• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
537
இருவரும் முதல் தீண்டலில் உலகை மறந்து அவர்கள் லோகத்தில் இருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டது.

அனேகமாக உன் அண்ணன் கரடி பயலா தாண்டி இருப்பான் என்றவன் மனமேயின்றி மனைவியை விலக்கியவன் கலைந்திருந்த தாமரையின் தலைமுடியை கோதி விட்டு உள்ளே போய் கதவை திறக்க வேலு தான் நின்றான்.

என்னடா என்க...

மிலிட்ரியும் அத்தையும் வந்துருக்காங்களென்கவும், அப்படியா என்றவன் உன் தங்கச்சி பாத்ரூம் போயிருக்கா சொல்லிட்டு வரேன் என்றவன் தாமரை..லாரன்ஸ் அப்பாவும் ஜூலி அம்மாவும் வந்துருக்காங்க சீக்கிரம் வா என்று சொல்லி விட்டு கதவை சாத்தியபடி வேலுவோடு கீழே வந்தான்.

எங்கப்பா மருமகளென்று லாரன்ஸ் கேட்க இதோ மாமா என்றவாறு கீழே வந்தவள் கணவனோடு சேர்ந்து இருவர் காலில் விழ காட் பிளஸ்யூ என்றனர்.

நல்லா இருக்கீங்களா மாமா,அத்தை என்று தாமரை கேட்க,நல்லா இருக்கோம் மா.பெருமாள் நீ வந்துருக்கனு சொன்னான் அதான் உன்னை பார்த்துட்டு போகலானு வந்தோமென்றனர்.

அப்பாடி உன் மருமவள் எங்கையும் ஓடிட மாட்டாள் சாப்புட்டு பொறுமையா பேசுங்களென்று வள்ளி அப்பாயி சொல்ல...

இதுக்கு தான் என் செல்லம் வேண்டும்னு சொல்லுறது. இப்படி சரியான நேரத்திற்கு சரியான பாயிண்டை புடிப்பதால் சகலை உன்னை இந்த வீட்டில் பிரகிணென்ட் ஆக்கியிருக்காரு செல்லமென்க...

அடேய் அறிவுகெட்டவனே என்ன பேச்சுடா என்று முத்து குரல் கொடுக்க...

மற்றவர்கள் வேலு சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்துவிட்டனர்.

ஏய்யா அப்பு உன் அத்தை மவன் என்ன சொல்லுறான்யா என்று வள்ளி அப்பாயி கேட்க...

நான் சொல்லுறேனென்ற குரல் கேட்டு எல்லாரும் வாசல் பக்கம் பார்த்தனர். அங்கே நான் வந்துட்டேனென்று நிகிலன் நின்றான்.

சின்னைய்யா வா வா என்ன கண்ணு வரேண்ணு சொல்லவேயில்லை என்று அப்பாயி சின்ன பேரனை நோக்கி கையை நீட்டினார்.

வேகமாக வந்து தனது பாட்டியை அணைத்தவனை கிள்ளி முத்தமிட்டவர் எய்யா கண்ணு பரிட்சை நல்லா எழுதியிருக்கியா ராசா என்றார்.

நல்லா எழுதியிருக்கேன் அப்பாயி. இன்னும் ரெண்டு மாசம் வரைக்கும் உன் உசுர வாங்கிட்டு தான் நான் போவேன் என்று நிகிலன் சொல்ல தாராளமா வாங்கு கண்ணு.நீ வாங்காம வேற யாரு கண்ணு வாங்கவா என்றவர் பாரு யார்லாம் வந்துருக்காங்களே என்று காட்ட..

தாமரையை பார்த்து அதிர்ந்தான்.

பின்னர் அனைவரிடமும் நலம் விசாரித்தவனை கை கால் கழுவிட்டு வா கண்ணு சாப்டலாமென்றனர்.

ஆமா ஆமா முதல்ல சோத்தை கண்ணுல காட்டுங்கயென்று வேகமாக மாடியில் இருக்கும் தனது ரூமிற்கு போனவன் ப்ரஷாகி சிறிது நிமிடத்தில் கீழே வந்து எல்லாரோடும் சேர்ந்து உட்கார தாமரை சீதா-ராதா மூவரும் ஆண்களுக்கு பரிமாறினார்.

சிறிது நிமிடத்தில் பேச்சோடு அவர்கள் சாப்பிட்டு திண்ணைக்கு போக பெண்கள் ஒன்றாய் உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

அப்புறம் தாமரை அடுத்து உன்னுடைய பிளான் என்னம்மா என்று ஜூலி கேட்க இனிமே இங்க தானுங்கத்தை என்று சிரித்தாள்.

அப்படியா தாமரை ரொம்ப சந்தோஷம் சீக்கிரம் பேரனையும் பேத்தியையும் பெத்து கொடு எங்களுக்கு என்று சொல்ல, சரிங்கத்தை என்று வெட்கப்பட்டவளை தூரத்தில் இருந்து பார்த்த கதிருக்கு என் பொண்டாட்டி எவ்வளவு மென்மையா இருக்காளென்று மனதிற்குள் சொல்லினான்.

மேலும் சிறிது நேரம் பேசி இருந்து விட்டு லாரன்ஸ் ஜூலியும் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல தாமரையும் கதிரும் நீலகிரிக்கு செல்ல தயாரானார்கள்.

ஐயோ பஸ்லயும் புடவையை கட்டிக்கிட்டு போறதா என்று முணுமுணுத்துக் கொண்டே பேக்கிங் பண்ணிக் கொண்டிருந்தவளை பின்பக்கமாய் அணைத்தவன் சுடிதார் போட்டுக்கோ.ஆனால் வீட்ல இருக்கும்போது மட்டும் புடவை கட்டிக்க என்று சொல்ல நன்றியோடு அவனை அன்னார்ந்து பார்த்தவளை ஏய் முட்டகண்ணி இப்படிலாம் பாக்காதடி.
அப்புறம் நீலகிரி பயணம் கேன்சல் ஆகிவிடும் சொல்லிட்டேன் என்று பிடியை இறுக்க ம்ம் என்றாள்.

சரி ரெடியாகி கீழே வா நான் பேகை கொண்டு போய் கீழே வைக்குறேன்.
10.30 க்கு பஸ் டி என்றான்.

சரி,விட்டா தானே ரெடியாக என்றவளிடம் ஏண்டி ரெண்டு வருஷம் கழித்து இன்னைக்கு தான் டி என் கையில வந்து சேர்ந்துருக்க. இனி ஆயுசு முழுவதும் இவன் கிட்ட இருந்து உனக்கு விடுதலை இல்லடி என்று தாமரையின் தலையில் முட்ட...

நானும் விடுதலை வேண்டுமென்று கேட்கவில்லையே என்றாள்.

ஓஓஓ...

கேட்டு பாருடி அப்புறம் தெரியுமென்க,அதான் கேட்கலைனு சொல்லுறேனே பிறகென்ன வாதமென்றவளை இது வாதம் இல்லடி அச்சாரமென்றவன் உனக்கு தாலிகூட இன்னும் பிரிச்சி போடலை இல்லையா என்று கேட்டான்.

ஹம் இப்போவாது இந்த கொய்யாக்கு ஞாபகம் வந்துச்சே என்றவள் கயிறும் நஞ்சி போய் தான் இருக்கு மாம்ஸ் என்றாள்.

ஏய் இது எனக்கு ஞாபகம் இல்லாமல் இருக்குமாடி என்றவன் ரொம்ப நஞ்சி போய்டாடி என்றவாறு தாமரையின் கழுத்தில் இருந்த தாலிகயிற்றை எடுத்து பார்க்க அங்கங்கே நஞ்சுபோய் தான் இருந்தது.

சரிடி நீலகிரி போய்ட்டு வந்த உடனே மாத்திடலாமென்றவன் தாமரை பேக் பண்ணிய டிராலியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.

கணவன் போனதும் கதவை அடைத்து அதன் மேல் சாய்ந்து நின்றவள் ஹப்பாடா என்று மூச்சுவிட்டாள்.

இவங்க பக்கத்தில் வந்தாவே ஒரு வேலையும் புரியமாட்டேங்குது. சரியான ராட்சசனா இருப்பார் போலயென்று சொல்லியபடியே எடுத்து வைத்த சுடிதாரை மாற்றி தயாரானவள் மீண்டும் சரியாக இருக்கிறதாயென்று கண்ணாடியை பார்த்துவிட்டு,பின்னர் ரூம் கதவை சாற்றிக்கொண்டு கீழே வந்தாள்....!

வீட்டில் உள்ளவர்களிடம் இருவரும் சொல்லிக்கொண்டு வெளியே வர அங்கே சிவாவும் வளவனும் காரின் முன்னிருக்கையில் உட்கார்ந்து இருந்தனர்

இருவரும் பின் சீட்டில் போய் உட்கார்ந்ததும் தேனுரை நோக்கி கார் சென்றது. அரைமணி நேரத்தில் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து சேர அவர்கள் செல்லும் பஸ்ஸூம் அங்கே தயாராக இருந்தது.

சரிடா நீங்க கிளம்புங்களென்றவாறு கதிர் தன் மனைவியோடு பஸ்ஸில் ஏற சரி பார்த்து போங்களென்று இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

லக்கேஜை தலைக்கு மேல் இருக்கும் இடத்தில் வைத்தவன் ம்ம் உட்காரு என்க ஜன்னல் பக்கம் போய் தாமரை உட்கார மனைவியின் அருகில் கதிர் உட்கார்ந்தான்.

அங்கங்கே பேருந்தில் சிலர் ஜோடியாகவும் தனித்தனியாகவும் உட்கார்ந்திருந்தனர்.தாமரைக்கு தான் கொஞ்சம் படபடப்பாக இருந்தது.
இது தான் கணவனோடு செல்லும் முதல் பேருந்து பயணம் என்பதால் அவளின் மனதிற்குள் ஏனோ இனம்புரியாத உணர்வு வந்தது.

கதிரோ இன்னும் ஏன் பஸ் எடுக்கவில்லை என்று சுற்றி பார்த்தவாறு இருந்தவன் மனைவியை கவனிக்கவில்லை.

நேரம் வந்ததும் பஸ்ஸூம் தேனூரிலிருந்து கோவையை நோக்கி கிளம்பியது.

டிக்கெட் டிக்கெட் என்று நடத்துனர் வர இரண்டு கோவை என்று பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்தான். அவரும் இரண்டு டிக்கெட்டை கொடுத்து விட்டு மீதி பணத்தை கொடுத்து செல்ல அதை பாக்கெட்டில் வைத்தவன் அப்பறம்டி என்று சிறிது சாய்ந்து உட்கார தாமரைக்கோ பேரவஸ்தையாக இருந்தது
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
537
.

என்னடி வாய்ல புண்ணா இல்லை புண்ணாக்கா?

உம்முனு இருக்க என்றவன் மனைவியின் தோளில் சாய பதற்றத்தோடு இது பஸ்ஸூ என்றாள்.

ஏண்டி நான் மட்டும் என்ன இது கட்டவண்டினா சொன்னேன் என்றவன் நிமிர்ந்து உட்கார்ந்து மனைவியை சிரிப்போடு பார்க்க... என்ன இளிப்பு வேண்டிகிடக்கு என்றவளின் இடது கையை பிடித்தவன் தன் கரத்தோடு கோர்த்து உதட்டில் வைத்து முத்தமிட அய்யோ என்று பதறினாள்.

ஏய் எதுக்குடி இப்படி கத்துரயென்று பல்லை கடித்தவாறு கதிர் கேட்க,யாராவது பார்த்தால் என்ன ஆவதென்று கையை உருவிக்கொண்டாள்.

மேலும் தன்னவளை சோதிக்காமல் இந்த நிமிடத்தை கண்மூடி ரசிக்க தொடங்கினான்.

சில நிமிடங்கள் கடந்து சென்று பஸ்ஸில் விளக்குகள் அணைக்கப்பட ஜன்னல் வழியாக வந்த சில்லென்ற காற்று ஊசி போல் உடம்பில் ஏறியதும் இரு கைகளையும் தேய்த்தவளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நீலகிரியில் இருந்து இங்கு வந்த ஞாபகம் வந்தது.

அப்பொழுது...என் பொண்டாட்டி அப்படி என்னத்தை யோசிக்கிறாளென்று கதிர் கிசிகிசுப்பாய் கேட்க தாமரை தான் திக்குமுக்காடி போனாள்.

அதுவந்து வந்து என்க...

ம்ம் வந்து என்றான்...

ஒன்னும் இல்லை தூக்கம் வருதென்று கண்ணை மூடியவளின் நெஞ்சுக்குள் துடிப்புகள் வேகமாக இசைத்தது.

இருவரும் இருவரின் அருகாமையை மனதிற்குள்ளே மௌனமாய் ரசித்தவாறு தூங்கினர்.

நேரமும் கடந்து ஓட காலை ஆறு மணிக்குலாம் முதல் நாள் இரவில் தேனூரில் கிளம்பிய பஸ் கோவை பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

கோவை வந்துடுச்சி என்று சொல்லிக்கொண்டே நடத்துனர் கீழே இறங்கி செல்ல பஸ்ஸில் இருந்த ஒரு சிலரும் கீழே இறங்கிய பின் லக்கேஜ் பேகை கதிர் எடுக்க இவர்களும் பஸ்ஸிலிருந்து இறங்கினர்.

தாமரை காபி டீ எதாவது குடிக்கிறியா என்க,இன்னும் பிரஷ் பண்ணலையே என்றவளுக்கு ஆடு மாடுலாம் பல்லு விளக்கிட்டுதான் சாப்பிடுதோ என்றான்.

நீங்கள் எப்படியென்று எனக்கு தெரியாது. பட் நான் பிரஷ் பண்ணிய பிறகுதான் குடிப்பேன் என்றவளை பார்த்தவன் ஆஹான்..

அப்போ என்ன ஆடு மாடுனு சொல்லுற அப்படி தானே என்று கேட்க... நீங்கள் சொன்னதற்கு பதில் சொன்னேன் அவ்வளவு தான் என்றாள்.

நல்லா பேசுறடி என்றவன் சரி வா பஸ் ஏறலாமென்று நீலகிரிக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தனர்.

நீலகிரி:


ஒன்னரைமணி நேரம் மலைகளின் ஊடே ஊர்ந்து சென்ற பேருந்தும் கடைசி ஸ்டாப்பிங்கில் வந்து நின்றது.

அன்று தனியாக இந்த ஊரை விட்டு போனவள் இன்று கணவனோடு தான் வளர்ந்து வாழ்ந்த ஊரின் மண்ணை மிதித்தவளுக்கு உடல் சிலிர்த்தது.

ஒருவித படபடப்போடே கதிரோடு நடந்து வந்தவள் பார்வையால் அந்த இடத்தை அலச இரண்டான்டுகளில் எண்ணற்ற மாற்றங்கள் அங்கே இருந்ததை எண்ணி வியந்து போனாள்.

என்னடி இப்படி பார்க்கிற என்று மனைவியின் பார்வையை வைத்து கதிர் கேட்க ஊரு ரொம்ப மாறிடுச்சு என்று சொன்னாள்.

பின்ன அப்படியேவா இருக்கும்.மாற்றம் தானே வாழ்க்கை என்று சொன்னான்.

ஆமாம் என்றவள் ஒத்தையடி பாதையாக இருந்த இடம் இன்று தாரோடாய் இருப்பதை கண்டு தாமரையின் மனதிற்கு மகிழ்சியாக இருந்தது.

வீடு நெருங்க ஒருவித குற்ற உணர்வு வந்தது.

ஒருவழியாக வேதா தங்கியிருந்த குவாட்ரஸை நோக்கி அவள் போவதை பார்த்தவன் ஏய் எங்கே போறயென்றான்.

ம்ம் வீட்டிற்கு தான்.

அதுக்கு ஏன் அங்க போற? என்றவன் கேட்க வீடு இங்க தானே இருக்கு.பின்ன வேற எங்க போவாங்க என்றாள்.

அடியே வீடு அங்க தான் இருக்குன்னு எனக்கு தெரியும்.அம்மா அங்க இருக்காங்கன்னு உன்கிட்ட நான் சொன்னேனாடி என்று கேட்க...

பின்னே அத்தையம்மா வேறு எந்த வீட்டில் இருக்கிறார்கள் என்று தாமரை குழப்பமாய் கேட்க...

வாடி என் பின்னாடி என்று சொல்லி முன்னாடி நடந்தான்.

எங்கே போறாரு இந்த மனுஷனென்று நடந்தவள் மருது வீட்டின் பக்கம் கதிர் போவதை பார்த்து ஓஓஓ மயிலா அம்மாவை பார்த்துக்குறதால் அத்தையம்மா இந்த நேரத்தில் அங்கு இருப்பாங்க போலயென்று யோசனையோடு நடந்து,அடர்ந்த மரங்களை தாண்டி வந்தவள் அங்கிருந்த வீட்டை பார்த்து வாவ் என்றாள்.

யார் வீடு இது?

இங்கே மருது வீடு தானே இருக்கும் என்று குழப்பத்தோடு தாமரை சுற்றி பார்த்து முழிக்க...கதிரோ வீட்டின் ஹாலிங்பெல்லை அழுத்தவும் சில நொடியில் கதவை திறக்க அங்கு இருப்பவனை பார்த்து மூவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அதிர்ச்சியாக இருந்தது.

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top