• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 6

New member
Joined
Jan 15, 2026
Messages
14
💙விவாதக் காதல்💙

Part 6

அன்றைய தினம் இரவு மொட்டை மாடியில், சுரேஷ் தன் நண்பன் கொடிவீரனுடன் பேசிக்கொண்டு இருக்க, எப்பொழுதும் போலவே மகிழினி மல்லி செடி பூக்களின் நடுவே, அவளது சுவாசத்தை உணர்ந்து கொண்டு இருந்தாள்
"ஏன் மச்சான் கேக்குறேன்னு தப்பா நினைக்காத. உன் தங்கச்சி ஹஸ்பன்ட் எப்போ, எப்படி இறந்தாரு?" என்று இவன் மனதில் எழுந்த சந்தேகத்தை கேட்டான்.
"எல்லாம் என்னால தான்டா" என்று வருத்தத்துடன் சொல்ல,

"என்னடா சொல்ற? உன்னாலையா? நீ என்ன பண்ணின?" என்று புரியாமல் கேட்டான்.

"ம் ஆமாடா. என் தங்கச்சிக்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னாடி தான் கல்யாணமாச்சு."

“ஒரு வருஷத்துக்கு முன்னாடியா!?”

“ம் ஆமாடா.”
“உன் மச்சான் எப்போ இறந்தாரு?”
"கல்யாணம் முடிந்த அதே நாள் தான்" என்று சொன்னவனின் கண்கள் கலங்கியது
"என்னடா சொல்ற?" என்று ஆச்சிரியம் கலந்த கவலையுடன் கேட்டான்.
“ம்... ஆமா. என் தங்கச்சியை கல்யாணம் பண்ண மாப்பிளை பெயர் வீரவேல். அவரு காவல்துறை அதிகாரி. அவரு ஒரு அனாதை. இன்னைக்கு நம்ம வீட்டுக்கு ஒரு புரோக்கர் வந்தாரு இல்ல. அவர் மூலியமா வந்த சம்மந்தம் தான். பார்த்ததும் என் தங்கச்சிக்கு அவரையும், அவருக்கு இவளையும் ரொம்ப பிடிச்சி போச்சு. என் தங்கையை பொண்ணு பார்த்துட்டு போன பத்தாவது நாளே அவர் இவளை கட்டிக்க நாள் குறிச்சிட்டாரு.”
"பத்து நாள்லயா?" என்று கண்களை விரித்ததான் கொடிவீரன்.
“ம்... பத்து நாள்ல தான் கல்யாணம். ரெஜிஸ்டர் ஆபீஸ்ல ஆரவாரம் இல்லாமல் நடந்து முடிந்து இருக்கு. என் பாட்டியின் பிடிவாதத்தால என்னை என் தங்கச்சி அவ கல்யாணத்துக்கு கூப்பிடல. ஆனா கல்யாணம் முடிந்த கையோடு என் தங்கச்சி ஏக்கத்தை புரிஞ்சுச்சிகிட்ட அவளோட புருஷன், என்னை பார்க்க கல்யாணம் முடிந்த கையோடு அவளை அழைச்சிட்டு வர வழியில, யாரும் எதிர் பார்க்காத அளவுக்கு ஒரு விபத்து. அதில்...” என்று நிறுத்த,
“என்னடா சொல்ற?” என்று அதிர்ந்து கேட்டான்.
“ம்... அவங்க ஒட்டிகிட்டு வந்த கார் ஆக்சிடண்ட் ஆகிருச்சி. மாப்பிள்ள ஸ்பாட் அவுட். என் தங்கச்சி தலையில அடிபட்டு அவ காதுல நரம்பு ஏதோ பிரச்சனை ஆகி, அவ அந்த விபத்துல இருந்து கண் விழிக்கவே பத்து நாளாச்சு.” என்றான் சுரேஷ்.
“பத்து நாளா!?”
“ம்... ஆமாடா. என் தங்கச்சி பத்து நாள் கடந்து தான் கண்ணை திறந்தா. அவ கண்ணை திறந்ததும் முதல்ல என் வீரா எங்கன்னு தான் கேட்டா. அவளுக்கு நாங்க பேசுறது எதுவுமே கேக்கல. இத விட ஆச்சிரியமும் அதிர்ச்சியும் கலந்த செய்தி என்னனா, அவ தன்னோட புருஷன் இறந்ததை இன்னும் நம்பல. ஏன் இன்னவரைக்கும் ஒரு சொட்டு கண்ணீர் கூட அவ கண்ணுல இருந்து அவ புருஷன் இறந்ததுக்காக வரல.” என்றான் வருத்தமாக.
“என்னடா சொல்ற!?”
“ம்... ஆமாடா. நாங்க அவள ஒரு மாசம் கடந்து தான் ஹாஸ்ப்பிட்டல்ல இருந்து அவ புருஷன் வீட்டுக்கு அழைச்சிட்டு போனோம். அங்க அவ எந்த ஒரு சஞ்சலமும் இல்லாம தானா அந்த வீட்டை காலி பண்ணி, வீரா வாங்கி வச்சிருந்த எல்லா பொருளையும், அவர் வளர்ந்த ஆஸ்ரமதுக்கே கொடுத்துட்டா. அவரோட நினைவா அவ எடுத்துட்டு வந்தது அதோ அங்க இருக்கு பாரு சில மல்லி பூ செடிங்க அது மட்டும் தான்.”
“ஓ...” என்றான் கொடிவீரன்.
“வீரா கூட வேலை பார்த்த சில பேர் அவரோட இறப்புக்கு வருத்தம் தெரிவிப்பாங்க. ஆனா, இவ அவங்க எதாவது பேச வந்தா இவளோட காது மெஷினை கழட்டி வச்சிட்டு, அவங்களுக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வந்து தருவா. அவளாவே பக்கத்து தெருவுல அவங்க புருஷன் பெயர்ல கேண்டீன் ஆரம்பிச்சு, அதுல வர பண்ணத்தை இவ செலவுக்கு போக மீதியை வீரன் வளர்ந்த ஆஸ்ரமதுக்கு தந்துடுவா.
“உன் சிஸ்டர் நான் வேலை பாக்குற இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வந்து அவங்க ஹஸ்பண்ட் பேர்ல இருந்த பணம் இவங்கள சேர வேண்டிய காசு பத்து லட்சத்தை கூட ஏதோ அஷ்ரமத்துக்கு தான்டா தந்து இருக்காங்க.
“ம்... வீரன் வளர்ந்த ஆஸ்ரமம் தான் அது.”
“ஓ...”
“இன்னும் பத்து நாள் கடந்தா வீரா இறந்து ஒரு வருஷம் ஆகப்போகுது. ஆனா இவ என்னடானா, அவர் கூட பல வருஷம் வாழ்ந்த மாதிரி அவருக்காக, மறுமணம் எல்லாம் வேணாம். நான் இப்படியே இருக்கேன்னு அவரோட ஒரு போட்டோவை வச்சிக்கிட்டு அது கூடவே வாழலாம்னு முடிவு பண்ணிட்டா போல.
“அது எப்படிடா? பாவம் உன் சிஸ்டர் சின்ன பொண்ணு.”
“ம்... அதுக்கு தான்டா இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க நாங்க படாத பாடுபடுறோம்.”
“உடனே எப்படிடா முடியும். அவங்களுக்கான டைம் குடுக்க வேண்டாமா? கொஞ்ச நாள் போகட்டும். அப்புறம் பேசு” என்றான் கொடிவீரன்.
“என்னவோ போ. எல்லாம் அவன் செயல். சரிடா நான் கிளம்புறேன்.”
“இருடா. நான் உன்னை பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விடுறேன்.”
“இல்லடா. நான் நடந்து போய்க்கிறேன்.
“சரி பார்த்து போயிட்டு வா சுரேஷ்.”
“டேய் என்னால அடுத்த வாரம் இங்க வர முடியாது. சோ நீ இங்க எதாவதுனா கொஞ்சம் பார்த்துக்கோ.
“ம்... கண்டிப்பா பார்த்துக்கிறேன்டா.”
கொடியின் அறையில் இருந்து வெளியே வர, அங்கே மகிழினி மல்லி தோட்டத்தில் நின்று இருந்தவளை பார்த்து அவள் அருகில் சென்றவனை கொடியும் பின் தொடர்ந்தான்.
"பாப்பா" என்று அவள் தோள் மீது கை வைத்ததும்,
"ஹாங் சொல்லுங்க அண்ணா" என்றாள் அந்த பூக்களின் மீது கவனத்தை செலுத்தியப்படி
"நான் கிளம்புறேன்மா" என்றான் சைகையுடன்
"ம்... போகும் போது அண்ணிக்கு சாப்பாடு கொண்டு போங்க" என்று சொன்னவள் மீண்டும் தன் பார்வையை செடிகள் மீது பதித்தாள்.
"ம்" என்றான் கவலையாக
"சரி நேரத்தோடு நீங்க கிளம்புங்க" என்று சொன்னவள் மேலும் பேச்சை வளர்க்காமல் தன் பணியைத் தொடர்ந்தாள்.
"பாப்பா நான் அடுத்த வாரம் வர முடியாது. உனக்கு எதாவது உதவி வேணும்னா என் நண்பன் கொடி கிட்ட கேளு" என்று சுரேஷ் கொடிவீரனைச் சுட்டி காட்டினான்.
மகிழினி தன் அண்ணனை பார்த்து ஏளனமாக சிரித்து, "நீங்க இல்லாத போது இவர் தான் எங்களுக்கு துணையா இருந்தாரா என்ன?" என்று அழுத்தமாக கேட்டதும் கொடியின் முகம் இறுக்கமாக மாறியது
"இல்ல பாப்பா" என்று இவன் விளக்கம் தரும் முன்பு,
"சரி எதாவது தேவைன்னா கண்டிப்பா கேக்குறேன்" என்று சொன்னவளின் பார்வை கொடிவீரனின் மீது சிறிதளவும் படரவில்லை.
"சரிமா. நான் கிளம்புறேன். கொடி வரேன்டா" என்று அங்கிருந்து கிளம்பியதும், கொடி சகஜமாக மகிழினியிடம் பேச எண்ணியவன்,
முதலில் அவள் காதில் மெஷின் உள்ளதா என்று தெரிந்து கொள்ள நினைத்தவன், அவளையே உற்று பார்த்து கொண்டு இருந்தான்.
"என்ன சார் எதாவது சொல்லனுமா?" என்று மகிழினி நேருக்கு நேராக நின்று கேட்டதும் திட்டுகிட்டு விழித்தவன், "அது ம்... ஆமாங்க சொல்லணும் தான்" என்று ஒரு முடிவோடு அவள் முன் வந்து நின்றான்.
மகிழினி புருவம் உயர்த்தி அவனிடம் "என்ன?" என்று வினவியதும்.
"இல்லிங்க ஆக்சுவலி உங்க நிலைமை எனக்கு புரியுது. ஆனா, உங்க அண்ணனும் பாட்டியும் பாவம் தானே. அவங்க உங்களுக்கு இன்னோரு வாழ்கை வேணும்னு நினைக்கிறதுல தப்பு இல்லையே" என்று முதலில் தயங்கினாலும் பிறகு தைரியத்தை வர வைத்து அவளிடம் இந்த கேள்வியை கேட்டதும் மகிழினி மீண்டும் சிரித்தாள்.

"உங்க நண்பன் நிம்மதியா இருக்கணும்னு நீங்க நினைக்கிறதுல தப்பு இல்ல. ஏன்னா அவர் உங்க நண்பன். ஆனா, என்னோட பர்சனல் லைப்ல பிளீஸ் நீங்க தலையிட வேணாம். உங்க எல்லோரை விடவும் எனக்கு என் வாழ்க்கை மேல நிறையவே அக்கறை இருக்கு" என்று சிரித்த முகத்துடன் மகிழினி சொல்ல, கொடி சற்று முகம் மாறினான்.
 
New member
Joined
Jan 15, 2026
Messages
14
"என்னங்க அக்கறை இருக்கு? உங்க வயசு என்ன? உங்க இருப்பேன்ன? என்ன கோலம் இது? நெற்றியில பொட்டு இல்லாம, தலையில பூ இல்லாம, சாயம் போன நிறத்துல புடவையை கட்டிக்கிட்டு, இப்படி எல்லாம் நீங்க இருக்குறது தான் உங்க மேல உங்களுக்கு இருக்குற அக்கறையா?" என்று தன்னுடைய தோழிக்கு அறிவுரை சொல்வது போல, தானாகவே உரிமை எடுத்து கொண்டான் கொடி
"Mr. என்னாச்சு உங்களுக்கு? நீங்க இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள உங்களுக்கு என்னை பற்றி பேச யாருங்க உரிமை கொடுத்தது?" என்று தன் கண்களில் அனல் கக்கும் கோவத்தை கக்கினாள் மகிழினி
"உங்கள பற்றி பேச எனக்கு உரிமை இல்ல தான். ஆனா, ஏன்னு தெரியல. உங்கள இப்படி பாக்க மனசு கஷ்டமா இருக்கு" என்று தன் நண்பன் சுரேஷின் நிலையை அறிந்து பேசினான் கொடி.
"அப்போ பாக்காதீங்க. உங்க பார்வை கோளாறுக்கு, நீங்க தான் உங்க மூக்கு கண்ணாடியை சரி செய்துக்கணும். அதை விட்டுட்டு, இயற்கையா நிகழும் விஷயங்களுக்கு எல்லாம், இப்படி சம்மந்தமே இல்லாம ரியாக்ட் பண்ணாதீங்க" என்று கடுப்பாக கத்தினாள் மகிழினி.
"இல்லிங்க எனக்கு புரியுது. உங்க மேல எனக்கு எந்த உரிமையும் இல்ல தான். ஆனா நீங்க இப்படி இருக்குறத பார்த்தா..." என்று தன் மனதில் பட்டதை பேச நினைத்தான் கொடி.
"நான் எப்படி இருக்கேன்?" என்று தன் பற்க்களை கடித்துக்கொண்டு அவனை முறைத்தாள் மகிழினி
"சுரேஷ் சொன்னாங்க. பிளீஸ் நீங்க கொஞ்சம் கொஞ்சமா உங்க கணவர் இழப்புல இருந்து வெளிய வந்து..." என்று கொடி தன் வார்த்தையை முடிக்கும் காட்டிலும்,
“ஹலோ பேசுனது போதும். போய் உங்க வேலையை பாருங்க. இனி என் விஷயத்துல பாவம் பாக்குறேன், கருத்து சொல்லுறேன்னு என் எதிர்ல வந்திங்க... வேணாம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்" என்று கோவமாகப் பேசி கையில் உதிர்ந்த மல்லிப்பூக்களை அள்ளிக்கொண்டு கீழே இறங்கி செல்ல. கொடி அரண்டு போய் நின்ற தருணம், கொடியின் அக்கா சசியிடம் இருந்து இவனுக்கு அழைப்பு வந்தது
"ஹலோ சொல்லுங்க அக்கா" என்று வார்த்தையில் புத்துணர்வு இல்லாமல் பேசியவனின் மனநிலையை உணர்ந்து இருந்த கொடியின் அக்கா சசிகலா
"என்னடா தம்பி? ஏன் சோகமா பேசுற மாதிரி இருக்கு? என்னாச்சுடா?" என்று நலம் சசி விசாரிக்க, மகிழினியை பற்றி தன் அக்காவிடம் கொடி சொன்னான்.
"அந்த பொண்ணை பார்த்தா பாவமா இருக்கு அக்கா. வாழ வேண்டிய வயசு. ஆனா..." என்று எதையோ யோசித்தப்படி தன் வார்த்தையை விழுங்கினான் கொடி
"டேய்! டேய்! என்னடா நீ. நீ எந்த வேலைக்கு போன? இப்போ என்ன வேலையை பாக்குற?" என்று சசி திடுக்கிட்டாள்.
"என்ன அக்கா நான் என்ன பண்ணேன்" என்று கொடி புரியாமல் குழம்பினான்.
"தம்பி! உன் வயசுல ஒரு பையன், ஒரு பொண்ணு மேல பாவம் பார்த்தா, அது காதல்ல தான்டா போய் முடியும்" என்று நமட்டு சிரிப்பு சிரித்தாள் சசி.
"அக்கா வாயை மூடு. ஏன் இப்படி உளறுற? அந்த பொண்ணு பாக்க சின்ன பொண்ணா இருக்காங்க. இந்த சின்ன வயசுல அவங்களுக்கு ஏன் இப்படி ஒரு வாழ்கைன்னு நினைச்சு தான் நான் கவலை பட்டேனே தவிர, நீ சொல்ற மாதிரி காதல் கத்திரிக்கா எல்லாம் இல்ல" என்று தன் தரப்பு நியாயத்தை எடுத்து சொன்னான் கொடி.
"இல்லைனா நல்லது தான்டா தம்பி” என்று பெருமூச்சு விட்டாள் சசி.
"சரி அம்மா எங்க?" என்று தன் பேச்சை மாற்றினான் கொடி.
"கோவிலுக்கு போயிட்டு வந்தாங்கடா. அதான் சோர்வா இருக்குன்னு நேரத்தோடு படுத்துட்டாங்க" என்று தன் அம்மாவின் வேண்டுதலை நினைத்து சலித்து கொண்டாள் சசி.

"சரி அக்கா. அம்மாவை பார்த்துக்கோ. நான் உனக்கு நாளைக்கு கால் பண்ணுறேன்" என்று சொன்ன கொடி, தன் கைபேசி இணைப்பை துண்டித்து மனதை குழப்பிகொள்ளாமல் தன் படுக்கையில் படுக்க, என்னே ஆச்சர்யம்! அவன் கனவில், மகிழினி வளர்க்கும் மல்லி பூ செடி தோட்டத்தின் நடுவில், அவளின் அழகான முகம் தோன்றியது. அவள் அருகில் மண்டியிட்டு, தன் கரங்களால் மகிழினியின் கைகளில் ரோஜா மலரைத் தரும் காட்சி கொடிவீரன் கனவில் தோன்றியது. அது நிஜம் போல் தோன்ற நிஜம்போல் தோன்ற, சட்டென்று தன் உறக்கத்தில் இருந்து ஏழுந்து அதிர்ந்து அமர்ந்திருந்தான் கொடிவீரன்.
 
Member
Joined
Feb 8, 2025
Messages
32
superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr😍😍😍 superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr 😍😍superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr😍😍 superrrr superrrr superrrr superrrr superrrr
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top