• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 5.1

New member
Joined
Jan 15, 2026
Messages
14
💙விவாதக் காதல்💙

Part 5.1

"மேடம் இந்தப் பணத்தை இந்த அக்கௌன்ட்ல டெபாசிட் பண்ண முடியாதுங்க" என்று கொடி சொன்னான்.
மகிழினி குழப்பதுடன், “ஏன் முடியாது? என்ன பிரச்சனை?” என்றாள்.
“இந்த அக்கௌன்ட் யாரோடது? இதுல உங்க பெயரே இல்லையே?” தன் சந்தேகத்தைக் கேட்டான் கொடிவீரன்.
“இந்த அக்கௌன்ட் நம்பர் என் வீரா வளர்ந்த, ஆஸ்ரமத்து பேர்ல இருக்குற அக்கௌன்ட் நம்பர். எனக்கு இந்த அக்கௌன்ட்ல நீங்க என் வீராக்கு சேர வேண்டிய இன்சூரன்ஸ் பணத்தை டெபாசிட் பண்ணிடுங்க.” என்றாள் அவள்.
“இல்லிங்க. அதுக்கு வாய்ப்பில்ல.” என்று மறுத்தான்.
“ஏன் அப்படி சொல்லுறீங்க?” எனப் புரியாது கேட்டாள் மகிழினி.
“எங்க இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உங்க கணவர் கட்டிய பணத்தை, அவருக்கு பிறகு அவர் மனைவி பேர்ல தான் தொடரணும்னு Sign பண்ணி இருக்காரு. ஆனா நீங்க இப்போ இத பாதியில் எடுக்க, நாங்க Ok பண்ணதே பெருசு தான். அப்படி இருந்தும் இந்த பணம் உங்களுக்கு வரணும்னா உங்க Name ல அக்கௌன்ட் இருக்கணும். அப்படி இருந்தா. நாங்க உங்க அக்கௌன்ட்ல இந்த பணத்தை டெபாசிட் பண்ணிடுவோம். அப்புறமா நீங்க உங்களுக்கு யாருக்கு தரணும்னு தோணுதோ அவங்க அக்கௌன்ட்கு டிரான்ஸ்பர் பண்ணிக்கோங்க.
“வேற ஏதும் ஆப்ஷன் இல்லையா?” எனக் கேட்டாள் மகிழ்.
“ஹ்ம்... இல்ல மேடம். இருந்தா கண்டிப்பா சொல்லிருப்பேன்.”
“சரிங்க சார். அப்போ நான் நாளைக்கு பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணிட்டு, அந்த நம்பரை எடுத்துட்டு வந்து தரேன்.” என்றாள்.
“ம்... இது நல்ல ஐடியா. அதையே செய்யுங்க.”
“ஒகே சார். ரொம்ப நன்றி. நான் கிளம்புறேன்.” என்று அவள் எழ, “மேடம் ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினான் கொடிவீரன்.
அவளோ என்ன என்பதாய் அவனைப் பார்க்க, “என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலையா?” எனக் கேட்டான்.
“ஹ்ம். யாரு நீங்க? உங்களைப் பார்த்ததா நினைவில் இல்லை.” என்று புருவம் சுருக்கினாள்.
“என்னங்க இது. நான் தான் உங்க அண்ணன் சுரேஷாட நண்பன். நேத்து கூட ஊருல இருந்து வந்து. உங்க வீட்டு மாடியில் தங்கிட்டு இருக்கேனே.” என்றான் ஆச்சரியமாய்.
“ஓ. சாரி சார். நான் கவனிக்கல.”
“நானும் சாரிங்க.”
“ஏன்?” என்றாள் புரியாது.
“நேத்து நான் வேணும்னே உங்க வீட்டு மல்லி செடியில பூத்த பூவை எல்லாம் கிள்ளி போடல. அது தெரியாம... ரியலி சாரிங்க” என்று மன்னிப்புக் கேட்டான்.
அவள் எதுவும் பேசாது அமைதியாக நிற்க, “நேத்தே நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டேன். ஆனா, நீங்க நான் பேசுனத காதுல வாங்கிக்கவே இல்ல.”
“நான் என்னோட இயர் மெஷின் போடாம இருந்து இருப்பேன். அதனால நீங்க பேசினது என் காதுல கேக்கல போல. இட்ஸ் ஓகே சார். நான் கிளம்புறேன்.” என்றாள்.
“எப்படி வந்தீங்க? நான் வேணா உங்கள ட்ரோப் பண்ணவா? எனக்கு இன்னும் அரை மணி நேரத்தில் வேலை முடிஞ்சிடும்.” என்று கொடி நட்பின் அடிப்படையில் மகிழினியிடம் கேட்டான்.
அவளோ தன் காதில் இருந்த மெஷினை கழட்டி பேக்கில் வைத்து கொண்டு கொடியை பார்த்து கையெடுத்து கும்பிட்டவள், ”பேணக் சம்பந்தப்பட்ட ஆலோசனை சொன்னதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. நான் போய்ட்டு வரேன்" என்று சொன்னதும் கொடியின் முகம் மாறி போக, மகிழினி எதையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து கிளம்பினாள்.
"ரொம்ப திமிர் பிடித்த பொண்ணா இருக்காங்க. நேத்து நம்ம இவங்க வீட்டுக்கு வந்தது கூட தெரியலன்னு சொல்லுறாங்க. நான் போய் உங்கள ட்ரோப் பண்ணவான்னு கேக்குறேன்... அதுக்கு ஒரு பார்மாலிட்டிக்கு கூட எந்த பதிலும் சொல்லாமல், பெரிய இவங்க மாதிரி கிளம்பி போறாங்க. ஹ்ம் போகட்டும் ஏதோ நம்ம நட்போட தங்கச்சின்னு பார்த்தா, ரொம்ப ஆட்டிடியூட் தான் போல" என்று தனக்குள் புலம்பியவன் அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
அன்று மாலை ஆறு முப்பதுக்கு மொட்டை மாடியில் உள்ள கொடியின் அறைக்கு வெளியே, “உள்ள வரலாமா?” என அனுமதி கேட்டு நின்றான் வேணு.
“அடடே நீங்களா? வாங்க சார்” என்றான் வரவேற்பாக.
“என்ன மரியாதை எல்லாம் பலமா இருக்கு. இது சரியில்லையே” என்று அவன் புத்தி குதர்க்கமாய் யோசிக்க ஆரம்பிக்க,
“டேய் சும்மா தான்டா. கண்டதையும் யோசிச்சி என்னை படுத்தாத.
“சரி உங்களுக்கு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு.
“எதுக்குடா?”
“ம் எனக்கு கணக்கு கத்து தர.”
“ஏன் அதன் பிறகு எங்க போறீங்க நீங்க” என்று கிண்டலாகக் கேட்டான்.
“தூங்க போவேன்.”
“நேரம் வச்சி எல்லாம் படிக்க கூடாது. சரி வாங்க டியூஷன் ஆரம்பிக்கலாம்” என்றதும் வேணு சரியென்று சொல்ல,
“ஆமா கணக்குல உங்களுக்கு என்ன புரியல.?”
”எவ்வளவு முயற்சி பண்ணியும் கணக்கே புரியல.” என்றான் சிறுவன்.
“சரிதான். நான் சில டிப்ஸ் எல்லாம் சொல்லி தரேன். அத வச்சி இப்போதைக்கு சிம்பிளா கத்துக்கோங்க. இப்போ வர போற டெஸ்ட் முடிஞ்ச பின்னாடி அப்புறமா எல்லாத்தையும் கத்துக்கலாம். சரியா?”
“எனக்கு முப்பத்து நான்கு அரை மார்க் வர மாதிரி கத்துத்தாங்க. அது போதும்.” என்றான் வேணு.
“அது சரி. ம்... வாங்க” என்று வேணுவுக்கு கணக்கு பாடம் கத்து கொடுத்தான்.
அதே சமயம். மகிழினி கையில் தண்ணீர் வாலியுடன் வந்தவள், அவள் வளர்க்கும் மல்லி பூச்செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றி, அந்த இடத்தை சுத்தம் செய்து, அந்த செடியில் துளிர்விட்ட இலைகளை கூட சுத்தம் செய்பவளின் செயலை, தன் ரூமில் அமர்ந்தப்படி கவனித்து கொண்டு இருந்தான் கொடி.
"ஏன் வேணு? உன் அத்தை ஏன் எப்போ பாரு இந்த செடிங்ககிட்ட நின்னுகிட்டு எதையாவது நோண்டிகிட்டே இருக்காங்க?" என்று கொடி தன் சந்தேகத்தை கேட்டான்.
"அதெல்லாம் நம்ம கேட்டாலும் அவங்க சொல்ல மாட்டாங்க. நானும் நிறைய டைம் கேட்டுட்டேன்" என்று தன் உதட்டை சுழித்தான் வேணு.
"சரி உன் அத்தையோட ஹஸ்பன்ட் இப்போ உயிரோட இல்லையா?" என்று மீண்டும் தன் சந்தேகத்தை கேட்டான் கொடி.
"அப்படி தான் எங்க அம்மா சொன்னாங்க" என்று தன் கண்களை கசக்கினான் வேணு.
"அவரு எப்படி இறந்தாரு?" என்று மீண்டும் கொடி கேள்வி எழுப்ப,
பொறுமை இழந்த வேணு, "யோவ் எனக்கு என்ன என் அத்தையை பற்றிய கேள்வி தான் நாளைக்கு எக்ஸாம்ல கேக்க போறாங்களா? துருவித்துருவி அவங்களையே கேட்டுட்டு இருக்க" என்று கடுப்பாக கத்தினான்.
"டேய் ஏன்டா இப்படி கத்துற? அவங்க காதுல விழுந்தா என்னை தப்பா நினைக்க போறாங்கடா" என்று பயந்தான் கொடி
"ஹாங் இல்லனா மட்டும் நீங்க நல்லவர் தான்" என்று முகத்தை சுழித்தான் வேணு
"டேய் கத்தாதடா ப்ளீஸ்" என்று கொடி கெஞ்சினான்.
"நான் என்ன தான் கத்தினாலும் அவங்க காதுல விழாது" என்று சொன்ன வேணு மீண்டும் தன் கவனத்தை படிப்பில் செலுத்தினான்
"எப்பா சாமி. நான் உன் அத்தையை பற்றி தெரியாம கேட்டுட்டேன்டா. நீ ஒழுங்கா நான் சொல்லிக்கொடுத்த கணக்கை போடு சாமி" என்று கையெடுத்து கும்பிட்டான் கொடிவீரன்.
"நாங்க போடுறோம். நீங்க என் அத்தையை கணக்கு பண்ற வேலையை விட்டுட்டு, நீங்க எதுக்கு இந்த ஊருக்கு வந்திங்களோ அந்த வேலையை மட்டும் பாருங்க" என்று கோவமாக சொன்ன சிறுவன் கணக்கு பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
ஒரு மணிநேரம் கழித்து, "சரி. இன்னைக்கு இது போதும். மீதியை நாளைக்கு பாத்துக்கலாம். நீங்க சீக்கிரம் டின்னர் சாப்பிட வாங்க" என்று சொன்னவன் வேகமாக கொடியின் அறையில் இருந்து கீழே இறங்கி ஓடினான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்த பின்பும், மகிழினி அந்த பூ செடிகளின் நடுவில் இருந்து வெளியே வராமல் இருக்க, அவளின் செயலைக் கண்டு கொடியின் மனதில் பல கேள்விகள் தோன்றினாலும், அது எதையும் பொருட்படுத்தாமல் கீழே இறங்கி சென்று, வேணு எடுத்து வைத்த டின்னரை முடித்த பிறகு, மீண்டும் மாடிக்கு வந்தான்.
அப்பொழுதும் மகிழினி மல்லி பூ செடிகளுக்கு நடுவில் நின்று இருப்பதை பார்த்து, அவள் அருகில் சென்றவன், “ஹாய்” என்று இவனாகவே பேச முயற்சித்தான்.
அவனின் வருகையைக் கண்டு தலை தூக்கிப் பார்த்த மகிழினி கடமைக்கென்று சிரித்து, அவனிடம் எதுவும் பேசாமல், பூ செடிகளில் இருந்து கீழே விழுந்த காய்ந்த மலர்களை எல்லாம் தன் முந்தானையில் எடுத்து கட்டிக்கொண்டு கீழே இறங்கினாள்.
அதைப் பார்த்த கொடி தன் புருவங்களை உயர்த்தி, உதட்டை சுழித்தபடி, "நமக்கு ஏன் இந்த வேலை? நம்மளா போய் பேசுறதால நம்மள இந்த பொண்ணு தப்பா நினைக்கிறாளா என்ன? ஐயோ! வேணாம் வேணாம் இனிமே இந்த பொண்ணு ரைட்ல வந்தா, நம்ம லெப்ட்ல போயிடனும்" என்று தனக்குள் புலம்பியவன் உறங்க சென்றான்.
இன்றும் காலையில் வேணுவை பள்ளியில் விட்டு, பின் தன் வேலைக்கு சென்றான்.
நேரம் 11 மணி அளவில், கொடியின் இன்சூரன்ஸ் ஆபீஸ்க்கு வந்த மகிழினி அவனைச் சந்திக்க அனுமதி கேட்டு அவனின் கேபினில் காத்திருந்தாள்.
"நம்ம நண்பனோட தங்கச்சின்னு நான் நார்மலா பேசுனா கூட என்னை என்னமோ பொண்ணுங்ககிட்ட பேச அலையுற மாதிரி இந்த பொண்ணு நம்மள டிரீட் பண்ணுறாங்க. சோ இவங்ககிட்ட கொஞ்சம் நம்ம ஸ்ட்ரிக்ட்டா இருக்குறது தான் நமக்கு நல்லது" என்ற நினைப்பில் கொடி. மகிழினியை தன் அறைக்குள் அழைத்தான்.
“வணக்கம் சார். இந்தாங்க என் அக்கௌன்ட் நம்பர்.”
“ஓ... வாங்கியாச்சா? கொடுங்க” என்று மகிழினியிடம் வாங்கி, “எங்க கம்பெனில இருந்து இன்னும் ஒரு வாரத்துல உங்க அக்கௌன்ட்ல பணம் போட்டுடுவாங்க. வேற ஏதாவது தகவல் வேனும்னா கேளுங்க” என்றான் பணி நிமித்தமாய்.
“ரொம்ப நன்றிங்க. பேங்க்ல பணம் போட்டதும் எனக்கு இன்பார்ம் பண்ண முடியுமா? தெரிஞ்சா நல்லா இருக்கும்” என்றாள் அவள்.
“அதனால் என்ன? உங்க நம்பர் இருந்தா தந்துட்டு போங்க. எங்க ஆபீஸ்ல இருந்து கால் பண்ணி சொல்லுவாங்க.” என்றான் கொடிவீரன்.
“நம்பர் எங்க கொடுக்கணும் சார்?”
“என்கிட்ட கூட தாங்க. நான் உங்க ஹஸ்பண்ட் டீடைல்ஸ் இருக்குற பக்கத்தில் உங்க போன் நம்பரை ஆட் பண்ணிடுறேன்.”
“சரிங்க சார்.” என்ற மகிழினி தன் தொலைபேசி எண்ணை ஒரு தாளில் எழுதி தந்தாள்.
அந்த எண்ணை வாசித்தவன், “என்னங்க இது செல் நம்பர் மாதிரி இல்லையே?" என்று கொடி கேட்டான்.
“என்கிட்ட செல் போன் இல்ல. இது என்னோட கேட்டரிங்ல இருக்குற லேண்ட் லைன் நம்பர். உங்க சைடுல இருந்து இந்த நம்பருக்கே கால் பண்ணி சொல்லுங்க” என்றாள்.
“சரிங்க” என்று கொடி சொன்னதும்,

"ரொம்ப நன்றிங்க" என்று சொன்னவள் உடனே தன் காது மெஷின்னை கழட்டி பையில் வைத்தப்படி அங்கிருந்து சென்று விட, கொடிக்கோ மகிழினியின் செயல்கள் அனைத்துமே இவன் பார்வைக்கு புதிதாகவும், திமிராகவும், குழப்பமாகவும் தெரிந்தது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top