- Thread Author
- #1
Part 7
“ஐயோ என்ன கனவு இது. எல்லாம் இந்த அக்காவை சொல்லணும். நம்ம நண்பன் நம்மள எவ்வளவு நம்பிக்கையா இங்க தங்க வச்சிருக்கான். ஆனா நமக்கு ஏன் இந்த மாதிரி எல்லாம் எண்ணம் தோணுது." என்று தனக்குள் புலம்பி முடித்து, அருகில் இருந்த தண்ணீரை குடித்த பின், கவுந்தடித்து படுத்தான்.
மறுநாள் காலை தன் வேலைக்கு கிளம்புவதற்காக தயாரான நிலையில் மொட்டை மாடியில் இருந்தபடி வீட்டுக்கு வெளியே நின்ற ஆட்டோவை யோசனையாய் பார்த்தான்.
"எதுக்காக ஆட்டோ இந்த வீட்டுக்கு எதிர்ல நிக்குது?" என்று தனக்குள் கொடி கேட்ட கேள்விக்கு விடையாக, ஆட்டோவில் இருந்து கைத் தாங்கலாக தன் பாட்டியை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள் மகிழினி.
‘ஐயோ பாட்டிக்கு என்னாச்சுன்னு தெரியலையே’ என்று எண்ணியவன் எதையும் யோசிக்காமல் வேகமாக கீழே இறங்கி ஓட, அங்கே ஹாலில் பாட்டி சோர்வாக அமர்ந்து இருந்தார்.
"பாட்டி என்னாச்சு? எங்க இவ்வளவு காலையிலேயே போயிட்டு வரீங்க? உடம்புக்கு சரியில்லையா?" என்று பதட்டமாகக் கொடி கேட்டான்.
கையில் தண்ணீருடன் வந்த மகிழினி, "பாட்டி இந்த சுடு தண்ணியை குடிங்க. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல கஞ்சி வைக்கிறேன். அப்புறமா நீங்க மாத்திரை போடலாம்" என்று தன் பாட்டியிடம் சொம்பை நீட்டிய மகிழினியை வெறுப்பாக பார்த்தாள் பாட்டி.
பாட்டியின் பார்வையில் உள்ள கோவத்தை தன்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும், அதை சரி செய்ய தன்னால் முடியாது என்ற தெளிவோடு இருந்த மகிழினி, தண்ணீர் சொம்பை மேசை மேல் வைத்தவள், சமையல் அறையை நோக்கி நடந்தாள்.
"பாட்டி மருந்து கடை திறக்க இன்னும் அரைமணி நேரம் ஆகுமாம். நான் அப்புறமா போய் மருந்து வாங்கிட்டு வரேன்". என்று கையில் மருந்து சீட்டுடன் வந்த வேணுவை சைகை காட்டி கொடி தன் அருகில் அழைத்தான்.
"என்ன. என் பாட்டிக்கு என்னாச்சுன்னு கேக்க போறிங்களா? அவங்களுக்கு நேத்து நைட்டு நெஞ்சு வலிக்குது சொன்னாங்க. அதான் உடனே ஹாஸ்ப்பிட்டல் அழைச்சிட்டு போனோம். அங்ககொஞ்ச நேரம் டிரீட்மென்ட் தந்துட்டு மருந்து எழுதி கொடுத்துட்டாங்க" என்ற வேணு நேற்று இரவு நடந்த சம்பவதை சொல்லி முடித்தான்
"என்ன பாட்டி இது? உங்களுக்கு உடம்பு சரியில்லைனா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கக்கூடாதா?" அக்கறை கலந்த உரிமையோடு கேட்டான் கொடி.
"ஏன் நீங்க என்ன டாக்டரா உங்கிட்ட சொல்லிட்டு போக" என்று கொடியை கிண்டல் பண்ணான் வேணு.
"சும்மா இருடா வேணு. தம்பி எனக்கு திடிர்னு தான்பா வலி வந்துச்சு. அதான் பயந்து போய் உடனே என் பேத்தி ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போயிட்டா" என்று குரலில் உயிரே இல்லாமல் பேசினார் பாட்டி.
"வேணு மருந்து சீட்டை என்கிட்ட கொடு நான் போய் மருந்து வாங்கிட்டு வரேன்" என்று சொன்ன கொடி, அந்த சீட்டை எடுத்து சென்றவன், சில நிமிடங்களில் மருத்தோடு வீட்டுக்குள் நுழைந்தான்.
"ஏன்பா உனக்கு இந்த வேலை. நாங்க பாத்துக்குறோம். நீ உன் வேலைக்கு கிளம்புப்பா" என்று அவன் நிலைமையை அறிந்து பேசினார் பாட்டி.
"வேலைக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கு பாட்டி. நான் அதுக்குள்ள போயிடுவேன். எனக்கு பிரச்சனை இல்ல. ஆமா வேணு, நீ ஏன் ஸ்கூல் போகல?" என்று கொடி கேட்டதும்.
வராத கண்ணீரை வர வைத்த வேணு, "என் பாட்டிக்கு இப்படி இருக்கும் போது நான் எப்படி ஸ்கூல்க்கு போறது" என்று வேணு முதலை கண்ணீர் வடித்தான்.
"டேய் டேய் நடிக்காத. நான் என்னை பார்த்துப்பேன். நீ முதல்ல ஸ்கூலுக்கு கிளம்பு" என்று பாட்டி கண்டிப்புடன் சொன்னதும்,
“சரி சரி போறேன். ஆனா உங்களுக்கு எதாவதுனா இங்க யாரு உங்கள பார்த்துப்பாங்க? நான் வேணா அப்பாவுக்கு போன் பண்ணவா?”
“வேணாம்டா. பாவம் உன் அப்பன். உன் ஆத்தா வேற வயத்து புள்ளக்காரி. உன் அப்பனுக்கு அவங்கள பார்த்துக்கவே நேரம் சரியா இருக்கும். இப்போ எனக்கு என்னாச்சு நான் நல்லா தான் இருக்கேன். நீ ஸ்கூல்க்கு கிளம்பு” என்றார்.
“ஏன் பாட்டி, நான் வேணா வேலைக்கு லீவு போட்டுட்டு உங்க கூட இருக்கவா?” எனக் கேட்டான் கொடிவீரன்.
“ஐயோ வேணாம் தம்பி. அதான் இங்க என் பேத்தி இருக்காளே. அவ பார்த்துப்பா.”
“சரி பாட்டி. ஆனா உங்களுக்கு இனிமே இந்த மாதிரி உடம்பு சரியில்லாம போனா, எனக்கு தெரியப்படுத்துங்க.”
“ம்... சரி தம்பி.”
“உங்ககிட்ட போன் இருக்கா பாட்டி?” என்றதும் அவர் இருக்கு என்று சொல்ல, “இந்தாங்க இதுல என் நம்பர் இருக்கு. உங்களுக்கு எந்த நேரத்துல எந்த பிரச்சனைனாலும், எனக்கு ஒரு போன் மட்டும் பண்ணுங்க.” என்று அன்பாக சொன்ன கொடி தன் கைபேசி எண்ணை பாட்டியிடம் தந்தான்.
"வேணு வந்து சாப்பிடு. சார் நீங்களும் சாப்பிட வாங்க" என்று கொடியை பார்த்து சொன்ன மகிழினியின் கண்களில் நேற்று இரவு இருந்த கோவம் மறைந்து போனது போல கொடிக்கு தோன்றியது.
"இனிமே இந்த பொண்ணு பர்சனல் விஷயத்துல நம்ம தலையிட கூடாது. இவங்ககிட்ட நம்ம அக்கறையா பேசுறது, அவங்களுக்கு நம்ம மேல அறுவெறுப்பை உண்டாக்குறது போல தோணுதுன்னு நினைக்கிறேன். வேணாம் வேணாம் நம்ம ஒன்னும் இவங்களுக்கு மறுமணம் பண்ணி வைக்க ஊருல இருந்து பையை தூக்கிகிட்டு இங்க வரல. நம்ம எதுக்கு வந்தமோ அந்த வேலையை நம்ம பார்க்கலாம்" என்று தன் மனதில் ஏகப்பட்ட முடிவை எடுத்த நிலையில், கொடி டைனிங் டேபிளில் அமர்ந்து இருக்க, தட்டில் டிபனை எடுத்து வைத்தாள் மகிழினி.
அவள் பரிமாறிய உணவில் உள்ள ருசி தன் தாயின் நினைவை இவனுக்கு அதிகரிக்க செய்தது.
ஒரு வழியாக காலை உணவை முடித்த கொடி, வேணுவை பள்ளிக்கு அழைத்து சென்றவன், தன் அன்றாட வேலைகளை செய்து முடிக்க கிளம்பினான்
பாட்டிக்கு தேவையானதை செய்த மகிழினி Cantine வேலைகளை சீக்கிரமாக முடித்து கொண்டு வீடு திரும்பினாள்
தினமும் மாலை நேரம் மகிழினி மல்லி பூ செடிகளின் நடுவில் நின்று இருப்பதை பார்த்தும் பார்க்காதபடி கொடி வீரன் வேணுவிற்கு கணக்கு பாடம் கற்று கொடுத்தான்.
பாட்டிக்கு என்னதான் மகிழினியின் மீது வருத்தம் இருந்தாலும். காலம் கனியும் வரை மகிழினியின் மறுமணம் நிகழ்வை பற்றி பேசலாமல் அமைதி காத்தார்.
மகிழினியோ யாரு என்ன சொன்னாலும் தன் முடிவில் இருந்து மாற போவது இல்லை. என் கணவர் நினைவோடு தான் நான் வாழ்ந்து மடிவேன் என்ற மன உறுதியில் இருந்தாள்
சுரேஷின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், இந்த வார இறுதியில் மகிழினியை பார்க்க சுரேஷ் வராமல் போனாலும், தன் தங்கை,பாட்டி, பிள்ளையென்று அனைவரின் நலனை பற்றியும் கைபேசி வாயிலாக கொடியிடம் கேட்டு தெரிந்து கொண்டான்.
தன் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் கொடி தன் அக்கா சசியிடம் தினமும் இரவு ஒப்பிக்காமல் தூங்க போகாதவன், மகிழினியை பற்றிய பேச்சை மட்டும் சசியிடம் பேச மறைத்தான்
ஒரு வார காலம் கடந்த நிலையில், கொடி வேலை பார்க்கும் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு மீண்டும் மகிழினியின் வருகை இருந்ததை கண்ட கொடி, மனம் சலித்தப்படி அவளை பார்த்து அலுத்து கொண்டான்.
"வீரா டார்லிங்! உன்னை பார்க்க தான் ரொம்ப நேரமா வெளிய ஒரு மேடம் வெயிட் பண்ணுறாங்க" என்று குழையும் குரலில் பேசும் பேச்சுக்கு சொந்தக்காரியான ரேஷ்மாவுக்கு, கொடியின் மீது ஓரு வகை ஈர்ப்பு இருப்பது, அந்த அலுவலகம் முழுதும் அறிந்த உண்மையே.
“பிளீஸ் ரேஷ்மா. அவங்கள வேற யாரையாவது அட்டென்ட் பண்ண சொல்லுங்களேன்" என்று வேண்டுகோள் வைத்த கொடிக்கு, தான் ஏன் மகிழினியை பார்த்து தள்ளி செல்கிறோம் என்ற கூற்று அவனுக்கே புரியாமல் இருந்த தருணம்.
"ஓகே வீரா. உனக்காக நானே அந்த மேடமை டீல் பண்ணுறேன்” என்று ரேஷ்மா சொன்னதும், கொடி வீரன் விட்டா போதும்டா சாமி என்று மனதில் எண்ணியபடி அவன் கேபினில் இருந்து வெளியே வந்தவன், மகிழினியின் கண்ணில் படாமல் மறைந்து விட்டான்.
மகிழினிக்கோ கொடி வீரன் என்ற ஒருவன் இந்த அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறான் என்ற எண்ணமே நினைவுக்கு வராத நிலையில், ரேஷ்மாவிடம் தனக்கு வர வேண்டிய பணம் கிடைக்க ஏன் இன்னும் தாமதம் ஆகிறது என்ற கேள்வியினை கேட்டு, அதற்கு உண்டான விளக்கத்தை அறிந்து கொண்டவள், மீண்டும் அடுத்த வாரம் வருகிறேன் என்று சொன்ன பிறகு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
மகிழினி போனதை ஊர்ஜிதப்படுத்தி கொண்டவன், மீண்டும் தன் கேபின்குள் நுழைந்து, “தேங்க்ஸ் ரேஷ்மா" என்று சிரித்த முகத்துடன் சொன்னான்.
"அதெல்லாம் எனக்கு வேணாம். இந்தா எனக்காக இந்த கிஃப்ட்டை மட்டும் வாங்கிக்கோங்க" என்று ரேஷ்மா கொடியின் கையில் கிஃப்ட் பேப்பர் சுற்றிய ஒரு பாக்ஸை தந்தாள்.
"என்ன இது?" என்று கேட்டுக்கொண்டே அந்த பெட்டியை பிரிக்க போனான்.
அவனைத் தடுத்த ரேஷ்மா, “பிளீஸ் இத உங்க வீட்டுக்கு போய் பிரித்து பாருங்க" என்றாள்.
கொடியும் அன்றைய தினம் வேலையை முடித்தவன், ரேஷ்மா தந்த பெட்டியுடன் வீட்டுக்கு கிளம்பி செல்ல, வாசலில் நின்று இருந்த வேணு சந்தோஷமாக கொடியை கட்டிக்கொண்டான்.