Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 53
- Thread Author
- #1
விவாதக் காதல்
விவாதம் - 2௦
“ஏன்டா நீ ஏன் இப்படி இருக்க? பாவம்டா சித்ரா. ஏன் அந்த பொண்ணு மனசு கஷ்டப்படுற மாதிரி பேசுற?”
“அக்கா, அவங்களுக்கு இன்னும் உலகம் புரியல. சில விஷயங்களை எல்லாம் எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு பண்ணக்கூடாது. இப்போ பாரு அந்த போலீஸை, இவங்க மீடியா முன்னாடி நிக்க வச்சிருக்காங்க இதனால இவங்களுக்கு எதாவது பிரச்சனை வந்தா, இவங்க என்ன பண்ணுவாங்க? இவங்களுக்காக யாரு இருக்காங்க? இவங்க புருஷனும் இல்ல. அண்ணனும் அவன் குடும்பத்தை பாத்துகிட்டு இருக்கான். பாட்டிக்கும் உடம்பு சரியில்ல. சின்ன பையன் வேற வீட்டுல இருக்கான். பாவம் அக்கா இந்தப் பொண்ணு. இவங்களுக்கு எதாவது ஒன்னு கிடக்க ஒன்னு நடந்தா, என்ன ஆகும் சொல்லுங்க? அன்னைக்கு நைட்டு இவங்க பாட்டுக்கு ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்பி எங்கேயோ போறேன்னு போயிட்டாங்க. நான் கூட இவங்க போட்டு இருக்குற நகைக்கு ஆசைப்பட்டு தான், இவங்கள அந்த ரெண்டு லேடி ஏதோ பண்ண பாக்குறாங்கன்னு நினைச்சேன். ஆனா, இப்போ பாருங்க, அந்த போலீஸ் தான் இவங்கள கடத்திட்டு வர சொல்லி இருக்காங்கன்னு, இவங்களே சொல்லுறாங்க. ஏன் அக்கா போலீஸ்கிட்ட நம்மள மாதிரி நடுத்தர குடும்பத்தினர் பிரச்சனை வச்சிக்கலாமா? எத்தனை வழக்குல போலீஸ் ஸ்டேஷன்குள்ள போன ஆளுங்க, முழுசா வீடு வந்து சேராம போய் இருக்காங்க சொல்லுங்க. இந்த பொண்ணு மாதிரி ஆண் துணை இல்லாம, பெரிய ஜான்சி ராணி போல வீர சாகசம் பண்ணி எங்காவது மாட்டிகிட்டா, யாரு அக்கா அவங்கள சேவ் பண்ணுறது?
“ஏன்டா அப்படின்னு பார்த்தா, எல்லா பெண்களுக்கும் ஆண் துணை இல்லைனா, வீரமே வரக் கூடாதுன்னு சொல்லுறியா
“அக்கா எல்லா இடத்துலயும் வீரம் செல்லாது. விவேகமா ஒரு சில விஷயத்தை டீல் பண்ணனும். அதே போல எல்லா இடத்துலயும் கோவப்பட்டா தீர்வு கிடைக்காது. எங்க அடங்கணுமோ, எங்க மடங்கணுமோ, அங்கங்க அதெல்லாம் பண்ணி தான் ஆகணும். இந்த பொண்ணுக்கு கோவம் வர நேரத்துல, புத்தி வேலை செய்யமாட்டேன்னுது. நீ வேணா பாரு. அந்தப் பெண் போலீசால, கண்டிப்பா இவங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனை வரப்போகுது” என்றான் கொடிவீரன்.
“என்னடா சொல்ற?” என்று பயந்து கேட்டாள் சசி.
“நீ வேணும்னா பாரு அக்கா. நான் சொல்றது கண்டிப்பா நடக்கும்” என்றான் உறுதியாக.
“ஐயோ பாவம்டா அந்தப் பொண்ணு. டேய்! நீ இங்க இருக்கும் வரை சித்ராவை பார்த்துக்கோடா” என்று சொன்னாள்.
“ம்... இப்ப சரிக்கா. நான் இங்க இருந்து போய்ட்டா?” கேள்வியாய் நிறுத்தினான்.
“இல்ல இல்ல. நீ அவளை விட்டு எங்கேயும் போகாத. அவகூடவே இரு.” என்று வேகமாக சொல்ல,
“என்ன, நான் அவங்க கூட இருக்கணுமா? உனக்கு என்னாச்சுக்கா? நான் எப்படி அவங்க கூடவே இருக்கமுடியும்? சும்மா உளறாதக்கா.”
“அதெல்லாம் எனக்கு தெரியாதுடா. எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருக்கு. நீ தான் அவளை பார்த்துக்கனும். இது என்னோட ஆர்டர்” என்றாள் சசிகலா.
“அக்கா உனக்கு என்னதான் ஆச்சு? ஏன் எப்பப்பாரு நீ அவங்க கூடவே என்னை கோர்த்து விடுற?” என்று எரிச்சலாகக் கேட்டான் கொடிவீரன்.
“டேய் தம்பி! எனக்கு ஒரு ஆசை இருக்குடா.”
“என்ன?” என்றான் கடுப்பாக.
“நீ அந்தப் பொண்ணைக் கட்டிக்கிறியா” என்று ஆசையாக, கொஞ்சம் ஆர்வமாகக் கேட்டாள்.
“அக்கா நீ என்ன பைத்தியமா. திரும்பத் திரும்ப உளறிட்டு இருக்க.” என்று பல்லைக் கடித்தான்.
“ம்... இருக்கலாம். ஆனா நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா, நான் ரொம்ப சந்தோசப்படுவேன்.
“லூசு மாதிரி பேசாம, முதல்ல போய் அம்மாவை கிளம்பி வெளிய வரச் சொல்லு. நான் போய் உங்களுக்கு ஆட்டோ கூட்டிட்டு வரேன்.”
கொடிவீரன் அங்கிருந்து சென்று ஆட்டோவுடன் வீட்டுக்கு வர, வாசலில் நின்று இருந்த பாட்டி பதற்றதுடன் கொடியை நோக்கி வேகமாக வந்து, “தம்பி என்னப்பா. சித்ராவுக்கு என்னாச்சு? சசி என்னன்னவோ சொல்லுறா” என்றார்.
“ஏன்டா, நீங்க ஏன் அந்த பொண்ணை அங்க தனியா விட்டுட்டு வந்திங்க?”
“இல்லம்மா. அக்கா அவங்கள எங்க கூடதான் வரச் சொன்னாங்க. ஆனா, அவங்க தான் வரலை.”
“பச்... என்ன கொடி இதெல்லாம்? ஆம்பள இல்லாத வீடுப்பா இது. நீ எப்படி ஒரு பொம்பள பிள்ளையை போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல தனியா நிக்க வச்சிட்டு வருவ?” என்று அவனின் தவறை சுட்டிக்காட்டினார்.
“இல்லமா. நான்...” கொடிவீரன் தடுமாறி நிற்க,
“உங்கிட்ட இருந்து நான் இத எதிர்பார்க்கல கொடி.” என்றார் ஜெயா ஆதங்கத்துடன்.
“ஐயோ அம்மா. அவங்களுக்கு ஒன்னும் ஆகாது. நீங்க முதல்ல கிளம்புங்க. உங்களுக்கு பஸ்கு நேரம் ஆகுது. பாட்டி உங்க பேத்தி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. அக்கா நீ அம்மாவை அழைச்சிட்டு வந்து ஆட்டோல ஏறு” என்று கொடி சொன்னதும், ஜெயாவும், சசியும், மகிழினி வீட்டில் இருந்து பேருந்து நிலையம் சென்று, ஊருக்குச் செல்ல பேருந்தில் ஏற்றி விட்டு, “அக்கா ஊருக்கு போனதும் போன் பண்ணு. நான் கல்யாணத்துக்கு பத்து நாளுக்கு முன்னாடி லீவு போட்டுட்டு ஊருக்கு வந்துடுறேன்.” என்றான்.
“ம்... சரிடா பார்த்துக்கோ.” சசி சொல்ல,
“தம்பி போன் பண்ணுபா” என்றார் ஜெயா.
“ம்... சரிம்மா. நீங்க பார்த்து போங்க.” என்ற கொடி பேருந்து கிளம்பியதும் தன் கைபேசியில் இருந்து மகிழினியின் பாட்டியை அழைத்தவன், பாட்டி உங்க பேத்தி வீட்டுக்கு வந்துட்டாங்களா?” எனக் கேட்டான்.
“ம்... இப்போ தான்பா வந்தா.”
“ஏதும் பிரச்சனை இல்லையே?”
“அவ ஏதும் சொல்லலபா” என்றார்.
“சரி பாட்டி. நான் போன் வச்சிடுறேன்.” என்றவன். சில நிமிடங்களில் வீட்டிற்கு செல்ல, அங்கே வாசல் கதவு தாழிட்டு இருப்பதை கண்டதும். மாடியில் இருக்கும் தன் அறைக்குள் நுழைந்தவன், ஜன்னலின் வழியே மல்லி பூ செடிகளின் நடுவே நின்று இருந்த மகிழினியை பார்த்ததும், அறையை விட்டு வெளியே வந்து, அவள் அருகில் சென்று அமைதியாக நின்றான்.
தன்னருகில் அமைதியாக நின்றிருந்த கொடிவீரனைப் பார்த்த மகிழினி, புருவம் உயர்த்தி, “என்ன சார்? இன்னும் எதாவது திட்டணுமா?” என்றாள்.
“இல்லங்க சொல்லணும்.”
“என்ன சொல்லணும்?” என்று யோசனையுடன் கேட்க,
“இனிமே அந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போகும் போது தனியா போகாதீங்க.”
“எந்த மாதிரி இடத்துக்கு?”
“போலீஸ் ஸ்டேஷன்கு தான்ங்க.”
“ஏன் போனா என்னவாம்?” விதண்டாவாதம் பேசினாள் பெண்.
“ஏன் போக கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா?” எதிர்கேள்வி கேட்டான் அவன்.
“எனக்கு தெரியல. நீங்க சொல்லுங்க கேப்போம்.”
“சரி விடுங்க. நான் உங்கிட்ட இதெல்லாம் சொன்னாலும் நீங்க கேக்க போறது இல்ல. நான் யாரு உங்கிட்ட இதெல்லாம் சொல்லனு கேட்பீங்க. எதுக்கு கேட்டுட்டு...”
“உண்மை தானே. நீங்க யாரு எனக்கு இதெல்லாம் சொல்ல?” என்றாள் பட்டென்று.
“சாரிங்க. இனி சொல்லல” என்ற கொடி கோவமாக அங்கிருந்து நகர, அவனைக் கண்டு சிரித்து, “ஹலோ சார்” என்று அழைத்தாள்.
கொடி அதே கோவத்துடன் திரும்பிப் பார்க்க, மல்லி பூ தோட்டத்தின் நடுவே நின்று இருந்த மகிழினி, தன் கையில் இருந்த ஒரு மஞ்சள் நிற ரோஜாவை அவனிடம் தந்ததும், ஏதும் புரியாதவனாக அவளைப் பார்த்தான் கொடிவீரன்
“என்ன இது?”
“தெரியல. ரோஜாப்பூ சார்.” என்று சிரித்தபடி சொன்னாள்.
“அது தெரியுதுங்க. இத ஏன் என்கிட்ட தரிங்க?” என்று புரியாது கேட்டான்.
“இன்னைக்கு நான் என் வீரனுக்காக, மல்லி பூ செடி வாங்க போனேன். அங்க இந்த மஞ்ச நிற ரோஜா பூவை பார்த்ததும், எனக்கு உங்க நினைவு தான் வந்துச்சு. அதான் உங்களுக்காக வாங்கி வந்தேன்” என்றாள் மீண்டும் அந்த ஒற்றை மஞ்சள் ரோஜாவை அவன் முன் நீட்டியவாறு.
“புரியலையே. இந்த பூவைப் பார்த்தா, உங்களுக்கு ஏன் என் நினைவு வரணும்?” என்று புருவங்கள் சுருங்கி கொடி கேட்ட கேள்விக்கு விடையாக, அவளின் புன்னகை மட்டுமே இவன் கண்ணுக்கு தெரிந்தது .
“என்னங்க கேள்வி கேட்டா சிரிக்கிறீங்க?” என்று கடுப்பாக கேட்டான்.
“சார். இந்த மஞ்சள் நிற ரோஜா, நட்பின் அடிப்படையில் நம்ம நண்பர்களுக்கு தரலாம். அதனால தான், நான் உங்களுக்கு இந்த பூவை தரணும்னு நினைத்தேன்” என்றவள் மீண்டும் அவன் முன் ரோஜா மலரை நீட்டினாள்.
“நான் உங்களுக்கு நண்பனா!? இது எப்போதுல இருந்து?” என்று கிண்டலாக கேட்டான் கொடி
“எப்போதுல இருந்து எல்லாம் தெரியல. ஆனா, உங்கள எனக்கு நல்ல நண்பனா நினைக்கதான் தோணுது” என்றவள் அவன் பதிலுக்காக காத்திருந்தாள்
“என்னங்க. காமெடி பண்றிங்களா? எனக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தம். நீங்க ரைட்னா, நான் ஸ்ட்ரெய்ட்னு சொல்லுவேன். நீங்க எல்லாத்துக்கும் கை நீட்டுற ஆளு. நான் எனக்கு சரிவரலையா கை கழுவுற ஆளு. நீங்க எல்லாத்தையும் குத்தர்க்காம யோசிப்பிங்க.நான் எதார்த்தமா எடுத்துக்கிட்டு எஸ் ஆகிடுவேன். ஏன் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட, உங்களுக்கும் எனக்கும் போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல வச்சி, ஒரு சின்ன பிரச்சனை வந்துச்சு தானே. இப்படி இருக்கும் போது, நான் எப்படி உங்களுக்கு நண்பனா இருக்க முடியும்.?” என்று கொடி. தன் கேள்விகளை அடுக்கி கொண்டே போனான்
“ம்... வாஸ்தவம் தான். உங்களுக்கும் எனக்கும் என்னைக்குமே ஒத்து போகாது தான். ஆனா, நான் பண்றது எல்லாம் சரின்னு சொல்ற ஆளு மட்டுமே, நமக்கு நண்பனா இருக்க கூடாது. நம்ம குறை நிறைகளை கூட நம்ம எதிர்ல சொல்லி, நம்மள நல்வழிபடுத்துறவங்க தான் உண்மையான நண்பர்கள். உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும், நீங்க இந்த நொடி வர எனக்கு நல்லது மட்டுமே தான் பண்ணிருக்கிங்க. அந்த அடிப்படையில உங்களுக்கு ஒரு மஞ்சள் நிற ரோஜா மலரை தரணும்னு நினைச்சேன். மற்றபடி இதுல விளக்கம் சொல்ல எதுவும் இல்ல. உங்களுக்கு விருப்பம் இல்லைனா, நீங்க இத வாங்கிக்க வேணாம். சீக்கிரம் தயாராகி வாங்க டின்னர் எடுத்து வைக்கிறேன்" என்றவள் தன் கையில் இருந்த ஒற்றை ரோஜா மலரை, மொட்டை மாடியின் சுவற்றின் மேல் வைத்தவள், வேகமாக கீழே இறங்கி சென்றாள்.
ரோஜா மலரின் மீது கொடியின் கரங்கள் படருமா?