Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 32
- Thread Author
- #1
பகுதி -15
பின் இருக்கையில் அமர்ந்து இருந்த முல்லையைக் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே ஆட்டோ டிரைவர் வண்டியை இயக்க,சில நிமிடங்களில் ஆட்டோ உச்சி மலை பிள்ளையார் கோவிலின் வாசலை சென்றடைந்தது.
'எவ்ளோ ஆச்சு' என்று விசாரித்த கதிர்வேலன் பணத்தை ஆட்டோ டிரைவர் முன்னே நீட்ட,'பணம் எல்லாம் வேண்டா சார், நீங்க இந்த பொண்ணை எங்க இருந்து சார் அழைச்சிட்டு வந்திங்க, ஒரு மணி நேரத்துக்கு எவ்ளோ சார்' என்று பின் தலையை சொரிந்தான் ஆட்டோ ஓட்டுநர்.
ஓட்டுநரின் கேள்வி முடிவில் கதிர்வேலனின் ஐந்து விரல்களும் ஆட்டோ டிரைவர் கன்னத்தை பதம் பார்க்க,
'ஐயோ மாமா சார்' என்று அலறிய முல்லை வேகமாக ஆட்டோவில் இருந்து இறங்கி, கதிரின் அருகே ஓடி வந்து நின்றுக் கொண்டாள்.
'ஏய். யாரை பார்த்து என்ன கேள்வி கேக்குற' என்று மீண்டும் பற்களைக் கடித்துக்கொண்டு கதிர்வேலன் ஆட்டோ ஓட்டுநரை அடிக்க போக,
'ஐயோ வேணா மாமா சார்.. அவரை அடிக்காதிங்க' என்று கதிரின் கையை பிடித்துக்கொண்டாள் முல்லை.
'யோவ் என்ன. பேசிகிட்டு இருக்கும் போதே அடிக்கிற, நீ இவளுக்கு மாமா தானே. அதான் இவளே உன்னை மாமா சார் மாமா சாருன்னு கூப்பிடுறாளே, அதான் என்ன ரேட்ன்னு கேட்டேன் அதுக்கு நீ என்னை அடிப்பியா?' என்று ஓட்டுநர் பதிலுக்கு எகிறியவனின் கன்னத்தில் மீண்டும் அறைந்த கதிர்வேலன்,
'இவ என் அத்த பொண்ணு டா. நான் இவளுக்கு மாமன் மகன். இன்னோரு முறை யாரையாவது பார்த்து இந்த மாதிரி அநாகரிகமா பேசி பாரு. கண்ணை அப்படியே நோண்டி எடுத்துடுறேன்' என்ற கதிர்வேலன், பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து ஓட்டுநர் கையில் திணித்தப்படி முல்லையின் கையை பிடித்துக்கொண்டு அங்கிருந்து அழைத்து சென்று இருந்தார்.
அத்தனை பேர் முன்னிலையிலும் கதிர்வேலன் தன்னை அறைந்ததை எண்ணி ஓட்டுநர் அலைபேசி மூலம் யாரிடமோ தகவலை தெரிவிக்க,
'நீ கவலைப்படாத மச்சி. மலை கோவிலுக்கு போற அந்த பொண்ணு, மலையை விட்டு கீழே இறங்கும் போது நமக்கு விருந்தாக மாறி இருப்பாள்' என்று மறுமுனையில் இருந்து ஆட்டோ ஓட்டுநரின் கூட்டாளி பேசிய வார்த்தைகளை கேட்டு ஆட்டோ டிரைவர் கோவில் படிகட்டில் ஏறி செல்லும் கதிர்வேலன் முல்லையை வன்மமாக பார்த்து இருந்தான்.
*********************
சாமி பெயரில் அர்ச்சனையை முடித்துக்கொண்டு கையில் தேங்காய், வாழை பழ பையுடன் மலை கோவிலை முல்லை சுற்றிக்கொண்டு இருக்க,
கதிர்வேலனோ கோவமான முகத்தோடு ஓரமாக நின்று இருந்தவனுக்கு, இந்த நொடி வரை ஆட்டோ டிரைவரின் பார்வையும், அவன் பேச்சும் ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
நீண்ட நிமிடங்கள் அதே நினைவோடு இருந்த கதிர்வேலனை,'மாமா சார்.' என்று முல்லை அழைக்க,
'என்ன சுத்திட்டியா. போகலாமா' என்று கதிர்வேலன் கேட்க,
'ம். போகலாம்' என்றவள்,'ஆமா. நீங்க ஏன் ஆட்டோ அண்ணனை அடிச்சீங்க' என்று கேள்வி எழுப்பினாள்.
முல்லையின் கேள்விக்கு பதில் தராத கதிர்வேலன்,
கோவிலில் இருந்து கடைத்தெரு பக்கம் சென்றவன்,அங்குள்ள ஒரு கடைக்குள் நுழைய,'இவரு ஏன் இந்த கடைக்கு போறாரு' என்ற யோசனையில் கவரிங் கடை வாசலில் நின்று இருந்தாள் முல்லை.
'ஏய் ரவா லட்டு. இந்தா இங்க வா'என்ற அழைப்பில் முல்லை சிட்டாக கதிரின் அருகே செல்ல,
'இந்த வளைவி நல்லா இருக்கா' என்று கையில் அரை டெசன் கவரிங் வளைவியோடு சேர்த்து,ஒரு டெசன் கண்ணாடி வளையல்களை எடுத்து நீட்டினார் கதிர்வேலன்.
'ம்.நல்லா இருக்கு மாமா சார்' என்ற முல்லை,'யாருக்கு! மீனாவுக்கா?' என்று கேட்டதும்,
'ம். இல்ல. அவ ஆத்தாளுக்கு' என்று கதிர் சொன்னதும்,
'ஆனா.கஸ்தூரி சித்திக்கு இந்த வளைவி பத்தாதே என்ற முல்லையின் தலையில் ஒரு குட்டு வைத்தான் கதிர்வேலன்.
முல்லைத் தன் தலையை தடவிக் கொடுத்தவள்,'ஏன் அடிக்கிறீங்க. அப்போ கஸ்தூரி சித்திக்கு இல்லையா. ரோஜாக்கா' என்று கேட்க,
'ஏய். உனக்கு தான் இது, போட்டுக்கோ, வயசு பொண்ணு வெறும் கையோடவா இருப்ப' என்றவன், முல்லையின் அளவை சரியாக கணித்து வளைவியை தேர்வு செய்து இருந்தான்.
கதிர்வேலன் தனக்காக வளைவி வாங்கி தருவதையே நம்ப முடியாமல் பார்த்து இருந்த முல்லையின் கண் முன்னே,
'ஏய் இங்க பாரு. உனக்கு பிடித்த ஜிமிக்கி எல்லாம் இருக்கு' என்றவாரு, இடுப்பில் கை வைத்துக்கொண்டு அந்த கடையில் உள்ள காது ஜிமிக்கிகளை கதிர்வேலன் பார்த்துக்கொண்டு இருக்க,
தனக்கு தேவையானதை அறிந்து வைத்து இருக்கும் கதிர்வேலனை இமைகள் மூடாமல் ஆச்சிரியத்துடன் முல்லையும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
'என்ன!? வளையல் அளவு சரியா இருக்கா' என்று கதிர் கேட்டதும்,தன் கையில் இருந்த சின்ன பர்ஸ் செய்யும் தேங்காய் பையையும் கதிரிடம் கொடுத்த முல்லை, இரண்டு கைகளிலும் அவன் தேர்வு செய்த வளையல்களை அணிந்துகொண்டு,
'சரியா இருக்கு மாமா சார்' என்றவளின் முகத்தில் அப்படியொரு சந்தோசம் தெரிந்தது.
'இங்க பாரு. இந்த ஜிமிக்கி வேணுமா' என்று வேறு இடத்தை சுட்டிகாட்டி கதிர்வேலன் கேட்க,'இப்போதைக்கு வளையல் மட்டும் போதும் மாமா சார். ஆமா எனக்கு இதெல்லாம் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும். ரோஜா சொன்னாளா' என்று முல்லை கேட்டதும்,
'அப்போ உன்னை பத்தி வேற யாராவது சொன்னா தான் எனக்கு எல்லாமே தெரியுமா, எனக்கா எதுவும் உன்னை பத்தி தெரியாதா' என்று கதிர் கேட்டதும்,
'அதானே உண்மை. நீங்க மீனாவை பத்தி தான் தெரிஞ்சி வச்சி இருப்பிங்க, என்னை எல்லாம் நீங்க நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டீங்க' என்றவளின் பதிலில் கோவம்க்கொண்ட கதிர்,தன்னிடம் இருந்த முல்லையின் பொருட்களை அவளிடமே திரும்பக்கொடுத்தவன், கடையில் இருந்து அதே கோபத்துடன் வெளியேறி இருந்தான்.
கதிர்வேலனின் மனதை அறிந்திடாத முல்லை,'ஏன் தான் இவரு டக்கு டக்குனு கோவப்படுறாரு' என்று தோள்களை உளுக்கியப்படி பர்ஸில் இருந்த காசை எடுத்து கடைக்காரரிடம் நீட்ட,
'சார் பணம் கொடுத்துட்டாரு பாப்பா' என்றார் கடைக்காரர்.
'என்ன. முன்னாடியே பணம் கொடுத்துட்டாரா' என்று முல்லை கேட்டதும்,
“ஆமா பாப்பா. இரண்டாயிரம் ரூபாய் முன்னாடியே கொடுத்துட்டாரு” என்ற கடைக்காரர் மீதி பணத்தை முல்லையிடம் நீட்டினார்.
பணத்தை பெற்றுக்கொண்டு முல்லை வெளியே வர,'போகலாமா' என்ற கதிரிடம் மீதி சில்லறையை நீட்டினாள்.
'நீயே வச்சிக்கோ' என்ற கதிரோ. வேகமாக படியில் இருந்து கீழே இறங்கி செல்ல,
கதிர் வாங்கி தந்த எல்லா வளையல்களையும் இராண்டாக பிரித்து, அதில் கண்ணாடி வளையலை சேர்ந்து கை நிறைய வளைவியை அணிந்துக்கொண்டாள் முல்லை.
இவள் வளையலை அணியும் நேரம் கதிர்வேலன் பாதி படியை இறங்கி இருக்க, முல்லை கோவிலில் இருந்து இறங்கும் தருணம் மணி நான்ங்கை நெருங்கி இருந்தது.
நான்கு மணி அளவிலும் உச்சி வெயிலில் சோர்ந்து போன முல்லை அப்படியே படிக்கட்டில் அமர்ந்து இருந்தவளின் அருகே வந்து நின்றான் கதிர்வேலன்.
'என்னாச்சு வா கிளம்பலாம்.' என்று கதிர் முல்லையை அழைக்க,'மாமா சார். எனக்கு தாகமா இருக்கு' என்று மூச்சு வாங்க பருக நீரை கேட்டாள் முல்லை.
'நீ இப்படி மரத்தடியில் ஓரமா உக்காரு, நான் போய் தண்ணி வாங்கிட்டு வரேன்' என்றவாரு கதிர்வேலன் வேகமாக கடை தெருவை நோக்கி நடக்க, முல்லை அங்கிருந்த மரத்தடியில் நின்று இருந்தவளின் முகத்தில் வியர்வை துளிகள் பூத்த வண்ணமாக இருந்தது.
சில நொடிகளில் தண்ணீர் பாட்டிலுடன் மரத்தடிக்கு வந்த கதிர்வேலன்,'எங்க போனா இவ?' என்று அங்கே முல்லையை காணாமல் தனக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டவன்,
'ஏய் ரவா.' என்று முல்லையை அழைக்க வாய்யெடுத்து,
'முல்ல.' என்று சத்தமாக அழைத்தவனின் செருப்பு அணிந்த கால்களுக்கு கீழே, முல்லைக்கு கதிர்வேலன் வாங்கிக்கொடுத்த கண்ணாடி வளையல்கள் உடைந்து இருந்ததை பார்த்து கதிர்வேலனின் கண்களில் பயம் கலந்த பதற்றம் நிலவியது.
உச்சி பிள்ளையார் கோவில் அடிவாரத்தில் முல்லையை காணாமல் கதிர்வேலன் தவித்து போனார்.
'முல்ல. முல்ல.' என அவன்,அவள் பெயரை சொல்லி கத்தி அழைத்து பார்க்க, மண் தரையில் அவளுக்காக இவன் வாங்கிக்கொடுத்த கண்ணாடி வளைவி மட்டுமே உடைந்து இருக்க, அவனின் இதயம் தன்னவளை எண்ணி வேகமாக துடித்தது.
ஆம்!! துடிக்கும் தானே. காதல் கொண்ட இதயம் இவன்..இதுவரை ஒரு நொடி கூட அவளை அவள் அறிய காதல் பார்வை பார்த்தது இல்லை.
உரிமை கொண்ட மாமன் இவன், இதுவரை அவளிடம் தன் உரிமைக்கான உணர்வுகளை கூட அவள் அறிய வெளிப்படுத்தியது இல்லை.
இன்று இருவரும் தனியே பயணிக்க நேர்ந்தும் முல்லையை தொலைத்து விட்டோமே என்று பயத்தில்,பதற்றத்தில் அவள் பெயரை கத்தி அழைத்தப்படி நாலாபக்கமும் தேடினான்.
தேடியப்படியே தூரத்தில் மரத்தின் கீழே முல்லையின் தாவணி இவன் கண்ணுக்கு தெரிய, 'முல்ல. முல்ல.' என்று ரெண்டே எத்தில் அவளை அடைந்தவனின் முன்னே,
'இங்க பார்த்தியா, என் மாமா சார் வந்துட்டாரு, அவரு உன்னை விட கோவக்காராக்கும். ஒழுங்கு மரியாதையா என் பையை என்கிட்ட கொடுத்துடு" என்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு மரத்தை அண்ணாந்து பார்த்து பேசிக்கொண்டு இருந்தாள் முல்லை.
முல்லையின் எந்த வார்த்தையும் கதிர்வேலன் காதில் கேக்கவே இல்லை.
அவளை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் அவளை நெருங்கியவன், 'ஏய் எங்கடி போன. எங்க எல்லாம் உன்னை தேடினேன் தெரியுமா' என்று ஆவேசத்தில் கத்தினான்.
'மாமா சார். அங்க ஒரு குரங்கு' என்று முல்லை நடந்ததை விவரிக்கும் முன்னே அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான் கதிர்வேலன்.
அவன் ஐந்து விரல்களும் அவள் கன்னத்தில் பதிந்து இருக்க, வலியால் துடித்து போன முல்லையின் விழிகள் கண்ணீரை தத்தெடுத்துக்கொண்டது.
அவளை தேடி, அவள் காணவில்லை என்ற பதற்றத்தில் பித்து பிடித்தவனை போல அலைந்து இருக்க,அவள் அழுகையை அப்போது தான் உணர்ந்தான்.
கன்னம் சிவந்து கதிர்வேலனை கண்ணீருடன் பார்த்த முல்லை,'என்னை ஏன் மாமா சார் அடிச்சீங்க' என்று விம்பளுடன் கேட்டாள்.
'பின்ன. உன்னை அடிக்காம கொஞ்சுவாங்களா. எங்க டி போன நீ, இங்க என்ன பண்ற' என்று கதிர்வேலன் மிரட்டளுடன் கேட்டதும், மேலும் விம்பி அழுதாள் பெண்ணவள்.
'நான் இங்க... இந்த குரங்கு' என்று மீண்டும் முல்லை பேசும் முன்னே,
'வாயை மூடு. உன்னை காணாம எனக்கு கொஞ்ச நேரத்துல உயிரே போயிடுது தெரியுமா, செத்துரலாம் போல இருந்துச்சு' என்ற கதிர்வேலனின் முகத்தில் வியர்வை துளிகள் படர தொடங்கியது.
'இப்படி கன்னம் வீங்க என்னை அடிக்க தான் தேடுனிங்களாக்கும், அதான் உங்களுக்கு என்னை பிடிக்காதே, அப்புறம் ஏன் என்னை தேடுனீங்க" என்று மேலும் கண்ணீருடன் முல்லை கேட்க,
'உன்னை பிடிக்காதுன்னு நான் உன்கிட்ட சொன்னேனா!?' என்று கர்ஜித்தான் கதிர்வேலன்.