொன்னதைப் போலவே அவளும் என்னிடம் ஒரு கதையைச் சொன்னாள்.

“ராசியில்லாதவள் என்ற வார்த்தை எவ்வளவு பெரிய வார்த்தையெனத் தெரியாமலே சிலர் அதைப் பேசுகிறார்கள். பிறர் இந்த வார்த்தையைச் சொல்லி என்னை வரையறுக்கும்போதெல்லாம் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்துவந்துள்ளேன். எனக்கு நேர்மறையான குணம். யார் என்னை எதைச் சொல்லி அவதூறு பேசினாலும் அதை நான் என் மனதிற்குள் கொண்டு செல்வதில்லை.

ஆனால் இப்போது, மற்றவர்கள் என்னை ராசியில்லாதவள் எனச் சொல்வது சரிதானோ எனக்கிற எண்ணம் எனக்குள் உருவெடுத்துள்ளது. எனக்கு நடந்த, நடக்கின்ற விஷயங்கள் எல்லாம் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கிறது.

இந்தச் சாபம் நான் பிறந்த போதிருந்தே என்னைத் துரத்தி வருகிறது.”

“மனதில் உள்ள குழப்பமும் நெருக்கடியும் என்னை நானாக இருக்க அனுமதிப்பதில்லை. அதையும் மீறி நான் நானாக இருக்க முயற்சி செய்யும்போதெல்லாம் இந்தச் சமூகம் என்னைப் போட்டுத் தொம்சம் செய்கிறது.

அது தரும் வலியை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதைக் கடந்து போகவும் முடியவில்லை.”

“இப்போது மட்டும் இல்லை. சிறு வயதிலிருந்தே என் பிறப்போடு பிறப்பாய் இந்த ராச்சத சாபம் எனக்கு நிழலாய் இருந்து வருகிறது. பல முறை அதைத் தீர்க்க முடிவு செய்ய என்னை நானே கொள்ளத் திட்டமிடுவேன். அந்தத் திட்டத்தில் கூட வெற்றிபெற எனக்குக் கொடுத்த வைக்கவில்லை. எப்போது சாவோம் என்கிற நினைப்பிலேயே என் ஆயுலின் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறேன்.”

அவளுடைய சடைப்பான வார்த்தைகள் என்னுடைய மனதைக் கீறியது. அவளைப் பார்க்கையில் என்னுடைய சிறு துண்டுபோலத் தெரிந்தாள். அவளும் என்னப்போல வாழ்க்கையில் பல காரணங்களால் நசுங்கியிருக்கிறாள் என்று புரிந்துகொண்டேன். அவள் புலம்பப் புலம்ப மனதில் இருக்கும் வெட்டுக்காயம் இன்னும் ஆழமாகத்தான் செய்யும் என்று அவளை என்னுடன் அமர்ந்து சாப்பிடுமாறு வேண்டினேன்.

நான் அவளைச் சாப்பிடச் சொன்ன அடுத்த நொடியே “ம்ம் சரி“ என்று சொல்லி என் அருகில் வந்து அமர்ந்துகொண்டு சாப்பிடத் தயாரானாள். இந்த முறையும் நான் அவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால் நானெல்லாம் யாராவது என்னைச் சாப்பிடச் சொன்னால் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள மாட்டேன்.

தெரிந்தவர்களிடமே தயங்குவேன். ஆனால் இவள் யாரென்றே தெரியாத என்னுடன் அமர்ந்து உண்ணத் தயாராகிவிட்டாள்.

நான் எனக்காக வைத்திருந்த உணவை அவளுக்குக் கொஞ்சம் பகிர்ந்தேன். என்னுடன் ஏதோ பத்து வருடம் பழக்கமானவள் போலச் சரளமாக உட்கார்ந்து அவள் மனதிற்கு பட்டதைப் பேசிக்கொண்டே சாப்பிட்டாள்.

“ஆமா என்ன இது? தோசை பச்சை கலர்ல இருக்கே?”

“ம்ம்ம் ஆமா இதுக்குப் பேரு புரோட்டீன் தோசை.”

“அதென்ன புரோட்டின் தோசை? நெய் தோசை, முட்டை தோசை, கறி தோசை இதெல்லாம் தெரியும். நீங்கச் சொல்றத இப்போதான் நான் முதல் முதலா கேள்விபடுறேன்.”

“நீ கேள்விப்படல நல்லா அமுக்கு அமுக்குனு சாப்பிட்டுட்டு இருக்க.”

(உடனே சட்டென்று தலையை நிமர்த்தி என்னைப் பார்த்துச் சிரித்தாள். அவள் சிரிக்கும் போதெல்லாம் எல்லோரையும்போல அழகாய்த் தெரிந்தாள்).

“தோசை நல்லா இருக்கு அதுனால நல்லா சாப்பிடுறேன். நீங்கதான் இதைச் சுட்டீங்களா?”

“ம்ம் ஆமா நான்தான் சுட்டேன்.”

“பச்சைக் கலர் தோசை எப்படி சுடனும்னு சொல்லிக் கொடுத்தா நானும் வீட்டுல போய்ச் சுட்டுக் கொடுத்து, உங்களப் பார்த்து நான் கேட்ட மாதிரி, மத்தவங்கள எங்கிட்ட கேக்க வச்சு கொஞ்சம் சீன் போடுவன்ல அதுக்குத்தான் கேக்குறேன்.”

“எது? சீன் போடுவியா? அப்படினா?”

“ம்ம் அப்படினா கொஞ்சம் பந்தாவா அதாவது என்னப் பத்தி நானே பெறுமையா பேசிப்பேன்.”

“தற்பெருமை.“

“அதேதான். உங்களுக்கு ஒன்னு தெரியுமா?”

“என்னது?”

“தற்பெருமையும் ஒருவகை செல்ஃப் லவ்தான். உங்களுக்கு நான் என்ன சொல்ல வரேனு புரியுதா?”

“ம்ம் அதெல்லாம் நல்லாவே புரியுது.”

(நான் இதைச் சிறு புன்னகையோடு தலையை முன்னும் பின்னுமாக அசைத்துச் சற்று கேலியாகச் சொன்னேன்).

“ஏன் இப்படி சிரிக்கிறீங்க? உங்களுக்கு அப்படி என்ன புரிஞ்சது?”

“அதுவா? நீ அமைதியான பொன்னு இல்லை. நல்லா வாய் பேசுற பொன்னுனு புரிஞ்சது.”

“நீங்க முன்னாடி நெனச்ச மாதிரி நான் அமைதியான பொன்னுதான். என்னமோ தெரியல உங்க கிட்ட மட்டும் பேசிகிட்டே இருக்கனும்னு தோனுது.”

அவள் என்னுடன் அமர்ந்து உண்ணும்போது பேசிய ஒவ்வொரு வார்த்தையாலும் என்னை நெருங்கிக்கொண்டிருந்தாள். “உங்க கிட்ட பேசிகிட்டே இருக்கனும்னு தோனுது“ இந்த வாக்கியம் ஒரு காலத்தில் எனக்காக ஒரு அன்பு நிறைந்த உள்ளத்தால் சொல்லப்பட்ட வாக்கியம். இதை நான் என்னுடைய இருபதுகளில் அதிகமாகக் கேட்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது அந்த வாக்கியம் என் காதுகள் வழியே பாய்ந்து என் இதயத்தில் தேங்கி நிற்கும். பின்னாளில் அந்த வாக்கியத்தை நான் கேட்கவே இல்லை. பல வருடங்கள் கழித்து அவள் அந்த வாக்கியத்தை எனக்காகச் சொல்லும்போது மிகவும் தனித்துவமாக உணர்ந்தேன். எனக்கு அது பிடித்திருந்தது.

அந்தச் சந்தோஷத்திலேயே ஒரு நிமிடம் மௌனமானேன். அவள் நாங்கள் பயணித்து வந்த தொடர்வண்டியைப் போல அடுத்தடுத்து கேள்விப் பெட்டிகளை என்மீது ஏவி விட்டாள்.



...தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top