Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 103
- Thread Author
- #1
பகுதி - 26
ஆதிகேசவன் வந்தபிறகு மகளது வேகத்தையும் வேலையையும் கண்டு பெருமையடைந்தவர் அவளை ஓய்வெடுக்கச் சொல்லி வீட்டிற்கு அனுப்பினார்.
தொடர்ந்து பத்து நாட்களாக சொற்பமான தூக்கமும், பிரச்சனை தீர்க்கும் தீவிரமும் அவளை மிகவுமே சோர்ந்து போகச் செய்திருந்தது.
அவளது பொறுப்பில் கம்பெனி வந்தபிறகு தனியாளாக அவள் சந்திக்கும் முதல் இடர் என்பதால் மாரல் சப்போர்ட் எதிர்பார்த்து அவளது மனதின் மூலையில் சிறு ஏக்கம் ஒன்றிருந்தது.
அவளுக்கு ஆலோசனை, அறிவுரை பெரிதாக எதுவும் தேவையில்லை. வெப்பமாக தகிக்கும் கோடையில் லேசாக வருடும் தென்றலைப் போல 'உன்னால முடியும்டா.யோசி' என்று ஆதரவாக பற்றும் ஒரு கரம், சிறு வருடல்.
அவனுக்கு பிரச்சனை என்றாலே இவளிடம் வந்து ஆலோசித்து அபிப்ராயம் கேட்பவன் யுவா, அவனிடம் இதைச்சொல்லி தேவையில்லாமல் அவனை கலவரப்படுத்த அவளுக்கு விருப்பமில்லை.
அவனைத் தவிர்த்து அதை தரக்கூடிய சூழலிலிருக்கும், அவளது மனதிற்கு நெருக்கமாக அவள் உணரும் இரு ஆண்மகன்களில் ஒருவரான அவளது தந்தையோ அருகில் இல்லை.
அவள் உள்ளம்கவர் கண்ணாளனை அன்று ஷோஃபாவில் உறங்கும் போது கண்டதோடு சரி. அதன்பிறகு சந்திக்க நேர்ந்த ஓரிரு தினங்களில் கூட முகத்தைத் திருப்பிக் கொண்டு திரிந்தான்.
அவளுக்கிருந்த வேலைப்பளுவில் அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவனிடம் முறுக்கிக் கொண்டு தனியறை வந்தபிறகு தினமும் ஏதோ காரணம் கொண்டு அவளை அறைக்கு அழைத்து வம்பிழுக்கும் அவனது அடாவடி,
அவளுக்கு பிடிக்காதது போல காட்டிக் கொண்டாலும் உள்ளூர அதை மனம் விரும்பியதே! கடந்த பத்து நாட்களில் அயராத வேலைக்கு இடையிலும் கிடைக்கும் ஓரிரு நிமிடங்கள் கூட அவனுக்கான அந்த வெற்றிடத்தை அவளது உள்ளம் உணர்ந்தது.
சீக்கிரமே இந்த சிக்கலைத் தீர்த்துவிட்டு மீண்டும் அந்த நாட்கள் வேண்டுமென்று அவளது மனம் ஏங்கியது.
"என்னாச்சு யுவி? ரொம்ப டயர்டா தெரியற. எல்லாம் சரியாகிடும்." போன்ற அவனது அன்பில் தோய்ந்த அக்கறையை எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவன் செய்யும் வம்புகள் அவளது மனதிற்கு இதமாய் இருந்திருக்கும் என்றெண்ணினாள்.
அவன் கோபத்தை விட்டு இறங்கி வந்தபோது, அவள் பொய்யாய் காட்டிய தொடர் விலகலை நிஜமென்று நம்பி அவனும் அவளை விலக்கி விட்டானா?!
அவனது மனதில் தன்மீது ஏற்கனவே பணக்கார வீட்டுப்பெண் என்ற முத்திரை ஒன்றிருக்க, தற்போது தனது விலகலை காரணமாக கொண்டு கழட்டிவிட முடிவு செய்து விட்டானா?!
இடைவிடாத வேலைகளுக்கு இடையே இத்தகைய கேள்விகளும் வந்து அவளுள் தலைகாட்ட, "போனா போறான் விடு யுவனி." என அவளால் அவனை அப்படி விட்டுவிட முடியவில்லை.
'ச்சைக்! இதுக்குதான் அந்த யுவா பைய அப்டி செய்தான் போல. சரினு வாழவும் முடியல. ச்சீபோனு விட்டுதள்ளவும் முடியல.' காதலை எண்ணி அலுத்துக் கொண்டாள்.
கேசவன் அவளை வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கச் சொன்னதும் வழியெங்கும் இப்படி மனதிற்குள் புலம்பியதோடு,
'இன்னிக்கு அவனை ஒருவழி பண்ணப் போறேன். என்ன நினைச்சுட்டு இருக்கான்? இப்படியே காலத்தை ஓட்டலாம்னு முடிவு பண்ணிட்டானா? '
' இல்ல என்னை கழட்டி விடனும்னு நினைச்சுட்டு இருக்கானா? அப்படி மட்டும் எதாவது செய்யட்டும், அப்றம் இந்த யுவனி யாருன்னு காட்டறேன்.' என்றெல்லாம் சூளுரைத்துக் கொண்டு வந்தவள்,
அவன் வரும் வழக்கமான நேரத்தில் வீட்டிற்கு வந்ததால் அவனது அறையை நோட்டம்விட அங்கு நிற்க, வேகமாக வந்து திடீரென அணைத்த அவனது இந்த செய்கையை அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
அதற்கு எப்படி எதிர்வினை புரிவது என்றுகூட தெரியாமல் விழிகள் விரிய அவனது அணைப்பில் அடங்கி இருந்தாள்.
ஆனால் அவளை கட்டியணைத்த கண்ணாளனோ "ஸாரிடி! நான் அன்னிக்கு பேசுனதுக்கு ரியலி ஸாரி. அது ஏதோ ஒரு கோபத்துல அப்படி எல்லாம் சொல்லிட்டேன் யுவி."
"அதுக்காக என்னை விட்டு போயிடுவியா நீ? அப்ப என்னை காதலிக்கிறதா சொன்னது எல்லாம் மறந்துட்டியா?" என்று பிதற்றிக் கொண்டிருந்தான்.
அவனது அணைப்பில் பரிதவிப்பை உணர்ந்தவள் நொடிகளில் இயல்புக்கு வந்து அவனை அணைத்தபடி ஆதரவாக அவனது முதுகை வருடிவிட்டாலும் அவனது பிதற்றல் நின்றபாடில்லை.
"நான் என்ன பண்ணுவேன்? எங்கம்மா பணக்கார வீட்ல காதலிச்சு கல்யாணம் செய்து அங்கே அவங்க பட்ட அவமானங்களும், அங்கிருந்து வந்தபிறகு என் அப்பாவை மறக்கவும் முடியாம, வெறுக்கவும் முடியாம அவங்க பட்ட கஷ்டங்களையும்,
அவங்க கைப்பட எழுதி வைச்சதுல படிச்சதுமே பணக்காரர்கள்னா அப்படியொரு வெறுப்பு. அதுலேயும் நீ உன்னோட தம்பிக்காக பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டனு தெரிஞ்சு கோபம் வந்துடுச்சு."
" நான் உன்னை மனசார விரும்பத் தொடங்கி, உங்கிட்ட என் காதலை வெளிப்படுத்த நினைச்சுகிட்டு இருக்கும் போது இப்படி ஒரு உண்மை எனக்கு தெரிய வந்ததும், அதான் அந்த கோபத்துல பேசிட்டேன். அதுக்காக டிவோர்ஸ் வாங்கிட்டு என்னைவிட்டு போயிடுவியா?" என்றதும்,
அதுவரை அவன் மனதிலிருந்த அத்தனையும் கொட்டுகிறான் என்றெண்ணி"வசி! காம்டவுன்." என மென்மையாக வருடியபடி அவனை அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தவள்,
"என்ன உளர்றீங்க?" என்றபடி அவனிடமிருந்து விலக முயல, அதற்கு அவன் விட்டால் தானே! கைகளுக்குள் இறுக்கமாக அவளை சிறை செய்திருக்க அவளால் அசையக்கூட முடியவில்லை.
திமிறிக் கொண்டு வெளியே வர முடியும்தான். ஆனால் அவன் சொன்ன சேதியின் குழப்பத்தில் இருந்தவள் அதை செய்யவில்லை, அத்தோடு இத்தனை நாட்கள் அவனது விலகலையெண்ணி உள்ளுக்குள் தவித்தவளாயிற்றே.
"நான் ஒன்னும் உளறலை. அட்வகேட் பத்மாவதியை நீ பார்க்க போனியா இல்லையா? அதோட நீ வேற இந்த ஒரு வாரமா வீட்ல இருக்கறதே இல்ல."
"என்னைப் பார்க்கக்கூட உனக்கு பிடிக்கலையா? எ.. என்னை வெறுத்துட்டியா யுவி? " அவளை கைகளுக்குள் இறுக்க அடக்கியபடி முழு தவிப்போடு கூறினான் அவன்.
அவன் சொன்னதைக் கேட்டு எப்போது என்று யோசனையான யுவனிக்கு மெட்டீரியல் டீலரிடம் அவசரத்தில் வாங்கும் பொருட்கள் என்பதால் லீகலாக பதிவதற்காக டாக்குமெண்ட் தயாரிப்பிற்கு அவரை அணுகியது நினைவில் வந்தது.
அவனிடமிருந்து விலகி அதை விளக்க அவள் முனைய, அவன் விட்டால் தானே, எங்கே சற்று விலகினாலும் எதாவது பேசிவிட்டு அவளது அறைக்குள் அடைந்து கொள்வாளோ என்ற ஐயம்!
அவன் எண்ணம் புரிந்தவள், தலையை மட்டும் நிமிர்த்தி அவனைக் கண்டு இதழ்கள் பிரியாமல் புன்னகைக்க, அவளது முகம் பார்த்தவன் குழம்பினான்.
"பேருதான் பெரிய ஆடிட்டர். ஆனா கணக்கை தவிர வேற ஒன்னும் தெரியறதில்ல. அவங்க ஃபேமிலி லா மட்டும் பார்க்கறது இல்ல. லீகல் டாக்குமெண்டரியும் செய்வாங்கடா என் மக்கு புருசரே!" சிரிப்புடன் கூறினாள்.
அவளது ஒருமை அழைப்போ கேலியோ எதுவும் உணராமல் அவன் இன்னமுமே விழித்தபடி நிற்க, கடந்த பத்து நாட்களாக அவள் எதிர்கொண்ட பிரச்சனையோடு, அவரை எதற்காக சந்தித்தாள் என்பதை விளக்கவும் அவனுக்கு சற்று நிம்மதியானது.
தனது சூழ்நிலையை விளக்கிய யுவனிக்கு அப்போதுதான் அவன்மீது கோபமாக இருந்தது நினைவில்வர அவனிடமிருந்து விலக முயன்றாள்.
"என்ன கோபமா இருந்தாலும் இப்படியே இருந்து சண்டை போடு யுவி. ப்ளீஸ்!" என்றிட, 'ம்க்கும்! இப்படி இருந்தா எப்படி சண்டை போட்றதாம்?' மனதிற்குள் செல்லமாக அலுத்தாள் அவள்.
அவள் தனியாக பிரச்சனையை எதிர்கொண்டபோது ஒரு மாரல் சப்போர்ட்டாக அவளது மனம் அவனைத் தேடியதைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு அவனது மனதில் அவ்விசயம் துளிதுளியாய் இறங்கி தித்தித்தது.
அவனுக்கான அவளது தேடலின் மகிழ்வை அவள் கன்னங்களில் முத்திரையாக பதித்தவன், அவள் மனம் அவனை நாடியிருக்க, இது தெரியாமல் தான் முறுக்கிக் கொண்டு சுற்றினோமே என்று வருந்தினான்.
"ரியலி ஸாரிடி பொண்டாட்டி! நீ எங்கிட்ட எதுவுமே சொல்லலையா, நானும் அந்த கோபத்துல இருந்துட்டேன். நானாவது கேட்டு இருக்கனும்." அவன் சொன்னபிறகு தான் அவளுக்கும் அது தோன்றியது.
அங்கே என்ன நடக்கிறது என்று அவனுக்கு தெரியாமல் எங்ஙனம் தனக்கு ஆறுதல் தருவான் என்ற லாஜிக் புத்தியில் உரைக்க, அவளும் அமைதியாகி விட்டாள்.
சில நொடிகள் இருவருமே அந்த ஏகாந்தத்தை ரசித்தபடி அப்படியே இருந்தனர். விட்டுச்சென்று விடுவாளோ என நினைத்து தகித்த அவனது தவிப்புகள் தீர்ந்ததும், அவளுக்கான தாபம் அவனுள் மேலிட,
"சரி போனது போகட்டுமே. இனிமே இந்த ஈகோ எல்லாம் விட்டுட்டு நமக்கான வாழ்க்கையை வாழலாமா யுவி?" அவளது காதுமடலில் இதழ்கள் உரசக் கூறியவனது கரங்களின் அழுத்தம் வேறு சேதி சொன்னது.
அதில் அவள் பட்டென்று நிமிர்ந்து பார்க்க, அவன் கண்களில் தென்பட்ட உணர்வில் அவளது கன்னங்கள் சூடேறியது. "இப்பவே வாழனுமா?" நாணத்துடன் மெல்லிய குரலில் கேட்டவளது குரல் அவளுக்கே புதிது.
அதற்குமேல் அவளை பேசவிடாமல் அவளது இடையில் ஒருகரமும், பின்தலையை அழுத்தமாக பற்றிய கரமுமாக அவள் இதழ்களில் இதழ் பூட்டி அவன் காட்டிய மாயத்தில், அதன் கனம் தாளாமல் கண்கள் மூடியவளின் விழிகளில் அச்சாரமாக முத்தமிட்டவன்,
அவன் மனம் கவர்ந்தவளை கொஞ்சம் கொஞ்சமாய் கொண்டாடி மொத்தமாக கொள்ளையிட, அழகான தாம்பத்யம் அரங்கேறியது.