Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 97
- Thread Author
- #1
பகுதி - 12
பிள்ளைகள் வற்புறுத்திக் கூறியதால் மதுராவின் வீட்டிற்கு பெண் கேட்டு வந்து நின்றவர்களைக் கண்டு வாயைப் பிளந்தார் தேவநாதன்.
" வணக்கம் நான் ஆதிகேசவன். ஏ.ஆர் குரூப் ஆஃப் கம்பெனிஸோட முதலாளி. இவங்க என் மனைவி ராஜலட்சுமி." என்று அறிமுகப்படுத்த, ஆனந்த அதிர்ச்சியில் இருந்த தேவநாதன்,
"உங்கள யாருக்காவது தெரியாம போகுமா ஸார்? உங்கள எத்தன இன்டர்வியூல பார்த்திருக்கேன். திடீர்னு நேர்ல பார்த்த ஆச்சர்யத்துல வாயடைச்சுப் போயிட்டேன். வாங்க ஸார்! வாங்க மேடம்! " வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்.
தேவநாதனின் எதிர்வினையை கண்டு ஆதிகேசவனுக்கு யுவனி சொன்னது நினைவிலாட, வந்த வேலை சற்று சுலபமாக முடியும் என்று கணக்கிட்டார்.
அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தவர்,"ஜெயா! யாரு வந்து இருக்காங்க வந்து பாரு." என்று பரபரப்புடன் மனைவியை அழைத்து,
ஆதிகேசவனைப் பற்றிக் கூறிய தேவநாதன், முத்து படத்தில் மீனாவிற்கு கிடைத்த "வர்னும் வர்னும் மஹாராணி வர்னும்!" என்ற வரவேற்பைப் போல,
அவர்களுக்கு சிறிது நேரத்திற்கு ராஜ உபசரிப்பு நடத்திக் கொண்டிருக்க, அங்கே வந்த ரகுவம்சி அவர்களைப் பார்த்து புருவங்கள் சுருங்க யோசனையுடன் நின்றான்.
"என்னப்பா பார்க்கற? இவங்க யாருனு உனக்கு தெரியும் தானே." தேவநாதன் ரகுவிடம் உற்சாகமாகக் கேட்க,
"தெரியும் பெரியப்பா. ஆனா திடீர்னு எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்து இருக்காங்கனு தான் தெரியல." என்றான் யோசனையாக.
"ஷ்ஷ்ஷ்! ரகு." அவனை சிறு கண்டிப்புடன் அழைத்த தேவநாதன், "அதொன்னுமில்ல ஸார். அவனுக்கு கொஞ்சம் வொர்க் டென்ஸன். அதான் இப்படி," சமாளிப்பாகக் கூறி புன்னகைத்தவரிடம், சிறு சிரிப்பை உதிர்த்த ஆதிகேசவன்,
"புரியுதுங்க. நாங்க உங்களோட நேரத்தை விரயம் பண்ண விரும்பல, வந்த விசயத்தை சுருக்கமா சொல்லிடுறேன்." இருவரையும் பார்த்து தன்மையாக பதிலளிக்கவும், ரகுவிற்கே ஒருமாதிரியாகிப் போனது.
" ஸாரி ஸார். நான் உங்கள இன்சல்ட் பண்ற இன்டென்ஷன்ல கேட்கல. திடீர்னு வரவும் என்ன காரணம்னு தெரியாததால் டக்குனு அப்படி சொன்னேன். டோன்ட் மைன்ட் இட். சொல்லுங்க ஸார்." இயல்பாகப் பேசினான் ரகுவம்சி.
" புரியுது மிஸ்டர் ரகு. நாங்க இங்க எதுக்காக வந்திருக்கோம்னு சொல்லிடறேன். அதாவது, உங்க வீட்டு பொண்ணை எங்க பையனுக்கு பெண்கேட்டு வந்திருக்கோம்." பட்டென அவர் சொல்லவும், அங்கே கனமான அமைதி நிலவியது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். ரகுவின் பதில் என்னவாக இருக்கும் என்று யுவாவின் பெற்றோர் ஆவலுடன் இருக்க, அவர்களை குழப்பத்துடன் ஆராய்ச்சியாகப் பார்த்திருந்தான் ரகுவம்சி.
தேவநாதனுக்கு சொல்லவே வேண்டாம். 'எப்படித்தான் ஊர்ல இருக்கற பணக்காரங்க எல்லாம் இவங்க ரெண்டு பேரையே தேடி வர்றாங்களோ!?' மனதிற்குள் அதிசயப்பட்டு போனவர்,
'மறுபடியும் ஒரு அதிர்ஷ்டமா!! இதையாவது இந்த பைய கெடுத்து விடாம இருக்கனுமே கடவுளே!' ரகு கோபத்தில் எதுவும் எடுத்தெறிந்து பேசி தானாக வந்த அதிர்ஷ்டத்தை கெடுத்து விடக் கூடாதே என்று கடவுளிடம் அவசர வேண்டுதல் வைத்தார்.
சில நொடிகள் அமைதிக்கு பிறகு, "புரியல ஸார். என் தங்கை இப்பத்தான் படிப்பை முடிச்சு இருக்கா. நாங்க அவளுக்கு இப்ப கல்யாணம் பண்ற ஐடியாவிலும் இல்ல."
"அதோட அவளுக்கு நாங்க எந்த மேட்ரிமோனியல் சைட்லேயும் டீடெய்ல்ஸ் ஃபீட் பண்ணலையே. அப்றம் எப்படி நீங்க திடீர்னு?," என்றவனின் எண்ணம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது.
'ஆஹா! நினைச்ச மாதிரியே இந்த பைய கெடுத்து விடப் பார்க்கறானே.' மனதிற்குள் பரபரத்த தேவநாதன்,
"இல்ல ரகு, நாந்தான் தெரிஞ்சவங்க ஒருத்தர் மூலமாக தரகர்ட்ட மதுவோட ஜாதகத்தை கொடுத்து இருந்தேன்." அவசரப் பொய்யை அவிழ்த்து விட்டார்.
புருவ முடிச்சுடன் அவரை திரும்பிப் பார்த்த ரகு, " எங்கிட்ட நீங்க இதைப்பற்றி சொல்லவே இல்லையே பெரியப்பா?!" என்றிட, உடனே அவர் எங்களுக்கு அதற்குக் கூட உரிமை இல்லையா? எனக் கேட்டு அவனை அடக்க முயன்றார்.
மூன்றாம் மனிதர்கள் முன்னிலையில் என்ன பேச்சு இது என்று ரகு அதிருப்தியான பார்வையை அவர்மீது வீசியபடி அமைதியாக பார்த்தான். ஜெயந்தி கையைப் பிசைந்தபடி நின்றிருந்தார்.
ரகுவை அடக்கிய தேவநாதன், " நீங்க மேற்கொண்டு சொல்லுங்க ஸார்." ஆதிகேசவனை ஊக்குவிக்க, அவருக்கு இவர்களைப் பற்றிய மகளது கணிப்பு நினைவில் வந்து போனது.
அத்தோடு அவளுக்கு எப்படி இவ்வளவு துல்லியமாக இவர்களது மனநிலை தெரியும் என்ற சந்தேகமும் மனதினோரம் முளைவிட்டது.
"ஹான், அதான் ஸார், நீங்க சொன்ன மாதிரி அவர் மூலமா உங்க வீட்டு பொண்ணு மதுராவை பற்றி தெரிஞ்சது. எங்க மகனுக்கு பொருத்தமா இருப்பாங்கனு தோணுச்சு. அதான் பேசலாம்னு வந்துட்டோம்." தேவநாதனையொட்டி பேசி முடித்தார் கேசவன்.
"ஆனா அவளுக்கு இப்பவே கல்யாணம் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்ல ஸார். அதனால," ஆதிகேசவனிடம் நேரடியாகவே கிளம்பச் சொல்லும் தொனியில் ரகு இழுக்க,
"ரகு! கொஞ்சம் நேரம் அமைதியா இரு." என அடக்கினார் ஜெயந்தி.
அதென்ன பெரியவர்கள் பேசும்போது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முகத்தில் அடித்தமாதிரி பேசுவது என்று ரகுவின் பேச்சில் அவருக்கு சிறு கோபம் வந்து விட்டது.
தனது பெரிய அன்னையின் அதட்டலில் அவர் பேச்சைத் தட்டாத ரகு, கண்களைத் தாழ்த்தி அமைதியாகி விட, ரகுவைப் பற்றி மகள் கூறியது ஆதிகேசவன் மனதில் முளைவிட்ட சந்தேகத்திற்கு நீரூற்றியது.
அவர்கள் வந்த விசயத்தை முழுவதும் சொல்லி முடிக்க, முகம் முழுவதும் பிரகாசமான தேவநாதன், "இதுல எங்களுக்கு பரிபூரண சம்மதம்ங்க." என்றிட, "எதுக்கும் எங்க பொண்ணை கேட்டுட்டு சொல்றோம்ங்க." என்றார் ஜெயந்தி.
சரியாக அதேசமயம் சில்க் காட்டன் புடவையில், அளவான ஒப்பனையில் தளர பின்னலிட்ட கூந்தலில் வைத்த முல்லைச்சரம் சற்று வாடி இருக்க, முகத்தில் சாந்தம் தவழ பாந்தமாக வீட்டிற்குள் நுழைந்தாள் மதுரா.
தன் கல்லூரித் தோழியின் வீட்டு விசேஷத்திற்கு செல்வதால் அன்றைய தினம் அவள் விடுமுறை எடுத்திருக்க, வீட்டில் அமர்ந்திருந்த யுவாவின் பெற்றோரைக் கண்டு திகைத்தாள்.
அவர்களின் வருகை அவளுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று யுவா அதைப்பற்றி அவளிடம் முன்கூட்டியே எதுவும் கூறவில்லை. அவனுக்குமே இன்னாள் தான் அவர்கள் பெண்கேட்டு செல்வார்கள் என்பது தெரியாத காரணமும் கூட.
அவர்களைக் கண்ட மது கண்களில் கலக்கத்துடன் அதிர்ச்சியாக நிற்க, தங்கையின் எதிர்வினையை ஒரு ஆராயும் பார்வையோடு கண்டு கொண்டிருந்தான் ரகுவம்சி.
மதுராவை பார்த்த நிமிடமே ராஜலெட்சுமிக்கு மிகவும் பிடித்து விட்டது. மனக்கண்ணில் மகனோடு ஜோடி சேர்த்து 'பொருத்தமான ஜோடி' என்று மனநிறைவாக சான்றிதழ் வழங்கிவிட்டார்.
" இதோ மதுவே வந்துட்டாளே. அவள்ட்ட இப்பவே கேட்டுடுவோம்." தேவநாதன் மகிழ்வுடன் சத்தமாக சொல்ல, "ஒரு நிமிஷம் பெரியப்பா." என்று அவரை தேக்கினான் ரகு.
"நான் ஒன்னு கேட்கலாமா ஸார்? உங்கள மாதிரி ரிச்சானவங்க வந்து பெண் கேட்டா, மிடில் கிளாஸான நாங்க உடனே பொண்ணு கொடுத்துடுவோம்னு உங்களுக்கு யாரு சொன்னா?" ஆதிகேசவனை பார்த்து நிதானமாகக் கேட்டான்.
அவனது கேள்விக்கு சிறு புன்னகையை சிந்திய கேசவன், "அந்த மாதிரி நாங்க அந்தஸ்து பேதம் பார்க்கற மாதிரி இருந்தா, உங்க வீட்டுக்கு நேர்ல வந்து பேச வேண்டிய அவசியம் இல்லயே மிஸ்டர் ரகு." இயல்பாகவே கூறினார்.
அவரது பதிலில் யாருமறியாத மர்மப் புன்னகை அவனது முகத்தில் தோன்றி உதடுகளுக்குள் மறைந்தது.
"அப்படினா உங்க பிள்ளைங்க யாரையாவது காதலிச்சாக் கூட அந்தஸ்து வித்தியாசம் பார்க்காம அதை நிறைவேத்தி வைப்பீங்களா ஸார்?" ரகு அப்பாவியாக மீண்டும் கேள்வி எழுப்ப,
தன் காதல் விசயம் சகோதரனுக்கு தெரிந்து விட்டதோ என்று மதுரா கலக்கத்தில் நிற்க, யுவாவின் பெற்றோருக்கும் அதே சம்சயம் தோன்றிட புருவ முடிச்சுடன் பார்த்தார் ஆதிகேசவன்.
பிறகு ரகுவிற்கு அவர்களது காதல் விசயம் தெரிந்தாலும் நல்லது தானே என்று ஒரு முடிவுடன்,
"எங்க பிள்ளைங்க சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். அவங்களோட சந்தோஷத்துக்காக கண்டிப்பா அதையும் நிறைவேத்தி வைப்பேன் ரகு." உறுதியளித்தார்.
'சம்பந்தமே இல்லாம இவன் ஏன் இவர்ட்ட இப்படி எல்லாம் கேட்டுட்டு இருக்கான்?' என்ற குழப்பத்தில் தேவநாதனும் ஜெயந்தியும் ரகுவைப் பார்த்திருக்க,
தனது காதல் தெரிந்து அண்ணன் எப்படியும் இவர்களை அவமானப்படுத்தி அனுப்பப் போகிறான் என்ற கலக்கத்தில் அவன் அடுத்து பேசப் போவதை எண்ணி வருத்தமாக இருந்தாள் மதுரா.
அடுத்து வந்த அவனது பேச்சில் அங்கே ஊசி விழுந்தால் கூட சத்தம் வருமளவு அத்தனை அமைதி. சுற்றியிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு உணர்வில் சொற்களற்று போயினர்.