• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
97
 பகுதி - 9

உணவுமேசையில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்த ஆதிகேசவன் வீட்டினுள் நுழைந்த யுவனியை கண்டு,

"நீ ஏதோ ஃபங்ஷனுக்கு போயிருக்க, வர லேட்டாகும்னு அம்மா சொன்னாளே. அதுக்குள்ள ஃபங்ஷன் முடிஞ்சுடுச்சாம்மா? போன வேகத்துல வந்துட்ட?" ஆச்சர்யமாகக் கேட்டார்.

" ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குப்பா. மெஷினரிஸ் பர்ச்சேஸ் பண்ணுனோம்ல அதோட டெலிவரிக்கு இங்க சில ஃபார்மலிட்டீஸ் எல்லாம் முடிக்க வேண்டி இருக்கு. உங்களுக்கு தான் தெரியுமே." என்றபடி வந்து சாப்பிட அமர்ந்தாள்.

டைனிங் டேபிளுக்கு வந்த ராஜலட்சுமி, மகளும் சாப்பிட அமர்ந்திருப்பதை பார்த்து," நீ இன்னமும் சாப்பிடலையா யுவனி? நீ வந்தபிறகு தான் சாப்பிடுவேன்னு யுவா ரூம்ல இருக்கான்." என்றார்.

யுவனிக்கு அப்போது தான் சகோதரன் என்ன மனநிலையில் இருப்பான் என்பது நினைவு வர, "நீங்க சாப்பாட்டை கொடுங்கம்மா. நாங்க அங்கயே சாப்பிட்டுக்கிறோம்." தட்டை வாங்கிக்கொண்டு வேகமாக எழுந்து மாடியில் அவனது அறைக்கு விரைந்தாள்.

சற்றுமுன் யுவனி சென்றதை அறிந்து யுவனியின் எண்ணிற்கு அழைத்து ஓய்ந்த யுவா சட்டென யோசனை தோன்ற வினோத்திற்கு அழைக்க, யுவாவின் பேச்சை மீறி யுவனியிடம் இடத்தை சொன்னதால் யுவாவின் அழைப்பை அவனும் ஏற்கவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் அலைப்புற்றவனை தாய் வந்து உணவிற்காக அழைத்தபோது, அப்போதைக்கு அவனுக்கு தனிமை தேவை என்பதால் யுவனியுடன் உண்பதாகக் கூறி அனுப்பி விட்டான்.

'அவள்தான் விசேஷத்திற்கு போயிருக்காளே. அவ அங்கேயே சாப்பிட்டுட்டு வந்துடுவா கண்ணா. நீ வாயேன் ' என்று கெஞ்சிய தாயை ஒருவாறு சமாளித்து அனுப்பினான்.

மதுராவின் திருமணம் நடக்கும் இடத்திற்கு செல்லவும் அவனுக்கு தயக்கமாக இருந்தது. யுவனி என்னென்ன செய்து வைக்க போகிறாளோ என்ற கலக்கம் வேறு ஒருபக்கம் படுத்தியது.

அப்படியே அமர்ந்து தலையை உள்ளங்கைகளில் தாங்கி குனிந்திருந்தவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு தாய்தான் திரும்ப வருகிறாரோ என்ற எண்ணத்தில் பாராமலேயே, "ப்ளீஸ்ம்மா. லீவ் மீ அலோன் சம்டைம்" என்றான்.

"ஏன் மறுபடியும் கையை அறுத்துட்டு உங்க அமரக்காதலை அரியாசனம் ஏத்தப் போறீங்களா மிஸ்டர் யுவ்ராஜ்."
யுவனியின் கேள்வியில் படக்கென்று திரும்பி பார்த்தவன் அவளிடம் ஓடி வந்தான்.

" ஹே யுவனி! வந்துட்டியா? அங்க என்னாச்சு? நீ எதுவும் குழப்பம் பண்ணிடலையே. ஹனியை எதுவும் ஹர்ட் பண்ணிட்டியா?" வேகமாக கேள்விகளை அடுக்கியவனை முறைத்தபடி வந்தாள் யுவர்ணிதா.

"அவமேல உனக்கு கொஞ்சங்கூட கோபமே இல்லையாடா? உன்னை வேணாம்னு சொன்னவளை நான் ஹர்ட் பண்றது என்ன, கட் பண்ணினாக்கூட என்னைப் பொறுத்தவரை சரிதான்."
அவனை திட்டித் தீர்த்தாள்.

"பாவம். அவ என்ன சூழ்நிலையில இருந்தாளோ தெரியாதே யுவனி. ஆனா கண்டிப்பா ஹனி மனசார எங்கிட்ட அப்படி பேசி இருக்க மாட்டா."

" என்னால்தான் அவள் இல்லாம வாழ முடியாது. அதனால செய்த காரியம் தான் அது. இப்ப யோசிச்சா, ஒருவேளை எனக்கு எதாவது ஆகி நான் இறந்தாலும் அவ சந்தோஷமா இருக்க மாட்டா." அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டே போக

அவர்கள் இருவரின் காதலைக் கண்டு இத்தனை புரிதலுடன் காதலிக்க முடியுமா!!? என்று அவனை எண்ணி ஆச்சர்யமாக பார்த்தாள் யுவனி.

" சரி அதை விடு. நீ அங்கே எதுவும் அவ சங்கடப்படுற மாதிரி செய்து வைக்கலையே?" மீண்டும் அதை உறுதிப்படுத்தும் வகையில் கேட்டபடி வந்து நின்றான் மதுராவின் காதல் பைத்தியம்.

"யப்பா சாமி! உன் ஆளை நான் எதுவுமே சொல்லலையப்பா. நான் போகலைனா அவதான் கொஞ்ச நேரத்துல பரலோகம் போயிருப்பா." கையெடுத்துக் கும்பிட்டு கூறினாள்.

யுவனி சொன்னதைக் கேட்டு யுவா அதிர்ச்சியில் உறைந்து நிற்க, "முதல்ல வந்து உட்காரு. சாப்பிட்டு முடிப்போம். எனக்கு பயங்கரமா பசிக்குது." தட்டோடு சென்று இருக்கையில் அமர்ந்து இருவரின் தட்டுகளை மேசையில் வைத்தாள் அவள்.

தலையை உலுக்கி இயல்புக்கு வந்தவன் " என்ன சொல்ற யுவனி!!? ஹனி?? ஆனா ஏன் அப்படி செய்யப் பார்த்தாள்? அவதான்.." என்ன நடந்தது என்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்துடன் இருந்தான்.

கண்களை சுழற்றி அவனைப் பார்த்த யுவனி, " முதல்ல சாப்பிடு. அப்றம் தான் மீதி எல்லாம். இப்போதைக்கு அவளுக்கு கல்யாணம் ஆகலை. அது மட்டும் தான் சொல்வேன்." என்றவள் அவனிடம் தட்டைக் காட்டி விட்டு, தனது தட்டிலிருந்து தோசையை விண்டு வாயிலிட்டாள்.

அவசரமாக ஓடிவந்து அமர்ந்தவன் தட்டிலிருந்த மூன்று தோசைகளை முப்பது நொடிகளுக்குள் சட்டென விழுங்க முயல, 'உன் அவசரத்துக்கு எல்லாம் உள்ள போக மாட்டேன்' என்று உணவு தொண்டையை அடைத்தது.

"மெதுவா தான் சாப்பிடேன்டா. விக்கிட்டு எதாவது ஆகிடப் போகுது." அவனுக்கு தண்ணீரைக் குடிக்க கொடுத்து, பாசத்துடன் அவனது நெஞ்சில் நீவி விட்டாள் யுவனி.

பாவம் பையன்.. குங்ஃபூ பாண்டா டம்ப்ளிங்ஸை வாயிலடைத்தது போல வாய் நிறைய தோசையை திணித்து வைத்து, அதற்கிடையே கிடைத்த மிமீ இடைவெளியில் சில எழுத்துகளை துப்பியும், கையை ஆட்டி சமிக்ஞை செய்தபடியும் என்ன நடந்தது என்று கேட்டான்.

'முழுசா சாப்பிட்டு முடிச்சா தான் சொல்வேன்' என்று யுவனியும் செய்கையிலேயே சொல்ல, வேகமாக வாயிலிருப்பதை கஷ்டப்பட்டு தொண்டைக்குள் தள்ளியவன், " இப்ப சொல்லு என்னாச்சு?" மூச்சிரைக்க சிரமத்துடன் கேட்டான்.

அவனது தலையில் லேசாக தட்டிய யுவனி, மதுவின் அறையில் அவள் நுழைந்தது முதல் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.

அதைக்கேட்ட யுவாவிற்கு மதுவை நினைத்து வருத்தமும் கோபமும் ஒருங்கே எழும்பியது.

தனது சகோதரனுக்காக தன்னுடைய காதலை இழக்க துணிந்தவள், அதை ஏற்கவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் மனதிற்குள் எத்தனை வேதனையடைந்திருப்பாள் என்று வருத்தம்.

'அவனை வெறுக்கும்படி திட்டினால் அவளை வெறுத்து மறந்து விடுவேன் என்று தன்னைப் பற்றி அவள் எப்படி அப்படி நினைக்கலாம்? அப்படின்னா என் காதல்மீது அவளது நம்பிக்கை அவ்வளவுதானா?' என்ற கோபம்.

யுவனி சொல்லி முடித்தபிறகும் அமைதியாக இருந்தவனை தோளில் தட்டி என்னவென்று வினவ, ஒன்றுமில்லை என தலையசைத்து மேலும் சில நொடிகள் மௌனமாக இருந்தவன்,

"ஆனா யுவனி, மேரேஜ்க்கு தயாரா இருந்த அந்த பொண்ணும் பையனும் திடீர்னு கல்யாணம் நின்னதால மனசு கஷ்டப்பட்டு இருப்பாங்கள்ல" என்றவனை தீவிரமாக முறைத்தாள் சகோதரி.

"ஆமால. சரி என்ன பண்ணலாம்? நான் போய் வேணும்னா அவங்கள்ட்ட பேசி திரும்பவும் உன் காதலிக்கும் அவளோட அண்ணனுக்கும் நின்னு போன அவங்களோட கல்யாணத்தை நடத்தி வைச்சுட்டு வரவா?" கடுப்புடன் கேட்க, முறைப்பது இப்போது யுவாவின் முறையானது.

"பின்னே என்னடா? அக்ச்வலி உன்னோட காதலை காப்பாத்த நீதான் இதெல்லாம் செய்திருக்கனும். உனக்காக நான்போய் செய்தேன்ல, நீ இதுவும் கேட்ப இதுக்கு மேலேயும் கேட்ப." இடுப்பில் கையூன்றி முறைத்தவள்,

" தோபாரு. இதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாது. இன்னமும் அவ படிப்பு முடிக்கனும், வேலையில சேரனும்னு காரணம் சொல்லி நாளை தள்ளிட்டு இருந்த, வேற எவனாவது வந்து அவளை தள்ளிட்டு போயிடுவான்."

" சீக்கிரமே ஆம்பளையா லட்சணமா கம்பெனி பொறுப்பை எடுத்து நடத்தி ஒரு பொசிஷன்ல வந்துட்டு அவளைப் போய் பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ற வழியைப் பாரு."

" இனிமே இந்தமாதிரி வேலை எல்லாம் என்னால செய்ய முடியாது. நான்போய் பவர் நாப் எடுத்துட்டு ஃபேக்ட்ரிக்கு போறேன். ஏகப்பட்ட வேலை பெண்டிங்ல இருக்கு." என்றபடி அறையை விட்டு வெளியேறினாள்.

யுவனி சென்றுவிட யுவாவும் அதைப்பற்றி தான் யோசித்து கொண்டிருந்தான். முதலில் மதுராவை அழைத்து தன்னைப்பற்றி அவள் எப்படி அம்மாதிரி கணிக்கலாம் என்று சண்டையிட வேண்டும் என்றெண்ணி அவளுக்கு அழைத்தான்.

°°°°°°°°°°°°
தனது பெரியப்பாதான் ஏதோ திருகுதாளம் செய்துள்ளார் என்பது அவரது அவசர சமாளிப்பான பேச்சில் அறிந்துகொண்ட மதுவிற்கு அவர்மீது கோபமாக வந்தது.

அது ஒருபுறம் இருக்க திருமணம் நின்றுவிட்டது பற்றி எப்படியும் யுவனி நடந்ததை சொல்லி இருப்பாள் இனி யுவாவிடம் எப்படி தன்னை விளக்கி சமாதானம் செய்வது என்று தவிப்புடன் தனது அறையில் தீவிர சிந்தனையில் இருந்தாள்.

சரியாக அதேநேரம் அலைபேசி ஒலிக்கவும், அதில் திடுக்கிட்டவள் எடுத்துப் பார்க்க அன்று பேசிய அதே எண்ணிலிருந்து அழைப்பு வரவும் கலவரத்துடன் எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.

எப்படியும் பேசிதானே ஆக வேண்டும் என தன்னை சமா ளித்துக் கொண்டு மூச்சை இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்தியபடி அழைப்பை ஏற்றாள்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top