• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jun 20, 2025
Messages
3
அத்தியாயம்:1

சென்னையில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் அருணாச்சலம் ஐயா அவர்களின், அரண்மனை போன்ற மிகப்பெரிய பங்களா விழாகோலம் கொண்டிருந்தது.

ஏனென்றால், அரண்மனையின் இளவரசன் சிவமகிழன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருகிறான்.
அதனால் குடும்பமே காத்துக்கொண்டிருந்தது.

ஊர் மக்களும் அரண்மனையில் கூடியிருந்தனர் சிவாவை காண்பதற்காக. அன்று என்ன விசேஷம் என்றால் சிவாவின் பிறந்தநாள். பிறந்தநாள் அன்று வெளிநாட்டில் இருந்து வரும் தன் மகனுக்காக சிவாவின் அம்மா ஆசையோடு வாசலில் ஆரத்திதோடு காத்திருந்தார்.

குடும்பம் முழுவதும் மிக மகிழ்ச்சியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அங்கே அரண்மனை போன்ற பங்களா வாசலில் மிக பிரமாண்டமான ஒரு கார் வந்து நின்றது.

அந்த காரில்இருந்து இறங்கியவன், ஆறடிக்கும் சற்று அதிகமான உயரம், பால்வண்ண தேகம்,, ட்ரிம் பண்ணிய தாடி, தன் கைகளுக்குள் அடங்காத, கருமையான தலைமுடிகள், அவனை பார்க்கும் பெண்களை கிரகடிக்க செய்யும், அளவிற்கு பேரழகன்.. நம் கதையின் நாயகன் சிவமகிழன்.

மகனுக்கு ஆரத்தி எடுத்த அம்மா, "கண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்,"என்று கூறி.
அவனை அனைத்து முத்தமிட்டாங்க சிவாவின் அம்மா. காயத்ரி,
அனைவரும் சிவாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்..
பின்பு சிவாவும் அங்கு வந்திருந்த அனைவருக்கும், அவனே விருந்து பரிமாறினான்.. ஊர் மக்களும் உறவுக்காரர்களும் அனைவரும் விருந்து உண்டு விட்டு வீட்டுக்கு சென்றனர் .

சிவாவின் பார்வை அங்கும் இங்கும் அலைபாய்ந்து ஒருத்தியை தான் கொண்டிருந்தது.
அவனை கவனித்த சிவாவின் தாயமாமா
"சிவா நாங்க எல்லாரும் இங்கிருக்கோம், நீ யாரை தேடுற"
என்று கேலியாக கேட்கவும்..

"என்ன மாமா தெரியாத, மாதிரி கேக்குறீங்க நான் யாரை தேட போறேன். உங்களுக்கு தெரியாதா" என்று சிவா அவன் மாமாவை பார்த்து கேட்டான்.

"தெரியுதுங்க மாப்பிள்ளை, நீங்க யார தேடுறீங்கனு, என் பொண்ண தானே ."என்று அவரும் புன்னகையோடு கேட்கவும்.

"இல்ல மாமா என் பொண்டாட்டிய தேடுறேன்.எல்லாரும் இருக்கும்போது என் இளவரசி மட்டும் எங்க போன" என்று ஆசையாக கேட்டான் சிவமகிழன்.

அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, "மா....மா" என்று அழைத்துக் கொண்டு அவன் காதல் இளவரசி ஐஸ்வர்யா அங்கு வந்தாள். அவளைப் பார்த்து சிவாவிற்கு புன்னகையில் முகம் மலர்ந்தது..

"ஏண்டி நான் வந்து 3 மணி நேரம் ஆச்சு, இதுவரைக்கும் என்னை பார்க்க வராம, அப்படி என்ன உனக்கு வேலை, என்கிட்ட பேசாத போ" என்று செல்லமாக கோபித்துக் கொண்டான் சிவா.

"சாரி மாமா நான் உனக்காக ஒரு கிப்ட் ரெடி பண்ணிட்ருந்தேன்.அதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு, அதனால தான் வரல இப்ப வா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு" என்றாள் ஐஸ்வர்யா.. .

சிவாவின் கண்களை மூடியவாறு அவன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.மெதுவாக சிவாவின் கண்களை திறந்தாள் ஐஸ்வர்யா.
சிவா பெட்ரூமிற்குள் இருக்கும் சுவற்றில், சிவா ஐஸ்வர்யா மணக்ககோளத்தில் இருப்பது போல் ஒரு ஓவியம் வரையப்பட்டிருந்தது.. அதைப் பார்த்த சிவாவிற்கு மகிழ்ச்சி பொங்கியது.. " ஐசு இது நீ வரஞ்சதா" கேட்கும் போதே அவன் கண்களில் காதல் மிண்ணியது.

"ஆமா மாமா உனக்காகத்தான்,உன் பர்த்டேக்கு சர்ப்ரைசா இந்த ஓவியம் வரைஞ்சுருக்கேன்.. உன்னோட அடுத்த பிறந்த நாள் அப்போ,நம்ம ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா இந்த ரூம்ல இருப்போம்."என்றாள் வெட்கத்தில் சிவந்து..
அதைக்கேட்ட சிவா மகிழ்ச்சியாக ஐஸ்வர்யாவை தூக்கி சுற்றினான்.

உடனே சிவாவின் அப்பா "சரி பொண்ணும், மாப்பிள்ளையும். கல்யாணத்துக்கு தயாராகிட்டாங்க.. இனி கல்யாணத்துக்கு ஏன் லேட் பண்ணனும்.. உடனே குடும்ப ஜோசியரை வரச் சொல்லு ராஜா, என்று அவர் தம்பியிடம் கூறினார்.

" சரிங்க அண்ணா நான் உடனே போன் பண்ணி ஜோசியர காலையில வர சொல்றேன். என்று அவர் தம்பி கூறிவிட்டு சென்றார்.

சிவாவின் சித்தப்பா ஜோசியருக்கு போன் செய்தார். "ஜோசியர் ஐயா நான் ராஜசேகர் பேசுறேன். நாளைக்கு சிவா ஐஸ்வர்யா மேரேஜ் பத்தி பேசறதுக்கு அண்ணன் உங்களை வர சொல்லிருக்கிறார். காலையில நேரமே வந்துருங்க, திருமண தேதி குறிக்கணும்" என்றார்.

அதற்கு ஜோசியர் "சரிங்க ஐயா,நான் காலையில நேரமே வரேன்.. நீங்க சிவா ஐஸ்வர்யா ஜாதகத்தை எடுத்து வைங்க, நாளைக்கு ஜாதகம் பார்த்துட்டு தேதி குறித்துக்கொள்ளலாம் "என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

மீண்டும் தன் அண்ணனிடம் வந்த ராஜசேகர்.
"அண்ணா நான் ஜோசியர் கிட்ட பேசிட்டேன்.காலையில் நேரமே வர்றேன்னு சொல்லிட்டாரு" என்று கூறினார்.

அப்போது சிவாவின் தாத்தா " என்ன சிவா இப்போ சந்தோஷமா நாளைக்கு உன்னோட கல்யாண தேதி முடிவாகிடும்.நீயும் ஐஸ்வர்யாவும் ஆசைப்பட்ட மாதிரி,உங்க கல்யாணத்தை நாங்க நடத்தி வைக்க போறோம். "என்றார் சந்தோசமாக..

"தேங்க்யூ தாத்தா" என்றான் சிவா மகிழ்ச்சியாக . அன்று இரவு முழுவதும் சிவாவிற்கு தூக்கமே வரவில்லை.

எப்போது விடியும் என்று கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அதிகாலை நேரம் பறவையில் கொஞ்சும் சத்தத்தில், கண்விழித்து, எழுந்த சிவாவிற்கு மகிழ்ச்சி...இன்னும் கொஞ்ச நேரத்துல, நமது நம்ம கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சிடுவாங்க.. "என்று சந்தோஷமாக இருந்தான்.

சிறிது நேரத்தில்,மிக ஆர்வமாக தயாராகி கீழே சென்றான் சிவா.அங்கு ஜோசியர் வந்திருந்தார்..
குடும்பத்தார் அனைவரும் ஜோசியரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சிவா அவர்கள் அருகில் சென்றான் . சிவாவின் மாமன் மகன் சரத்,
" என்ன மச்சான் நைட்ல தூங்கல போல, கண்ணு சிவந்துருக்கு, கவலைப்படாதீங்க சீக்கிரமே உங்க கல்யாணம் நடக்கும் "என்று கேலி செய்தான்.

அப்போது வெட்கம் நிறைந்த முகத்தோடு "போங்க மச்சான் நான் இங்கிருந்தா, எல்லாம் இப்படித்தான் கேலி பண்ணுவீங்க,நான் ஃப்ரெண்ட்ஸ் பாத்துட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான் சிவா..

சிவமகிழன், ஐஸ்வர்யா ஜாதகத்தை குடுங்க கனிச்சு பாத்துட்டு தேதி குறிச்சுக்கலாம் என்றார் ஜோசியர்..

".அம்மா காயத்ரி, ஜாதகத்தை எடுத்துக் கொடு "என்று சிவாவின் தாயிடம் தாத்தா கூறினார்.

"சரிங்க மாமா" என்று ஜோசியரிடம் ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தாங்க சிவாவின் அம்மா. இருவரின் ஜாதகத்தை பார்த்த ஜோசியரின் முகம் மாறியது .

"என்னங்க ஜோசியரே உங்க முகம் மாறுது, ஏதாவது பிரச்சனையா" என்று ஜோசியரிடம் தாத்தா கேட்டார்.

அதற்கு ஜோசியர் "ஐயா இதை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல, சொல்றதுக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு "என்றார்.

"என்ன ஜோசியரே சொல்றீங்க, பரவால்ல,எதுவா இருந்தாலும் சொல்லுங்க "என்றார் சிவாவின் அப்பா.

"ஐயா ரெண்டு பேரு ஜாதகத்தையும் பார்த்ததில இவங்க கல்யாணம் நடக்காது. "என்றதும். அனைவரின் முகமும் வாடியது..

"ஜோசியரே ஏன் இப்படி திடீர்னு தலையில கல்லை தூக்கி போடுறீங்க" என்று கோபமாக கேட்டார் ஐஸ்வர்யாவின் அப்பா.

"நான் ஜாதகத்தில் இருக்கிறத தான் சொல்றேன். நீங்க கொஞ்சம் கோவப்படாம பொறுமையா கேளுங்க" என்றார் ஜோசியர்.

"சரி என்னனு தெளிவா சொல்லுங்க ஜோசியரே" என்றார் தாத்தா.

"ஐயா இத வெளிப்படையா நான் சொல்ல முடியல, இப்போதைக்கு சிவா ஐஸ்வர்யா கல்யாணத்தை நடத்த முடியாது, கொஞ்ச நாள் தள்ளி போடுங்க, அப்புறம் இன்னொரு நாள் நாம இத பத்தி பேசிக்கலாம். இப்போதைக்கு கல்யாணத்தை தள்ளி போடுங்க "என்றார் ஜோசியர்.

அப்போ தான் ஐஸ்வர்யா வந்தாள். "இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா, நான் கண்டிப்பா செத்துருவேன் அப்பா" என்று அவள் அப்பாவிடம் அழுது கொண்டே சொல்லவும்..

"என்னமா பேசுற நீ கல்யாணம் நடக்கலைன்னா இல்ல,, இந்த கல்யாணம் நடந்தா நீ செத்துருவ" என்றார் ஜோசியர் .

"என்ன ஜோசியர் சொல்றீங்க, கொஞ்சம் தெளிவா சொல்லுங்க நீங்க சொல்றது எங்களுக்கு புரியல "என்று பதட்டமாக கேட்டார் சிவாவின் தாத்தா.

"ஐயா சிவா ஜாதகத்துல முதல் தாரம் நிலைக்காது, இரண்டாம் தாரம் தான் நிலைக்கும்னு இருக்கு. இப்படி பட்ட சூழ்நிலையில நீங்க ஐஸ்வர்யா சிவா கல்யாணம் நடத்துனீங்கன்னா, நிச்சயமா ஐஸ்வர்யா உயிருக்கு ஆபத்து, இதுக்கு மேல உங்க விருப்பம்" என்றார் ஜோசியர்.

" என்ன ஜோசியரே இப்படி சொல்லிட்டீங்க, சின்ன வயசுல இருந்து ரெண்டு பேரும் மனசுலயும் ஆசையை வளத்தது நாங்க எல்லாரும் தான்.. இப்போ திடீர்னு இப்படி சொன்னா அவங்க என்ன பண்ணுவாங்க,இதுக்கு வேற வழியே இல்லையா" என்று கேட்டார் தாத்தா.

ஜோசியர் இல்லை என்பது போல் தலையசைக்க..

"வழி இருக்கு தாத்தா" என்றாள் ஐஸ்வர்யா.

"என்னம்மா சொல்ற என்ன வழி " என்று கேட்டார் சிவாவின் அப்பா.

"மாமா முதல் தாரம் நிலைக்காதுன்னா , சிவா மாமாவுக்கு வேற பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைங்க" என்றாள். ஐஸ்வர்யா.

"ஐஸ்வர்யா உனக்கென்ன பைத்தியம் புடிச்சிருச்சா எதுக்கு இப்படி பேசுற" என்று கோபமாக திட்டினாங்க சிவாவின் அம்மா.

"இல்ல அத்தை இப்பதான் நான் ரொம்ப தெளிவா இருக்கேன். எனக்கு மாமா வேணும்,அதுல எந்த மாற்றமும் இல்லை. இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணி,அந்த பொண்ண, டைவர்ஸ் பண்ணிட்டு. செகண்ட் எங்க மேரேஜ் பண்ணி வைங்க, நிச்சயம் நாங்க நல்லா இருப்போம் "என்று ஐஸ்வர்யா சொல்லவும்..

வீட்டில் இருக்கும் அனைவரும் ஐஸ்வர்யாவை திட்டினார்கள்.சிறிது வாக்குவாதத்திற்கு பிறகு ஐஸ்வர்யாவின் பிடிவாதத்தை மாற்ற முடியாமல் அனைவரும் இதற்கு ஒப்புக்கொண்டனர்.

ஆனால் இங்கு நடப்பது எதுவும் தெரியாத சிவா,தன் நண்பர்களுடன் சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தான்..

"என்ன சிவா, ஊருக்கு வந்தாச்சு எங்களுக்கு எப்போ பார்ட்டி வைக்கபோற "என்றான் சிவாவின் நண்பன் முகிலன்.

"டேய் முகிலா என் ஐஸ்வர்யா என்னோட பொக்கிஷம் டா, அவளுக்காக உலகத்துல என்ன வேண்டும்னாலும் குடுப்பேன் .
உங்களுக்கு பார்ட்டி தான குடுத்தபோச்சு நாளைக்கு full day உங்க கூட தன் இருக்கபோறேன்.. என்னவேணுமோ கேளுங்கடா "என்றான் சிவா .

"டேய் மச்சான் சூப்பர் டா "என்றான் முகில்.

"சரிடா மச்சான் நான் கிளம்புறேன். வீட்டுக்கு போனதும் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி குடுக்கப்போறாங்க"என்றான்.

"என்னடா சொல்ற, "முகிலன் கேட்கவும்..

"டேய் என்னோட மேரேஜ் டேட் மச்சான்.இன்னைக்கு வீட்ல எல்லாரும், பேசிகிட்ருக்காங்க "என்றதும்.

"வாழ்த்துக்கள் மச்சான். உன் நல்லமனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்..."என்றதும்.

.தேங்க்யூ டா நான் கிளம்புறேன் "என்று சொல்லிவிட்டு, தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல் சந்தோஷமாக வீட்டுக்கு சென்றான் சிவா,, வீட்டுக்குள் சென்றவுடன் சிவாவிற்கு வழக்கத்திற்குமராக எதோ வீடு கலையில்லாமல் அமைதியாக தோன்றியது.அவனுக்குள் ஒரு படபடப்பு ஏற்ப்பட்டது .

தொடரும்....

இனி சிவாவின் வாழ்க்கையில் என்ன நிகழும்? அடுத்தப்பகுதியில்

பார்க்கலாம்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top